Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண சபையில் பத்திரிகை செய்தி தொடர்பில் மூன்று மணி நேர விவாதம்

Featured Replies

வடமாகாண சபையில் பத்திரிகை செய்தி தொடர்பில் மூன்று மணி நேர விவாதம்

 

யாழில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி தவறு என கூறி வடமாகாண சபையில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. அத்துடன் குறித்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் இமானுவேல் ஆனோல்ட் சபையில் கடும் விவாதத்தை தோற்றுவித்தது.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள வடமாகாண சபை பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அந்த அமர்விலையே பத்திரிக்கை செய்தி தொடர்பில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக விவாதம் நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளூநர் தலைமையில் யாழ்.நகர அபிவிருத்தி கூட்டம் நடைபெற்றது. அக் கூட்டத்தில் யாழ்.தேர்த்தல் மாவட்டத்தை பிரிதிநிதித்துவ படுத்தும் 7 பாராளுமன்ற உறுப்பினர்களில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களும் வடமாகாண சபையில் யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவ படுத்தும் 14 உறுப்பினர்களில் 8 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மாகாண சபை மற்றும் முதலமைச்சரின் அதிகாரங்களுக்குள் ஆளூநர் தலையிடுகின்றார் என குற்றம் சாட்டி அக் கூட்டத்தை வடமாகாண சபை உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றார்கள் என செய்தி வெளி ஆகி இருந்தன. அத்துடன் மறுநாள் ஆளூநர் கூட்டத்தை நடத்தாமல் வெளியேறியதாகவும் , பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தான் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தியதாகவும் குறித்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தது.

இந்த செய்தியானது மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் செய்தி இந்த செய்திக்காக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறான பிழையான செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை ஒரு மஞ்சள் பத்திரிகை என குறித்த பத்திரிகையை தூக்கி காட்டி மாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

அத்துடன் மாகாண சபையின் நடைபெறும் விடயங்கள் அனைத்தையும் செய்தி  ஆக்குகின்றார்கள். அதில் பெரும்பாலானவை தேவையற்றவை. காட்டூர்ன் கீறி வெளியிடுகின்றார்கள் இவ்வாறான ஊடகங்களை தடைசெய்ய வேண்டும். எனவும் ஆர்னோல்ட் தெரிவித்தார்.


ஆளும் கட்சி உறுப்பினர் விந்தன் கனகரட்னம்.


கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வடமாகாண ஆளூநர் ,  வடமாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சபை குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்து இருந்தார். அது தொடர்பில் எவரும் கதைக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவே யாழ்.நகரில் ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி ஆளூநர் தனது வரையாரையை மீறுகின்றார். என தெரிவித்தோம்.

மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு அந்த மாகாண முதலமைச்சருக்கு உண்டு . ஆனால் வடக்கு மாகாணத்தில் முதலமைச்சருக்கு அந்த பொறுப்பை கொடுக்காது பாதுகாப்பு அமைச்சும் இலங்கை அரசாங்கமும் முட்டுக்கட்டை போடுகின்றது.

அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பணத்தில் சட்டம் ஒழுங்கு மீறப்படுவதை கட்டுப்படுத்த வடமாகாண ஆளூநர் கூட்டம் கூட்டினார். அது முதலமைச்சரின் அனுமதியின்றி அவரின் அதிகாரத்தில் தலையிடும் கூட்டம் என நான் அதற்கு செல்லவில்லை.

அதேபோன்றே யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டத்திற்கு உள்ளூராட்சி அமைச்சர் எனும் ரீதியில் முதலமைச்சரின் தலைமையிலையே கூட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் அவரின் அனுமதி இன்றி அந்த கூட்டம் கூட்டப்பட்டது.

எனவே  அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை என அந்த பத்திரிக்கைக்கு நான் தெரிவித்தேன் என்னை போல வேறு உறுப்பினர்களும் தெரிவித்து இருக்கலாம்.

அதேநேரம் அந்த கூட்டத்திற்கு உறுப்பினர்கள் சமூகம் அளிக்கவில்லை என யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் அனைத்திலும் செய்தி வெளிவந்து இருந்தது. ஆனால் உறுப்பினர் எதற்காக குறித்த ஒரு பத்திரிக்கையை மாத்திரம் குற்றம் சொல்கின்றார் என தெரியவில்லை என தெரிவித்தார்.

எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன்.

இந்த செய்தியில் உறுப்பினர்களுக்கு எவ்வாறு அவ மரியாதை ஏற்பட்டது என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு செய்தி பிழை என்றால் அந்த செய்தி குறித்து மறுப்பு போட சொல்லாம் அல்லது அந்த பத்திரிக்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

இந்த செய்தியை விட மிக மோசமான செய்திகள் கூட மாகாண சபை பற்றி வெளிவந்து இருந்தன வடமாகாண சபை முதலாம் ஆண்டு நிறைவு குறித்து ஒரு பத்திரிகை மாணவர்கள் வரவு பதிவேடு மாதிரி உறுப்பினர்களுக்கு வரவு பதிவுகளை வெளியிட்டு செய்தி வெளியிட்டு இருந்தது .

மக்களின் பிரச்சனைகளை கதைக்க வேண்டிய மாகாண சபையில்  அதனை கதைக்காது ஒரு தவறான செய்தி தொடர்பில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் விவாதிக்க படுகின்றது.

இதன் ஊடக பதவி மோகம் , உட்கட்சி மோதல் , தனி நபர் நலன் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. மக்கள் நலன் குறித்து பேச வேண்டிய இடத்தில் தனி நபர் நலன்கள் குறித்து பேசுகின்றோம் என தெரிவித்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர் கேசவன் சயந்தன்.

குறித்த செய்தி அந்த பத்திரிக்கை க்கு எவ்வாறு போனது ? எவரினதும் தூண்டுதலின் பெயரில் தான் அந்த செய்தி வெளியிடப்பட்டதா ?அல்லது மக்களை பிழையாக வழிநடத்த அந்த பத்திரிகை முயற்சிக்கின்றதா ? என்பது தொடர்பில் ஆராயப்பட  வேண்டும். அது தொடர்பில் வடமாகாண சபை சார்பில் வழக்கு தாக்கல் செய்வது  குறித்தும் ஆராயப்பட  வேண்டும்.


சரியான அரசியல் தலைமை இருந்தால் இவ்வாறான பிரச்சனைகள் வராது. என தெரிவித்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர் து.ரவிகரன்.

சபை அமர்வு ஆரம்பித்து மூன்று மணி நேரம்  கடந்த பின்னரும் அந்த பத்திரிகையில் வந்த தவறான செய்தியினை பற்றியே விவாதித்துக் கொண்டு இருக்கின்றோம்.

நான் முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் பட்டினியால் மக்கள் இறக்க உள்ளனர் அவர்களுக்கு உளர் உணவு வழங்கப்பட  வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து பிரேரணை ஒன்றினை முன் வைக்க உள்ளேன்.

தவறான செய்தி தொடர்பான இந்த விவாதம் தொடர்ந்து கொண்டே போகுமாயின் எனது பிரேரணை இந்த அமர்வில் எடுத்துக் கொள்ளப்படாமல் அந்த மக்கள் பட்டினியால் செத்து விடுவார்களோ என அச்சமாக உள்ளது எனவே இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என தெரிவித்தார்.


அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்.

செய்தியை பிழையாக பிரசுரித்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிக்கை என ஆனோல்ட் குறிப்பிட்டதை பதிவேட்டில் இருந்து நீக்குகின்றேன்.

ஊடகவியலாளர்களிடம் கேட்டுக் கொள்வது என்னவெனில் , இது உங்களது மாகாண சபை எங்களை பாதிக்கும் செய்திகளை வெளியிடாதீர்கள்.

செய்தியை செய்தியாக எழுதுங்கள் கட்டுரைகளை கட்டுரைகளாக எழுதுங்கள். செய்திகள் உங்கள் தனிப்பட்ட விமர்சனங்களை எழுதாதீர்கள் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132534/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு மாகாணசபையின் 53ஆம் அமர்வு நேற்ற கைதடியில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்ற போது, குடாநாட்டு  பத்திரிகைகள் மீது கடுமையான விமர்சனங்களை மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்மொழிந்தார்.

வடக்கு மாகாணசபையின் 53ஆம் அமர்வு நேற்ற கைதடியில் அமைந்துள்ள பேரவை மண்டபத்தில் இடம்பெற்ற போது, குடாநாட்டு பத்திரிகைகள் மீது கடுமையான விமர்சனங்களை மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர். மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஆனோல்ட், மாகாணசபை உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல் தொடர்பான பிரேரணையினை சபையில் முன்மொழிந்தார்.

   

இதன்போது அவர் உரையாற்றுகையில், யாழ். மாவட்டத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்றை கையில் எடுத்து, அந்த பத்திரிகையை மஞ்சள் பத்திரிகை என பேசினார். இதனை தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரிடமிருந்து ஊடகங்கள் தொடர்பான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் 3 பத்திரிகைகள் தொடர்பாகவும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆளுங்கட்சி உறுப்பினர்களான ஆனோல்ட், அஸ்மின் மற்றும் பிரதி அவை தலைவர் ம.அன்டனி ஜெயநாதன், பரஞ்சோதி ஆகியோர் ஊடகங்கள் மீதான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக யாழ். ஊடகவியலாளர்கள் பணம் பெற்றுக் கொண்டு செய்திகளை வெளியிடுவதாகவும், பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர்.

இதன்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களான க.விந்தன், சிவாஜிலிங்கம், மற்றும் சர்வேஸ்வரன், சிவனேசன் அமைச்சர்களான ஐங்கரநேசன் மற்றும் டெனீஸ்வரன் ஆகியோர் ஊடகங்கள் மீதான விமர்சனம் தேவையற்றது என வாதிட்டபோதும், ஊடங்கள் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இறுதியாக பேசிய அவை தலைவர் மஞ்சள் பத்திரிகை என பாவிக்கப்பட்ட வசனத்தையும், ஊடகவியலாளர் ஒருவரின் பெயரையும் அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக கூறினார்.

இந்நிலையில் காலை 9.30 மணி தொடக்கம் நண்பகல் 12.30 மணி வரையில் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்ற ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் முடிவுக்கு வந்தது. மேலும் மாகாணசபை உறுப்பினர் ஆனோல்ட் முன் மொழிந்த பிரேரணை சபையில் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கை குழுவிடம் கையளிக்கப்படும் என அவைத்தலைவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறாக பேசிய மாகாண சபை உறுப்பினர்களின் உரைக்கு யாழ். மாவட்ட ஊடகவியலாளர்கள் பலர் தமது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர். ‘பணம் பெற்று செய்து வெளியிடுகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டானாது, பாரதூரமானது எனத் தெரிவிக்கும் ஊடகவியலாளர்கள், சமூகத்தில் பொறுப்பானவர்களின் இவ்வாறான தான்தோன்றித்தனமான பேச்சுக்கு தங்கள் கண்டங்களையும் தெரிவித்துள்ளார்கள்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158301&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.