Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகை உலுக்கிய புகைப்படங்கள்!

Featured Replies

உலகை உலுக்கிய புகைப்படங்கள்!

 

World%20photos%20head01.jpg

ன்றைய நவீன உலகத்தில் கேமரா என்பது தவிர்க்கவே முடியாத ஒரு கருவியாக மாறியிருக்கிறது. உலகத்தில் ஏதாவது ஒரு வடிவத்தில் கேமராவுடன் உறவு கொண்டாடாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். கேமராவுக்கு முன்னோ அல்லது கேமராவுக்குப் பின்னோ நின்று ஆவணப்படுத்திக் கொண்டேயிருக்கிறான்.

world%20photos02%281%29.jpgநம் அன்றாட வாழ்வில் மிகவும் அவசியத் தேவையாகிவிட்ட இந்த கேமராவின் பிறப்பு, அதன் பரிணாம வளர்ச்சிகள், கடந்து வந்த பாதைகள், அது ஏற்படுத்திய தாக்கங்கள் என அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவை. ஓவியம், இசை, இலக்கியம் உள்ளிட்ட எந்தக் கலைகளுக்கும் இல்லாத சிறப்பு இந்த கேமராவுக்கும், அது உருவாக்கிய புகைப்படத்துக்கும் மட்டுமே இருக்கிறது. எந்தக் கலைகளுக்கும் இதுதான் ஆரம்பம் என்று துல்லியமான ஆதாரங்களோடு நம்மால் கூற முடியாது. ஏதோ ஒரு வகையில் ஆவணப்படுத்தப்பட்டதில் இருந்துதான் அவற்றைப் புரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். நவீன உலகத்தின் விஞ்ஞான கண்டுபிடிப்பான கேமரா அப்படி அல்ல. இதுதான் உலகத்தில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்று ஆணித்தரமாக நம்மால் சொல்லிவிட முடியும்.

கடந்த காலத்தின் அரசியல், வரலாறு, போர் மற்றும் புரட்சி, அவை ஏற்படுத்திய அழிவுகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றை உண்மையின் சான்றாக படம் பிடித்து நம் கண் முன்னே நிறுத்துகிறது. புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்தக் குறுகிய காலத்திலேயே, அனைத்து மக்களையும் அது கவர்ந்து வைத்திருப்பதற்குக் காரணம்... படிப்பறிவில்லாத பாமரனும் அதை எளிமையாகப் புரிந்துகொள்ளும்படி இருப்பதுதான். மேலும், உலக நிகழ்வுகளை ஆவணப்படுத்துவதிலும் அதன் உண்மை நிலையை உலகுக்கு உடனுக்குடன் புரிய வைப்பதிலும் புகைப்படத்துக்கு நிகர் வேறில்லை.

'கிளிக்’ என்ற மெல்லிய சத்தத்துடன் ஒவ்வொரு முறையும் இதன் ஷட்டர்கள் திறந்து மூடும்போதும், அந்தந்தக் காலகட்டத்தின் வரலாற்றை விழுங்கி தன்னுள் ஆவணமாக பதிவு செய்துகொள்கிறது. நூற்று எழுபத்தைந்து ஆண்டுகால வரலாற்றின் நேரடி சாட்சியாக இருந்து கொண்டிருக்கும் இந்த கேமரா உருவாக்கிய படங்கள் மூலம் உலகத்தின் கடந்த கால வரலாற்றை திரும்பிப் பார்க்கவே இந்தப் பயணம்.

1. நாப்பாம் சிறுமி 

உடல் முழுவதும் தீக்காயங்களுடன், தனது  இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு முகம் முழுவதும் பீதியுடன் நிர்வாணமாக ஒரு சிறுமி ஓடிவரும் இந்தப் படம் பார்ப்பவர்கள் அனைவரையும் கதிகலங்கச் செய்துவிடும். தெற்கு வியட்நாம் போட்ட நாப்பாம் குண்டினால் தாக்குதலுக்குள்ளான இந்தச் சிறுமி ஓடி வரும் படம் உலக நாடுகள் மொத்தத்தையும் அப்போது அசைத்துப் பார்த்தது. சுமார் 19 வருடங்களாக நடந்து கொண்டிருந்த வியட்நாம் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வர இந்தப் படம் மிகப் பெரிய காரணமாக அமைந்தது.

world%20photos01.jpg

1954-ல் வடக்கு வியட்நாம் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி கொண்டது. அதன் பிறகு வடக்கு, தெற்கு என இரண்டாக பிரிந்திருந்த வியட்நாமை, சோவியத் யூனியன் மற்றும் சீனாவைப்போல ஒரே நாடாக ஆதிக்கம் செலுத்த விரும்பியது வடக்கு வியட்நாம். அதேசமயம் தெற்கு வியட்நாமும் தன்னுடைய சுயாட்சியை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக வட அமெரிக்காவுடன் சேர்ந்து வடக்கை எதிர்க்க விரும்பியது. இந்தப் போரில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தெற்கு வியட்நாமுக்கு ஆதரவாக நேரடியாகப் பங்கேற்றனர். சீனா மற்றும் ரஷ்யாவும் வடக்கு வியட்நாமுக்கு அதிகளவில் ஆயுதங்களையும், போர் உத்திகளையும் நேரடியாக கொடுத்து வந்தது. இந்தப் போரின் உச்சத்தில் 58,200 அமெரிக்க ராணுவ வீரர்களும், 11 லட்சம் வியட்நாம் வீரர்களும், சுமார் 20 லட்சம் பொதுமக்களும் மாண்டுபோயினர்.

போர் உச்சத்தில் இருந்த காலகட்டமான 1972 ஜூன் 9-ம் நாள் தெற்கு வியட்நாம் பெட்ரோலிய ரசாயனம் கொண்ட நாப்பாம் குண்டினை தெற்கு வியட்நாமில் இருக்கும் (அப்போது வடக்கு வியட்நாமின் கட்டுப்பாட்டில் இருந்த) 'தராங்பாங்க்’ என்ற கிராமத்தில் வீசியது. இந்த நிலையில்தான் அந்தக் கிராமத்தில் இருந்த எட்டு வயதான சிறுமி பான் தி கிம் ஃப்யூக் (Phan Thi Kim Phuc) தன் சகோதரர்கள் மற்றும் உறவுக்கார சிறுவர்களுடன் ஓடி வந்தாள். அப்போது சிறுமி கிம் ஃப்யூக்கின் உடைகள் முழுவதும் எரிந்து உடலிலும் தீக்காயம் பரவிட்ட நிலையில் ''சுடுது சுடுது'' என்று கதறியபடியே ராணுவம் இருந்த பகுதியை நோக்கி ஓடி வருகிறாள்.

அப்போது அவளுக்கு சற்று தொலைவில் இறந்துபோன ஒரு குழந்தையுடன் அலறிக்கொண்டு வந்த ஒரு மூதாட்டியை அங்கிருந்த புகைப்படக்காரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் புகைப்படம்  எடுத்துக் கொண்டிருந்த அசோசியேட்டட் பிரஸ்சின் புகைப்பட பத்திரிகையாளர் நிக் வுட் (Nick Ut) தனது வியு ஃபைண்டர் ஓரத்தில் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியை பார்த்தார். ஏதோ பெரிய அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து, தன் கேமராவை அவளை நோக்கி திருப்பினார். மற்ற புகைப்படக்காரர்கள் அனைவரும் அந்த மூதாட்டியையும் இறந்துபோன குழந்தையையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க, நிக் வுட் மட்டும் நிர்வாணமாக ஓடிவந்த சிறுமி கிம் ஃப்யூக்கை படம் எடுக்கத் தொடங்கினார்.

world%20photos03.jpgஅந்தச் சிறுமியை புகைப்படம் எடுத்ததோடு நின்றுவிடாமல், அவளுக்கு முதலுதவி செய்து தன் காரிலேயே மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உயிர் பிழைக்கவும் வைத்த நிக்குக்கு அப்போது வயது 19 மட்டுமே. பிறகு, தன் அலுவலகத்துக்குச் சென்ற நிக், அந்தப் புகைப்படங்களை பிரிண்ட் போட்டு ஆசிரியர் குழுவினரிடம் காட்டியபோது, சிறுமி நிர்வாணமாக இருப்பதைக் காரணமாக காட்டி முதலில் அவர்கள் அதை பிரசுரிக்க மறுத்துவிட்டனர். பின்னர் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தனது முதல் பக்கத்தில் இந்தப் படத்தை பிரசுரித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படம் உலகில் இருந்த அத்தனைப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளிலும் போருக்கு எதிரான படமாக அடையாளப்படுத்தப்பட்டது. உலக நாடுகளின் கடுமையான கண்டனத்தினாலும், உள்நாட்டு மக்களின் எதிர்ப்பினாலும் 1973-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி அமெரிக்க ராணுவம் வியட்நாமை விட்டு வெளியேறியது. 1975-ம் ஆண்டு ஏப்ரல் 30-ல், வடக்கு வியட்நாமிடம் தெற்கு வியட்நாம் சரணடைந்தது. 1976-ல் ஜூலை 2-ல் 'வியட்நாம் சோசலிசக் குடியரசு’ (The Socialist Republic of Vietnam) உருவானது. இந்தப் படத்துக்காக நிக்குக்கு 1973-ல் நோபல் பரிசுக்கு இணையான பத்திரிகை துறையில் உயரிய விருதான ’புலிட்சர் விருது’ வழங்கப்பட்டது.

இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமிக்கு இப்போது வயது 52. தற்போது கனடாவில் வசித்து வரும் இவரை 1994-ம் ஆண்டு யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுவராக (UNESCO Goodwill Ambassador) நியமிக்கப்பட்டார். 1997-ல் 'Kim Phuc Foundation' என்னும் பெயரில் ஒரு தொண்டு நிறுவனம் துவங்கி, போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிக் கொண்டிருக்கிறார் கிம் ஃப்யூக். தற்போது இதனுடன் பல கிளை நிறுவனங்கள் இணைந்து 'Kim Phuc Foundation International' என்ற பெயரில் இயங்கி வருகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=50082#

  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-2)

 

World%20photos%20head02.jpg

தூக்கில் தொங்கும் இரு வீரர்கள்!

கால்கள் பிணைக்கப்பட்டு, இரண்டு கைகளும் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் தலைப்பாகையுடன் இருவர் கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பின் இருக்கும் வரலாறு, முழுக்க முழுக்க சோகத்தால் நிரம்பியது. இவர்களைச் சுற்றி இருக்கும் பத்து வீரர்களும் பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவத்தில் பணியாற்றிய இந்தியர்களே. 1858-ல் சிப்பாய் கலகம் முடிவுக்கு வந்த பிறகு பிரிட்டிஷுக்கு எதிராகப் போராடிய இந்திய வீரர்களைத் தூக்கில் போடும்போது போட்டோகிராபர் பெலிஸ் பியட்டோவால் (Felice Beato) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படமே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வீரியத்தை உலகறியச் செய்தது.

1857 மே மாதம் 10-ம் தேதி டெல்லிக்கு அருகே, மீரட்டில் இருந்த கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் உருவான இந்தக் கலகம் கங்கை சமவெளி, மத்திய இந்தியா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்குக் காட்டுத்தீயாகப் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய பிறகு, 1958 ஜூன் 20-ம் தேதிதான் முடிவுக்கு வந்தது. கலகமாகத் தொடங்கி புரட்சியாக உருவெடுத்த இந்தப் போராட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல், கிழக்கிந்திய கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடி பார்வையில் இந்தியா வரக் காரணமாக அமைந்தது.

1820-ல் இந்தியாவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் கலை கலாசாரத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் மூலமாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பிரிட்டிஷ், பிரிந்திருந்த பல்வேறு சமஸ்தான நிலப்பரப்புக்களையும் தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டது. மேலும், ‘லார்டு டெலோசி’யின் மறுப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் வாரிசு இல்லாத இந்திய அரசர்களின் நிலப்பரப்புக்களை, தன்னுடன் இணைத்துக்கொள்ள ஆரம்பித்தது. இதனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக குறுநில மன்னர்களின் அதிருப்தி வலுக்கத் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் பிராமணர்களுக்கு சமஸ்தானத்தில் கிடைத்துக்கொண்டிருந்த அந்தஸ்துகளும் வருவாயும் இச்செயல்களால் அதிகமாக பாதிக்கப்பட்டது.

world%20photos2-1.jpg

பெண் விடுதலை, பெண்களுக்கு மறுமணம் போன்றவற்றை ஆங்கிலேயர்கள் சட்டரீதியாக அங்கீகரித்து இந்துக்களின் நம்பிக்கைகளை உடைத்தெறிய முயற்சி செய்தனர். சாதி கட்டமைப்புகளை ஒதுக்கி கிறிஸ்தவ மதத்தை பரப்பியதோடு, பாரம்பரிய இந்து, இஸ்லாமிய கல்வி முறைகளை மேற்கத்திய மயமாக்கியது, பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில், வங்காள ராணுவத்தில் ’என்ஃபீல்ட் ரைஃபில்’ (Enfield Rifle) என்ற துப்பாக்கியை அறிமுகப்படுத்தியது பிரிட்டிஷ். நீண்ட நாட்களாக குமுறிக் கொண்டிருந்த மக்கள் துள்ளியெழ உடனடிக் காரணமாக இது அமைந்தது. ஏனெனில், இந்தத் துப்பாக்கியின் தோட்டா முனையில் மாடு மற்றும் பன்றிகளின் இறைச்சியால் ஆன குப்பிகளை கடித்துத் துப்ப வேண்டியிருந்தது. அதனால், இந்து மற்றும் இஸ்லாமிய சிப்பாய்கள் கடுமையான கோபம் அடைந்தனர். இவற்றின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகத்தான் 1857-ல் மங்கள் பாண்டே என்கிற 29 வயது சிப்பாய், மேற்குவங்கப் பகுதியின் ராணுவத் தளத்தில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டார். இதனைத் தொடர்ந்து மங்கள் பாண்டே உடனே கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். சிப்பாய்க் கலகம் உருவாக இந்தச் சம்பவமே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

world%20photos2-2.jpgஇந்தப் புகைப்படத்தை எடுத்த பெலிஸ் பியட்டோ, பிரிட்டிஷ் இத்தாலியனைச் சேர்ந்தவர். இவர் 1857-ல் இந்தியாவில் நடந்த கலவரத்தைப் படம் பிடிக்க பிரிட்டிஷ் அரசாங்கத்தால் லண்டனில் இருந்து அனுப்பப்பட்டவர். இந்தக் காலகட்டத்தில் இவர் எடுத்த அறுபது புகைப்படங்கள்தான் இன்றளவும் சிப்பாய் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருக்கிறது. இந்தப் புகைப்படம் எடுப்பதற்கு நீண்ட நேரம் ஒளி ஊடுறுவும் முறையை (Long Exposure time) பயன்படுத்தினார் பியட்டோ. கல்கத்தா வந்து இறங்கியவர் பல இந்தியர்களை வேலைக்கு அமர்த்தி இழுவண்டியின் மூலம் வட இந்தியாவை நோக்கி பயணித்தார். செல்லும் வழி நெடுகிலும் சிப்பாய் கலகத்தால் ஏற்பட்ட சிதைவுகளையும் அழிவுகளையும் பதிவு செய்துகொண்டே சென்றார்.

சிப்பாய் கலகத்துக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷாரை கூறுபோட்டவர்கள் தமிழர்கள். இருந்தபோதிலும், 1857-ல் நடந்த சிப்பாய் புரட்சியே முதல் சுதந்திரப் போராக இன்றளவும் பேசப்படுவதற்குக் காரணம் உலகத்தின் முதல் போர் புகைப்படக்காரரான பெலிசி பியட்டோ எடுத்த இந்தப் புகைப்படம்தான்.

http://www.vikatan.com/news/article.php?aid=50417

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்.. உங்கள் திரியில் நானும் சில படங்களை இணைக்கலாம் என நினைத்து இணைக்கிறேன்!

தவறானால் தெரியப்படுத்துங்கள்!

A vulture waits for the malnourished child to die (1992)

This photograph created quite a stir on the humaneness of photographing community. The photographer commited suicide despite being awarded for this photo.

531322e61e2a6.jpeg

ஆகஸ்ட் 6, 1945

முதலாவது அணுக்குண்டு ஹிரோஷிமா நகரில் போடப்பட்ட போது.. எடுக்கப்பட்ட படம்!

13-days-that-shook-the-world-atomic-bomb

The nuclear age was ushered in the day the first atomic bomb was dropped on Japan and the world was changed forever. On August 9, a second bomb was dropped on Nagasaki. The two bombings, which killed at least 129,000 people, remain the only use of nuclear weapons for warfare in history.

In a 1965 television broadcast about the moments following the first successful atomic test, J. Robert Oppenheimer, the scientific director of the USA’s program to develop the first nuclear weapons said: “We knew the world would not be the same. A few people laughed, a few people cried, most people were silent. I remembered the line from the Hindu scripture, the Bhagavad-Gita… ‘Now, I am become Death, the destroyer of worlds.'”

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

0b1af7cd.jpg

வறுமைக்கு வார்த்தைகள் ஏது?

  • தொடங்கியவர்

நவீனன்.. உங்கள் திரியில் நானும் சில படங்களை இணைக்கலாம் என நினைத்து இணைக்கிறேன்!

தவறானால் தெரியப்படுத்துங்கள்!

தாராளமாக இணையுங்கள்.

நான் விகடனில் வரும் தொடரைத்தான் இங்கு இணைத்து வருகிறேன்.

  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-3)

 

japan%20photo%203.jpg

 

ஹிரோஷிமா - நாகசாகி அழிவுகளையும், மரணங்களையும் பதிவு செய்த புகைப்படக்காரர்கள்!

ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டுத் தாக்குதல் நடத்தி இன்றோடு எழுபது ஆண்டுகள் முடிவடைந்துவிட்டாலும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் குறையவில்லை. வெள்ளைக் காளான்கள் போல் இருக்கும் இந்த இரு படங்களையும் சிறு குழந்தைகள் பார்த்த மாத்திரத்தில் சட்டென சொல்லிவிடுவார்கள் ஹிரோஷிமா - நாகசாகி என்று. லட்சக்கணக்கான மக்கள் உடல் பொசுங்கி பலியாவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அமெரிக்க உளவுத்துறையின் விமானப்படையால் எடுக்கப்பட்டதுதான் இந்த இரு படங்கள்.

Hiroshima%20.jpg

1945 ஆகஸ்ட் 6ஆம் தேதி ஹிரோஷிமாவிலும் அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி நாகசாகியிலும் போடப்பட்டன. லிட்டில் பாய் (Little Boy) என்று பெயர் வைக்கப்பட்ட யுரேனியம் அணுகுண்டு (A uranium gun-type atomic bomb) ஹிரோஷிமாவிலும், புளூட்டோனியம் (plutonium) அணுகுண்டை நாகாசாகியிலும் பயன்படுத்தப்பட்டது. இரும்பையே உருக வைக்கும் 4000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வீசப்பட்ட இந்த இரண்டு குண்டுகளும் சுமார் 8 கிலோ மீட்டர் அளவிற்கு பாதிப்பை அப்போது ஏற்படுத்தியது. இதன் விளைவாக இரண்டிலிருந்து நான்கு மாதங்களுக்குள் ஒன்றரை லட்சம் பேர் ஹிரோஷிமாலும், எண்பதாயிரம் பேர் நாகசாகியில் இறந்ததாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அப்போதே உடல் பொசுங்கி இறந்துவிட்டதாக தகவல்கள் பதிவாகியிருக்கிறது. மற்றவர்கள் மோசமான தீக்காயங்கள், கதிர்வீச்சி, உணவு பற்றாக்குறை காரணமாக இறந்தனர். இதுபோக மாதக்கணக்காக, வருடக்கணக்காக குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. இந்தக் கோரமான சம்பவத்தை அணுகுண்டு வீச்சின் சூடு குறைவதற்குள்ளாகவே அப்போது ஏற்பட்ட அழிவுகளையும், மரணங்களையும் உடனே பதிவு செய்தவர்கள் யோஷிட்டோ மட்சுஷிக் (Yoshito Matsushige), யோசுக்கே யமஹாட்டா (Yosuke Yamahata) என்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மட்டுமே. காலத்தை வென்று நிற்கும் அந்த புகைப்படங்களைப் பற்றியும், உயிரையும் பொருட்படுத்தாமல் அதனைப் புகைப்படங்களாக பதிவு செய்த இவர்களை பற்றியும் பார்ப்போம்.

Hiroshima%201.jpg

ஹிரோஷிமா:

யோஷிட்டோ மட்சுஷிக் (Yoshito Matsushige) என்ற இவர் சுகோகு ஷிம்புன் (Chugoku Shimbun) என்ற ஜப்பான் பத்திரிகையில் புகைப்படப் பத்திரிகையாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். 1945, 6ஆம் தேதி ஹிரோஷிமா மீது அமெரிக்க இராணுவம் அணுகுண்டை வீசிய இடத்திலிருந்து  2.7 கிலோ மீட்டர் தொலைவில்தான் இவர் வீடும் இருந்ததால் அந்த குண்டு வீச்சால் இவரும் படுகாயமடைந்தார். தன் உடல் முழுவதும் ரத்தம் வடிந்த நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்தக் கொடூர அழிவின் சாட்சியாக நின்று அவைகளை தனது கேமராவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். கேமராவின் கிளிக் பட்டனைக் கூட அழுத்த முடியாததால் வெறும் ஐந்து படங்களை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது. அந்த பிலிம் ரோல்களை  உடனே டெவலப் செய்ய முடியவில்லை. காரணம் அனைத்துக் கட்டடங்களும் இடிந்துவிட்டதால் இருட்டறை (Dark room) வசதி இல்லாமல் போனது. அதன்பின் இருபது நாட்களுக்குப் பிறகு ஒரு இரவு நேரத்தில் நதியோரம் அமர்ந்து அந்த பிலிம் ரோல்களை டெவலப் செய்து அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். பெரியவர்களும் குழந்தைகளுமாக உடையும் சதையும் பிய்ந்து தொங்கிய நிலையில், என்ன நடந்தது என்றே தெரியாமல் அமர்ந்திருப்பதையும், நொடிப்பொழுதில் தரைமட்டமாகிப் போன நகரம் என இந்தப் படத்தைப் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்து விடும்.

Hiroshima%20photographer.jpgபத்திரிகைக்கு இவர் அளித்த பேட்டியில், "நான் காலை நேர உணவு அருந்திவிட்டு வேலைக்கு செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது எந்தவித ஓசையும் இல்லாமல் ஃப்ளாஷ் போன்ற ஒரு வெளிச்சம் வந்தது. வெளியே வந்து அந்த வெளிச்சத்தை பார்த்தபோது எனக்கு கண் தெரியவில்லையோ என்று பயந்துவிட்டேன். அப்போது ஆயிரக்கணக்கான ஊசிகள் ஒட்டுமொத்தமாக உடலில் குத்தியது போன்ற வலியை உணர்ந்தேன். அப்போது என் வீடும் முழுமையாக இடிந்து விழுந்தது. உடனே இராணுவத்தால் எனக்குக் கொடுக்கப்பட்ட உடைய அணிந்து கொண்டு சற்று தூரம் சென்று பார்த்தபோது அந்தப் பகுதி முழுவதும் வெறும் கூக்குரல்களும் இடிபாடுகளுமாகக் காட்சியளித்தது. முதலில் அலுவலகம் செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் மியூக்கி பாலம் (Miyuki bridge) அருகே இருந்த போலீஸ் அறை அருகே குண்டுனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரியவர்கள் குழந்தைகள் என அனைவருமே பிய்ந்து தொங்கும் சதைகளோடு அங்கே நின்று கொண்டிருந்ததைப் பார்த்ததும் எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது. அப்போது கேமராவினை தூக்கி படம் எடுக்க முயன்றேன். ஆனால் வியூ ஃபைண்டரில் முழுவதும் எனது கண்ணீரால் நிரம்பியதால் ஒன்றுமே தெரியவில்லை என்ற போதிலும் படம் எடுத்தேன். அப்போது அந்த மக்கள் என்னை கேவலமாகத்தான் நினைத்தார்கள். இருந்தாலும் என்னுடைய  கடமையை செய்ய நான் போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். இந்த அதிர்வில் தட்டுத்தடுமாறி பொறுமையாக வந்து கொண்டிருந்த ஒரு காரினுள் எட்டிப் பார்த்தபோது அதில் பயனித்த 15 பேரும் பிணங்களாக இருந்தார்கள். எங்கள் அலுவலகம் பிரசுரிக்காது என்பதால் பெரும்பாலும் பிணங்களையும் நிர்வாணங்களையும் நான் படம் எடுக்கவில்லை" என தனது வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கே இராணுவப் போட்டோகிராபர்கள் இருந்தாலும் மிகவும் கொடூரமாக இருந்ததால் இந்த சம்பவத்தை யாரும் போட்டோ எடுக்கவில்லை. சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் இறந்த துயர சம்பவத்தை இந்த சம்பவத்தை உடனே பதிவு செய்தவர் இவர் மட்டுமே.

Nagasaki.jpg

நாகசாகி:

யோசுக்கே யமஹாட்டா (Yōsuke Yamahata) என்ற இவர் சிங்கப்பூரில் பிறந்தவர். இவரின் அப்பாவும் சிங்கப்பூரில் பெரிய போட்டோகிராபர் என்பதால் 1925ல் டோக்கியோவில் படிக்க வந்த இவர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு போட்டோ எடுக்க ஆரம்பித்தார். சீனா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இராணுவ போட்டோகிராபராக பணியாற்றியிருக்கிறார். நாகசாகியில் குண்டு வீசப்பட்ட மறுநாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று அதன் பாதிப்புகளையும் அதில் பாதிக்கப்பட்ட மக்களையும் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் எடுத்தார். ஆகஸ்ட் 21ஆம் தேதி மைனிச்சி ஷின்புன் (Mainichi Shinbun) என்ற ஜப்பானிய பத்திரிகையில் இவரது படங்கள் வெளி வந்தது. அப்போதுதான் ஜப்பானுக்கே இந்தக் கொடூரத் தாக்குதலின் முழு வீரியமும் தெரிய ஆரம்பித்தது. ஆனால் உடனே நேச நாட்டுப் படைகளின் தலைமை இந்தப் படங்களை மேற்கொண்டு வெளியிட தடை விதிக்க, அந்தத் தடை 1952 வரை நீடித்தது. அதன்பிறகு சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு லைஃப் (Life) என்ற பத்திரிகையில் மீண்டும் இந்தப் படங்கள் வெளிவந்த பிறகுதான் உலக நாடுகளுக்கு கதிர்வீச்சின் பாதிப்புகள் பற்றி முழுமையான அளவில் தெரிய வந்தது.

japan%20photographer.jpgஅப்போது ஒரு பத்திரிகைக்கு யோசுக்கே யமஹாட்டா அளித்த பேட்டியில், "மனிதனின் ஞாபகங்கள் காலப்போக்கில் மறந்துவிடக் கூடியது. அதேபோல அவர்களது செயல்களும் வாழ்க்கை முறைகளும் காலத்திற்கு தகுந்தது போல மாறிக்கொண்டே வரும். ஆனால் கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் மறந்துவிட்ட அனைத்தையும் நம் கண் முன்னே நிறுத்தும். இப்போது நாம் ஹீரோஷிமா, நாகசாகியைப் பார்க்கும்போது அந்த அழிவுகளின் சுவடுகள் இருக்காது. ஆனால் அந்தப் புகைப்படங்கள் மூலமாக அந்தக் கொடூரங்களையும் கோரங்களையும் பார்க்கமுடியும்" என்று கூறியிருக்கிறார்.

கதிர் வீச்சு காரணமாக புற்று நோயால் பாதிக்கப்பட்ட யோசுக்கே யமஹாட்டா  1965ல் தனது 48வது வயதில் இறந்துவிடுகிறார். முகம் முழுவதும் இரத்தக் காயங்களுடன் தன் தாயிடம் பால் குடிக்கும் குழந்தை, முகத்தில் காயங்களுடன் கையில் உணவுப் பண்டத்துடன் வெறித்துப் பார்க்கும் சிறுமி, தரை மட்டமான கோயில் என ஒவ்வொரு படத்திலும் நாகசாகியின் அழிவை நம் கண் முன்னே நிறுத்துகிறது.

உலக வரலாற்றில் போர்கள் பல நடைபெற்றிருந்தாலும் இரண்டாவது உலகப்போர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காரணம் வழக்கமான போர்கள் என்பது இரு தனி நாடுகளுக்குள் ஏற்படுவது. ஆனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சுநாடுகள் (ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி) - நேச நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, சீனா) என இரு அணிகளாக பிரிந்து போரில் ஈடுபட்டது இரண்டாம் உலகப் போரில்தான். 1939ல் ஆரம்பித்த உலகப் போர் 1945ல் ஜப்பான் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை உலக வரலாற்றில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்களில் இதுவே மோசமானது என்கிறது ஆய்வறிக்கைகள். அணுகுண்டுகள் ஏற்படுத்தும் பேராபத்துகளையும் அதனால் ஏற்படும் அழிவுகள் எப்படி இருக்கும் என்பதையும் இந்தப் படங்கள் சொல்லிக் கொண்டே இருக்கும் அடுத்து ஓர் அசம்பாவிதம் ஏற்படாதவரை.

                                                                                                                                                   - புகைப்படம் பேசும்

http://www.vikatan.com/news/article.php?aid=50750

  • தொடங்கியவர்

மெர்குரி மரணங்கள்...

 

                                                                                                   world%20shock.jpg

முடங்கிப்போன கை கால்களுடன் உருக்குலைந்த தேகத்துடன் தண்ணீர் தொட்டியில் கிடத்தப்பட்டு இருக்கும் இந்தப் பெண்ணின் புகைப்படத்தை எப்போது பார்த்தாலும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைத்துவிடும்.

mercury%20deaths.jpg

நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் சுய நினைவற்ற நிலையில் விட்டத்தை வெறித்துப் பார்க்கும் இந்த பெண்ணின் படம்தான் மெர்குரி எனும் பாதரசத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேட்டின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த நோயின் பெயர் மினமாட்டா நோய். இந்த நோய் முதன் முதலில் கண்டறியப்பட்ட கிராமத்தின் பெயரே இந்த நோயின் பெயராக நிலைத்துவிட்டது.

இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த பெண்ணின் பெயர் டொமொக்கோ யுமுரா (Tomoko Uemura), அருகிலிருக்கும் அவளது அம்மாவின் பெயர் ராய்க்கோ யுமுரா (Ryoko Uemura). 1971-ம் ஆண்டு ஜப்பானின் பாரம்பரியக் குளியல் தொட்டியில் கிடத்தப்பட்டிருக்கும்போது வில்லியம் ஈஜன் ஸ்மித் (W.Eugene Smith) என்ற போட்டோகிராபரால் எடுக்கப்பட்டது.

1972-ல் ஜூன் 2-ம் தேதியிட்ட லைஃ (Life) என்ற சர்வதேச பத்திரிக்கையில் நடுப்பக்கத்தில் பிரசுரிக்கப்பட, மினமாட்டா நோயைப்பற்றிய பிரச்சனை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியது. மினமாட்டா நோயின் தீவிரத்தை தனது குழந்தையின் புகைப்படம் மூலமாக உலகத்திற்கு தெரிவிக்க டொமொக்கோ யுமுராவின் பெற்றோர் ஸ்மித்தை படம் எடுக்க அனுமதித்தனர். மினமாட்டா நோயின் தீவிரத்தை உலகம் தெரிந்து கொள்ள காரணமாக இருந்த டொமொக்கோ யுமுரா நோய் முற்றியதால் 1977 ல் இறந்துவிட்டாள்.

1956-ம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று நடக்க முடியாமலும் பேச இயலாததால் வாய்கள் குழறிய நிலையில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு குழந்தை மினமாட்டா தீவில் இருந்த சிஸ்சோ கம்பெனியின் மருத்துவமணையில் (Chisso Corporation factory Hospital) அனுமதிக்கப்படுகிறாள். அதிலிருந்து இரண்டாவது நாளில் அந்தக் குழந்தையின் தங்கையும் அதே அறிகுறிகளுடன் மருத்துவமணையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இது என்ன புதுமாதிரியான நோய் என்று மருத்துவர்கள் கையை பிசைந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்போதே, ’’எங்கள் குழந்தைகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று அந்தப் பகுதியில் உள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோர்களும் மருத்துவமணையை நோக்கி ஓட ஆரம்பித்தனர். என்ன நடக்கிறது என்று சிஸ்சோ தொழிற்சாலை நிர்வாகம் மருத்துவர்கள் குழுவை அனுப்பி ஆராய்ந்தபோதுதான் அந்த விபரீதம் வெளியே தெரியவந்தது. ஆம், அந்த மீனவ கிராமத்தில் அப்போது வசித்த வந்த பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து மக்களுக்குமே இந்த நோய் பரவி விட்டிருந்தது.

அனைத்து வீட்டிலுமே பக்கவாதம், கை கால் முடக்கம் என எதாவது ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்து தெரிய வந்தது. என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியாததால் பல நாட்டு மருத்துவ பேரறிஞர்களோடு கலந்து ஆலோசித்தனர். அதன்பிறகுதான் மெர்குரியால் ஏற்படும் மூளை நரம்பு பாதிப்புகளை ஒத்த அறிகுறிகளுடன் மினமாட்டா நோய் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து செய்த பலவித பரிசோதனைகளின் முடிவில் மெர்குரிதான் மினமாட்டாவின் நோய்க்கான காரணி என்று கண்டுபிடித்தார்கள்.

’மினமாட்டா’ - ஜப்பான் நாட்டின் கியூஷு தீவில் கடற்கரையோரம் அமைந்துள்ள அழகிய மீனவ கிராமம். அந்த கிராமத்தில் இரசாயன உரம் தயாரித்துக் கொண்டிருந்தது சிஸ்சோ தொழிற்சாலை (Chisso Corporation) நிறுவனம். 1908-ம் ஆண்டு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழிலில் முதலில் ஈடுபட்டது இந்நிறுவனம். இரண்டாம் உலகப் போருக்கு பின்னான ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும் அளவிற்கு வளர்ச்சியடைந்தது. சரியாக சொல்வதென்றால் இந்நிறுவனத்தால் தான் மினமாட்டா தொழில் நகரமாக மாறியது. இதனால் இயல்பாகவே இதன் ஆதிக்கம் அப்பகுதி மக்கள் மீதும் அரசின் மீதும் அதிகமாக இருந்தது.

இத்தொழிற்சாலையின் இருந்து வெளியேறிய மெத்தைல் மெர்குரி (Methyl Mercury) மினமாட்டா விரிகுடா மற்றும் சிரானுயி கடலில் கலந்தது.  இது ஒரு கனரக உலோகம் என்பதால் இதற்கு செரிமானத் தன்மை என்பது இருக்காது. உதாரணமாக தண்ணீரில் கலந்திருக்கும் இவைகளை மீன்கள் சாப்பிட்டால் அந்த மீன்களின் கல்லீரலில் சேர்ந்துவிடும்.  அந்த மீன்களை உட்கொண்டால் உட்கொள்ளுபவரின் கல்லீரலில் போய் தங்கி மூளை, நரம்பு மண்டலத்தில் நிரந்தர பாதிப்புகளை உண்டாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இந்த முறையில்தான் மினமாட்டா மக்களுக்கும் இந்த நோய் பரவியது.  1956-ல் தான் இப்படி ஒரு நோய் இருப்பதையே கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் ஆனால் சிஸ்சோ நிறுவனம் 1932-லிருந்து 1968 வரை 36 ஆண்டுகளாக மெர்குரியை கடலில் வெளியேற்றிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மினமாட்டா கிராமத்தில் 36 வருடங்களாகவே தொடர் மரணங்கள் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் தலைகள் பெரியதாகி கை கால்கள் முடங்க ஆரம்பித்தது.

பிறக்கும் குழந்தைகளும் ஊனத்துடனேயே பிறக்கத் தொடங்கின. 2001 மார்ச் வரையிலுமே பாதிக்கப்பட்டவர்களில் 1784 பேர் இறந்திருக்கிறர்கள் என்றும் 10,353 பேர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,617 பேர் இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சிஸ்சோ நிறுவணம் 2004-ம் ஆண்டு வரை சுமார் 86 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடாக கொடுத்து வந்தது. இந்த சூழ்நிலைக் கேட்டினால் மனிதர்கள் மட்டுமல்ல கணக்கிலடங்காத பறவைகளும் விலங்குகளும் குறிப்பாக பூனைகளும் தலைமுறைகளாக அங்கு பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்குப் பிறகும் சிஸ்சோ தன் துணை நிறுவனத்தைக் கொண்டு கால்வாய் நீரில் கலந்திருந்த மெர்குரியை பிரித்தெடுத்து விற்று அதிலும் காசு பார்த்தது என்பது தனிக்கதை.

இந்தப்படங்களை எடுத்த ஈஜன் ஸ்மித் (W.Eugene Smith) 1918-ல் பிறந்தவர். இரண்டாம் போரின்போது அமெரிக்கா இராணுவத்தில் போர் புகைப்படக்காராக சேர்ந்து ஜப்பான் மீதான தாக்குதல்களை புகைப்படங்களில் பதிவு செய்து கொண்டிருந்தபோது ஒரு முறை குண்டடியும் பட்டிருக்கிறார். சர்வதேச பத்திரிக்கையான லைஃப் பத்திரிக்கையில் வேலை பார்த்த இவர் 1971 முதல் 1973 வரை மினமாட்டா கிராமத்தின் பாதிப்புகளை வெளி உலகத்திற்கு காட்டுவதற்காக தனது மனைவி ஏலின் ஸ்மித்துடன் (Aileen smith) அங்கேயே தங்கி நோயின் கொடுமைகளை புகைப்படங்களாக பதிவு செய்தவர்.

அப்படி ஒருமுறை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது சிஸ்சோ நிறுவனம் இவரை குண்டர்களை வைத்து தாக்கியதில் இவரின் கண்கள் பாதித்ததால் இவருக்கு பார்வை குறைய  தொடங்கியது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாத ஸ்மித் தனது மனைவியின் உதவியுடன் மினமாட்டாவின் பாதிப்புகளைப் பற்றி ஆயிரக்கணக்கான புகைப்படங்களை எடுத்தும் நுற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதித் தள்ளினார்.

1975-ல் இவரும் இவரது மனைவியும் சேர்ந்து ’Minamata- Words and Photographs’ (மினமாட்டா - சொற்களும் புகைப்படங்களும்) என்ற புத்தகத்தை வெளியிட்டு உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையையும் மினமாட்டாவை நோக்கி திருப்பினார்கள். மெர்குரியின் கோரமான இன்னொரு முகத்தை உலக நாடுகள் தெரிந்து கொள்ளக் காரணமாக இருந்த ஸ்மித் 1978-ல் உயிரிழந்தார்.

குமமோட்டொ மாநிலத்தில் இருக்கும் மினமாட்டா மீனவர்கள் கிராமத்தில் தற்போது 26,400 பேர் வசிக்கிறார்கள். இதில் மினமாட்டா நோயினால் பாதிக்கப்பட்ட சுமார் 639 பேர் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கிரார்கள். பல அப்பாவி மக்களின் உயிர்களை பலி வாங்கிய  சிஸ்சோ தொழிற்சாலை  கடந்த 2012 முதல் ஜப்பான் கெமிக்கல் கம்பெனி என்ற பெயர் மாற்றம் பெற்று இப்போதும்  ஜப்பானில் உயிர்ப்புடன் இயங்கி வருகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=51051

  • தொடங்கியவர்

அடிமைத் தழும்பு...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-5)

 

World%20photos%20head05.jpg

முதுகுப் பகுதி முழுவதும் காயங்களால் ஏற்பட்ட கொடூரமான தழும்புகளுடன் கருப்பினத்தவரான (ஆப்ரிக்க அமெரிக்கன்) கார்டன் (Gordon) அமர்ந்திருக்கும் இந்தப்படமே கருப்பினத்தவர்களின் மீதான அடக்கு முறையையும், அவர்களின் துயரத்தையும் உலகிற்கு உரக்க சொன்னது. அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டாக பிரியவிருந்த ஐக்கிய அமெரிக்காவைப் பாதுகாக்க, பிரிவினைவாத தென் மாநிலங்களுக்கு எதிராக ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். அமெரிக்க வெள்ளையர்களின் நிறவெறி கொடுமையின் தீவிரத்தை பார்ப்பவர்களுக்கு பட்டென பார்த்தமாத்திரத்திலேயே உணரச் செய்யும் இந்தப் புகைப்படம், 1863 ஏப்ரல் 2ம் தேதி வில்லியம் டி.மெக் பெர்சன் மற்றும் அவரது இணையரான ஆலிவர் (William D. McPherson, Oliver) என்ற புகைப்படக்காரர்களால் எடுக்கப்பட்டது.

நிற வேற்றுமையின் காரணமாக கருப்பினத்தவர்கள் மீதான அமெரிக்க வெள்ளையர்களின் அடக்குமுறை ஒங்கியிருந்த காலகட்டத்தில், அதனையும், அடிமை முறையையும் கடுமையாக எதிர்த்த ஆபிரகாம் லிங்கன், 1856-ல் புதியதாக உருவாக்கப்பட்ட குடியரசுக் கட்சிக் கட்சியில் சேர்ந்தார். 1858-ல் இலினாய்ஸ் (Illinois) என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இவர் ஆற்றிய உரையில் ''அடிமைத்தனம் என்பது அடிப்படையில் மட்டுமல்லாமல் தார்மீக மற்றும் சமூக அரசியலிலும் தவறான ஒரு செயல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்காக அமெரிக்காவின் கொள்கை மாற்றத்தை உருவாக்குவதோடு ஒட்டு மொத்த அடிமைத்தனத்தையும் அமெரிக்காவில் ஒழிப்போம்’’ என்றார். லிங்கனின் இந்த பேச்சுதான் தென் மாநிலங்களில் கருப்பின மக்களை அடிமைகளை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்த வெள்ளைக்கார முதலாளிகளை கோபமடையச் செய்தது. அதே சமயம் 1860-ல் குடியரசுக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லிங்கன்.

world%20photos5-1.jpgதேர்தலில் லிங்கன் வெற்றி பெற்றுவிட்டால் கருப்பர்களுக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று நினைத்த 11 தென் மாநிலங்கள், 1861 பிப்ரவரி மாதம் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதில் அலபாமா, ஃப்ளோரிடா, ஜார்ஜியா, லூசியானா, மிசிசிப்பி, தெற்கு கரோலினா, டெக்சாஸ் (Alabama, Florida, Georgia, Louisiana, Mississippi, South Carolina and Texas) போன்ற மாநிலங்கள் முதலில் வெளியே வர அர்கன்சாஸ், வட கரோலினா, டென்னசீ, விர்ஜினியா (Arkansas, North Carolina, Tennessee and Virginia) போன்ற மாநிலங்கள் பின்னர் அதனுடன் இணைந்து கன்ஃபடரேட் ஸ்டேட் ஆப் அமெரிக்கா (Confederate State of America ) என்ற புதிய அரசை உருவாக்கின. இதைத்தொடர்ந்து தேர்தலில் லிங்கன் வெற்றி பெற்றவுடனேயே 1861 ஏப்ரல் 12-ம் தேதி தென் மாநிலங்கள் வடக்குப் பகுதியின் மீது போர் தொடுத்ததால், லிங்கனின் யூனியன் படையும் (Union Force), தென் மாநிலங்களின் கன்ஃபடரேட் படையும் (Confederate forces) மோத உள்நாட்டுப் போர் தொடங்கியது.

இந்த சூழலில்தான் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் கார்டன் (எ) சாட்டையடி பீட்டர் (Gordon, or Whipped Peter), மிசிசிப்பி (Mississippi) மாநிலத்தில் ஜான் மற்றும் ப்ரிட்ஜெட் லயான்ஸ் (John and Bridget Lyons) என்ற வெள்ளைக்கார முதலாளிகளுக்கு சொந்தமான பருத்தித் தோட்டத்தில் இருந்து தப்பித்துவிடுகிறார். சுமார் 3000 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இந்தத் தோட்டத்தில், 1860-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 64 அடிமைகள் வேலை செய்து வந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. கார்டன் தப்பித்ததை தெரிந்து கொண்ட முதலாளிகள் மான் வேட்டைக்குப் பயன்படுத்தும் ப்ளட் ஹௌண்ட்ஸ் (bloodhounds) வகை மோப்ப நாய்களைக் கொண்டு தேட ஆரம்பிக்கிறார்கள். வெங்காயத்தை உடலில் தேய்த்துக் கொண்டால் வேட்டை நாயால் கண்டுபிடிக்க முடியாது என்பதை அறிந்து இந்த தேடுதல் உத்தியை முன்னரே ஊகித்த கார்டன் தப்பிக்கும் முன்பே வெங்காயத்தை எடுத்து வைத்துக் கொண்டார். ஒவ்வொரு முறை தண்ணீரில் விழுந்து எழுந்து ஓடும்போதும் தனது உடலில் வெங்காயத்தைத் தேய்த்துக் கொண்டு ஓட ஆரம்பித்தார். சுமார் நாற்பது மைல் தூரத்திற்கு தொடர்ந்து நடந்தே சென்றவர், பத்து நாட்களுக்குப் பிறகு உடைகள் கிழிந்து, சேறும் சகதியுமாக  உடல் முழுவதும் காயங்களுடன் லிங்கனின் யூனியன் படை சிப்பாய்கள் தங்கியிருந்த முகாமில் சென்று தஞ்சமைடைந்தார். அதே காலகட்டத்தில்தான் ''ஆப்ரிக்காவில் இருந்து வந்து அமெரிக்க முதலாளிகளின் தோட்டத்தில் வேலை பார்க்கும் கருப்பினத்தவர்கள் யூனியன் படையில் சேரலாம்’’ என்று லிங்கன் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து கார்டன் அந்தப் படையில் சேர முடிவெடுத்தார்.

யூனியன் படை வீரர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் உள் வளாகத்தில் ஒரு காலை நேரம். படையில் புதியதாக சேர வந்திருக்கும் ஒவ்வொரு வீரருக்கும் மருத்துவப் பரிசோதனைகளை மும்முரமாக செய்து கொண்டிருந்தனர் மருத்துவர்கள். அந்த அறையின் உள்ளே தயங்கியபடியே சென்ற கார்டன் மருத்துவர்கள் கட்டளையின்படி சட்டையை கழட்டிவிட்டு நிற்கிறார். அப்போது அவரின் முதுகுப் பகுதி முழுவதும் கொடூரமாக இருந்த தழும்புகளைப் பார்த்து  அதிர்ந்து போனார்கள் மருத்துவர்கள். பின்னர் அவரிடம் அதைப்பற்றி கேட்க, அமெரிக்க முதலாளிகளிடம் தான் வேலை செய்து கொண்டிருந்தபோது அவர்கள் சாட்டையாலும், இடுப்பில் அணியும் பெல்ட்டினாலும் அடித்ததால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகள்தான் என்று கார்டன் சொல்ல, மீண்டும் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர் மருத்துவர்கள். அடுத்த சில விநாடிகளில் யூனியன் படைப் பிரிவு முழுவதுக்கும் பரபரப்புச் செய்தியானார் கார்டன்.

அப்போது அந்த முகாமில் அமைந்திருந்த பகுதியில்தான் புகைப்படக்காரர்கள் வில்லியம் டி.பெர்சன், ஆலிவர் ஆகியோர் ஒரு கேலரியைத் திறந்திருந்தார்கள் என்பதால் அங்கே நடந்த உள்நாட்டுக் கலவரத்தை அதிகளவில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். காட்டுத் தீயாகப் பரவிய கார்டன் பற்றிய தகவல் அந்த முகாமில் இருந்த டி.பெர்சன், ஆலிவர் காதுகளுக்கும் சென்றது. உடனே இவர்கள் இருவரும் கார்டனை சந்தித்து அவரை புகைப்படம் எடுக்கக் கேட்டுக் கொண்டனர். அதற்கு கார்டனும் மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டதால் அவரின் முதுகு தெரியுமாறு அமர வைத்து புகைப்படம் எடுத்து முடித்தார்கள். பின்னர் 'கார்ட் டி விஸ்தா' (carte-de-visite) என்ற முறையில் சுமார் ஒரு லட்சம் காப்பி வரை அதனை பிரிண்ட் செய்து அமெரிக்கா முழுவதும் விநியோகிக்கப்பட, பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்த இந்த விவகாரம் லிங்கனின் நிலைப்பாட்டுக்கு மேலும் கூடுதல் வலுவை சேர்த்தது.

''வெள்ளைக்கார முதலாளிகளிடம் வேலை பார்த்த கருப்பின மக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அவர்களை நிர்வாணப்படுத்தி தோலால் அடித்து தண்டிக்கும் முறைதான் அதிகம். மேலும், அவர்கள் முதுகில் ரம்பத்தால் குத்தி, அதில் காயமடைந்து சீழ் பிடித்து வீங்கியவுடன் அதனை அதே ரம்பத்தால் அறுப்பார்கள். அதன்பிறகு அனைத்து அடிமைகளுக்கும் தெரிவது போல நிற்க வைத்து அவரை சுற்றி சோளத்தைப் போட்டு எரிய விடுவார்கள். அதன்பின் எரிந்து முடிந்த அதே மக்கா சோளத்தாலேயே காயம் பட்ட இடத்தை மட்டுமல்லாமல், மொத்த உடலிலும் காயமாகும் வரை அடிப்பார்கள். தப்பித்து ஓட முயற்சி செய்து பிடிபடுபவர்களுக்கு கொடுக்கும் தண்டனை இதைவிடக் கொடுமையானது.

ஒரு ஆள் உட்காரும் அளவிற்கு குழி வெட்டி அதில் தப்பி ஓடியவரை நிர்வாணமாக உட்கார வைத்து, அவரின் மேல் பச்சை விறகுக் குச்சிகளை வைத்து எரிய வைத்து விடுவார்கள். ஒருவேளை அதிலிருந்து மீண்டு வந்தாலும் அவர்களால் நடக்கவே முடியாது. அதையும் தாண்டி அவர்கள் உயிர் பிழைத்தால், மீண்டும் தப்பி ஓட முயற்சி செய்யாமல் வேலை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். என்னையும் இப்படி அடித்ததில் இரண்டு மாதங்கள் படுத்த படுக்கையாகவே கிடந்தேன். அதிலிருந்து மீண்டு மறுபடியும் வேலை செய்யும்போதுதான் என் முதலாளி அடிக்க ஆரம்பித்தார் அதனால்தான் அங்கிருந்து தப்பித்தேன்’’ என கார்டன் பதிவு செய்திருப்பதை வரலாற்று பதிவாளர்களும் உறுதி செய்திருக்கின்றனர்.

1863-ல் ஹார்பர்ஸ் வீக்லி (Harper's weekly) என்ற பத்திரிகை இந்தப் புகைப்படத்துடன் கார்டன் தப்பித்த விவரங்களைக் கொண்ட கட்டுரையின் மூலம் மனித குலத்தின் தழும்பாய் போன அடிமைத்தனத்தினது ஆறாத ரண வலியை 'வழக்கமான நீக்ரோ' (A Typical Negro) என தலைப்பிட்டு அழுத்தமாக உலகத்திற்கு கொண்டு சேர்த்தது. மேலும், இப்புகைப்படக் கட்டுரையும், யூனியன் படை வீரராக பேட்டன் ரோக்கில் சிறப்பாக பணியாற்றிய கார்டனும், சுமார் இரண்டு லட்சம் ஆப்ரிக்க கருப்பின மக்கள் அந்தப் படையில் சேரக் காரணங்களாக அமைந்தது என்கிறது வரலாற்றுப் பதிவுகள்.

கணிசமான கருப்பின வீரர்களைக் கொண்ட யூனியன் படை பங்கேற்ற உள்நாட்டுப் போர், சுமார் எட்டரை லட்சம் பேர் பலியான பின்னர் 1965 மே 9-ல் முடிவுக்கு வந்ததையடுத்து, காட்சிப்படுத்தப்பட்ட அந்த முதுகுத் தழும்புகள் வெள்ளையர்களின் நிறவெறிக்கு எதிரான புரட்சியாக வெடித்து கருப்பின அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளியாகவும் மாறியது.

http://www.vikatan.com/news/article.php?aid=51389

  • தொடங்கியவர்

குற்ற உணவு...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-6)

 

photo%206.jpg

ரணத்தை எதிர்நோக்கிய பெரும்பசியுடன் காலியான மாட்டிறைச்சி டப்பாவை கையில் வைத்துக் கொண்டு கண்களில் பெரும் ஏக்கத்தோடு, தலை பெரிதாகவும், எலும்பும், தோலுமாக காட்சியளிக்கிறான் இந்த ஆப்ரிக்க சிறுவன். தன் உடலின் எடையைக் கூட தாங்க சக்தியற்ற நிலையில் சூம்பிப் போய் கிடக்கும் தனது கால்களை பிடித்துக் கொண்டு நிற்கும் இச்சிறுவனின் புகைப்படம் நைஜீரியாவில் நடந்த  இனப்படுகொலையையும் வலிந்து உருவாக்கப்பட்ட உணவுப் பஞ்சத்தையும் உலகத்திற்கு அறிவித்தது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தில் இருந்து நைஜீரியா 1960ஆம் ஆண்டு விடுதலை அடைந்தாலும், அந்நாட்டில் பல்வேறு இனக்குழுக்களுக்குள் நிலவிய அதிகாரப் போட்டி மற்றும் சண்டைகளால் அரசியல் மற்றும் சமூக நிச்சயமற்ற சூழல் நிலவியது.

குறிப்பாக வடக்கு பகுதிகளில் பெரும்பான்மையாக இருந்த இஸ்லாம் மதத்தை தழுவிய ஹவுசா மற்றும் ஃபுலானி (housa and Fulani) இனத்தினருக்கும், மிஷினரிகளால் கிறிஸ்துவர்களாக மதம் மாற்றம் photo%20shocking%201a.jpgசெய்யப்பட்டு தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த இக்போ (Igbo) இனத்தவர்களுக்கும் இடையே நிலவிய போட்டி சண்டைகளில் இரண்டு முறை ராணுவ புரட்சி நிகழ்ந்தது. 1966ஆம் ஆண்டு நடந்த இந்த புரட்சியில் முப்பதாயிரம் இக்போ இனத்தினர் உயிரிழந்தனர்.

இனவேறுபாடுகளாலும், மத வேறுபாடுகளாலும் வடக்கு நைஜீராவிடமிருந்து பிளவுபட்டிருந்தனர் இக்போ இனத்தினர். அதனால் இவர்கள் இனத்தை சார்ந்த பெரும் வியாபாரி ஒருவரின் மகனான  ஜெனரல் ஒடுமெக்குவு ஒஜுக்குவு (General C. Odumegwu Ojukwu) தலைமையில் ஒன்று திரண்டு ஒருங்கிணைந்த நைஜீரியாவில் இருந்து விலகியதோடு, தாங்கள் பெரும்பான்மையாக இருந்த தென்புலத்தில் பியாஃப்ரா குடியரசு (Republic of Biafra) எனும் தனி நாட்டை 1967 மே 30ல் ஏற்படுத்தினர். இக்போ இனம் பிரதானமாக உள்ள பியாஃப்ராவை தனி நாடாக காபான், ஹைத்தி, ஐவரிகோஸ்ட், தான்சான்யா, ஸாம்பியா (Gabon, Haiti, Ivory Coast, Tanzania and Zambia)ஆகிய ஐந்து ஆப்பிரிக்க நாடுகள் அங்கீகரித்தன என்றாலும் வளர்ந்த நாடுகளில் ஃபிரான்ஸ் தேசம் மட்டுமே ஆதரித்தது. அதேசமயம் பிரிட்டன், சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் வடக்கு நைஜீரிய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.

எண்ணெய் வளம் மிகுந்த தெற்கு பகுதி பியாஃப்ரா குடியரசாக  பிரிந்ததை தொடர்ந்து வடக்கு நைஜீரியாவுக்கும், பியாஃப்ரா குடியரசுக்கும் இடையே 1967 ஆம் ஆண்டில் நைஜீரிய சிவில் போர் எனும் உள்நாட்டு போர் உருவாகியது. போர் தொடங்கிய முதல் வருடத்திலேயே பலம் பொருந்திய வடக்கு நைஜீரிய ராணுவம் பியாஃப்ராவின் அனைத்து எல்லைகளையும் சுற்றி வளைத்துவிட்டது. பின்னர் கடலோரங்களில் உள்ள எண்ணெய் வளம் பொருந்திய இடங்களையும் ஹார்கோர்ட் (Harcourt) துறைமுகத்தையும் கைப்பற்றிய பின் பியாஃப்ராவின் எல்லைகளை முற்றிலுமாக அடைத்தது. அப்படி அடைத்ததன் மூலம் பியாஃப்ராவில் கடும் உணவுத் தட்டுப்பாடும், பஞ்சமும் ஏற்பட்டது. தமது போர்த் தந்திரமாகக் கருதி வடக்கு நைஜீரியா செய்த இந்த செயலினால் அடுத்த இரண்டரை வருடங்களில் அங்கு வாழ்ந்த சுமார் 20 லட்சம் இக்போ இனத்தினர் பட்டினியால் உயிரிழந்தனர். இந்தப் படுபாதகச் செயலை மற்ற நாடுகளிடம் இருந்து மறைக்க வடக்கு நைஜீரியா செஞ்சிலுவை சங்கத்தின் உதவி உட்பட அனைத்து சர்வதேச உதவிகளும் பியாஃப்ராவிற்கு கிடைக்காமல் தடுத்தது.

நைஜீரியா எடுத்த இந்த நிலைப்பாட்டினால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், அங்கு நடந்த போர் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இதில் வேதனை தரும் விஷயம் எது என்றால் ஒட்டுமொத்த உலக நாடுகளில் இருந்தும் பியாஃப்ரா முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் எந்த பத்திரிகைகளிலும் போர் பற்றியோ பஞ்சத்தைப் பற்றியோ சிறு செய்தி கூட வரவில்லை. இந்நிலையில் 1969ஆம் ஆண்டு (Sunday Times Magazine) சண்டே டைம்ஸ் பத்திரிகையில் உலகம் முழுவதும் உள்ள சூழலியல் அழிவுகள் மற்றும் போர் அழிவுகள் பற்றிய புகைப்படங்கள் எடுக்கும் பணியில்  ஈடுபட்டிருந்த டான் மெக்கலின் (Don McCullin) எனும் புகைப்படக் கலைஞர் பியாஃப்ரவில் நிகழும் போர் பற்றி அறிந்து அங்கு சென்றிருந்தார். அப்போது போர் மற்றும் பஞ்சத்தால் அனாதைகளாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்க ஏற்படுத்தப்பட்ட தற்காலிக கூடாரம் ஒன்றில் நிறமிக்கேடு நோயினால் தன் தோல் நிறம் வெளிறி போன இச்சிறுவனையும், இவனைப் போல அனாதை ஆக்கப்பட்ட மற்ற இக்போ இன சிறுவர்களையும் கண்டார்.

1964 முதல் 1984 வரை சைப்ரஸ், காங்கோ, பியாஃப்ரா, வியட்னாம், கம்போடியா, வங்கதேசம் மத்திய கிழக்கு எல் சால்வடார் போன்ற போர் நிகழ்ந்த நாடுகளுக்கு நேரில் சென்று போர் அழிவுகளை பதிவு செய்த  டான் மெக்லின், இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட சூழல் பற்றி நினைவு கூறுகையில், "அந்த கூடாரத்தில் நுழைந்தவுடன் அந்த நிறமிக்கேடு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவனை கண்டேன். பசியினால் பீடிக்கப்பட்ட அச்சிறுவன் விவரிக்கவே முடியாத அளவிற்கு கொடுமையான நிலையில் photo%20shocking%20Den%20Merlin%201a%281இருந்தான். மரணத்தை எந்த நேரமும் எதிர் நோக்கி இருந்த நிறமிக்கேடினால் வெளிறிய தோல் கொண்ட அச்சிறுவன் அவனை சூழ்ந்திருந்த ஏனைய கறுப்பின அனாதை குழந்தைகளால் கேலியும், கிண்டலும் செய்யப்பட்டு அவர்களால் விலக்கி வைக்கப்பட்ட கொடுமைக்கு ஆளாகியிருந்தான் அச்சிறுவன். அவனது நிலை குத்திய பார்வை என்னில் குற்றவுணர்ச்சியையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி அலைக்கழித்தது. அவன் என்னை நோக்கி நெருங்கினான். அவன் நெருங்க நெருங்க பெரும் சஞ்சலத்தில் ஆழ்ந்தேன்.  பட்டினியாலும், நிராகரிப்பாலும் தாக்கப்பட்ட அந்த எளிய அப்பாவி சிறுவர்களை பார்த்து நொந்து கொண்டிருந்த போது யாரோ ஒருவர்  இந்த பெரும் அவலத்தையும், அதன் கோர விளைவுகள் பற்றிய புள்ளிவிவரங்களையும் கூறிக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் எனது தாய்நாடான பிரிட்டனில் அதே வயதையொற்றிய சிறுவர்கள் உணவைப்பற்றி கவலைப்படாமல் அந்த வயதுக்கே உரிய சந்தோஷத்துடன் இருப்பது நினைவுக்கு வந்தது. இந்த இரண்டு எண்ணங்களும் என்னை மனதளவில் துன்புறுத்தி கொண்டிருந்த போது என்னை யாரொவொருவர் தொட்டதை போல உணர்ந்தேன். அந்த கைகள் என்னை நோக்கி நெருங்கி வந்து என் கைகளை பற்றிய அல்பினோ சிறுவனது கைகள் தான் என்று கண்டபோது என் கண்களில் அழுகை வர முயற்சித்தது. இக்குழந்தைகள் முன் அழக்கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு இச்சிந்தனையில் இருந்து விலகி வேறு எதையாவது யோசிக்க முயற்சி செய்து தோற்றுப் போனேன். அச்சிறுவன் கொஞ்சம் கூட ஒரு சராசரி மனிதன் போல இல்லாமல் எப்படியோ உயிர்பிழைத்து இருக்கும் ஒரு சிறிய எலும்புக்கூடு போலவே காட்சியளித்தது என் மூளை மடிப்புகளில் ஆழமாக பதிந்து விட்டது. என்னால் ஏதாவது செய்ய முடியுமானால் என் வாழ்வின் அந்த கருப்பு நாளை பற்றிய நினைவுகளை தகர்த்தெறியவே விரும்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

டான் மெக்லினால் எடுக்கப்பட்ட இச்சிறுவனின் புகைப்படம் ஜெர்மனியின் யூத இனப்படுகொலையினை (Holocaust) நினைவூட்டி, பார்த்தவர்களது மன சாட்சியை உலுக்கியது.

பிரிட்டிஷ் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் இப்படம் வெளியானதற்கு பின்னர் அது நாள் வரை உலகத்தின் பார்வைக்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த நைஜீரிய போர் மக்கள் மத்தியில் பொது விவாதமாக உருவாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இக்போ இன மக்களுக்கு உதவ வேண்டும் என வலியுறுத்தி அந்த காலக்கட்டத்தில் அமெரிக்கா  மற்றும் பிரிட்டன் அரசாங்கங்களுக்கு தினசரி அனுப்பபட்ட இருபத்தி ஐந்தாயிரம் கடிதங்களே இப்புகைப்படத்தால் தட்டி எழுப்பப்பட்ட மானுட அறவுணர்ச்சியின் சாட்சியாக விளங்குகிறது. டான் மெக்லினின் பியாஃப்ரா போர் புகைப்பட தொகுப்பு வெளியான  பின்னர் ஐநா சபை வான் மூலமாக தென் நைஜீரியாவில் உணவுப் பொருள் வழங்கத்  தொடங்கியது. மேலும் பல போர் சூழல்களில் சிறப்பான பணியாற்றிய 1999ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எல்லைகள் கடந்த மருத்துவம் (Doctors Without Borders-Médecins Sans Frontières ) எனும் சர்வதேச அமைப்பு தொடங்கவும் இப்புகைப்படமே நிமித்த காரணமாக விளங்கியது.

ஆப்பிரிக்காவை மையமாக வைத்து போட்ஸ்வானா (Botswana), ஸாம்பியா (Zambia) மற்றும் தென் ஆப்ரிக்காவில் எய்ட்ஸ் நோய் ஏற்படுத்திய கோர தாக்குதல் பற்றியும், எத்தியொப்பாவின் (Ethiopa) தொலைந்த இனக்குழுக்கள் பற்றியும் மேலும் 2007ல் டார்ஃபூரில் (Darfur) நிகழ்ந்த இனப்படுகொலையால் அகதியாக்கப்பட்டவர்களை பற்றியும் டான் மெக்லின் தனது புகைப்பட கட்டுரைகள் மூலம் உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதுபோன்ற புகைப்படங்களை எடுத்த பின்னர் ஒவ்வொரு முறையும் உணவில் கை வைக்கும்போதும் குற்ற உணர்வு மேலிடுவதாக கூறும் டான் மெக்லினுக்கு, வாழ்நாள் சாதனைக்கான நியூயார்க்கின் புகைப்படக்கலையின் சர்வதேச மையத்தால் (International Center for Photography) 2006ஆம் ஆண்டு கார்னல் கப்பா விருது (Cornell Capa Award ) வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

http://www.vikatan.com/news/article.php?aid=51691

  • தொடங்கியவர்

உலகின் மனசாட்சியை உலுக்கும் குழந்தையின் புகைப்படம்!

உலகின் மனசாட்சியை உலுக்கும் குழந்தையின் புகைப்படம்!

 

 
 
 
ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரே ஒரு புகைப்படம் சொல்லிவிடும். விட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூரத்தை உலகுக்கு காட்டியது ஒரு புகைப்படம் தான், ஆப்ரிக்காவில் நிலவிய கொடிய வறுமையை சரியாக உணர்த்தியது ஒரே ஒரு புகைப்படம் தான்.

தாங்கள் எதற்காக கொல்லப்படுகிறோம் என்பது கூட அறியாத நிலையில் போரில் ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் பலியாகிவருகிறார்கள். அந்தவகையில், தற்போது தினம் தோறும் நாம் வாசிக்கும் செய்திகளில் ஒன்றாகிவிட்ட அகதிகளின் துயரத்தை, வலியை உணர்த்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி உலகம் முழுவதும் ஆயிரகணக்கான மக்களை கண்ணீர் சிந்தவைத்து வருகிறது.

ஆனால் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு புகலிடம் தேடி வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை இந்த புகைப்படத்தை பார்த்த பிறகாவது மாறுமா?

சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு அகதியாக செல்ல முயன்ற போது, படகு விபத்துகுள்ளாகி மத்தியதரை கடலில் முழ்கி இறந்து போன ஒரு குழந்தையின் இந்த படம், உலகின் கள்ள மௌனத்தை அசைத்து பார்க்க தொடங்கியுள்ளது.

உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாறுமா?

இறந்து போன இந்த குழந்தையின் ஆன்மா நம் அனைவரையும் மன்னிக்குமா?
 
  • தொடங்கியவர்

உறைந்த மரணம்... உலகை உலுக்கிய புகைப்படங்கள் - பகுதி 7

 

                                                             world%20shoc%207.jpg

நெற்றிப் பொட்டில் குண்டு பாய்ந்து மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு ஸ்பெயின் நாட்டுக் குடியரசு போராளியின் புகைப்படம் இது. மரணிப்பதற்கு ஒரு சில விநாடிக்கு முன்னர் உலகப் புகழ்பெற்ற போர்முனைப் புகைப்படக் கலைஞரான ராபர்ட் கபாவினால் (Robert Capa) எடுக்கப்பட்டது இந்தப் புகைப்படம்.

சீருடை அணியாமல் சாதாரண உடையில் வலது கையிலிருந்து நழுவி விழும் துப்பாக்கியுடனும், துப்பாக்கி குண்டுகள் வைக்க அணிந்துகொள்ளும் தோல் பைகளுடன் குண்டடி பட்டு கீழே சரியும் இந்தப் போராளியின் பெயர் ஃபெடரிகோ போரல் கார்சியா (Federico Borrell García). 

1936. ஸ்பெயின் நாட்டில் உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம். கெரோ முரியனோ (Cerro Muriano) என்ற கிராமத்தில் செப்டம்பர் 5-ம் தேதி ராபர்ட் கபாவால் எடுக்கப்பட்ட மிக முக்கியமான இந்தப் புகைப்படம் ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் கொடூரத்தை உலகிற்கு காட்டியதோடு உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சக்தி வாய்ந்த போர்ப் புகைப்படமாகவும் இருந்தது.

ஒரு துப்பாக்கித் தோட்டாவினால் உயிர் பிரியக் கூடிய முக்கியமான தருணத்தை மிகத் துல்லியமாகவும், வேகமாகவும் திகிலூட்டக் கூடிய வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலக அளவில் முக்கியமான புகைப்படமாகக் கருதப்பட்டாலும்,  1970 வாக்கில் புகைப்படத்துறையின் நம்பகத்தன்மையும் அதன் நேர்மையும் கடும் விவாதத்திற்க்கு உட்படுத்தப்பட்டு, உலக அளவில் பெரிய சர்சையை ஏற்படுத்தியதற்கும் இந்தப் படமே முக்கியக் காரணமாக அமைந்தது.

1936-1939 வரை நடைபெற்ற ஸ்பெயின் உள்நாட்டுப்போரை பாசிசத்திற்கு ஜனநாயகத்திற்குமானதாக நினைத்தது தேசியவாத இராணுவம். அதேசமயம் இந்தப் போரை முதலாளித்துவத்திற்கும் கம்யூனிசத்திற்க்குமானதக குடியரசுக் கட்சி நினைக்க சித்தாந்தத்தின் அடிப்படைப் போராக இது மாறியது.

17 ஜூலை 1936-ல் ஆரம்பித்து 1 ஏப்ரல் 1939ல் முடிவடைந்த இந்தப் போரினால் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தில் சுமார் ஐந்து லட்சம் பேர் இறந்ததுடன், நான்கரை லட்சம் பேர் வரை நாட்டைவிட்டு அகதிகளாக வெளியேறினர் என்று கூறுகிறது வரலாற்றுப் பதிவுகள். 1930 ஆண்டு வாக்கில் ஸ்பெயின் வலது சாரி தேசியவாத அமைப்பு, இடது சாரி குடியரசுக் கட்சி என இரு பிரிவாகப் பிரிந்து கிடந்தது. அரசர்கள், முடியாட்சியாளர்கள், நில முதலாளிகள், ரோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் இராணுவம் ஆகியன தேசியவாத அமைப்பில் அங்கம் வகித்திருந்தன. தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள், சோஷலிஸ்டுகள் மற்றும் விவசாயிகள் போன்றவர்கள் குடியரசுக் கட்சியில் இருந்தனர். உலக அளவில் பெருமந்த நிலையில் இருந்த பொருளாதாரம் ஸ்பெயினையும் விட்டு வைக்கவில்லை. இதனால் 1929-ல் அங்கே இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் இரானுவத்தின் சர்வாதிகார ஆட்சி நாட்டை ஆண்டுகொண்டிருந்தது.

இந்நிலையில் 1936-ல் அதே இராணுவப் புரட்சியின் மூலமாக குடியரசுக் கட்சியின் கைவசம் இருந்த ஆட்சியை அதிகாரத்தை கைப்பற்ற தேசியாவதிகள் செய்த முயற்சிக்கு ஜெர்மனியும் இத்தாலியும் ஆதரவு அளித்தது. அட்லாண்டிக் விரிகுடாவிலும் மத்திய தரைக்கடலிலும் அமைந்திருந்த ஸ்பெயினின் துறைமுகம் பூகோள ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அது நீர்மூழ்கிக் கப்பற்படை அமைக்க முக்கிய தளமாக தங்களுக்கு அமையும் என பாசிச நடுகளான ஜெர்மனியும் இத்தாலியும் நினைத்தது.

world%20pic.jpg

அதுமட்டுமல்லாமல் ஸ்பெயின் இவ்விரு நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டால் ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருளாதார மற்றும் இராணுவ அழுத்தங்களைக் கொடுத்து அதன்மூலம் வலிமை மிக்க நாடுகளாக ஜெர்மனியும் இத்தாலியும் உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. இப்படியான உள்நோக்கத்தோடுதான் ஜெர்மனியின் ஹிட்லரும் இத்தாலியின் முசோலினியியும் ஆயிரக் கணக்கில் படைகளையும், போர் தளவாடங்களையும் தேசியாவாதத் தரப்பிற்கு படைக்கு கொடுத்து உதவி வந்தனர்.

மேலும் இதன் மூலமாக அசுர வேகத்தில் பரவிக்கொண்டிருந்த  கம்யூனிசத்தைக்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் ஜெர்மனியும் இத்தாலியும் நினைத்தது. இந்தக் காலகட்டத்தில் பிரான்சும் பிரிட்டனும் இதில் எந்த அணியிலும் சேராமல் போரில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவினை எடுத்ததால் உலக அளவில் ஸ்பெயினுக்கு வரக் கூடிய உதவிகளை இந்நாடுகள் தடுத்து நிறுத்தியது என்றாலும், ஜெர்மனியும் இத்தாலியும் அனுப்பிய போர் தளவாடங்களை இவ்விரு நாடுகளால் தடுக்க முடியவில்லை.

சோவியத் யூனியனான ரஷ்யா குடிரசுக் கட்சிக்கான அடிப்படைத் தேவைகளை மட்டுமே கொடுத்து வந்ததது. ஆனால் ஜெர்மனியும் இத்தாலியும் தேசியவாதப் படைக்கு போரில் வெற்றியடையத் தேவையான போர் தளவாடங்களைக் கொடுத்து உதவிக் கொண்டிருந்தது. இதனால் ரஷ்யாவால் ஜெர்மனி மற்றும் இத்தாலி கொடுக்கும் உதவிகளால் தாக்குபிடிக்க முடியாமல் போனது. இதனால் 1939 ஏப்ரல் 1-ல் ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆதரவு அளித்த தேசியவாதப்படை வெற்றியடைந்தது. தொடர்ந்து வலதுசாரி  சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ  (General Francisco Franco)  தலைமையில சர்வாதிகார நாடாக ஸ்பெயின் உருவானது. இவர் நவம்பர் 20 1975-ல் தான் இறக்கும்வரையில் வரை ஸ்பெயினை தன்னுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வைத்திருந்தார்.

ஆகஸ்ட் 1936-ல் ஸ்பெயினில் உள்நாட்டுப்போர் உச்சத்தில் இருந்தபோது தங்களது புகைப்படம் மூலமாக அதைப் பதிவு செய்ய ராபர்ட் கபாவும், உலகத்தின் முதல் பெண் போர் புகைப்படக் கலைஞரான   கெர்டா பொஹோரில்  (Gerta Pohorylle) என்கிற கெர்டா தாரோவும்  (Gerda Taro) அங்கு செல்கின்றனர். வியூவ் (View) மற்றும் லைஃப் (Life) பத்திரிக்கைகளுக்காக புகைப்படம் எடுக்க சென்ற ராபர்ட் கபாவிற்கு வயது இருபத்தி இரண்டு, தாரோவுக்கு 26.  புகைப்படக் கலைஞர் ராபர்ட் கப்பா என்ற  என்ரி ஃப்ரைடுமேன் (Endre Friedmann) ஹங்கேரி நாட்டின் யூத இனத்தைச் சேர்ந்தவர்.

இந்தப் புகைப்படம் எடுத்த சூழல் குறித்து ராபர்ட் கப்பா ‘’ஒரு இருபது போராளிகளுடன் அப்போது பதுங்குகுழியில் நான் பதுங்கி இருந்தேன். இந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது என்னால் கேமராவின் வியூவ் ஃபைண்டரால் மூலமாகப்  பார்த்து எடுக்க முடியவில்லை. எங்களுடன் பதுங்குகுழியில் இருந்த கார்சியா என்ற இந்தப் போராளி மேலே செல்லும்போது, என் தலைக்கு மேல் நான் வைத்திருந்த 35mm லைக்கா II (35 millimeter Leica II) என்ற கேமராவினால் தொடர்ந்து அவரை நான்  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது உருவானதுதான் இந்தப் படம்’’ என்று பதிவு செய்திருக்கிறார்.

போர் நடந்த காலகட்டத்தில் எந்த ஒரு புகைப்படக்காரர்களுக்கும் பத்திரிக்கைக்காரர்களுக்கும்  போர் முனைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பத்திரிக்கை மற்றும் புகைப்படக் கலைஞர்களால் போரின் உண்மை நிலையைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் போர்க் கொடுமையால் மக்கள் ஓடிச் செல்வது போன்ற படங்களையும், போரின்போது ஏற்படும் சம்பவங்களைப் போன்று செட்டப் செய்தும் எடுத்தப் புகைப்படங்களையுமே பிரசுரிக்கப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதனால் ராபர்ட் கப்பா எடுத்த உலக முக்கியம் வாய்ந்த இந்த புகைப்படமும் நாடகப்படுத்தப்பட்ட செட்டப் புகைப்படம் என்ற சர்ச்சை பெரிய அளவில் உருவானது.

1947-ல் ராபர்ட் கப்பா மற்றும் டேவிட் சிம் செய்மர், ஹென்ரி கார்ட்டன் பிரசோன், ஜார்ஜ் ராட்ஜர்  (David "Chim" Seymour, Henri Cartier-Bresson, George Rodger) ஆகியோர் சேர்ந்து மேக்னம் (Magnum) என்ற உலகத்திலேயே முதல் கூட்டுறவு புகைப்பட நிறுவனத்தை (photographic cooperative) உருவாக்கினார்கள். பின்னாட்களில் மிகவும் சக்திவாய்ந்த புகைப்பட நிறுவனமாக உருவெடுத்த இந்நிறுவனம் பல புகழ் பெற்ற பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல உலகப் புகழ் பெற்ற புகைப்படங்கள் உருவாவதற்கான தூண்டுகோலாகவும் மாறியது.

நியூயார்க், பாரிஸ், லண்டன், டோக்கியோ போன்ற நாடுகளைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட  தொடங்கியதோடு  மிகவும் துணிச்சலாக எடுக்கக் கூடிய புகைப்படங்களுக்கு ராபர்ட் கப்பா கோல்டு மெடல் (Robert Capa Gold Medal) என்ற பெயரிலான விருது அமெரிக்கா வெளிநாட்டு பிரஸ் கிளப் (Overseas Press Club of America) சார்பாக வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.

ராபர்ட் கபாவின் இந்தப் புகைப்படத்தின் மீது பல அறிஞர்கள்  ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்தப் புகைப்படம் ராபர்ட் கபாவினால் நாடகத்தன்மை (செட்டப்) கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் செய்திக் கட்டுரைகளையும் இன்றளவும் தொடர்ந்து எழுதி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=52027
                                                                

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பஞ்சத்தின் சாட்சி...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்! (மினி தொடர்: பகுதி-8)

 

world%20photos%208.jpg

ற்றிய உடல் ஒட்டிய வயிறுமாக, தோல் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகளோ என்று நினைக்குமளவிற்கு பெரியவர்கள், குழந்தைகள் என ஒருசேர காட்சியளிக்கும் இந்தப் புகைப்படம் பஞ்சத்தின் சாட்சி. தன் தாயின் வற்றிபோன மார்பகங்களில் தனக்கான உணவைத் தேடிக் கொண்டிருக்கும் குழந்தை துயரத்தின் வலியை உணர்த்துகிறது. நூற்றாண்டுகள் கடந்தும் பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கும் இந்தப் புகைப்படம் ஆப்ரிக்காவிலோ, சோமாலியாவிலோ எடுக்கப்பட்டதல்ல. 1876-78ல் நம் சென்னை மாகாணத்தில் தலைவிரித்தாடிய கொடும் பஞ்சத்தின் போது வில்லோபை வாலஸ் ஹூப்பர் (Willoughby Wallace Hooper ) என்ற புகைப்படக் கலைஞரால் எடுக்கப்பட்டது.

world%20photos%208a.jpg

1876-1878ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த சென்னை மாகாணத்தில் கடுமையான உணவுப் பஞ்சம் நிலவியது. மிக சரியாக இரண்டு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலில் தென்னிந்தியப் பகுதிகளான சென்னை, மைசூர், பம்பாய், ஹைதராபாத் போன்ற நகரங்களையும், இரண்டாம் ஆண்டில் கடைசியில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் பகுதிகளுக்கும் அடுத்தடுத்துப் பரவியது. சுமார் ஐந்து கோடியே 80 லட்சம் மக்கள் உணவு தானியங்கள் இல்லாமல் பாதிக்கப்பட்டும், ஏறத்தாழ 5.5 மில்லியன் மக்கள் பட்டினியின் கொடுமையால் உயிரிழந்த உலகத்தின் மிகப்பெரிய பஞ்சம் இதுதான் என்கிறது வரலாற்றுத் தரவுகள்.

1876 மே 1-ல் எம்ப்ரஸ் ஆஃப் இந்தியா (Empress of India) என்ற பதவியை அரசி விக்டோரியா ஏற்ற அதே வருடம்தான் வறட்சியும் ஆரம்பித்தது. இந்தியா அரசி விக்டோரியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு ஏற்பட்ட மூன்று பஞ்சங்களில் இதுவே முதல் பஞ்சம். இந்த வறட்சிக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியக் காரணம் பருவமழை பொய்த்துப் போனதுதான். அதுவரை சராசரியாக 27.6 இன்ச்  என வருடந்தோறும் பெய்து வந்த மழையின் அளவு 1876-ல் வெறும் 6.3 இன்ச்சாக குறைந்ததால் வறட்சி உச்சத்தைத் தொட்டது. இரண்டாவது, 1858-ல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பிறகு சென்னை மாகாணம், கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டிலிருந்து பிரிட்டிஷ் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இதனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் புகைவண்டிகள்(ரயில்கள்), தானிய வணிகம், பருத்தி பயிரிடல் ஏற்றுமதி என பலவற்றை இந்தியாவில் அறிமுகப் படுத்தினர். இதனால் உள்ளூர் சந்தைகள் நலிவடைந்து, தானியங்களின் விற்பனை பெருமளவில் சந்தைப்படுத்தப்பட்டது. மேலும் உணவு தானியங்கள் பயிரிடுவதைக் குறைத்து அவர்களுக்குத் தேவையான பருத்திகளை அதிகளவில் பயிரிடவும் தொடங்கினர். மூன்றாவதாக, கடுமையான வறட்சியால் தானியங்களின் உற்பத்தி முற்றிலுமாக குறைந்துவிட்ட போதிலும் ஏற்றுமதிக்கு வசதியாக ரயில்வே போக்குவரத்து இருந்ததால் ஏற்றுமதியாளர்களும், பெரும் செல்வந்தர்களும் இந்தியாவில் விளைந்த சொற்ப தானியங்களையும் ஏற்றுமதி செய்ததை நிறுத்தாதது, என்பன போன்ற காரணங்களால் பஞ்சம் தன் கோர பற்களால் ஏழை மக்களை வேட்டையாடிக் குவிக்கத் தொடங்கியது.

கட்டுப்பாடற்ற தானிய ஏற்றுமதியினால் தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உணவு தானியங்கள் என்பது கனவாக மாறிவிட்டது. ஏற்றுமதிக்காக அதிகாரவர்க்கத்தினர் தானியங்களை பதுக்கிவிட்டதால் இவர்களிடம் பணம் இருந்தும் வாங்க முடியாமல் போனதால் கலவரம் வெடிக்கத் தொடங்கியது. மேலும் பிரிட்டனின் புதிய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக வெளிநாடுகளில் இருந்தும் பஞ்சத்தை தவிர்க்க தேவையான உணவு தானியங்களை எடுத்து வர முடியாத நிலை ஏற்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொல்லக்கூடிய தஞ்சாவூரே தடுமாறும் அளவிற்கு உனவுப் பஞ்சமும், வறட்சியும், பட்டினி சாவும் ஏற்பட்டது. நிவாரண உதவிகளை முடக்கிவிட வேண்டிய இந்தக் காலகட்டத்தில்தான் அப்போதைய சென்னை மாகாண கவர்னராக (governor of Madras) இருந்த ரிச்சர்ட் க்ரென்வில் (Richard Grenville) பொழுதுபோக்கு சுற்றுலாவிற்காக அந்தமான், நிக்கோபார், பர்மா என பயணித்துக் கொண்டிருந்தார். அவர் சிலோன் சென்றடையும்போதுதான் சென்னையில் உணவுப் பஞ்சத்தால் ஏற்பட்டக் கலவரம் பற்றியே அவருக்கு தெரிய வருகிறது. உடனே அவர் இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ராபர்ட் பல்வர் லிட்டன் (Robert Bulwer-Lytton) தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அப்போது இந்திய அரசாங்கத்தின் பஞ்சக்குழு ஆணையராக இருந்த ரிச்சார்ட் டெம்பிள்  "டெம்பிள் வேஜ்’’ (Temple wage) என்ற புதிய ஊதியக் கொள்கையை உருவாக்குகிறார். இதன்படி பிரிட்டிஷ் அரசின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மட்டும் 450 கிராம் பருப்பும் ஒரு அனா காசும் world%20photographer%208.jpgவழங்கப்பட்டது. பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் இதைவிடக் குறைவான அளவே வழங்கப்பட்டது. அதேசமயம் நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கடுமையாக வேலை வாங்கவும் செய்தனர். சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாயும் இவ்வாறுதான் கட்டப்பட்டது. இந்த நிவாரணம் போதாது என்று கூறி போராட்டம் வலுத்ததன் விளைவாக 1877-ல் பருப்பின் அளவு 570 கிராமாக உயர்த்தப்பட்டாலும் பஞ்சத்தால் உடல் நலிந்திருந்த மக்களை மலேரியா தாக்கியதில் மேலும் பல லட்சம் பேர் உயிரிழந்தனர்.

இந்தப் புகைப்படத்தை எடுத்த வில்லோபை வாலஸ் ஹூப்பர் அப்போது பிரிட்டிஷ் இராணுவத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த குதிரைப்படையில் (7th Madras Cavalry) பணிக்கு சேர்ந்தவர். புகைப்படக்கலை இவரது பொழுதுபோக்கு என்பதால் இராணுவப் பணியை செய்து கொண்டே புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டிருந்தார். 1872-ல் ’’இந்தியாவின் மக்கள்’’ (The People of India) என்ற மிகப் பிரபலமான புகைப்படத் தொகுப்பை வெளியிட்டார். இந்த சூழலில்தான் அப்போது ஏற்பட்ட பஞ்சத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் தனது கேமராவினால் பதிவு செய்தார்.  பிரிட்டிஷ் இந்தியாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் துயரத்தைக் உலகத்திற்கு காட்டியதில் வில்லோபை வாலஸ் ஹூப்பரின் புகைப்படங்களே முக்கியக் காரணமாக  இருந்தன. அதேசமயம் பஞ்சத்தைக் காட்டுவதற்காக பட்டினியால் வாடிக் கொண்டிருந்த பலரை அவரது ஸ்டுடியோவிற்கே அழைத்து சென்று புகைப்படம் எடுத்துவிட்டு, அவர்களுக்கு உணவைக்கூட அளிக்காமல் திருப்பி அனுப்பும்போது பலர் இறந்துபோயினர். இந்தக் கொடும் செயலால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார் ஹூப்பர்.

http://www.vikatan.com/news/article.php?aid=52644

  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய புகைப்படங்கள் - பகுதி 9 - அகதிக் குழந்தை...

 

றவுகளையும் உடமைகளையும் இழந்த மக்கள், குடும்பத்தில் எஞ்சியிருக்கும் சொற்ப உயிர்களையாவது காப்பாற்றிக் கொள்ள வேறொரு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயரும்போது, அவர்களுக்கு ஏற்படும் வலிகளும் உணர்வுகளும் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

வாழ்க்கையில் அனைத்தையுமே இழந்துவிட்டோம் என்று நினைத்து அகதிகள் முகாமில் இருப்பவர்களுக்கு, எதிர்பாராமல் ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்பட்டால் எப்படி இருக்குமோ அப்படியான ஒரு தருணத்தில் எடுக்கப்பட்டதுதான் இந்தப் புகைப்படம்.

அல்பேனியா (Albania) நாட்டின் குக்கிஸ் கிராமத்தில் கொசோவா (Kosovo) உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates) சார்பில்  அமைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தின் பின்னே இருக்கும் கதை நெகிழ்ச்சிகளால் நெய்த  ஒன்று.

உள்நாட்டுப் போரினால் குடும்பத்தை இழந்த ஒருவர் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு  பாதுகாப்பிற்காக அகதிகள் முகாமை நோக்கி ஓடி வருகிறார். முகாமை நெருங்கும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பின் பிரகாசம். ஆம் போரில் இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த இவரின் மனைவியும் உறவினர்களும் முகாமில் முள்வேலிக்கு அந்தப்பக்கம் உயிருடன் இருக்கிறார்கள். அதேபோல இறந்துவிட்டதாக தாங்கள் நினைத்த குழந்தையும் கணவரும் தப்பித்து வருவதைப் பார்த்துவிட்டு மனைவியும் முள்வேலியை நோக்கி ஓடி வந்து, இரண்டு வயதுக் குழந்தையான அகிம் ஷாலாவை (Agim Shala) முள்வேலிக்கு இருபுறமும் மாற்றிக் மாற்றிக் கொஞ்சிக் கொள்கிறார்கள்.

worl%20photo%20new.jpg

போரினால் பிரிந்த குடும்பம் ஒன்று சேருவதையும், அகதிகளாக தமது நாட்டின் எல்லையைத் தாண்டுவதையும் இந்த ஒரே புகைப்படத்தில் அற்புதமான பதிவு செய்திருக்கிறார் பெண் புகைப்படக் கலைஞர் கரோல் கசி (Carol Guzy). கசி எடுத்த இந்தப் புகைப்படம்தான் கொசோவா அகதிகளின் கண்ணீர்க் கதையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியது.

கொசோவா சுயமாக சுதந்திரத்தை அறிவித்துக் கொண்ட ஒரு நாடு. ஆனால் அதற்கு அந்த நாடு கொடுத்த விலை, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சரி பாதியினர் அகதிகளாக வெளியேறியது. செர்பியாவின் ஒரு பகுதில் கொசோவர்கள் அதிகமாக இருந்த காரணத்தினால் தங்களை தனி நாடாக அறிவித்துக் கொண்டனர்.

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதை ஏற்றுக் கொண்டாலும் செர்பியா, ரஷ்யா மேலும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஆரம்பம் முதலே இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தக் காரணம்தான் உள்நாட்டுப் போர் தொடங்க மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

1929 இல் முதல் உலகப் போருக்குப் பின்னர், இன்றைய செர்பியா, குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ, கொசோவா ஆகியவைகளைக் கொண்ட கூட்டுக் குடியரசாக யுகோஸ்லோவியா உருவெடுத்தது. ஒருங்கிணைந்த யுகோஸ்லாவியாவில் பெரும் மாகாணமாக இருந்தது செர்பியா. அந்த மாகாணத்தின் உள்ளேதான் தன்னாட்சி அதிகாரம் பொருந்திய அமைப்பாக கொசோவா இருந்தது. கொசோவாவுக்கு அண்டை நாடு அல்பேனியா என்பதால் கொசோவாவில் வசித்த 90 சதவிகிதத்திற்கும் மேலான மக்கள் அல்பேனிய முஸ்லிம்களாக இருந்தனர் (உ.ம்:இலங்கையில் தமிழீழம்).

இந்நிலையில் யுகோஸ்லாவியா உடைந்தபோது பெரிய குழுக்கள் அனைத்தும் தனித்தனியாகப் பிரிந்துவிட, கொசோவா மட்டும் பிரியமுடியாமல் மாட்டிக்கொண்டதால் செர்பியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டது. இந்தக் காலகட்டத்தில் அதிகளவில் பரவிய இஸ்லாம் கொசோவாவிலும் பரவ தொடங்கியதால் அங்கு அல்பேனிய மொழி பேசும் மக்களும் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கினர்.

ஆனாலும் செர்பியர்களின் எண்ணிக்கையே அதிகம் என்பதால் இயல்பாகவே கொசோவாவில் வசித்த அல்பேனியர்களின் மீது அதிக அளவு ஆதிக்கம் செலுத்த தொடங்கினர். இதுவும்  உள்நாட்டுப் போர் ஏற்பட வழிவகுத்தது. அல்பேனிய இளைஞர்கள் பெருமளவில் ஒற்றைக் குடையின் கீழ் திரண்டு "கொசோவோ விடுதலை இராணுவம்" என்ற விடுதலை இயக்கத்தைத் தொடங்கி விடுதலைப் போரில் ஈடுபட்டனர்.

1998-1999 வரை நடந்த இந்த உள்நாட்டுப் போரில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர். இதில் மூன்று லட்சத்து எழுபதாயிரம் பேர் அல்பேனிய அகதிகளாகவும், மீதமுள்ளவர்கள் மாசிடோனியா (Macedonia), மொண்டெனேகுரோ, மற்றும் போஸ்னியாவில் (Montenegro and Bosnia) நாடுகளில் தஞ்சமடைந்தனர். அதே சமயம் 4 லட்சத்திற்கும் மேலான மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாகினர் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும்.

கொசோவாவை விட்டுப் பெருமளவு வெளியேறியதால் அவர்களின் வீடு, நிலங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் செர்பியர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்கள்மீது இடைவிடாத தாக்குதல்களை நடத்திக் கொண்டே இருந்தனர். இதனால் கொசோவாவிற்கு ஆதரவாகக்  களம் இறங்கிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோ (North Atlantic Treaty Organization) நேச நாடுகள், 24 மார்ச் 1999 அன்று செர்பிய இராணுவத்தின் மீது வான் வழித் தொடர் தாக்குதல்களை நடத்தியது. 11 வாரம் நடந்த இந்தத் தாக்குதலினால் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததோடு கொசோவா, ஐக்கிய நாட்டு சபைகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும் வந்தது.

கரோல் கசி எடுத்த இந்தப் புகைப்படம் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளி வந்ததும் மேற்கு உலகங்களின் பார்வை கொசோவாவிற்கு ஆதரவாகத்  திரும்பவும், கொசோவாவை நோக்கி பத்திரிக்கையாளர்கள் படையெடுக்கவும் காரணமாக அமைந்தது.

1956 மார்ச் 7 ஆம் தேதி அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) பிறந்தவர் புகைப்படக் கலைஞர் கரோல் கசி. இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால், தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளியான தாயின் பராமரிப்பிலேயேதான் வளர்ந்தார். இவரின் நண்பர் ஒருவர் புகைப்படக் கலைஞராக இருந்ததால் இவருக்கும் அதன் மேல் காதல் வர, புகைப்படக் கல்லூரியில் சேருகிறார். ஆனால் புகைப்படக்கலைஞராக ஆகிவிட்டால் வறுமையில்தான் சாக வேண்டும் என அனைவரும் பயமுறுத்த அதில் பெயில் ஆகிவிடுகிறார். அதனால் மறுபடியும் செவிலியருக்குப் படித்தார். புகைப்படக் கல்லுரியில் பெயிலாகிவிட்ட கரோல் கசி எடுத்த இந்தப் புகைப்படம் 2000 ஆம் ஆண்டின் புலிட்சர் பரிசை வென்றது. மேலும், இதுவரை இவர் 4 முறை புலிட்சர் பரிசையும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ஐ.நா சபையின் கட்டுப்பாட்டில் இருந்த கொசோவா 17 பிப்ரவரி 2008 ஆம் ஆண்டு தன்னைக் குடியரசு பெற்ற நாடாக (Republic of Kosovo) அறிவித்துக் கொண்டது. இதன்படி ஐநா சபையில் அங்கம் வகிக்கும் 108 நாடுகள் கொசோவாவுடன் அரசியல் உறவை வைத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்த நிலையில் செர்பியா மறுத்ததோடு 2013-ல் ஏற்படுத்தப்பட்ட பிரஸ்ஸல்ஸ் ஒப்பந்தப்படி கொசோவாவை தன்னுடைய அதிகாரத்திற்குட்பட்ட சிறப்பு மாநிலமாக அறிவித்தது.

மேலும் ஐ.நாவில் வசிக்கும் மீதமுள்ள 85 நாடுகள் கொசோவாவை தனி நாடாக  ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் ஒலிம்பிக் மற்றும் உலக வங்கி போன்றவைகளில் தனி நாடாகவே பங்கு கொள்கிறது. ரஷ்யா, சீனா, ஸ்பெயின், மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், கொசோவாவின் பிரகடனத்தை அங்கீகரிக்க மறுத்துவிட்டாலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் அங்கீகரித்தது. வழக்கம்போல இந்தியா கொசோவாவின் பிரகடனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டது. இந்த விஷயத்தில் இந்தியா மௌனம் காத்ததற்கும், இலங்கைக் கடுமையாக எதிர்த்ததற்கும் காரணம் சொல்ல வேண்டுமா என்ன ? எது எப்படியோ, உலகில் கடைசியாக குடியரசு பெற்ற நாடாக இன்றுவரை கொசோவா இருக்கிறது.  நாளை ?

 

புகைப்படம் பேசும்...

http://www.vikatan.com/news/article.php?aid=52955

  • தொடங்கியவர்

உலகை உலுக்கிய புகைப்படங்கள் - பகுதி 10 அகதிகளின் மோனலிசா...

 

ச்சை நிற கண்கள், அதன் ஊடுறுவும் பார்வை, என மிரட்டும் இந்தப் பெண்ணின் படம் அகதிகளின் அடையாளம். லியோனார்டோ டா வின்சியால் (Leonardo da Vinci) படைக்கப்பட்ட மோனலிசா ஒவியத்திற்கு நிகரான படைப்பு என்பது இதன் சிறப்பு. நவீன உலகத்தின் மோனலிசா என்ற பெருமை புகைப்படக்கலைஞர் ஸ்டீவ் மெக்கரியால் (Steve McCurry) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்திற்கு மட்டுமே உண்டு. ஆப்கன் பெண் என்று பெயரிடப்பட்ட இந்தப் சிறுமியின் பெயர் ஷர்பட் குலா (Sharbat Gula) பஸ்தூன் (Pashtun) பழங்குடி இனத்தைச் சேர்ந்தவள். இந்தப் புகைப்படம் உலகின் பார்வையை சோவியத் யூனியன்-ஆப்கனிஸ்தான் போரை நோக்கி அப்போது உடனடியாக திரும்ப வைத்தது. போரின் கொடுமை மற்றும் அதனால் ஆப்கனில் இருந்து வெளியேறிய அகதிகளின் நிலை என அனைத்தையும் வெளிச்சம் போட்டுக்காட்டி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்னாளில் அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதற்காக அமெரிக்கா, ஆப்கன் மீது போர் தொடுத்தபோதும் இந்தப் புகைப்படம் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

7.jpg

அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் நிலவிய பனிப்போர் உச்சத்திலிருந்த காலகட்டம் அது. அதனால் சோவியத் யூனியனின் ஆதரவு கம்யூனிஸ்ட் ஆட்சி எங்கெல்லாம் நடைபெற்றதோ அங்கெல்லாம் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்களை உருவாக்கி, அவர்களைத் தூண்டிவிடும் வேலையை செய்வதைத் தன் கடமையாகக் கொண்டிருந்தது அமெரிக்கா. அப்போது ஆப்கனில் நடைபெற்றது சோவியத் யூனியனின் ஆதரவு கம்யூனிஸ்ட் ஆட்சி என்பதால் அமெரிக்காவின் கலகக் கண் அங்கு திரும்பியது. கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக இருந்த முஜாஹிதீன் (Mujahideen) முஸ்லிம்களை அரசுக்கு எதிராகத் தூண்டி விட்டது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. (Central Intelligence Agency). அதோடுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தேவையான போர்ப்பயிற்சி, ராணுவத் தளவாடங்கள், பண உதவிகள் போன்றவற்றையும் செய்ய ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இம்மாதிரியான செயல்களுக்கான அறுவடையைத்தான் பின்னாட்களில் அமெரிக்கா பெற்றது, பெற்றுக் கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளைப் பழிதீர்ப்பதற்காக, கண்ணுக்குத் தெரியாத பல எதிரிகளை தனக்கு எதிராக உருவாக்கிக் கொண்டே போனது அமெரிக்கா. அப்படி இவர்களால் உருவாக்கப்பட்ட போராளிக் குழுக்கள்தான் இரட்டை கோபுரத்தைத் தரைமட்டமாக்கி, ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள் என்பது வரலாறு. டிசம்பர் 1979 முதல் பிப்ரவரி 1989 வரை ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போரில், 8.5 லட்சத்திலிருந்து 15 லட்சம் பேர் வரை இறந்தனர் என்று தெரிவிக்கின்றது புள்ளி விவரங்கள்.

5.jpg

ஆப்கனில் 1978 வரை முகமது தாவுத் கான் (Mohammad Daud Khan) என்பவரது தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ராணுவம் மற்றும் கம்யூனிஸ்ட் புரட்சியின் மூலமாக நூர் முகம்கமது தாரக்கி (Nur Mohammad Taraki) என்பவர் அந்த ஆட்சியைக் கைப்பற்றி சோவியத் யூனியனோடு நல்லுறவை உருவாக்கிக் கொண்டார். ராணுவத்தின் மூலமாக இவர் ஆட்சியைப் பிடித்தார் என்பதால், அந்த ஆட்சி மக்களுக்கு எதிரானதாக மாறியது. இந்நிலையில்தான், அமெரிக்காவின் ஆதரவோடு கம்யூனிஸ்ட் எதிர்ப்பு முஜாஹிதீன்கள் ஆப்கன் அரசுக்கு எதிராகவும் அவர்களுக்கு ஆதரவு அளித்த சோவியத்துக்கு எதிராகவும் கொரில்லாத் தாக்குதல்களைத் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்தனர். இதற்குள் ஆப்கன் கம்யூனிஸ்ட் அரசுக்குள்ளேயே நிலவிய கோஷ்டிப் பூசலால் ஆரம்பித்தது. அதுவரை போருக்குத் தேவையான ராணுவத்தளவாடங்களை மட்டுமே கொடுத்து ஆதரவு அளித்துவந்த சோவியத், முதலில் முப்பதாயிரமும் பின் ஒரு லட்சம் என இரண்டு கட்டமாக தனது ராணுவத்தை நேரடியாக இறக்கி ஆப்கனை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதன்பிறகு தங்களை எதிர்ப்பவர்களையும், எதிராக சிந்திப்பவர்களையுமே அடித்து நொறுக்க ஆரம்ப்பித்தது. முஜாஹிதீன் முஸ்லிம்கள் இருக்கும் இடத்திலெல்லாம் குண்டுகளை வீசியது. சோவியத்தின் இந்த வெறியாட்டத்தால் சுமார் 2.8 மில்லியன் ஆப்கன் மக்கள் பாகிஸ்தானிலும், பதினைந்து லட்சம் பேர் ஈரானிலும் அகதிகளாக தஞ்சமடைந்தனர். லட்சக் கணக்கான மக்கள் போரில் பலியான பின்னர் 1988ல் ஆப்கன், அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு ஆப்கனைவிட்டு விலகியது சோவியத்.

6%281%29.jpg

போரின் கொடுமையையும், துயரத்தையும் தன் கண்களின் மூலம் சொல்லாமல் சொன்ன இந்த சிறுமி ஷர்பட் குலாவின் (Sharbat Gula) குடும்பத்தினர், ஆப்கன் மீது சோவியத் போட்ட குண்டுகளில் இருந்து தப்பிக்க ஓடுகிறார்கள். அப்போது எதிர்பாராமல் அந்த குண்டு வீச்சில் இவளது பெற்றோர்கள் இறந்துவிட தனது பாட்டி, அண்ணன் மற்றும் நான்கு தங்கைகளுடன் பாகிஸ்தானில் இருந்த நசீர் பாக் அகதி முகாமிற்கு (Nasir Bagh refugee camp) 1984ல் வந்து சேர்ந்த இந்த சிறுமிக்கு அப்போது வயது 12. அந்தக் காலகட்டத்தில் ஆப்கன் போர் பாதிப்புகளைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் நேஷனல் ஜியாக்கராபிக் புகைக்கப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கரி. அப்போது அந்த முகாமில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பள்ளிக்கூடத்தில் இந்த சிறுமியைப் பார்த்த ஸ்டீவ், அவளின் கண்களில் இருந்த தீவிரத்தை உணர்ந்தவர் அவளைப் புகைப்படம் எடுக்க முடிவெடுத்தார். ஆனால் இஸ்லாமியப் பெண்கள் புகைப்படம் எடுக்க அவ்வளவு எளிதில் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், அந்த முகாமில் உள்ள மற்ற சிறுமிகளைப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்து இவளைத் தனிமைப்படுத்த பல வழிகளை கையாண்டார். அதன் பலன் இறுதியில் இந்தச் சிறுமி தன்னைப் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டாள். நிக்கான் எஃப்.எம்-2 (Nikon FM2) கேமராவில், கொடாக் க்ரோம் ஸ்லைடு ஃப்லிமில் (Kodachrome 64 color slide film) இவர் எடுத்த அந்தப் புகைப்படம், 1985ல் நேஷனல் ஜியாகிராபிக் இதழின் ஜூன் மாதப் பதிப்பில் ஆப்கன் பெண் (Afghan Girl) என்ற தலைப்பில் அட்டைப்படமாக வெளியானது.

ஸ்டீவ் மெக்கரிக்கு அப்போது இந்த சிறுமியின் பெயர் தெரியாததால் இந்த புகைப்படத்திற்கு ஆப்கன் பெண் என்று தலைப்பிட்டார். அகதிகளின் அடையாளமாகவே மாறிவிட்ட இந்தப்புகைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியதால் 1990லிருந்து அந்த சிறுமியை ஆப்கன், பாகிஸ்தான் என அனைத்து இடங்களிலும் தேடி அலைய ஆரம்பித்தார். இறுதியில் 2002 ஜனவரியில் ஆப்கனில் அந்த சிறுமியை அவர் கண்டுபிடித்தபோது, 13 வயதிலேயே திருமணமாகி மூன்று குழைந்தைகளுக்குத் தாயாகிவிட்டிருந்த. அவளுக்கு வயது அப்போது 30. அவரின் அண்ணன் மற்றும் கனவரின் ஒப்புதலோடு 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்தப் பெண்ணை புகைப்பபடம் எடுத்தார் ஸ்டீவ். அதுவும் நேஷனல் ஜியாகிராபிக் இதழில் அட்டைப்படமாக வெளிவந்தது. கோடிக்கணக்கான பேரால் பார்க்கப்பட்ட, பார்துக் கொண்டிருக்கும் தன் புகைப்படத்தை அதுவரை ஒருமுறைகூட பார்த்ததில்லையாம் இவர். மேலும், 1984 மற்றும் 2002ல் ஸ்டீவ் எடுத்த புகைப்படங்களைத் தவிர வேறு எப்போதும் எடுத்துக் கொண்டதில்லை என்றும் பதிவு செய்திருக்கிறாராம் இந்தப் பெண்.

ஸ்டீவ் மெக்கரி, அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் பிறந்தவர். உலகத்தின் உள்ள அனைத்து உயரிய விருதுகளையும் வாங்கிய, உலகத்தின் மிக முக்கியமான புகைப்படக் கலைஞன். சோவியத்-ஆப்கன் போரின் பாதிப்புகளை இவரது படங்கள் மட்டுமே உலகத்திற்கு முழுமையாக எடுத்து சொன்னது. ஈரான் - ஈராக், லெபனான் உள்நாட்டுப் போர், கம்போடியா உள்நாட்டுப்போர் (Iran-Iraq War, Lebanon Civil War, the Cambodian Civil War) என இவர் பதிவு செய்த போர் பட்டியல் நீளுகிறது. முப்பது வருடத்திற்கும் மேலாக புகைப்படத்துறையில் இருக்கும் இவர் பனிரெண்டுக்கும் மேற்பட்ட புகைப்படப் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.

புகைப்படம் பேசும்...

http://www.vikatan.com/news/article.php?aid=53245

  • தொடங்கியவர்

புரட்சியின் குறியீடு...! உலகை உலுக்கிய புகைப்படங்கள்-(மினி தொடர்: பகுதி 11)

 

photo%2011.jpg

முகம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் சோகத்தையும் தாண்டிய அப்பழுக்கற்ற, வீரம் செறிந்த பார்வையுடன் இருக்கும் சே குவேராவின் (Che Guevara) இந்தப் படம் புரட்சியின் குறியீடு. இந்துக்களுக்கு எப்படி சூலாயுதம் அடையாளமாக மாறிப்போனதோ, கிறிஸ்தவர்களுக்கு எப்படி சிலுவை அடையாளமாக மாறிப்போனதோ, அப்படி புரட்சியாளர்களுக்கான அடையாளமாக ’சே’வின் இந்தப் புகைப்படம் மாறிவிட்டது. உலக வரலாற்றிலேயே ஓவியம், சிற்பம், டாட்டூ, எம்ப்ராய்டரி என அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட புகைப்படம், ’சே’வின் இந்தப் புகைப்படம்தான். மேலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் (Fidel Castro) தாய்நாடா...? மரணமா...? என்ற வாக்கியம் அச்சு அசலாய் பொருந்திப் போவதும் ஆல்பர்டோ கொர்தாவினால் (Alberto Korda) எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்திற்குத்தான்.
 

Che%20Guevara.jpg

ஜூலை 26, 1953-ல் ஆரம்பித்த கியூபா புரட்சி  ஜனவரி 1, 1959-ல் முடிந்தது. புரட்சி முடிவில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த ஃபிடல் காஸ்ட்ரோ, தனது இராணுவத்தை பலப்படுத்தும் வேளையின் முதல் கட்டமாக அதற்குத் தேவையான இராணுவத் தளவாடங்களை பெல்ஜியத்திலிருந்து (Belgium) வாங்கினார். அப்படி வாங்கப்பட்ட துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்ட எழுபத்தி ஆறு டன் எடை கொண்ட ஆயுதங்களுடன் லா க்ப்ரே (La Coubre) என்ற பிரெஞ்சுக் கப்பல் கிளம்பியது. அந்தக் கப்பல் மார்ச் 4, 1960 அன்று கியூபாவின் (Cuba) ஹாவனா (Havana) துறைமுகத்திற்கு வந்தது. ஆயுதங்களை அந்தக் கப்பலிலிருந்து இறக்கிக் கொண்டிருந்த போது அதி பயங்கர சத்தத்துடன் வெடித்த குண்டு ஒன்று பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல்களை சிதறச் செய்தது. அப்போது அசம்பாவிதம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த 'சே' உடனே அங்கு ஓடி வந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் சரியாக 48 நிமிடத்தில் மீண்டும் மற்றொரு குண்டு வெடித்தது. இதில் மாலுமிகள், அவசர காலப் பணியாளர்கள் என சுமார் நூறு பேர் பலியானார்கள். இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். புரட்சியின் மூலம் வெற்றியைப் பறித்த காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவின் மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல். அமெரிக்க உளவுப் படையான சிஐஏவின் (Central Intelligence Agency-America) நயவஞ்சகத் தாக்குதல் அது. கியூபாவிற்கு இராணுவத் தளவாடங்களைக் கொடுக்கக் கூடாது என்று அரசியல் ரீதியான பல அழுத்தங்களை பெல்ஜியத்திற்கு கொடுத்துப் பார்த்தது அமெரிக்கா. ஆனால், உலகத்தின் எந்த மூலையில் கம்யூனிசம் இருந்தாலும் அதை அழிக்க நினைக்கும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பெல்ஜியம் கட்டுப்படாததால், அவை கியூபாவிற்கு அனுப்பிய ஆயுதங்களை வெடிகுண்டு வைத்து தகர்த்தது சிஐஏ. இந்த சம்பவம் நடந்து ஐம்பத்தி ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்தக் குற்றச்சாட்டை எதிர்க்கவும் இல்லை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மேலும் அது தொடர்பான எந்த ஆவணங்களையும் மக்கள் மத்தியில் சமர்ப்பிக்காமல் கள்ள மௌனத்தை மட்டுமே அளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

இந்த சம்பவத்தில் பலியானவர்களின் இறுதிச் சடங்கில் பங்கெடுப்பதற்காக மார்ச் 5, 1960 அன்று ஃபிடல் காஸ்ட்ரோ தனது உயர்மட்டக் குழுவினருடனும், 'சே' உள்ளிட்ட தோழர்களுடனும் அங்கே வந்தார். அப்போது அங்கே ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிக மேடையில் ஏறிய காஸ்ட்ரோ அமெரிக்காவிற்கு எதிராகவும், கம்யூனிசத்திற்கு ஆதரவாகவும் எழுச்சி உரையை நிகழ்த்தினார். இந்த மேடையில்தான் தாய்நாடா...? மரணமா...? (The Motherland or Death) என்ற வார்த்தையை உலகத்தை நோக்கி முழங்கினார் காஸ்ட்ரோ. அப்போது இந்த நிகழ்வுகளை  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பரும் புகைப்படக் கலைஞருமான ஆல்பர்டோ கொர்தாவினால் (Alberto Korda). அப்போது காஸ்ட்ரோவிற்குப் பின்னால் நின்று கொண்டிருந்த 'சே' சற்று நகர்ந்து வர, சுமார் முப்பது அடி தூரத்திலிருந்து தனது லைக்கா எம் 2 கேமராவினால் (Leica M2 with a 90 mm lens, loaded with Kodak Plus-X pan film) இரண்டே இரண்டு படங்கள் மட்டும் எடுக்கிறார் கொர்தா. இரண்டு விநாடிகள்தான் அதன் பிறகு 'சே' அங்கிருந்து விலகிவிட்டார்.

புகைப்படக் கலைஞர் கொர்தா அந்த தருணத்தை "அப்போது அந்தப் புகைப்படத்தை எடுக்கும்போதே எனக்குக் கண்டிப்பாகத் தெரிந்தது இது ஒரு வரலாற்றுப் புகழ் பெற்றதாக மாறும் என்று. காரணம் எனது கேமரா வியூ ஃபைண்டரில் பார்க்கும்போதே ’சே’வின் சக்தி மிகுந்த பார்வையும் அதிலிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் என்னை அப்போதே உலுக்கிவிட்டது’’ என பதிவு செய்திருக்கிறார். இந்த நிகழ்வின் போது எடுத்த அனைத்துப் புகைப்படங்களையும் தான் அப்போது வேலை செய்த புரட்சி (Revolución) என்ற Che%20Guevara-%20photografer%20kortha.jpபத்திரிகை நிறுவனத்திற்குக் கொடுத்தார் கொர்தா. ஆனால் அவ்வளவு ஈர்ப்பு இல்லை என்று சொல்லி 'சே'வின் இந்தப் புகைப்படத்தை நிராகரித்து விட்டார் அதன் ஆசிரியர். ஆனால் கொர்தாவோ அந்தப் புகைப்படத்தை தனது வீட்டில் மாட்டி வைத்ததோடு அதிகமாக பிரிண்ட் செய்து நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார்.

ஆல்பர்டோ கொர்தா (Alberto Korda) மார்க்சிஸ்ட் சிந்தனையுடன் இருந்த கியூபாவின் புரட்சி புகைப்படக் கலைஞன். கியூபாவின் வெற்றிக்குப் பிறகு காஸ்ட்ரோ உலகில் எந்த நாட்டுக்கு சென்றாலும் அவரை நிழலாகத் தொடர்ந்து தனது கேமராவில் பதிவு செய்தவர் இவர். அந்த அளவுக்கு காஸ்ட்ரோவிற்கு நண்பனாக, ஆலோசகராக, ஆஸ்தான புகைப்படக் கலைஞராகவும் இருந்தவர். கேமராவின் மூலம் இவர் பார்க்கும் கோணம் முற்றிலும் அனைவரது பார்வையில் இருந்தும் வேறு பட்டதாக இருக்கும். அந்த காரணத்தினாலேயே காஸ்ட்ரோவிற்கு கொர்தாவை மிகவும் பிடிக்கும். ஆரம்பத்தில் திருமண புகைப்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய இவர், அதற்காக ஒரு ஸ்டூடியோவையும் வைத்திருந்தார். அப்போதுதான் அழகான பெண்கள் புகைப்படம் எடுக்க வருவார்கள் என்று அதற்கான காரணத்தையும் தமாஷாக ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். பிளாஷ் உள்ளிட்ட செயற்கை ஒளிக்கருவிகள் தவிர்த்து இயற்கை ஒளியைக் கொண்டு படம் எடுப்பது இவரது பழக்கம். இப்படி இருந்த தன்னை, தலையில் விறகுடனும் கையில் விளையாடும் பொம்மையுடனும் ஒரு குழந்தை நடந்து சென்ற காட்சிதான் இந்த சமூகத்தின் மீது வெறுப்பை உண்டாக்கி காஸ்ட்ரோவுடன் சேர வைத்தது என்கிறார்.

உலகம் முழுவதிலும் இவரது இந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டாலும் அதற்காக இன்றுவரை ஒரு ரூபாய்கூட இவர் வாங்கியது இல்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு 2000-ல் ஸ்மிர்னோஃப் (Smirnoff) என்ற சாராயக் கம்பெனி தனது பாட்டிலில் இளைஞர்களைக் கவர்வதற்காக இந்தப் புகைப்படத்தை பிரிண்ட் செய்து விற்றது. அப்போது அதனை கடுமையாக எதிர்த்த கொர்தா அந்த நிறுவனத்தின் மீது வழக்கையும் தொடர்ந்தார். அதன்பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கோரியது அந்த நிறுவனம். மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே கொர்தாவிற்கு 50,000 அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடாகக் கொடுத்ததுடன் ’சே’வின் படத்தை பாட்டிலில் பிரிண்ட் செய்வதையும் நிறுத்திக் கொண்டு சமரச தீர்வைக் கண்டது. அந்தப் பணத்தை அப்படியே கியூபா மருத்துவக் கழகத்திற்கு (Cuban healthcare system) அளித்ததோடு, 'சே' உயிருடன் இருந்தால் இதைத்தான் செய்திருப்பார் என்று அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார் கொர்தா. அதேபோல லண்டனில் 1999-ல்  இந்தப் புகைப்படத்திற்கு சே ஜீசஸ் (Che Jesus) என்று பெயர் வைத்து இளஞர்களை அதிகப்படியாக தங்கள் மதத்திற்குள் கொண்டு வரவும் பயன்படுத்தின கிறிஸ்தவ சபைகள்.

ஒருமுறை லண்டனைச் சேர்ந்த ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி (Giangiacomo Feltrinelli) என்பவர் கியூபா இராணுவத்தின் அனுமதியுடன் ‘சே’வின் புகைப்படங்களுக்காக கொர்தாவின் வீட்டுக்கு செல்ல, கொர்தாவும் பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் இரு படங்களை பிரிண்ட் செய்து அவரிடம் கொடுத்து அனுப்பினார். இதன் பின்னர் ஆகஸ்ட் 1967-ல் பாரிஸ் மேட்ச் (Paris Match magazine) என்ற பிரெஞ்சுப் பத்திரிகையில் Les Guerrilleros என்ற தலைப்பில் இந்தப் புகைப்படம் முதன் முதலில் வெளிவந்தது. பின் அதே வருடம் அக்டோபர் 9ஆம் தேதி 'சே' சுட்டுக் கொல்லப்பட, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஜியாங்ஜியாகோமோ ஃபெல்டிரிநெல்லி (Giangiacomo Feltrinelli) இந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கில் பிரிண்ட் செய்து இலவசமாக விநியோகித்தார். ’சே’வைக் அழித்த அமெரிக்காவால் அந்நாட்டின் டீ கோப்பைகளிலும், டீ ஷர்ட்டுகளில் இடம்பெரும் அவரது புகைப்படத்தை அழிக்க முடியவில்லை. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகனாகி விட்ட ’சே‘வை அனைத்து நிறுவனங்களும் வியாபாரமாக்குகின்றன. ஆனால் புரட்சி விதையாக மன்னுக்குள் போன  ’சே‘ வணிகமயமாக்குவதை விட அவரையும் அவரது கருத்துக்களையும் உலகமயமாக்குவதே தற்போதைய உடனடி தேவை.

                                                                                                                                                         புகைப்படம் பேசும்

 

http://www.vikatan.com/news/article.php?aid=53582

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காத்திருக்கும் கழுகு! (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 12)

 

 

ழுகு ஒன்று கொடூரப் பசியுடன் தரையில் அமர்ந்திருக்கிறது. அதற்கு முன்னால் உடல் நலிந்து கிடக்கிறாள் ஒரு சிறுமி. எப்போது வேண்டுமானாலும் தனது இரைக்காக அந்தக் கழுகு அவளைத் தூக்கிச் செல்லலாம் என்ற தருணத்தில், கெவின் கார்ட்டரால் (Kevin Carter) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்தான் போரினால் பாதிக்கப்பட்ட சூடானின் நிலமையை முழுமையாக உலகத்திற்கு எடுத்துச் சென்றது.

மேலும் மனிதநேயம் என்ற வார்த்தையை கேள்விக்கு உட்படுத்தியதோடு, அதைப்பற்றிய விவாதங்களையும், விமர்சனங்களையும் அழுத்தமாகப் பதிவு செய்யக் காரணமாக அமைந்ததும் இந்தப் புகைப்படம்தான்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் அதிக பரப்பளவு கொண்ட மிகப்பெரிய நாடு சூடான். வடக்கு சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிந்திருக்கும் இந்த நாட்டில் எகிப்து, பிரிட்டிஷ் என இருவருமே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். சுமார் 22 லட்சம் அரபு மொழி பேசும் இஸ்லாமியர்கள் வடக்கு சூடானில் வசித்தனர். எகிப்தின் ஆதிக்கமும் தாக்கமும் அதிகமாக இருந்ததால் இந்தப் பகுதியின் மக்களுக்கு அந்தக் காலகட்டத்தில் ஓரளவு நாகரீகம் சென்றடைந்திருந்தது.

world%20child%20pic.jpg

அதேசமயம் தெற்கு சூடானில் சுமார் 117 மொழிகளைப் பேசும் மக்களும், 50 பிரிவுகளுக்கும் மேற்பட்ட பழங்குடியினரும் வசித்தனர். இவர்கள் பெரும்பாலும் ஆப்பிரிக்க மரபு வழியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 1900 காலகட்டங்களில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும்போதே இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கிறிஸ்துவர்களாக மாற்றப்பட்டிருந்தனர். பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பெயர் போனவர்கள் பிரிட்டிஷார் என்பதால் புவியியல் ரீதியாகவும், மதங்களாலும் பிரிந்திருந்த வடக்கு, தெற்கு சூடானையும் தனித்தனியாக பிரித்தே ஆட்சி செய்துவந்தனர் என்றபோதிலும், அதிக முக்கியத்துவத்தையும், சலுகைகளையும் வடக்கு சூடானுக்கே அளித்தது பிரிட்டிஷ் அரசு.

இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. வடக்கு சூடானில் அப்போது இருந்த எகிப்தின் ஆதிக்கத்தை குறைப்பதற்கும், நாகரீகத்தில் பின் தங்கியிருந்த தெற்கு சூடான் மக்களிடம் கட்டாயமாக கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்கும் இப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. 1953-ம் ஆண்டு வாக்கில் சூடானுக்கு சுயாட்சி அளிக்க ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது பிரிட்டிஷ். இதன்மூலம் 1954-ம் ஆண்டு சூடான் குடியரசாக மாறியதுடன் அனைத்து அதிகாரங்களும் வடக்கு சூடான் கையில் எடுத்துக்கொண்டு தெற்கு சூடானின் மீதும் தன ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியது. மேலும் அரபு மொழியை அரசு மொழியாகவும், இஸ்லாத்தை தேசிய மதமாகவும் அறிவித்ததால், கொதித்து எழுந்தது தெற்கு சூடான்.

இதனால் 1955-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் வெடித்தது. 16 ஆண்டுகள் வடக்கு சூடான் ராணுவத்திற்கும், தெற்கு சூடான் மக்கள் விடுதலைப் படைக்கும் நடந்த இந்தப் போர், தெற்கு சூடானுக்கு சுயாட்சி அளித்ததன் மூலம், சுமார் ஐந்து லட்சம் மக்களை பலிவாங்கிய பின் 1972-ம் ஆண்டு தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இந்தக் காலகட்டதில்தான் செவரான் (Chevron) என்ற நிறுவனம் தெற்கு சூடானில் எண்ணெய் வளம் இருப்பதைக் கண்டுபிடித்திருந்தது. ஆனால் இதன் வருவாயை வடக்கு சூடானே எடுத்துக் கொண்டது. விளைவு 1983-ல் மீண்டும் உள்நாட்டுப் போர் தொடங்கியது.

வடக்கு சூடானின் ஆதிகத்திற்கு எதிராக நடந்த போர் கச்சா எண்ணெய் வருமானத்திற்கானதாக மாறியது. 2005-ம் ஆண்டு வரை நீடித்த இந்தப் போரில் சுமார் 20 லட்சம் மக்கள் வறுமையின் காரணமாகவும், கொடுமையான தொற்று நோயின் காரணமாகவும் இறந்ததுடன், 40 லட்சம் மக்கள் அகதிகளாகவும் இடம்பெயர்ந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அதிக அளவில் மக்களை காவு வாங்கியது இந்தப் போர்தான் என்கிறது வரலாற்று ஆய்வுகள்.  இதன்பின் 2011-ல் தெற்கு சூடானில் நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பின் மூலம் 9 ஜூலை 2011 அன்று தெற்கு சூடான் உலகின் தனி நாடாக மலர்ந்ததுடன், ஐக்கிய நாடுகள் சபையில் 193-வது நாடாகவும் இடம்பெற்றது.

world%20garter.jpg

விளையாட்டுத்துறைப் புகைப்படக் கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கி, பின் போர் புகைப்படக்கலைஞராக மாறிய கெவின் கார்ட்டர் தென் ஆப்ரிக்காவின் (South Africa) ஜோஹன்ஸ்பர்க்கில் (Johannesburg) பிறந்தவர். 1993-ல் சூடானில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றது ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று. அதே விமானத்தில் போர் பாதிப்புகளைப் பதிவு செய்வதற்காக கார்டரும் சென்றார்.

தெற்கு சூடானின் ஒரு கிராமத்தில் இறங்கிய அந்தக் குழு அங்கு அமைக்கப்பட்டிருந்த நிவாரண முகாம் மூலம் உணவுகளை விநியோக்கிக்க, பட்டினியால் துவண்டிருந்த மக்கள் கூட்டம் அதைப் பெற அலை மோதியது. இந்த நிகழ்வுகளைப் பதிவு செய்த கார்ட்ட அங்கிருந்து சிறிது தூரம் நடந்தார்.

அப்போது உணவைப் பெறும் அவசரத்தில் பெற்றோரால் தனித்து விடப்பட்ட ஒரு சிறுமி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடக்கக் கூட தெம்பில்லாமல், அந்த உணவு முகாமை நோக்கி பசி முனகலுடன் தவழ்ந்து வருகிறாள். ஒரு கட்டத்தில் அதுவும் முடியாமல் சோர்ந்து போய் அமர்ந்துவிட, இந்தக் காட்சியைப் புகைப்படமெடுக்க அமர்கிறார் கார்ட்டர்.

அதற்கடுத்த சில விநாடியில் அந்த சிறுமியை தனக்கு இரையாக்கிக் கொள்ள அந்தப் பக்கம் வந்து அமர்ந்தது ஒரு கழுகு. சுமார் இருபது நிமிடங்கள் அந்தக் கழுகு சிறகை விறிப்பதற்காக காத்திருந்த கார்ட்டர், அது நடக்கவில்லை என்பதால் மெதுவாக அந்த சிறுமியின் அருகில் சென்று அந்தக் காட்சியை தனது கேமராவில் பதிவு செய்தார். பின் அந்தக் கழுகை மட்டும் அப்போது விரட்டிவிட்டு அங்கிருந்து திரும்பிவிட்டார் கார்ட்டர்.

மார்ச் 26, 1993 அன்று  'தி நியூயார்க் டைம்ஸ்’ (The New York Times) பத்திரிகையில் கார்ட்டரின் இந்தப் புகைப்படம் வெளியாக, அதிர்ந்துபோனது ஒட்டு மொத்த உலகமும். அன்றைய தினமே ஆயிரக்கணக்கானவர்கள் அந்தப் பத்திரிக்கை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அந்த சிறுமி என்ன ஆனாள் என்று விசாரித்தனர். ஆனால் அதற்காக பதில் அந்த அலுவகத்திற்கு மட்டுமல்ல அந்தப் புகைப்படத்தை எடுத்த கார்ட்டருக்கேக் கூட தெரியாது என்பதுதான் உண்மை.  கார்ட்டருக்கு 1994-ம் ஆன்டிற்கான புலிட்சர் விருது கிடைத்தது. அதோடு சேர்ந்து ஒட்டுமொத்த உலகின் விமர்சனங்களும் குவிந்தது. 

மேலும் ’’செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ்’’ (The St. Petersburg Times) என்ற பத்திரிகை, ’’குழந்தையின் துன்பத்தைப் போக்காமால் அவள் படும் துயரத்தை சரியான கோணத்தில் படமெடுக்கும் பொருட்டு தன் புகைப்படக் கருவியின் லென்சைச் சரிசெய்து கொண்டிருந்த கார்ட்டர் இன்னொரு கொலையாளியாகத்தான் இருக்க முடியும். காட்சியின் இன்னொரு கழுகு அவர்’’ (The man adjusting his lens to take just the right frame of her suffering might just as well be a predator, another vulture on the scene) என்று விமர்சித்து எழுதியது.

இப்படியான தொடர் விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளான கார்ட்டர், 1994 ஆம் ஆண்டு ஜூலை 27-ம் நாள் தனது காரை தான் சிறு வயதில் விளையாடிய ஆற்றங்கரையருகில் கொண்டு நிறுத்தினார். ஒரு ரப்பர் குழாயின் ஒரு முனையை காரின் புகை வெளியேற்றியில் (exhaust pipe) இணைத்து, மறுமுனையை தன் காருக்குள் கொண்டுச் சென்று காரின் கண்ணாடிகளை ஏற்றிவிட்டார். அதிலிருந்து வெளியேறியகார்பன் மோனாக்சைடு மூலம் தன் வாழ்வை முடித்துக்கொண்ட கார்ட்டருக்கு அப்போது  வயது 33. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், 'நான் மனத்தளர்ச்சி அடைந்துள்ளேன். தொலைபேசி இல்லாமல்.... வாடகைக்குப் பணம் இல்லாமல், குழந்தை ஆதரவுக்குப் பணம் இல்லாமல், கடன் அடைக்கப் பணம் இல்லாமல். நான் கொலைகளின் தெளிவான நினைவுகளாலும் பிணங்கள், கோபம் மற்றும் வலியினாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். பசியால் வாடும் மற்றும் காயம்பட்ட குழந்தைகளாலும்.... அதிஷ்டம் இருந்தால் நான் கென்னோடு சேரப்போகிறேன்.' என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த சிறுமி உணவுக்கூடத்தை சென்றடைந்தாளா அல்லது அந்த கழுகுக்கே உணவாகிவிட்டாளா என்ற கேள்விக்கான பதில் இன்று வரை யாரிடமும் இல்லை.

புகைப்படம் பேசும்.....

http://www.vikatan.com/news/article.php?aid=54204

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பட்டினித் தாய்! (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 13)

 

world%20photos13%20head.jpg

திர் காலம் குறித்த கேள்விகள், நிகழ்காலத் தேவைகள் குறித்த ஏக்கங்கள் என இரண்டையும் தனது கண்களில் ஏந்தி அமர்ந்திருக்கிறார் இந்தத் தாய். பசி மயக்கத்திலிருக்கும் தன் மூன்று குழந்தைகளையும் தோள்களிலும், மடியிலும் கிடத்தியிருக்கும் இவரின் பெயர் புளோரன்ஸ் ஓவன்ஸ் தாம்சன் (Florence Owens Thompson). ஒட்டு மொத்த உலகத்தின் காவல்காரனாக தன்னைக் காட்டிக் கொள்ளும் அமெரிக்காவில், 1929-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியையும், அதன் பாதிப்புகளையும் உலகத்தின் பார்வைக்கு கொண்டு சென்றது டோரோதியா லாங்கெவினால் (Dorothea Lange) எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம்.

அமெரிக்காவில் 1929-ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி 1939 வரை சுமார் பத்து வருடங்கள் நீடித்தது. தொழில் மயமாகப்பட்ட மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியாக இது கருதப்பட்டது. இந்த வீழ்ச்சியானது அமெரிக்கப் பங்குச் சந்தை மையமான வால் ஸ்ட்ரீட்டையே (Wall Street) அதிர வைத்து பீதியை உண்டாக்கியது. மேலும் பல ஆயிரக்கணக்கான பொருளாதார முதலீடுகளையும் நொடிப் பொழுதில் தரைமட்டமாக்கியது. இதனால் மக்களின் வாங்கும் திறனும், பொருளாதார முதலீடுகளும் வெகுவாகக் குறைந்தது. இதனடைப்படியில் தொழிற்சாலைகளின் உற்பத்தியும் அடியோடு குறைந்தது. தொழிற்சாலைகளில் ஆட்குறைப்புகள் அதிகளவில் அரங்கேறியதால் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடத் தொடங்கியது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்டது ஆப்ரிக்க அமெரிக்கர்கள்தான். காரணம் இவர்களின் வேலைகள் பறிக்கப்பட்டு, வெள்ளைக்கார அமெரிக்கர்களுக்கு வழங்கப்பட்டது. 1930-ம் ஆண்டு 50% சதவிதம் கருப்பின ஆப்ரிக்க, அமெரிக்க மக்களும், 1933-ம் ஆண்டு வாக்கில் சுமார் பதிணைந்து லட்சம் வெள்ளைக்கார அமெரிக்கர்களும் வேலைகளை இழந்துத் தவித்தனர். மேலும் அமெரிக்காவில் அப்போது இயங்கிக் கொண்டிருந்த வங்கிகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மூடப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் சின்னாபின்னமாகியது.

world%20photos13%201%281%29.jpg1920-ன் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டிருந்தது அமெரிக்கா. இதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் வாங்கும் திறனும் அப்போது அதிகரித்திருந்தது. இதன் மூலம் மது அருந்துவது, புகை பிடிப்பது, குட்டைப் பாவாடைகள் அணிந்து கொள்வது போன்ற கலாசாரங்கள் பெண்களிடையே அதிகமாகப் பரவத் தொடங்கியது. ஆண்கள் இவைகளோடு, பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது, கார்கள் வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு காட்டினர். இதில் முக்கியமான விஷயம் இவை அனைத்தையுமே கடன் பத்திரங்கள் மூலமாகவே வாங்கினர். இதன்மூலம் அமெரிக்கப் பொருளாதாரமும் அசுர வளர்ச்சியடைந்தது. ஆனால் இந்த வளர்ச்சி 65% அளவிற்கு உயர்ந்த போதும் அடித்தட்டு தொழிலாளர்களின் சம்பளம் வெறும் 8% மட்டுமே உயர்ந்தது. இதனால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் உள்ள இடைவெளியின் நீளம் அதிகரித்தது. அமெரிக்க மக்கள் தொகையில் மொத்த பணக்காரர்கள் 0.1%. இவர்களின் வருமானம் ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையின் 42% மக்களின் வருமானத்திற்கு நிகரானதாக அமைந்தது. இப்படியான காரணங்களினால்தான் 1929-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் நாள் அந்நாட்டின் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவை  அதள பாதாளத்திற்குத் தள்ளிய இந்த நாள் தான் கருப்பு செவ்வாய் என்று வர்ணிக்கப்படுகிறது.

அப்போது அமெரிக்காவின் அதிபராக இருந்த ஹெர்பட் ஹூவர் (Herbert Hoover) இந்தப் பிரச்னையை சரியாகப் புரிந்து கொள்ளாமலும், இந்த வீழ்ச்சியைக் குறைத்தும் மதிப்பிட்டு விட்டதோடு ''நமது தேசிய வாழ்வில் இது ஒரு கடந்த சம்பவம். வரும் காலங்களில் சரி செய்துவிடுவோம். இது ஒரு முக்கியமான பிரச்னை இல்லை'' என்று வார்த்தைகளை மட்டுமே உதிர்த்தார். இந்த வீழ்ச்சியால் உணவில்லாமல் தவித்த ஏழைகளை கண்டு கொள்ளாமல் விட்டார். அதோடு பணக்காரர்களுக்கும், தொழிற்சாலை அதிபர்களுக்கும் பயனளிக்கக் கூடியதாக மட்டுமே அவரது திட்டங்களும் அமைந்தது. இத்தகையத் தவறானப் பொருளாதாரக் கொள்கையால்தான் அங்கு பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த நிலையை மீட்டெடுப்பேம் என்ற உறுதிமொழியுடன்தான் 1932-ல் ரூஸ்வெல்ட் அமெரிக்காவின் அதிபரானார். பதவியில் அமர்ந்த நூறு நாட்களுக்குள்ளேயே புதிய பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கினார். மேலும் வங்கிகள் செயல்பாட்டு முறைகள், அரசாங்க நிர்வாகங்களை மேம்படுத்தி வீழ்ந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

ph.jpg1895 மே 26 அன்று அமெரிக்காவில் பிறந்தவர் போட்டோகிராபர் டோரோதியா லாங்கெ. போலியாவினால் பாதிக்கப்பட்டதால் இவரது வலது கால் பலம் இழந்து விட்டது. இதைபற்றி அவர், ''இது என் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வு. இதுதான் என்னை உருவாக்கியது. இதுதான் எனக்கு அறிவுரைகளையும், அவமானங்களையும் தந்தது. இவைகள் அனைத்தும் சேர்ந்துதான் என்னை சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது'' என்றிருக்கிறார். இவரது பெற்றோர்கள் பிரிந்து விட்டதாலும், படிப்பில் நாட்டமில்லாததாலும் போட்டோகிராஃபியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இவர்.

1918-ம் ஆண்டு தன் கனவரோடு சேர்ந்து சான் ஃபிரான்சிஸ்கோவில் போட்டோ ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்க அது மிகவும் பிரபலமானது. இந்நிலையில்தான் 1929-ல் கருப்பு செவ்வாய் உருவானது. அப்போது அமெரிக்கப் பண்ணைப் பாதுகாப்பு நிர்வாகம் (US Farm Security Administration) (FSA) என்ற அமைப்புக்காக, வேலையில்லாத ஆண்களையும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் புகைப்படம் எடுக்க சென்றார். அப்போது நிப்பொமா மேசா (Nipomo Mesa) என்ற இடத்தில்தான் புகைப்படத்தில் இருக்கும் அந்தத் தாயைக் காண்கிறார். அந்த சம்பவத்தை ஒரு பேட்டியில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார், ‘’நான் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பசியுடன் துடிக்கும் அந்தத் தாயைப் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை காந்தம் இழுப்பது போல, அவரை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. என்னிடம் இருந்த கேமராவினால் புகைப்படம் எடுத்துக் கொண்டே அவரிடம் சென்றேன். அவர்களிடம் என்ன பேசினேன் என்று எனக்கு எதுவும் சரியாக ஞாபகம் இல்லை. அந்தக் காட்சி மட்டுமே என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்கள் பக்கத்து நிலத்தில் உடைந்து கிடக்கும் காய்கறிகளும், அவரது பிள்ளைகள் அடித்து எடுத்துவரும் பறவைகள் மட்டுமே அவர்களது உணவாக இருந்தது. பின்னர் அவரிடம் பேசியதில் அவர் வயது 32 என்றும், கையில் பணம் இல்லாததால் காரின் டயரை விற்றுத்தான் சாப்பாடு வாங்கினேன் என்றும் அவர் சொன்னார். அவரின் நிலையைக் கண்டு உண்மையில் நான் உடைந்துவிட்டேன்’’.

இவர் எடுத்த இந்தப் புகைப்படம் மார்ச் 1936-ல் சான் பிரான்சிஸ்கோ நியூஸ் (San Francisco News) என்ற பத்திரிகையில் வெளியானது. படம் வெளியான இரண்டே மாதத்தில் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையை எடுத்தது அரசு. அமெரிக்காவின் பெரும் வீழ்ச்சியின் அடையாளமாக டோரோதியா லாங்கெவின் புகைப்படம் மாறிவிட்டது.

புகைப்படம் பேசும்...

http://www.vikatan.com/news/article.php?aid=54512

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

புத்தம் சரணம்! (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 14)

 

9.jpg

டல் முழுவதும் தீ ஜுவாலைகள் ஆக்கிரமித்து எரிந்து கொண்டிருக்கும் நிலையிலும், எந்தவிதமான சிறு அசைவோ கதறலோ இல்லாமல் ஆழ்ந்த தியானத்தில் அமைதியாக அமர்ந்திருக்கிறார் இந்த புத்த மதத் துறவி. மதங்களின் பெயரினாலான அடக்குமுறைக்கு எதிராக தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு தன் உடலையே போராட்டக் கருவியாக முன்னிறுத்திய இவரின் பெயர் ”திக் குவாங் டுக்” (Thích Quảng Đức).

photo%282%29.jpgசம்பவம் நடந்து ஆண்டுகள் பல கடந்துவிட்ட போதிலும் பார்ப்பவர்களின் நெஞ்சை இன்றளவும் உறைய வைத்துக் கொண்டிருக்கும் இந்தப் புகைப்படம், தெற்கு வியட்நாமில் தலைவிரித்தாடிய மதப்போரின் ஆவணம்.

’’உலக வரலாற்றிலேயே எந்த ஒரு பத்திரிக்கைப் புகைப்படமும் இந்த அளவிற்கு தாக்கத்தையும் உணர்ச்சியையும் ஏற்படுத்தியதில்லை’’ என்று அமெரிக்க முன்னால் அதிபர் ஜான் கென்னடியால் வர்னிக்கப்பட்ட இந்தப் புகைப்படம் போட்டோகிராபர் மால்கம் ப்ரவுனால் (Malcolm Browne) எடுக்கப்பட்டது.

1954-ல் ஜெனீவா மாநாடு மூலமாக தெற்கு வியட்நாமின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிப் பதவிக்கு வந்தவர் ”நெகோ தின் திம்” (Ngo Dinh Diem). கத்தோலிக்க கிறிஸ்துவரான இவர் தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர். இந்த ஒரு காரணம் போதாதா அமெரிக்காவிற்கு? உடனே களத்தில் இறங்கியது. அவர் வெற்றிக்கான மறைமுக உதவிகளை செய்து 'நெகோ தின் திம்'மை ஆட்சியில் அமர வைத்து வழக்கம்போல தனது நாரதர் வேலையை தொடங்கி வைத்தது சி.ஐ,ஏ.

வியட்நாமின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரான இவர், சுமார் தொன்னூறு விழுக்காடு புத்த மதத்தால் நிரம்பியிருந்த நாட்டை தன்னுடை சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். அமெரிக்கா பின்னனி கொடுத்த ஆனவத்தால் புத்த மதத்தினரின் மீது கடுமையான அடக்குமுறைகளை பிரயோகிக்கத் தொடங்கினார்.

மேலும், முக்கியத்துவம் வாய்ந்த அரசுப் பதவிகளில் தன்னுடைய கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நன்பர்களையே அமர வைத்தார். ராணுவம், போலீஸ் போன்ற பதவிகளிலும் இதே போக்கையேக் கடைபிடிக்கத் தொடங்கினார். கல்வி, வர்த்தகம் போன்றவற்றிலும் இவரது கொள்கைகள் அனைத்தும் கத்தோலிக்க மதத்தினைச் சார்ந்ததாகவே இருந்தது. விளைவு... பெரும்பான்மை சமூகமான புத்த மதத்தினருக்கும், சிறுபான்மை கிறிஸ்துவர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டதோடு, அரசுக்கும் புத்த மதத்தினருக்குமான இடைவெளியும் அதிகரிகத் தொடங்கியது.

இந்நிலையில், 1963 மே மாதம், கௌதம புத்தரின் பிறந்த நாளை முன்னிட்டு 'வேசாக்' (vesak) பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் புத்த பிட்சுகளும், புத்த மடங்களும் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் புத்த மதக் கொடிகளுக்கும் வழிபாடுகளுக்கும் தடை விதித்தது 'நெகோ தின் திம்'மின் அரசு. மேலும் நகரம் மற்றும் கிராமங்கள் தோறும் கத்தோலிக்க மதத்தின் கொடிகளை மட்டுமே பறக்கவிட ஆணை பிறப்பித்ததோடு அவர்களின் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.

இப்படியான செயல்கள்தான் மதக்கலவரம் உருவெடுக்கக் காரணமாகவும் அமைந்தது. இதனால் தங்களுக்கெதிரான அரசு ஆணைகளை எதிர்த்துப் போராட்டதில் குதித்தனர் புத்த மதத்தினர். தடைகளை மீறி புத்தமதக் கொடிகளை அனைத்து வீடுகளிலும் வெகுவாகப் பறக்கவிட்டு தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் செயலில் இறங்கினர் துறவிகள்.

8%281%29.jpg

இதனை தடுக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் எரிச்சலுற்ற அரசு அவர்களைக் கண்டதும் சுடுவதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது புத்தத் துறவிகள் இறந்ததோடு பதினான்கு பேர் படுகாயமடைந்தனர். இந்த செயலுக்கு பொறுப்பேற்று இருக்க வேண்டிய மத்திய அரசோ, கம்யூனிஸ்டுகள் மீதே குற்றம் சுமத்தியது. ஏற்கனவே கொதிப்பில் இருந்த பொதுமக்களையும் புத்தமதத் துறவிகளையும் அரசின் இந்தக் குற்றச்சாட்டு மேலும் கோபமூட்டியது.

இதனால், மே 10-ம் தேதி இந்தப் படுகொலைகளுக்கு எதிராகவும், மத சுதந்திரம், சம உரிமை போன்றவற்றை வலியுறுத்தியும் போராட்டத்தில் இறங்கினர். சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்தத் தொடர் போராட்டம் வலுவடைந்தததால் தினறியது தெற்கு வியட்நாம் அரசு. போராட்டத்தை கட்டுப்படுத்த செய்த அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போன நிலையில், ஜுன் 3-ம் தேதி ரசாயண குண்டுகளை வீசியது போலீஸ். இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 67 படுகாயமடைந்தனர். அரசின் ரசாயண குண்டுகளை எதிர்கொள்ள முடியாததால் போராட்டக்கார்கள் பின் வாங்கினார்கள்.

இந்நிலையில்தான், புத்த மதத்தினர் குறி வைத்துத் தாக்கப்படுவதையும், அவர்களின் மீதான அடக்குமுறைகளைக் கண்டித்தும் ஜூன் 11-ம் தேதி அன்று “திக் குவாங் டுக்” என்ற துறவி சயகான் (Saigon) என்னுமிடத்தில் தன்னைத் தானே எரித்து கொண்டார். இந்தக் கொடூரமான சம்பவத்தின் புகைப்படம் அனைத்து முன்னனிப் பத்திரிக்கைகளிலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு உலக நாடுகளின் பார்வையும் வியட்நாமை நோக்கித் திருப்பியது. பின்னர் 1963 நவம்பர் 2-ம் தேதி அன்று நடந்த ரானுவப் புரட்சியும் அதிபர் நெகோ தின் திம்மின் படுகொலையையும் தொடர்ந்தும் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இந்தப் புகைப்படத்தை எடுத்த மால்கம் ப்ரவுன் ஏப்ரல் 17, 1931-ல் பிறந்தார். அமெரிக்கரான இவர் அசோசியேட் பிரஸ் (AP) எனும் நிறுவனத்தில் பணியாற்றியவர். போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் ப்ரவுன் தெற்கு வியட்நாமில் இருந்த பூத்தத் துறவிகளை தனது புகைப்படங்கள் மூலம் ஆவனப்படுத்திக் கொண்டிருந்தார். இதன்மூலம் ப்ரவுனுக்கும் துறவிகளுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டிருந்தது. அப்படியான ஒரு தருனத்தில்தான் சில புத்தத் துறவிகள் ப்ரவுனிடம் தாங்கள் ஒரு நூதனமானப் போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகவும், அதனை உங்கள் புகைப்படத்தின் மூலம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.

இதைப்பற்றி போட்டோகிராபர் ப்ரவுன் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், “என்னிடம் தெரிவித்த இந்தத் தகவலை மற்ற உலக நாடுகளில் இருந்து வந்திருந்த அனைத்துப் புகைப்பட பத்திரிக்கையாளர்களுக்கும் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். ஆனால் மற்ற பத்திரிகையளர்கள் இப்படியான தகவல்களைப் பலமுறைக் கேட்டு சலிப்பில் இருந்ததால் அனைவரும் புறக்கணித்துவிட்டனர். ஆனால் என்னுடைய மனம் மட்டும் ஏதோ ஒரு பெரிய செயல் நடக்கப்போவதாக சொன்னது. சம்பவம் நடந்த அன்று காலையில் இருந்தே சயகான் பகுதி முழுவதும் ஒரே பரபரப்பாக இருந்தது. அன்றைய தினம் பெண் புத்தத் துறவிகளும் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். பிறகு நகரின் நடு வீதிக்கு வந்த துறவிகள் ஒரு பெரிய வட்டத்தை வரைந்தனர். சற்று நேரத்தில் அங்கே வந்த ஒரு காரில் இருந்து இரண்டு இளம் புத்தத் துறவிகளுடன் வந்து இறங்கிய ஒரு வயதான துறவி, வேறு எங்கும் பார்க்காமல் நேராக சென்று வீதியின் மையத்தில் வரையப்பட்டிருந்த வட்டத்திற்குள் அமர்ந்தார்.

பின் அந்த இளம் துறவிகள் பெட்ரோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனை காரில் இருந்து எடுத்து வந்து உடனடியாக வட்டத்தில் நடுவில் இருந்த துறவியின் மீது ஊற்றினர். உடனே அந்த வயதான துறவி தான் வைத்திருந்த தீப்பெட்டியை உரசி தனக்குத் தீ வைத்துக்கொள்ள, அசுர வேகத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. ஆனால் அந்த சமயத்திலும் கூட எந்த ஒரு அசைவையும், சத்தத்தையும் அவர் எழுப்பாமல் அமைதியாகவே தீயில் கருகினார். அவர் எப்போது இறந்தார் என்பதே யாருக்கும் தெரியவில்லை. உடல் முழுவதும் கருகிய நிலையில் கரிக்கட்டையாக அவர் கீழே சாய்ந்தார். பின்னர் அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தவுடன் மற்ற துறவிகள் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

இந்த துயரமான அதேசமயம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தினை பதிவு செய்து ஒரே போட்டோகிராபர் நான் மட்டுமே. மேலும் விலை மலிந்த, ஜப்பான் தயாரிப்பான பெட்ரி (Petri) என்ற கேமராவில்தான் இதைப் பதிவு செய்தேன். மொத்தம் பத்து ரோல்கள் பயன்படுத்தி 310 படங்களைப் பதிவு செய்தேன் என்றதுடன், இந்த சம்பவம் வேறு ஒரு சமூகத்தில் நடந்திருக்குமானால் அது பெரிய மதக் கலவரமாகவோ குண்டு வெடிப்பாகவோ மாறியிருக்கும்" என்று பதிவு செய்திருக்கிறார். ப்ரவுனின் இந்தப் புகைப்படத்திற்கு அதே வருடத்திற்கான புலிட்சர் பரிசும், வேர்ல்டு பிரஸ் போட்டோ உள்ளிட்ட பல உயரிய விருதுகளும் கிடைத்தது.

புகைப்படம் பேசும்...

http://www.vikatan.com/news/article.php?aid=55413

  • தொடங்கியவர்

மரணத் தொழிற்சாலை (உலகை உலுக்கிய புகைப்படங்கள் - 15)

 

World%20photos%20head15.jpg

ரண்டு கண்களும் பொங்கிய நிலையில் மண்ணில் புதைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழந்தையின் புகைப்படம் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்கிவிடும். மத்தியப் பிரதேசம் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு விபத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டியது இந்தப் புகைப்படம். மேலும் 'இது மிகப்பெரிய தொழில்துறைப் பேரழிவு' என்று ஒட்டு மொத்த உலகையும் அலற வைத்த இந்தப் புகைப்படம் போட்டோகிராபர் பப்லோ பர்த்தலமேயுவால் (Pablo Bartholomew) எடுக்கப்பட்டது.

Pablo%20Bartholomew1%281%29.jpg1979 கால கட்டங்களில் தொழில்துறைகளில் இந்தியாவில் வந்து முதலீடு செய்யுமாறு அயல்நாட்டுக் கம்பெனிகளை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்றது. இதன் அடிப்படையில் யூனியன் கார்பைடு (Union Carbide) என்ற நிறுவனம் செரின் (Serin) என்ற பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பதற்கான தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க ஒப்புக்கொண்டது. அதன்படி அதில் இந்திய அரசுக்கு 22% பங்குகள் என்று ஒப்பந்தமிடப்பட்டது. ஏற்றுமதி மற்றும் போக்குவரத்து வசதிகளுக்காக இந்தியாவின் இதயப்பகுதியான மத்தியப் பிரதேசத்தின் போபாலில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதற்காக நகரின் மையப்பகுதியில் சிறிய தொழிற்சாலைகளுக்காக அமைக்கப்பட்டிருந்த தொழிற்பேட்டையை தேர்ந்தெடுத்தனர். அபாயகரமான பொருட்களை உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்ட இடம் என்று தெரிந்தும் 'யூனியன் கார்பைடு இந்தியா லிமிடெட்' (Union Carbide India Limited (UCIL)) என்ற பெயரில் தொழிற்சாலையை உருவாக்க அனுமதி அளித்தது அரசு. அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் எந்த காலத்திலும் ஒரே நிலைப்பாடுதான். அது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் விசுவாசமாக இருப்பது மட்டுமே.

சுமார் 67 ஏக்கரில் பிரமாண்டமாக உருவானது தொழிற்சாலை. உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையும் அங்கேயே அமைக்கப்பட்டது. முக்கிய மூலப்பொருளான மெத்தில் ஐசோசைனேட் (methyl isocyanate) உற்பத்தி செய்யும் முறை மிகவும் அபாயகரமானது. ஆனால், எந்தவித சலமும் இன்றி 'பசுமைப் புரட்சி' என்ற கொள்கையோடு(!?) உற்பத்தியைத் தொடங்கி, கோடிக்கணக்கில் லாபங்களை ஈட்டியது. அதேசமயம்  இதன் ரசாயனக் கழிவுகள் போபாலின் நிலத்தடி நீரை சத்தமில்லாமல் பதம் பார்க்கும் வேலையை செய்யத் தொடங்கியது.

இந்நிலையில், 1984-ம் ஆண்டு வாக்கில் விவசாயம் படுதோல்வி அடைந்ததால் ஏற்பட்ட கடன் சுமையால் மக்கள் பூச்சுக் கொல்லி வாங்குவதை நிறுத்திக் கொண்டனர். விளைவு அதன் உற்பத்தி குறைந்தது. இதனால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்கத் தலைமை இந்தத் தொழிற்சாலையை விற்க முடிவெடுத்தது. ஆனால், அதை வாங்க யாரும் முன்வரவில்லை என்பதால் அங்கிருந்த இயந்திரங்களை அப்படியே வேறு நாட்டுக்கு எடுத்து சென்று அங்கு தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டது.

இந்தக் குழப்பங்களில் தொழிற்சாலையில் இருந்த பாதுகாப்பு உபகரணங்களை உபயோகப்படுத்தாமலும், அதனைப் பராமரிக்காமலும் கைவிட்டனர் தொழிற்சாலை நிர்வாகத்தினர். அபாயகரமான நச்சுத்தன்மையை வெளியேற்றக் கூடிய ஒரு தொழிற்சாலை நலிவடைந்து, அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எதையும் செய்யாமல் மௌனம் காத்து விட்டன மத்திய அரசும், மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும்.

1984 டிசம்பர் 3-ம் தேதி. தொழிற்சாலையின் '610' என்ற எண்ணைக் கொண்ட ஒரு தொட்டியில் மட்டும் பாதுகாப்பு அளவை விட அதிகமாக நாற்பது டன் மெத்தில் ஐசோசைனேட் வைக்கப்பட்டு இருந்தது. இதன் கொதிநிலை 31.1 டிகிரி என்பதால் எப்போதும் இதை குளிர்ந்த நிலையிலேயே வைத்திருக்க வேண்டும். நிறமும் மணமும் இதற்கு இல்லை என்பதால் கசிந்து காற்றில் கலந்தாலும் கண்டுபிடிப்பது கடினம். அபாயமான இந்த வாயுகள் வைக்கப்பட்டுள்ள தொட்டிகள் 11 டிகிரி வெப்பத்தைத் தாண்டினால் அபாய ஒலி எழுப்பப்பட வேண்டும். ஆனால், தொழிற்சாலையில் அன்று இந்த அளவு 11 டிகிரிக்கு பதிலாக 20 டிகிரிகளாக வைக்கப்பட்டிருந்தது. இதனால், அழுத்தம் தாங்காமல் மெத்தில் ஐசோசைனேட் கசிந்து காற்றில் கலந்து மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தது.

உழைத்த களைப்பில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போபால் மக்கள் திடீரென ஏற்பட்ட கண், தொண்டை எரிச்சல், கடுமையான இருமல் காரணமாகவும் எழுந்தனர். எதனால் இப்படி நடக்கிறது என்று அவர்கள் யோசிப்பதற்குள்ளாகவே மூச்சுத் திணறல் ஏற்பட்டு சுருண்டு விழுந்து இறந்தனர்.

ஏதோ விபரீதம் நடக்கின்றது என்று அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் இருந்து தங்கள் குழந்தைகளை துக்கிக் கொண்டு வீதிக்கு ஓடி வந்தவர்கள், வீதியெங்கும் கொத்துக் கொத்தாக இறந்து விழுபவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். அய்யோ என்று அலறுவதற்குள் அவர்களும் சுருண்டு விழ, அடுத்தடுத்த நிமிடங்களில் போபால் நகரத்தின் வீதிகள் முழுவதும் மனிதப் பிணங்களால் நிரம்பியது. இவர்களுடன் ஆடு, மாடுகள் போன்றவைகளும் இறந்து வீழ்ந்தன. விடிவதற்குள் ஒட்டுமொத்த போபால் நகரமுமே சுடுகாடாக மாறிவிட்டிருந்தது.

சம்பவம் நடந்த உடனேயே ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 3,800 பேர் உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே தொழிற்சாலையை ஒட்டிய குடிசைப் பகுதி மக்கள். அனைவரும் அலறியடித்துக் கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடினர். என்ன நடந்தது என்று யூகிக்க முடியாததால், உடனே எந்த வகையில் மருத்துவம் செய்வது என்று தெரியாமல் திணறினர் மருத்துவர்கள். இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரித்தது. இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த தினங்களில் எட்டாயிரத்தைத் தாண்டியது. சுமார் ஐந்து லட்சம் மக்கள் கண் பார்வை இழப்பு, சிறுநீரகம் போன்ற பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். 

இந்த விபத்திற்குப் பிறகு உலக அளவில் தொழில்துறை பேரழிவின் முகமாக மாறியது போபால். 1997-ம் ஆண்டு மொத்தம் 15,342 பேர் இறந்ததாக மத்தியப் பிரதேச அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், இருபத்தி ஐந்தாயிரத்தைத் தாண்டும் என்கின்றன சமூக அமைப்புகள்.

''நீங்கள் அழைத்ததால்தான் வந்தோம். தொழிலும் நலிவடைந்துவிட்டது. நாங்கள் என்ன செய்வது?” என்ற இறுமாப்புடன் இந்தக் கொடூர விபத்திற்குப் பொறுப்பேற்காமல் அமைதியாக இருந்தது யூனியன் கார்படு நிறுவனம். மேலும், அப்போது பஞ்சாபில் தீவிரமாக இருந்த காலிஸ்தான் போராட்டக் குழுவினர்தான் இதற்குக் காரணம் என்று திசை திருப்பப் பார்த்தது தொழிற்சாலை நிர்வாகமும், அரசும்.

இந்த விபத்து நடந்த உடனே யூனியன் கார்பைடின் தலைவரான வாரன் ஆண்டர்சன்  (Warren Anderson) கைது செய்யபட்டார். ஆனால், அடுத்த ஐந்தே நாட்களில் டிசம்பர் 7-ம் தேதி ஜாமீனில் விடுக்கப்பட்டார். வெளியில் வந்தவுடன் அரசின் ராஜ மரியாதை உதவியுடனும் அமெரிக்காவிற்குத் தப்பிச் சென்றார். பலமுறை இந்திய நீதிமன்றங்கள் இவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்த போதிலும் இவரை இந்தியா அழைத்து வர முடியவில்லை. போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லி ஆண்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டது அமெரிக்கா. இறுதிவரை பிடிபடாமலே 90 வயதில் இறந்தும் போனார் அவர். ஆனால், அவருடன் கைது செய்யப்பட்ட எட்டு மேல் மட்ட அதிகாரிகளையும் 26 வருடங்களுக்குப் பிறகு 2010-ம் ஆண்டு குற்றவாளிகள் என்று அறிவித்து வரலாற்று சிறப்புமிக்க (?!) தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம். அனைவருக்கும் இரண்டு வருட தண்டனை என்பதுதான் அது.

Pablo%20Bartholomew.jpgஇந்திய உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடாக 470 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. ஆனால், யூனியன் கார்பைடு நிறுவனம் இதை ஏற்க மறுத்ததுடன் அறிவியல் ஆய்வுகளையும் திருட்டுத்தனமாக மாற்றி அமைத்தது. மேலும், இன்றைய தேதி வரை எவ்வளவு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று உலகத்திற்கு வெளிப்படையாகத் தெரியப்படுத்தவும் இல்லை. விபத்து நடந்து 31 ஆண்டுகள் ஓடிவிட்ட போதிலும் இன்னும் அம்மக்கள் புற்றுநோய் உட்பட பல கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இன்னும் அந்தத் தொழிற்சாலையில் 350 டன் நச்சுக் கழிவுப் பொருட்கள் அகற்றப்படாமல்தான் இருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம்.

போட்டோகிராபர் பப்லோ பர்த்தலமேயு 1955-ம் ஆண்டு டெல்லியில் பிறந்தவர். இந்த விபத்து நிகழும்போது பப்லோ காமா (Gamma) என்ற பிரெஞ்சு புகைப்பட நிறுவனத்தில் பணியாற்றினார். அதனால் சம்பவம் நடந்த உடனேயே அதை பதிவு செய்ய டெல்லியில் இருந்து விமானம் மூலம் இவரும், போட்டோகிராபர் ரகுராயும் போபாலுக்கு சென்றனர்.

காற்றில் விஷ வாயு கலந்திருக்கிறது என்ற போதிலும் பப்லோ பிணங்கள் செல்லும் பாதையில்லேயே சென்று அவைகளைப் பதிவு செய்தார். அப்போது இந்தக் குழந்தையின் சடலத்தைப் புதைப்பதை பாப்லோ கலர் ஃபிலிமிலும், ரகுராய் கருப்பு வெள்ளை ஃபிலிமிலும் புகைப்படம் எடுக்கிறார்கள். இந்தப் புகைப்படத்தை எடுக்கும்போது துயரம் தாங்காமல் தாங்கள் இருவருமே அழுது விட்டதாக பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இருவருமே ஒரே நேரத்தில் எடுத்திருந்தாலும், போபாலில் நடந்தக் கொடூரத்தை பப்லோவின் புகைப்படம் மட்டுமே அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது என்ற காரணத்தினால் வேர்ல்டு பிரஸ் போட்டோ விருதினைப் பெற்றது. இவர்கள் இருவரில் இந்தப் புகைப்படதை எடுத்தது யார் என்ற விவாதம் இன்றளவும் உலக அளவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு முறை வேர்ல்டு பிரஸ் போட்டோ விருதும், இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வாங்கிய இரண்டாவது போட்டோகிராபர் என்ற பெருமை பப்லோவிற்கு உண்டு.

புகைப்படம் பேசும்...

http://www.vikatan.com/news/coverstory/55767-world-rocked-photos-15.art

  • 6 months later...
  • தொடங்கியவர்

உலகை உலுக்கும் புகைப்படம்: மத்திய தரைக்கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட அகதி குழந்தை

 
 
மத்திய தரைக்கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை | படம்: ராய்ட்டர்ஸ்
மத்திய தரைக்கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை | படம்: ராய்ட்டர்ஸ்

மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தை யின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தி வருகிறது.

உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா, இராக், ஆப் கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தலால் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கதவை அடைத்துவிட்டன.

கிரீஸ் நாடுகளில் உள்ள அகதி கள் முகாமில் தங்கியுள்ளவர்கள் துருக்கிக்கும் அவரவர் சொந்த நாடுகளுக்கும் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர். எனினும் ஏதா வது ஒரு வகையில் தங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னமும் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிபியாவில் இருந்து அகதிகளுடன் ஐரோப்பாவுக்கு புறப்பட்ட 3 கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் மூழ்கின. இதில் 700 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நேற்று ஒரு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மீட்புப் படை வீரர், கடலில் சடலமாக மிதந்த குழந்தையை மீட்டார்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற குழந்தையின் புகைப் படம் சமூக வலைத்தளங் களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் அகதி களுக்கு மீண்டும் கதவைத் திறக்க வேண்டும், அதற்கான ஏற்பாடு களை ஐ.நா. சபை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள் ளோம் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

குழந்தையின் உடலை மீட்ட ஜெர்மனி மீட்புப் படை வீரர் 3 குழந்தைகளுக்கு தந்தை. அவர் கூறியபோது, குழந்தை இறந்ததாக தெரியவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல இருந்தது. அந்த பிஞ்சு உடலை எனது கரத்தில் ஏந்தியபோது என்னையறியாமல் அழுதுவிட்டேன். அகதிகள் பிரச்சினைக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 8000 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

http://tamil.thehindu.com/world/உலகை-உலுக்கும்-புகைப்படம்-மத்திய-தரைக்கடலில்-இருந்து-சடலமாக-மீட்கப்பட்ட-அகதி-குழந்தை/article8670978.ece?homepage=true&relartwiz=true

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தை யின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தி வருகிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா, இராக், ஆப் கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தலால் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கதவை அடைத்துவிட்டன. கிரீஸ் நாடுகளில் உள்ள அகதி கள் முகாமில் தங்கியுள்ளவர்கள் துருக்கிக்கும் அவரவர் சொந்த நாடுகளுக்கும் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர். எனினும் ஏதா வது ஒரு வகையில் தங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னமும் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

மத்திய தரைக்கடலில் இருந்து சடல மாக மீட்கப்பட்ட அகதி குழந்தை யின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தி வருகிறது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப் பட்டுள்ள சிரியா, இராக், ஆப் கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பாவுக்கு ஆயிரக்கணக்கான அகதிகள் புகலிடம் தேடி செல்கின்றனர். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தலால் அகதிகளுக்கு ஐரோப்பிய நாடுகள் கதவை அடைத்துவிட்டன. கிரீஸ் நாடுகளில் உள்ள அகதி கள் முகாமில் தங்கியுள்ளவர்கள் துருக்கிக்கும் அவரவர் சொந்த நாடுகளுக்கும் திருப்பி அனுப்பப் பட்டு வருகின்றனர். எனினும் ஏதா வது ஒரு வகையில் தங்களுக்கு அடைக்கலம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அகதிகள் இன்னமும் கடல் மார்க்கமாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர்.

   

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் லிபியாவில் இருந்து அகதிகளுடன் ஐரோப்பாவுக்கு புறப்பட்ட 3 கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் மூழ்கின. இதில் 700 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அகதிகளை மீட்கும் பணியில் ஈடுபட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நேற்று ஒரு குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த மீட்புப் படை வீரர், கடலில் சடலமாக மிதந்த குழந்தையை மீட்டார். ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போன்ற குழந்தையின் புகைப் படம் சமூக வலைத்தளங் களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் அகதி களுக்கு மீண்டும் கதவைத் திறக்க வேண்டும், அதற்கான ஏற்பாடு களை ஐ.நா. சபை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள் ளோம் என்று தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தையின் உடலை மீட்ட ஜெர்மனி மீட்புப் படை வீரர் 3 குழந்தைகளுக்கு தந்தை. அவர் கூறியபோது, குழந்தை இறந்ததாக தெரியவில்லை. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல இருந்தது. அந்த பிஞ்சு உடலை எனது கரத்தில் ஏந்தியபோது என்னையறியாமல் அழுதுவிட்டேன். அகதிகள் பிரச்சினைக்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 8000 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=158578&category=WorldNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.