Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன். - சி.வி. விக்னேஸ்வரன்

Featured Replies

டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன். - சி.வி. விக்னேஸ்வரன்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:

ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

யாழ்.சென்.ரோக்ஸ் சனசமூக நிலையத்தினரால் கட்டப்பட்ட மறைந்த முன்னோடிகள் நினைவுத்தூபி இன்று புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே  அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , 

அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஏனைய கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளில் மோதலுறுகின்றனர். 

மற்றையபடி அவர்களுடன் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளோ அல்லது கோபதாபங்களோ எங்களுக்குக் கிடையாது. 

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நானும் அரசியல் காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகளுடன் மேடையில் பேசிக்கொண்டுள்ளோம். 

ஆனால் தனிப்பட்ட முறையில் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களை நானும் நேசிக்கின்றேன். அவரும் எனக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றார். 

எமது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தவராஜா அவர்கள் அதே கட்சியைச் சேர்ந்தவர். எமது வேறுபட்ட கருத்துக்களை நாம் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம். 

ஆனால் மனிதாபிமான முறையில் நாமிருவரும் மிகவும் நெருக்கமாக உறவாடுகின்றோம். அண்மையில் அவருடன் சேர்ந்தே எமது அரசியல் முன்மொழிவுகளை கௌரவ திரு. கரு ஜெயசூரிய அவர்களிடமும் கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களிடமும் கையளித்தோம். 

இன்றைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய கட்சித் தலைவர்கள் தமது அரசியல் சிந்தனைகளை மாற்றிக் கொண்டு எம்முடன் இணைந்துகொண்டு அரசியலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகள் கூடுதலாகக் காணப்படுகின்றது. 

அவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்ற போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. 

அவ்வாறானதொரு நிலை வரும் என்பதால் நீங்கள் யாரை அழைத்து இது போன்ற திறப்பு விழாக்களைச் செய்ய நினைத்தாலும் அதில் தவறேதும் இல்லை. ஆகவே எனதருமை மக்களாகிய நீங்கள் இங்கிருந்து அங்கு தாவுவதும் மீண்டும் அங்கிருந்து இங்கு தாவுவதுமான செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு, கட்சி ரீதியாக மனக்கசப்புக்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, உங்களது முன்னோர் உங்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் மனதில் இருத்தி முன்னேற்றப் பாதையில் செயற்பட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டு கொள்கிறேன்.

நாம் வெறுமனே பொருள் ஈட்டுவதையும் வருமானத்தையும் மட்டும் கருத்தில் கொள்ளாது ஆரோக்கியமான சமூகம் பற்றியும் சமூக மேம்பாடு பற்றியும் சிந்தித்தல் அவசியமாகின்றது. 

எங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம், அவர்களின் கற்றல் நடவடிக்கைகள், அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் நாங்கள் கவனம் எடுக்க வேண்டும். 

உங்கள் பகுதியில் இடம்பெறக்கூடிய சட்ட விரோத செயல்கள் மற்றும் தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் இருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தலும் அவர்கள் பற்றி விழிப்பாக இருத்தலும்  பெற்றோர்களாகிய உங்களின் தலையாய கடன். இவை பற்றி நீங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

இயேசு கிறிஸ்து நாதரின் அன்பு எம்மிடையே மலர வேண்டுமானால் அது பிள்ளைகள் மீது பெற்றோர்கள் காட்டும் பாசத்திலேயே முதலில் உதிக்க வேண்டும். பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதாது. அவர்களை அன்புடன் வளர்க்கவும் முன்வர வேண்டும்.
 
இன்று போதைப் பொருட்கள் கடத்தல் மையமாக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கிலோ நிறையுடைய கஞ்சா போதைப் பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே இக் கடத்தலைத் தடுப்பதற்கு கரையோரங்களில் வாழ்கின்ற பொதுமக்களே எமக்கு கூடுதலாக உதவ வேண்டும். 

கலாச்சார பிறழ்வு அற்ற மிகவும் பண்பட்ட சீரிய சமூகமாக வாழ்ந்த வடபகுதி தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், கல்வி என்பவற்றை திட்டமிட்டு அழிக்கக்கூடிய இவ்வாறான தீய நடவடிக்கைகளுக்கு நாம் ஒரு போதும் உடந்தையாக இருக்கக் கூடாது. 

எனவே இவ் விடயம் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் வேண்டப்படுகிறது. உங்கள் பங்குத்தந்தைமார் உங்களைச் சரியாக வழி நடத்துவார்கள் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவர்களின் அறிவுரைகளை மனதில் எடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். என முதலமைச்சர் தெரிவித்தார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132512/language/ta-IN/article.aspx

கருணாவை சேர்க்கும் கதைகள் அடிபடத் தொடங்கியது.

இப்போது, டக்லஸ்.

அடுத்தது, பிள்ளையானா?

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெரியார் said:

கருணாவை சேர்க்கும் கதைகள் அடிபடத் தொடங்கியது.

இப்போது, டக்லஸ்.

அடுத்தது, பிள்ளையானா?

இது.... எல்லாம், 
உங்கட அறிவுக்கு எட்ட... கனகாலம் எடுக்கும். பரவாயில்லையா.....
அதுக்காக...  ஒங்கட மண்டையை போட்டு குழப்பாதீங்க.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

கருணாவை சேர்க்கும் கதைகள் அடிபடத் தொடங்கியது.

இப்போது, டக்லஸ்.

அடுத்தது, பிள்ளையானா?

வேடிக்கை என்னவென்றால்.. இந்தத் துரோகிகளுக்கு எல்லாம் அடைக்கலம் கொடுத்து அவர்களை சொந்த மக்களுக்கு எதிராக பாவித்த சிங்களவனுக்கு நீங்க ஒத்தூதிறதை விட.. சிங்களவர்களோடு ஒன்னுக்கிருக்கணுன்னு தமிழ் மக்களுக்கு பரிந்துரைப்பதை விட.. விக்கி ஐயா தன்ர தனிப்பட்ட கருத்தைச் சொல்வது தவறில்லை தானே. அவர் ஒன்றும் தமிழ் மக்கள் டக்கிளசை நேசிப்பதாகச் சொல்லவில்லையே. அல்லது தமிழ் மக்கள் சார்பில் தான் நேசிப்பதாகவும் சொல்லவில்லை.

எங்கட கம்பன்கழக குடுமி ஜெயராஜ்.. டக்கிளசை போல ஒரு தலைவர் உலகத்திலேயே இல்லை என்றும் புகழ்ந்தவர். அது அவைட தனிப்பட்ட கருத்துக்கள். ஆனால் அவர் தமிழ் மக்களை அதில் இழுத்துப் பேசியதால் அவருடைய கருத்து அன்று எதிர்க்கப்பட்டது. காரணம்.. அவரவர் சொந்த நிலைப்பாட்டை மக்களின் நிலைப்பாடாக.. பொது நிலைப்பாடாக முன்னிறுத்த முடியாது. அதை மக்கள் தான் சொல்லனும். 

விக்கி ஐயா தனிப்பட்ட முறையில்.. இவர்களை விசுவசிக்கலாம்.. அவர் ஏலவே பிரேமானந்தாவை (சந்திராசாமி அல்ல) தன் குரு என்றும் சொன்னவர்.. ஒருவேளை டக்கியின் தாடியைப் பார்த்திட்டு பிரேமானந்தாவை  அவரில் கண்டாரோ என்னவோ.. இது அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புச் சார்ந்தது. இதற்குள் மக்கள் நலனைக் கலக்க வேண்டிய அவசியமில்லை. tw_blush:

viki-premananda.jpg

Edited by nedukkalapoovan

59 minutes ago, தமிழ் சிறி said:

இது.... எல்லாம், 
உங்கட அறிவுக்கு எட்ட... கனகாலம் எடுக்கும். பரவாயில்லையா.....
அதுக்காக...  ஒங்கட மண்டையை போட்டு குழப்பாதீங்க.

நீங்கள் சொல்லும் துரோகிகள் எல்லாரும், விக்கியின் கைக்குள் வந்தபின். அவர்களையும் புகழ்ந்து தள்ள வேண்டி வரும்.  

இதற்கு கன காலம் தேவையில்லை.

18 minutes ago, nedukkalapoovan said:

வேடிக்கை என்னவென்றால்.. இந்தத் துரோகிகளுக்கு எல்லாம் அடைக்கலம் கொடுத்து அவர்களை சொந்த மக்களுக்கு எதிராக பாவித்த சிங்களவனுக்கு நீங்க ஒத்தூதிறதை விட.. சிங்களவர்களோடு ஒன்னுக்கிருக்கணுன்னு தமிழ் மக்களுக்கு பரிந்துரைப்பதை விட.. விக்கி ஐயா தன்ர தனிப்பட்ட கருத்தைச் சொல்வது தவறில்லை தானே. அவர் ஒன்றும் தமிழ் மக்கள் டக்கிளசை நேசிப்பதாகச் சொல்லவில்லையே. அல்லது தமிழ் மக்கள் சார்பில் தான் நேசிப்பதாகவும் சொல்லவில்லை.

1412204488445_Image_galleryImage_Chandra

நீங்கள்சொல்லும் துரோகிகளுக்கு எல்லாம் அவர் பரிந்துரை வழங்குகிறார்.

அவரின் தனிப்பட்ட கருத்து, தமிழ் மக்களின் கருத்து என்று நீங்கள் ஏன் ஒரு தனிக்கருத்தை இங்கே உருவாக்குகிறீர்கள்? 

அவரின் கருத்தில் உள்வாங்கப்போவது, அந்தத் துரோகிகள்.

அந்தத் துரோகிகளும் கட்சியில் சேர்ந்தால், எல்லாம் அரோகராதான்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெரியார் said:

நீங்கள்சொல்லும் துரோகிகளுக்கு எல்லாம் அவர் பரிந்துரை வழங்குகிறார்.

அவரின் தனிப்பட்ட கருத்து, தமிழ் மக்களின் கருத்து என்று நீங்கள் ஏன் ஒரு தனிக்கருத்தை இங்கே உருவாக்குகிறீர்கள்? 

அவரின் கருத்தில் உள்வாங்கப்போவது, அந்தத் துரோகிகள்.

அந்தத் துரோகிகளும் கட்சியில் சேர்ந்தால், எல்லாம் அரோகராதான்!

நீங்க ஒரு இனத்தை 65 வருசமா அழிச்சிக்கிட்டு வாரவனோடு ஒன்றுக்கிரு என்று ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும்.. பரிந்துரை செய்யும் போது... விக்கி ஐயா டக்கிளசை தான் விசுவாசிக்கிறேன் என்று தன் சொந்த நிலைப்பாட்டை சொல்வது ஒன்றும் பெரிய காரியமே அல்ல. விக்கி ஐயாவில் நிலைப்பாட்டை தான் தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அர்த்தமல்ல.

விக்கி ஐயாவுக்கு பிரேமானந்தா குருவாக இருக்கலாம்.. ஆனால் மக்களுக்கு அவர் ஒரு கிரிமினல். அதே தான் இங்கும். சிங்களவன் மக்களுக்கு பெரும் இனப்படுகொலையாளன். இதனை நீங்க அவனுக்கு காவடி எடுக்க முதல் யோசிக்கனும். tw_blush:

2 minutes ago, nedukkalapoovan said:

நீங்க ஒரு இனத்தை 65 வருசமா அழிச்சிக்கிட்டு வாரவனோடு ஒன்றுக்கிரு என்று ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும்.. பரிந்துரை செய்யும் போது... விக்கி ஐயா டக்கிளசை தான் விசுவாசிக்கிறேன் என்று தன் சொந்த நிலைப்பாட்டை சொல்வது ஒன்றும் பெரிய காரியமே அல்ல. 

8 minutes ago, nedukkalapoovan said:

நீங்க ஒரு இனத்தை 65 வருசமா அழிச்சிக்கிட்டு வாரவனோடு ஒன்றுக்கிரு என்று ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும்.. பரிந்துரை செய்யும் போது... விக்கி ஐயா டக்கிளசை தான் விசுவாசிக்கிறேன் என்று தன் சொந்த நிலைப்பாட்டை சொல்வது ஒன்றும் பெரிய காரியமே அல்ல. விக்கி ஐயாவில் நிலைப்பாட்டை தான் தமிழ் மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அர்த்தமல்ல.

உங்களின் துரோகிகளை உங்கள் தலைவர் நேசிக்கிறார். 

சொந்த நிலைப்பாடு என்றும், தமிழ் மக்களின் நிலைப்பாடு என்றும் ஏன் நீங்களே வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

அவர், டக்ளசை நேசிக்கிறேன் என்று சொன்னால், அது அவரின் கருத்து.  இது சிறு பிள்ளைக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெரியார் said:

உங்களின் துரோகிகளை உங்கள் தலைவர் நேசிக்கிறார். 

சொந்த நிலைப்பாடு என்றும், தமிழ் மக்களின் நிலைப்பாடு என்றும் ஏன் நீங்களே வேறுபடுத்திப் பார்க்கிறீர்கள்?

அவர், டக்ளசை நேசிக்கிறேன் என்று சொன்னால், அது அவரின் கருத்து.  இது சிறு பிள்ளைக்கும் தெரியும். 

உங்களுக்கே நீங்கள் எழுதுவது சிறுப்பிள்ளைத் தனம் என்று தெரியுதில்ல. பிறகெதற்கு அடுத்தவன்ர.. நேரத்தை வீணாக்கிட்டு.. போய் வேற அலுவல் இருந்தாப் பாருங்கண்ணே. இல்ல முகட்டைப் பார்த்துக்கிட்டு தூங்குங்க. tw_blush:

3 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள்தான் சிறு பிள்ளை மாதிரி எழுதுகிறீர்கள்.

சொந்தக் கருத்து என்று போடு.

அத்தோடு, அந்த சொந்தக் கருத்து மக்களின் கருத்து அல்ல என்று போடு.

அவரின் சொந்தக் கருத்து, மக்களின் கருத்து என்று நான் சொன்னேனா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெரியார் said:

நீங்கள்தான் சிறு பிள்ளை மாதிரி எழுதுகிறீர்கள்.

சொந்தக் கருத்து என்று போடு.

அத்தோடு, அந்த சொந்தக் கருத்து மக்களின் கருத்து அல்ல என்று போடு.

அவரின் சொந்தக் கருத்து, மக்களின் கருத்து என்று நான் சொன்னேனா?

அது அவரின் சொந்தக் கருத்தென்று இனங்காட்டியதே நாங்கள். எங்களுக்கே எங்கள் கருத்தை திருப்பிச் சொல்ல கிளிப்பிள்ளையால் தான் முடியும். அது சிறுபிள்ளையிலும் கேவலம். tw_blush:

1 minute ago, nedukkalapoovan said:

அது அவரின் சொந்தக் கருத்தென்று இனங்காட்டியதே நாங்கள். எங்களுக்கே எங்கள் கருத்தை திருப்பிச் சொல்ல கிளிப்பிள்ளையால் தான் முடியும். அது சிறுபிள்ளையிலும் கேவலம். tw_blush:

சொந்தக் கருத்து என்று சொன்னதும் தாங்கள்தான்!

அது தமிழ் மக்களின் கருத்து அல்ல என்று சொன்னதும் நீங்கள்தான்.  மீண்டும் கிளிப்பிள்ளைதான்!

அவரின் கருத்து, தமிழ் மக்களின் கருத்து அல்ல என்று எமக்கு விளங்கிக் கொள்ள முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெரியார் said:

சொந்தக் கருத்து என்று சொன்னதும் தாங்கள்தான்!

அது தமிழ் மக்களின் கருத்து அல்ல என்று சொன்னதும் நீங்கள்தான்.  மீண்டும் கிளிப்பிள்ளைதான்!

அவரின் கருத்து, தமிழ் மக்களின் கருத்து அல்ல என்று எமக்கு விளங்கிக் கொள்ள முடியாதா?

விளங்கிக் கொள்ள முடியாத ஒரு ஜென்மமாக தாங்கள் இருப்பதால் தான் மீண்டும் மீண்டு குவாட் செய்து எழுதிக்கிட்டு இருக்கிறீர்கள். விளங்கிட்டா.. அதில் இருந்து நகர்ந்து விடுவது தான் அறிவு. அது இல்லாட்டி.. கிளிப்பிள்ளை.. சிறுபிள்ளை தான். தங்கள் நடத்தை தான் அதைச் சொல்கிறது. tw_blush:

3 minutes ago, nedukkalapoovan said:

விளங்கிக் கொள்ள முடியாத ஒரு ஜென்மமாக தாங்கள் இருப்பதால் தான் மீண்டும் மீண்டு குவாட் செய்து எழுதிக்கிட்டு இருக்கிறீர்கள். விளங்கிட்டா.. அதில் இருந்து நகர்ந்து விடுவது தான் அறிவு. அது இல்லாட்டி.. கிளிப்பிள்ளை.. சிறுபிள்ளை தான். தங்கள் நடத்தை தான் அதைச் சொல்கிறது. tw_blush:

நான் எழுதியது, நீங்கள் துரோகிகள் என்று சொல்லக்கூடியவர்களின் உள்வாங்கல்.

நீங்கள் கிளிப்பிள்ளை மாதிரி எழுதுவது - அவரின் சொந்தக் கருத்து - மக்களின் கருத்து அல்ல என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

அட... கோதாரியே....... 

பெரியாருக்கு.... திராவிட  ருசி பிடிபட்டுப் போச்சு போலை கிடக்கு. smileyslaughing_lol_100-107.gif?w=700&h=

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெரியார் said:

நான் எழுதியது, நீங்கள் துரோகிகள் என்று சொல்லக்கூடியவர்களின் உள்வாங்கல்.

நீங்கள் கிளிப்பிள்ளை மாதிரி எழுதுவது - அவரின் சொந்தக் கருத்து - மக்களின் கருத்து அல்ல என்பது.

அவர் ஒன்றும் உள்வாங்குவதாகச் சொல்லவில்லை. தனக்கு தனிப்பட்ட முறையில்.. என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார். நீங்கள் கிளிப்பிள்ளையும் அல்ல.. சிறுபிள்ளையும் அல்ல. அதை விட விளக்கமே இல்லாத புதிய ஒரு ஜந்துவாக இருக்கலாம். அல்லது சிங்கள - ஹிந்திய விசுவாசம் பூதம் பிசாசு..பிடித்த ஒருவராக இருக்கலாம். அதுதான் தெளிவான.. சிந்தனைக்கு தடையாக உள்ளது போலும்.tw_blush:

1 minute ago, nedukkalapoovan said:

அவர் ஒன்றும் உள்வாங்குவதாகச் சொல்லவில்லை. தனக்கு தனிப்பட்ட முறையில்.. என்று தெளிவாகச் சொல்லி இருக்கிறார். 

உள்வாங்குவது என்பது, கட்சியில் இணைந்து செயலாற்றுவது - கருணாவை.

டக்ளசும் நேற்றைய செய்தியின் அங்கீகரிப்பு?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

உள்வாங்குவது என்பது, கட்சியில் இணைந்து செயலாற்றுவது - கருணாவை.

டக்ளசும் நேற்றைய செய்தியின் அங்கீகரிப்பு?

இது உங்கள் போலிக் கற்பனையின் அடுத்த வடிவம்.

கருணா... தமிழ் மக்கள் பேரவையில் இணைவது பற்றித்தான் பேசினார். கடைசி வரை அவர் அதில் இணையவும் இல்லை.. தீர்வுத்திட்டம் தயாராகி கையளிக்கப்பட்டும் விட்டது.

தமிழ் மக்கள் பேரவையில்.. சேர்ந்து இயங்க.. டக்கிளசும் வெறுவாய் மென்றார்.. இறுதியில் அவரும் சேரவில்லை. ஆனால்.. தீர்வுத்திட்டம் தயாரான போது சுமக்க ஒரு கூலியை அனுப்பி வைத்தார்.

விக்கி ஐயாவின் மற்றைய கருத்து தனிப்பட்ட கருத்துன்னு அவரே சொல்லிட்டார். அது உள்வாக்கலுக்கான கருத்தே அல்ல. அப்படிக் காட்டுவது காழ்புணத்தன்மையிலாகும். அதையே தாங்கள் செய்ய விளைகிறீர்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

உள்வாங்குவது என்பது, கட்சியில் இணைந்து செயலாற்றுவது - கருணாவை.

டக்ளசும் நேற்றைய செய்தியின் அங்கீகரிப்பு?

சம்பந்தன் கும்பல்... 
தனி, அரசியல் நடத்த வெளிக்கிட்டால்.... 
விக்கி ஐயா... கையை கட்டி பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்.
அதுக்கு... மேலாலை... செய்வதை,  நாம் தடுக்க மாட்டோம்.

3 minutes ago, nedukkalapoovan said:

இது உங்கள் போலிக் கற்பனையின் அடுத்த வடிவம்.

கருணா... தமிழ் மக்கள் பேரவையில் இணைவது பற்றித்தான் பேசினார். கடைசி வரை அவர் அதில் இணையவும் இல்லை.. தீர்வுத்திட்டம் தயாராகி கையளிக்கப்பட்டும் விட்டது.

கருணாவின் உள்வாங்களைப் பற்றி பேசி இருக்கிறார்.  இணைந்ததைப் பற்றி நான் ஈங்கு எழுதவில்லை.

நேற்றைய செய்தியில் பாருங்கள் - டக்ளசின் உள்வாங்கல்.

உள்வாங்கல்  என்பது,  கட்சிக்குள் வந்தும் செயற்படலாம். 

அப்பால் இருந்தும் செயற்படலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெரியார் said:

கருணாவின் உள்வாங்களைப் பற்றி பேசி இருக்கிறார்.  இணைந்ததைப் பற்றி நான் ஈங்கு எழுதவில்லை.

நேற்றைய செய்தியில் பாருங்கள் - டக்ளசின் உள்வாங்கல்.

உள்வாங்கல்  என்பது,  கட்சிக்குள் வந்தும் செயற்படலாம். 

அப்பால் இருந்தும் செயற்படலாம். 

உள்வாங்கலுக்கு இப்படி எல்லாம் ஒரு அகராதி கண்டுபிடிக்க.. விக்கி ஐயா காழ்புணர்ச்சி நன்கு மிகையாக இருக்க வேண்டும். அவர் தனிப்பட்டது என்று சொல்லிப் பேசினப் பிறகும்.. உள்வாங்கல் என்று புலம்புவது காழ்புணர்ச்சியின் வெளிப்பாடே. 

மேலும்.. அரசியல் ரீதியாக.. அவர் மக்களுக்கான சுமூக அரசியல் பற்றிப் பேசுகிறாரே தவிர.. சம் சும் கும்பல் போல்.. சோர உள்வாங்கல் அரசியல் பேசவில்லை. tw_blush:

Just now, nedukkalapoovan said:

காழ்ப்புணர்ச்சி என்றால் என்னவென்று தெரியவில்லை  உங்களுக்கு.

அவரது கருத்தில், கருணாவின் உள்வாங்கல்
அவரது கருத்தில், டக்ளசின் உள்வாங்கல் 

இதுதான் சாராம்சம்.

விக்கி எனக்கு என்ன செய்தார்?  அவருக்குக் காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதற்கு.  ஒன்றுமில்லை.

அவருக்கு அரசியல் அனுபவம் போதாது.  அவ்வளவுதான் நான் சொன்னது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெரியார் said:

அவர் யாரையும் வாங்கோ உள்வாங்கிறன் என்று சொல்லவில்லை. தமிழ் மக்களின் நலனில் உண்மையில் அக்கறை இருந்தால்.. சேர்ந்து பணியாற்றக் கூடிய இடங்களில் பணியாற்றுங்கள் என்பதுதான் அவசின் பொதுப்படையான கருத்து. அது ஒரு சனநாயகச் சூழலில் எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.

விக்கி ஐயா.. சம் சும் கும்பலின் தாளத்துக்கு ஆடாமை.. தமிழ் மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது.. சிங்களவனோடு ஒண்டுக்கிரு என்று சொல்லாமே.. ஹிந்தியாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப... அடிவருடியாக இல்லாமை.. இப்படிப் பல விடயங்கள் அவர் மீது சிங்கள - ஹிந்திய விசுவாசிகள் காழ்படையக் காரணமாகும்.

சம் சும் கும்பலையே குழப்பத்தில் ஆழ்த்தக் கூடிய அளவுக்கு விக்கி ஐயாவின் அரசியல் அனுபவம் 3 வருடங்களில் வளர்ந்துள்ளது. இது வெளிப்படை உண்மை. 

அதன் தாக்கத்தை உங்கள் அலட்டலில் நல்லாவே அவதானிக்க முடிகிறது. tw_blush:

1 minute ago, nedukkalapoovan said:

அவர் யாரையும் வாங்கோ உள்வாங்கிறன் என்று சொல்லவில்லை. தமிழ் மக்களின் நலனில் உண்மையில் அக்கறை இருந்தால்.. சேர்ந்து பணியாற்றக் கூடிய இடங்களில் பணியாற்றுங்கள் என்பதுதான் அவசின் பொதுப்படையான கருத்து. அது ஒரு சனநாயகச் சூழலில் எதிர்பார்க்கப்படக் கூடிய ஒன்றே.

ஒருவரின் பெயரைச் சொல்லி, சேர்ந்து பணியாற்றக் கூடிய இடங்களில் பணியாற்றுங்கள் என்றால், குறிப்பிட்ட பெயருடையவரை உள்வாங்குவது  என்றுதான் அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெரியார் said:

ஒருவரின் பெயரைச் சொல்லி, சேர்ந்து பணியாற்றக் கூடிய இடங்களில் பணியாற்றுங்கள் என்றால், குறிப்பிட்ட பெயருடையவரை உள்வாங்குவது  என்றுதான் அர்த்தம்.

உள்வாங்குவது என்பது அவரை தான் சார்ந்து பணியாற்றக் கேட்பது. ஆனால் விக்கி ஐயா அப்படி யாரையும் அழைக்கவில்லை. மக்கள் சார்ந்து உங்களுக்கு ஏதாவது உருப்படியா செய்ய இருந்தால்.. எல்லாரும் வேறுபாடு களைந்து மக்களுக்காக செயற்படலாம் வாருங்கள் என்கிறார். அது உள்வாங்கல் அல்ல.அவரவர் தங்கள் தங்கள் நிலையில் இருந்து கொண்டு மக்களுக்கான விடயங்களில் தமது கருத்துக்களை முன்வைத்து.. மக்கள் விரும்பும் வகைக்கு ஒரு பொதுக்கருத்தை எட்டுவது. சிங்களவனோடு ஒன்டுக்கிரு என்று சொல்வதல்ல.. மக்கள் விரும்பும் கருத்து. அதனால் தான் இந்த அழைப்பு. விக்கி ஐயாவுக்கு மக்கள் என்ன விரும்பினம் என்பது தெரிந்திருப்பதால்.. அவர் இதனை எல்லோரிடமும் முன் வைக்கிறார். இது ஒரு அரசியல் அனுபவ முதிர்ச்சியின் வெளிப்பாடு என்றும் கொள்ளலாம். 

அது உள்வாங்கல் கிடையாது. இப்போ.. தேசிய தலைவரால்.. ஈரோஸ் தலைவர் இயக்கத்தோடு..சேர்ந்து பணியாற்ற அழைத்தது.. உள்வாங்கல். அதற்கும் இதற்கும் பல பரிமான வேறுபாடுகள் உண்டு. இதெல்லாம்.. ஈழ அரசியல் விளங்கிறவைக்கு தான் புரியும். சிங்களவனோடு ஒன்றாக்கிட என்றவைக்கு உதெல்லாம்.. எதுக்கு. tw_blush:

40 minutes ago, nedukkalapoovan said:

உள்வாங்குவது என்பது அவரை தான் சார்ந்து பணியாற்றக் கேட்பது. ஆனால் விக்கி ஐயா அப்படி யாரையும் அழைக்கவில்லை. மக்கள் சார்ந்து உங்களுக்கு ஏதாவது உருப்படியா செய்ய இருந்தால்.. எல்லாரும் வேறுபாடு களைந்து மக்களுக்காக செயற்படலாம் வாருங்கள் என்கிறார். 

எல்லாரும் வேறுபாடு கலந்து மக்களுக்காக செயற்படலாம், வாருங்கள் என்று அழைக்கிறார். அதாவது உள்வாங்குகிறார்.

பெயர் கூறி அழைக்கப்பட்டவர்கள் (கருணா, டக்லஸ்) போன்றவர்கள் அதைச் செவிமடுத்து, அவருடன் இணைந்து பணியாற்றும்போது, அவர்கள் விக்கியின் செயற்திட்டங்களுக்கு உள்வாங்கப்படுகிறார்கள் என்று அர்த்தம். 

Use your common sense!
 
59 minutes ago, nedukkalapoovan said:

சம் சும் கும்பலையே குழப்பத்தில் ஆழ்த்தக் கூடிய அளவுக்கு விக்கி ஐயாவின் அரசியல் அனுபவம் 3 வருடங்களில் வளர்ந்துள்ளது. இது வெளிப்படை உண்மை. 

இங்கு யாரும் குழப்பத்தில் இல்லை. 

அரசுடன் முரண்டு பிடித்தால்தான், சனங்களும் அவரை நம்பும்.

அடுத்த தேர்தலுக்கு, விக்கி ஐயா மீண்டும் வரலாம்.

விக்கியின், அரசுக்கு எதிரான மேலெழுந்தவாரியான எதிர்ப்பை மக்கள் விரைவில் அடையாளம் காணுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.