Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மானுடமே வென்றது... மழையும் மக்களும் - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

Featured Replies

மீண்டும் மானுடமே வென்றது... மழையும் மக்களும் - இலங்கையிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

குறிப்பு: இது மொழிப்பெயர்ப்பு கட்டுரையோ அல்லது இணையத்தில் மேய்ந்து திரட்டிய தகவல்களை கொண்டு கோர்த்த கட்டுரையோ அல்ல. மூன்று நாட்கள் இலங்கையின் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, மக்களிடம் உரையாடிய பின்னரே இதை எழுதுகிறேன்....

001.jpg



ழை எப்போதும் மண்ணை மட்டும் நனைப்பதில்லை; அது மனித மனங்களையும் நனைக்கிறது. செடிகள் துளிர்க்க மட்டுமே மழை காரணமாக இருப்பதில்லை, அது மானுடம் துளிர்க்கவும் காரணமாக இருக்கிறது. சென்னை பெருமழை மக்களை இணைத்ததை, வேற்றுமைகளை களைத்ததை நாமறிவோம். மீண்டும் ஒரு பெருமழை மக்களை இணைத்திருக்கிறது, அன்பு துளிர்க்க செய்திருக்கிறது, கரத்தை இறுகப் பற்ற செய்திருக்கிறது. துப்பாக்கிகளை மழை துருப்பிடிக்க செய்திருக்கிறது. ஆம். அண்மையில் இலங்கையில் பெய்த பெரு மழை அனைத்து அரசியலையும், இசங்களையும் தாண்டி மக்களை இணைத்திருக்கிறது.

ராம், அபு மற்றும் அனுரா :

SLRain001.jpg



கொழும்பிற்கு  அருகில் இருக்கும் பகுதி அவிசாவளை. தமிழர்களும், சிங்களர்களும், இஸ்லாமியர்களும் அடர்த்தியாக வாழும் பகுதி அது.  சென்ற மாதம் மே 15 ம்  தேதி மட்டும் அந்தப் பகுதியில் 100 மிமீ மழை பதிவாகி இருக்கிறது. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்து, அவர்கள் சிறுக சிறுக சேர்த்த அனைத்து பொருட்களையும் அடித்து சென்று விட்டது. நாம் அந்தப் பகுதிக்கு சென்றபோது மக்கள் மிச்சம் இருக்கும் பொருட்களை வெளியே குவித்து வைத்து, வெயிலுக்காக காத்து இருந்தனர்.

அந்தப் பகுதியை சேர்ந்த அபுவுடன் உரையாடிய போது, “சிறுதூறல், பெரு மழையாகவெல்லாம் மாறவில்லை. பெரு மழையாகதான் ஆரம்பித்தது. மழை எங்களுக்கு புதிதில்லை என்றாலும்,  அன்று நாங்கள் சந்தித்த மழை உண்மையில் ஊடகம் சொல்வது போல் வரலாறு காணாத மழைதான். முதல் தரை தளத்தில் புகுந்த தண்ணீர், சிறுக சிறுக முதல் தளம் வரை வந்தது. நாங்கள் அனைவரும் கூரை மீது ஏறி அரசு உதவிக்காக காத்திருந்தோம். வழக்கம் போல் அரசிடமிருந்து யாரும் வரவில்லை. ஆனால், இரண்டு படகுகளில் தமிழ் மக்களும், சிங்களர்களும் வந்து எங்களை மீட்டனர். எங்களுக்கு தெரியும் நிச்சயம் அவர்கள் வருவார்கள் என்று...” என்று அவர் சொல்லி முடித்தபோது, அவர் கண்ணீர் சிந்தி இருந்தார்.

005.jpg



ஆம். அவர் மட்டும் அல்ல அந்தப் பகுதியில் நாங்கள் உரையாடிய ஒவ்வொருவரும் சொல்வது இதுதான். வழக்கமான அரசு, நத்தை வேகத்தில் செயல்பட்டு கொண்டிருந்தபோது,  இன, மத வேற்றுமைகளைக் கடந்து, மீட்பு பணியை மக்கள்தான் முன்னெடுத்து இருக்கிறார்கள். தண்ணீர் பாட்டில்கள், மருத்துவ பொருட்கள், ஆடைகள், உணவுப் பொட்டலங்கள் என அனைத்தும் வந்த வண்ணம் இருக்கின்றன.   அரசு, “போதும்... போதும்... அனைத்தும் மிகுதியாக இருக்கின்றன... உதவிப் பொருட்கள் அனுப்புவதை நிறுத்துங்கள்...” என்று கதறுகிறது. ஆனால், மக்கள்தான் கேட்பதாக இல்லை.

அந்தப் பகுதி மக்களின் அனைத்து பொருட்களையும் மழை சேதப்படுத்திவிட்டது. இப்போது அவர்களிடம் மிச்சமாக இருப்பது சக மனிதர்கள் மீதான நம்பிக்கை மட்டும்தான்.

006.jpg



ரமலான் மாதம் வரப்போகிறது. இந்த துயரத்தில் அவர்கள் எப்படி நோன்பு நோற்பார்கள் என  அபுவிடம்  கேட்ட போது, “எங்களுக்கு என்ன கவலை...  எம்மக்கள் எங்களை பார்த்துக் கொள்வார்கள்.” என்றார். அவர் எம்மக்கள் என்று குறிப்பிட்டது சக இஸ்லாமியர்களை அல்ல; சிங்களர்களை, தமிழர்களை... ஆம். அவரின் நம்பிக்கை பொய்க்கவில்லை. ராம் கணேஷ் என்னும் தமிழ வணிகர் ஐம்பதாயிரம் ரூபாயை நன்கொடையாக அப்பகுதி மக்களுக்கு கொடுத்து இருக்கிறார். அனுரா என்னும் சிங்களர், தினமும் அப்பகுதியை பார்வையிட்டு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

ஆட்டோ ஓட்டுநர் ஜெயராஜின் கருணை:

Rain009.jpg

 

உதவிக்கு பணம் எப்போதும் தடையாக இருப்பதில்லை, மனம்தான் தடையாக இருக்கிறது. ஆட்டோ ஓட்டுநர் ஜெயராஜ், கொழும்பில் வசிப்பவர், சென்ற ராஜபக்சே ஆட்சியில் தன் காணியை இழந்தவர். தன் காணியை மீட்டு தரச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பவர். ஆனால், இந்த அழுத்தங்கள் எதுவும் அவரை பிறர் துயர் துடைப்பதிலிருந்து தடுக்கவில்லை. மழை பெய்த முதல் வாரத்தில், உணவிற்காக கஷ்டப்பட்டவர்கள் பகுதிக்கு குடும்பத்துடன் சென்று, அங்கேயே தங்கி உணவு சமைத்து கொடுத்துள்ளார்.

அவர், “எம்மக்கள் யாரும் சோம்பேறிகள் அல்ல. கடும் உழைப்பாளிகள். பிறரிடம் எக்காலமும் கையேந்தாதவர்கள். பல துயரங்களிலிருந்து மீண்டு வந்து இருக்கிறார்கள். நிச்சயம், இதிலிருந்தும் மீண்டு வருவார்கள்.” என்கிறார். 

Rain005.jpg


132 பேரை காணவில்லை:

மழையின் காரணாமாக பல இலட்சம் பேர் அந்த தீவு நாட்டில் இடம்பெயர்ந்து இருந்தாலும், மழையால் அதிகம் பாதிக்கப்பட்டது அரனாயக பகுதிதான். அங்கு ஏற்பட்ட மண் சரிவில் பல வீடுகள் மண்ணிற்குள் புதைந்துவிட்டன. 48 பேர் இறந்து இருக்கிறார்கள். இன்னும் 132 பேரை அந்தப் பகுதியில் மட்டும் காணவில்லை. நாம் அந்தப் பகுதியை பார்வையிட்ட போது ராணுவத்துடன் இணைந்து, மக்களும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். வீடு இழந்த மக்கள் அனைவரும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளிகளிலும், கலாச்சார மையங்களிலும் தங்கவைக்கப்பட்டு இருந்தனர்.

sri600.jpg



அரனாயக பிரதேச செயலக அதிகாரிகளிடம் உரையாடிய போது, “மண் சரிவால், இந்தப் பகுதிகளில் மட்டும் 108 வீடுகள்  முழுவதுமாக சேதமடைந்துவிட்டன. இதில் துயரம் என்னவென்றால்,  மேலும் 5 இடங்களில் மண் சரிவு ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. அதனால் அந்தப் பகுதிகளில் வசித்த 64 வீடுகளிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.” என்றார்.

அவர் மேலும், “மக்கள் மலை மலையாக உதவி பொருட்களை அனுப்பி வருகின்றனர். உண்மையில் அதை பாதுகாப்பாக வைக்கதான் தடுமாறி வருகிறோம். அரனாயக பிரதேச செயலகம் முழுவதும் உதவி பொருட்களால் நிரம்பி விட்டது. வேண்டாமென்றாலும் மக்கள் நிறுத்துவதாக இல்லை. மக்களின் இந்த அன்பு, இப்பகுதி மக்களுக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.”

ஆம். எப்போதும் சக மனிதன் மீதான அன்பும், கருணையும் மட்டும்தான் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

http://www.vikatan.com/news/coverstory/64752-hope-never-fades-sri-lanka-rain-love-and-grace.art

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே இருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லாமல்,ஒற்றுமையாக,நிம்மதியாய் வாழ வேண்டும் என நினைக்கிறார்கள்.அரசியல்வாதிகளும் இங்கே இருப்ப்வர்களும் தான் சும்மா தேவையில்லாமல் குத்தி முறிகிறார்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.