Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நூலகம்: இதுவும் ஒரு சுற்றுலா மையம்! – ஜெரா

Featured Replies

யாழ் நூலகம்: இதுவும் ஒரு சுற்றுலா மையம்! - ஜெரா

அறிவுசார் சமூகமொன்று தேடிக் கொண்ட கூட்டு தேட்டமாக நூலகங்கள் விளங்குகின்றன. யாழ்ப்பாண சமூகத்தினதும், அறிவுசார் பண்பாட்டு விருத்தியினதும் கூட்டு அடையாளமாக விளங்கவதே யாழ். பொது நூலகம் ஆகும். தமிழர்களின் தனித்துவ அடையாளமாக இது விளங்கியதால் காலத்துக்கு காலம் அரசியல் நீரோட்டங்களுக்குள் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களும், தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே இருந்திருக்கின்றன.

எதற்காக இந்நூலகம்?

1981 ஆம் ஆண்டு அவ்வாறானதொரு துயர சம்பவத்தை யாழ்.நூலகம் சந்தித்ததோடு அது முற்றாக அழிந்தும்போனது. தமிழரின் அறிவுசார் தேட்டத்தின் மீது சிங்கள அரசியல்வாதிகள் திட்டமிட்டு மேற்கொண்ட பண்பாட்டுப் படுகொலையாக வரலாறு இன்றும் அந்த சம்பவத்தை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றது. அந்த அறிவுப் பெட்டகப் படுகொலை நிகழ்ந்து 37 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது எப்படியிருக்கின்றது? புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள யாழ். நூலக வளாகத்துக்குள் வந்துசெல்பவர்களின் நோக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் எப்படியானது?

அரசியல் கலப்பில் பிறந்த நூலகம்

2007 ஆம் ஆண்டு பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் யாழ். பொது நூலகத்தின் மீள் பிரசவம் நடந்தது. ஆனாலும் சுதந்திரமான நூலக உள்நுழைவுக்கு தொடர்ந்தும் தடைகள் இருந்து வந்தன. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட வலயத்துக்குள் புதிய நூலகம் நூல் மீட்பர்களுக்காக காத்துக்கிடந்தது. போரோய்வுடன் சிறிதுசிறிதாக அதற்கு சுதந்திரம் கிடைக்க முக்கிய அரசியல் சந்திப்புக்களின் மையமாக அது மாறியது. இந்தியக் குழுவினரும், சீனக் குழுவினரும் யாழ். பிரதிநிதகளை சந்தித்துக் கைகுலுக்கிக் கொள்ளும் இடமாக அந்தப் புத்தகத் தளம் மாற்றம ;பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்த நூலகத்தின் மொட்டைமாடியில் ஏறிநின்றுதான் வல்லரசை வளைத்துப் போட்டனர் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். இவ்வாறு அரசியல்வாதிகள், அரசியல் பின்னணியுடையோர் தமது அரசியல் தேவைகளுக்காக நூலகத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் தமிழர்களின் அரசியல் குறித்த தனியாரினதோ, அமைப்பு சார்ந்தவர்களினதோ நிகழ்வுகளுக்கு யாழ். நூலகத்தின் கதவுகள் திறக்கப்படுவதில்லை.

அதுவும் சுற்றுலாச் சந்தை

2009 ஆம் ஆண்டு போர் முடிந்த கையோடு, இலங்கையின் வடபாகத்தை மையப்படுத்திய போர்ச் சுற்றுலா என்ற வணிகம் களைகட்டத் தொடங்கியது. தெற்கிலிருந்து படையெடுக்கும் சிங்கள மக்கள் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நடந்த போரின் தடயங்களைப் பார்வையிடுவதில் ஆர்வம் காட்டினர். அந்த வரவிலேயே தாமே எரித்து, தாமே மீளவும் கட்டிக்கொடுத்த யாழ். நூலகத்தையும் பெருமையுடன் தொட்டுத் தடவிப் பார்க்க விரும்பினர். நாள் தோறும் பெருந்திரளான சிங்கள சுற்றுலாவிகள் யாழ்.நூலகத்தில் இந்த அனுபவத்தைப் பெறுவதற்காகவே வந்து செல்கின்றனர். நூலகத்துக்குள் அவர்கள் பெரும் ஆச்சரியத்துடனேயே உலவுகின்றனர். கிசுகிசுத்தபடி நூலக அறைகளை எட்டிப்பார்க்கும் ஒவ்வொரு பெரும்பான்மையினத்தவரின் கண்களிலும் பெரு மிரட்சி படர்ந்திருப்பதை நீங்கள் இப்போதும் அவதானிக்கலாம்.

இப்போதும் கலாசார சின்னமே அது

ஆனால் வெளிநாடுகளிலிருந்து வரும் பிற இனத்தவர்கள் யாழ்.நூலகத்தை நோக்குவதோ வேறுவிதமானது. தமிழர்களின் பண்பாடு, அரசியல் குறித்த தேடல் தளமாகவே இந்த நூலகத்தை அவர்கள் பார்க்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் இதுவொரு கலாசார சின்னம். மீண்டும், மீண்டும் அழிக்கப்பட்ட தமிழர்களின் அறிவுசார் அடையாளத்தின் எச்சசொச்சம் என்ற மனப்பதிவை பெற்றுச் செல்கின்றனர். தென்னாசிய சமூகங்களின் ஆய்வு சார்ந்த விடயப்பொருட்களுக்கான ஆதார ஊக்கியாக இப்போதும் யாழ்.நூலககத்தை நம்பிவரும் வெளிநாட்டவர்களும் இருக்கின்றனர்.

நுனிப்புல் மேயும் மையம்

இந்த நூலகத்தை நோக்கி படையெடுக்கும் உள்ளகவாசிகளின் நோக்கங்களோ விநோதமானதாக மாறிவருகின்றது. பத்திரிகை படிப்பவர்கள் மட்டுமே தமது நோக்கத்தில் கருத்துடையவர்களாய் இருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும், ஆய்வு மாணவர்களும் குறிப்பெடுப்பதற்காகவும், அவற்றை நிழல் பிரதி செய்து எடுத்துச் செல்வதற்காகவுமே அநேக வேளைகளில் வருகின்றனர். நமது கல்விப் பாரம்பரியத்தில் வீழ்ந்திருக்கும் பெரும் ஓட்டையும், கற்பித்தல் நடைமுறைகளில் ஏற்பட்டிருக்கின்ற இலகுத்தனங்களும் இதுபோன்ற தேடல் அற்ற, வாசிப்பை தேவையற்றதாக்கிய மாணவச் சூழல் உருவாக்கத்திற்கு காரணமாகியிருக்கின்றது. அந்த மாணவர்கள் புத்தகங்களை வாசிப்பதற்காக தேடுவதiவிட, நிழல் பிரதி எடுப்பதற்காக தேடுவதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றனர்.

எப்போதாவது ஒரு தடவை, நீண்ட ஆய்வு நோக்கோடும், வாசிப்பின் மீதான வெறியுடனும் நாள்கணக்கில் நூலக மூலையில் அமர்ந்திருக்கும் மனிதர்களைக் காணக்கிடைக்கின்றது.

வசதி வாய்ப்புகள்

முன்னரைவிட இப்போதிருக்கின்ற நூலகமானது அதிக வசதிகளைப் பெற்றுள்ளது. கணினி துறைசார்ந்த பயிற்சிகளும், விளையாட்டுக்களும், சிறார்களை மையப்படுத்திய கதை சொல்லும் நேரம் போன்ற வாராந்த நிகழ்வுகளும், இணைய வசதிகளும் இப்போது புதிதாய் கிடைத்திருக்கின்ற வசதிகள். ஆனால் பண்டைக்கால நூல்களும், தமிழரின் வரலாற்று எச்சங்களான ஓலைச்சுவடிகளும் இல்லாமலே போனமை மிகப்பெரும் இழப்பாகும். ஆயிரம் வசதி வாய்ப்புக்கள் இந்த நூலகத்தை அலங்கரித்தாலும் அவற்றுக் இணையாக எதுவும் வராது என்ற உண்மையை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

புதிய வரவாக அதிகளவு சிங்கள நூல்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரையில் பெரியளவிலான வாசிப்புத் தளத்தை நிரப்பியிருப்பவர்கள் தமிழர்கள்தான். சிங்களவர்கள் இல்லை. இப்போது கற்றல் நோக்கோடு தெற்கிலிருந்து மாணவர்கள் யாழ்ப்பாணத்தக்கு வந்திருந்தாலும், அவர்கள் யாழ்.நூலகத்தைப் பயன்படுத்துவது மிக அரிதான ஒன்று. எனவே அதிகளவில் சிங்கள நூல்களை இங்கு குவிப்பதன் பின்னாலும் அரசியல் இருக்கின்றது என்ற முணுமுணுப்புக்களும் வாசகர்கள் மத்தியில் உண்டு.

ஜெரா

http://thuliyam.com/?p=28764

  • கருத்துக்கள உறவுகள்

புதிய வரவாக அதிகளவு சிங்கள நூல்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தைப் பொருத்தவரையில் பெரியளவிலான வாசிப்புத் தளத்தை நிரப்பியிருப்பவர்கள் தமிழர்கள்தான். சிங்களவர்கள் இல்லை. இப்போது கற்றல் நோக்கோடு தெற்கிலிருந்து மாணவர்கள் யாழ்ப்பாணத்தக்கு வந்திருந்தாலும், அவர்கள் யாழ்.நூலகத்தைப் பயன்படுத்துவது மிக அரிதான ஒன்று. எனவே அதிகளவில் சிங்கள நூல்களை இங்கு குவிப்பதன் பின்னாலும் அரசியல் இருக்கின்றது என்ற முணுமுணுப்புக்களும் வாசகர்கள் மத்தியில் உண்டு. 

அதுவும் நூல‌கத்தை பாதுகாக்க அரசால் எடுத்த ஒரு ந‌ல்ல நட‌வடிக்கை.....சிங்கள புத்தகத்தை கண்டவுடன் ஆயுதப்படையினர் நூலகத்தை தீயிடமாட்டார்கள் .......சும்மா எல்லாத்துக்கும் நொட்டை சொல்லாமல் அரசின் இந்த செயலை பாரட்ட பழக‌வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

 

அதுவும் நூல‌கத்தை பாதுகாக்க அரசால் எடுத்த ஒரு ந‌ல்ல நட‌வடிக்கை.....சிங்கள புத்தகத்தை கண்டவுடன் ஆயுதப்படையினர் நூலகத்தை தீயிடமாட்டார்கள் .......சும்மா எல்லாத்துக்கும் நொட்டை சொல்லாமல் அரசின் இந்த செயலை பாரட்ட பழக‌வேண்டும்...

ஆமாம் புத்தரே!  சரசுவதி சிலை போய் அங்கு உங்கள் சிலை தோற்றுவிக்கப் பட்டாலும் நான் நொட்டை சொல்வதில்லை என்று சபதம் எடுத்துள்ளேன். இனி யாழ் நூலகம் சிங்கக்கொடிகளால் அலங்கரிக்கப்படும். முதற்கொடியை யார் தூக்கிக் கொடுப்பது என்ற போட்டிக்கும் அங்கு இடமில்லை. :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.