Jump to content

கிராமத்து மீன் குழம்பு


Recommended Posts

பதியப்பட்டது

கிராமத்து மீன் குழம்பு

 

கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள்.

varutharacha meen kuzhambu

தேவையான பொருட்கள்:

மீன் - 1/2 கிலோ

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

 

கிரேவிக்கு...

வெங்காயம் - 1 (நறுக்கியது)

தக்காளி - 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)

மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

புளிச்சாறு - 2 டேபின் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

 

அரைப்பதற்கு...

தேங்காய் - 1/4 கப்

கறிவேப்பிலை - 1 கையளவு

இஞ்சி - 2 இன்ச்

பச்சை மிளகாய் - 2

 

தாளிப்பதற்கு...

எண்ணெய்- 4 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கையளவு

பூண்டு - 6 பற்கள்

மிளகு - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, ஒரு பௌலில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு மண்சட்டியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், தாளிப்பதற்கு கொடுதுள்ள பொருட்களைச் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, உப்பு மற்றும் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து பிரட்டி 1 நிமிடம் வதக்கவும்.

பின் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குறைவான தீயில் குழம்பை கொதிக்க விட வேண்டும். இறுதியில் மீன் துண்டுகளை சேர்த்து, 5-6 நிமிடம் மீனை வேக வைக்கவும்.

அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் புளிச்சாறு சேர்த்து, பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், கிராமத்து மீன் குழம்பு ரெடி!!!

Read more at: http://tamil.boldsky.com/recipes/non-veg/village-style-meen-kuzhambu-recipe-011476.html

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல கலர்புல்லாய் இருக்கு...., மண்சட்டிதான்  சுமே அன்ரிட்ட இரவல் வாங்கிட்டாப் போச்சு. அவவையும் கனநாளாய்க் காணேல்லை....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

நல்ல கலர்புல்லாய் இருக்கு...., மண்சட்டிதான்  சுமே அன்ரிட்ட இரவல் வாங்கிட்டாப் போச்சு. அவவையும் கனநாளாய்க் காணேல்லை....!  tw_blush:

நேற்று தான் திண்ணையில நிண்டாவே.... UK பிரிய வேண்டும் என்று தீர்மானித்தாலும், தன்னை ஜெர்மனிக்கு அனுப்பேலாது கண்டியளே என்று பயந்து கொண்டிருந்த எங்களுக்கு ஆறுதலா சொல்லிட்டா. அப்பாடி, இப்பதான் நிம்மதி....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

நல்ல கலர்புல்லாய் இருக்கு...., மண்சட்டிதான்  சுமே அன்ரிட்ட இரவல் வாங்கிட்டாப் போச்சு. அவவையும் கனநாளாய்க் காணேல்லை....!  tw_blush:

யோவ் அக்கா என்ன  சட்டி பானை கடையோ வைத்து இருக்கா லண்டனில ??

மண் சட்டியில் கறி சமைத்தால் ஒரு சில மணித்தியாலங்கள் திறக்காமல் அப்படியே வைத்து (மீனில் போடப்பட்ட எல்லா மசாலாக்களும் சேரும்    )பின்  உண்டால் இன்னும் ருசிகரமாக இருக்கும் 

எங்கள் ஆஷ்ரமத்தில் இருப்பது எல்லாம் குண்டான் மண் சட்டிகள் தான்  அகப்பைகள் சிரட்டை அகப்பை மட்டுமே பயன்படுத்தி உண்டு திண்டு மகிழ்கிறோம் நாள் தோறும்  ???

Posted
1 hour ago, முனிவர் ஜீ said:

எங்கள் ஆஷ்ரமத்தில் இருப்பது எல்லாம் குண்டான் மண் சட்டிகள் தான்  அகப்பைகள் சிரட்டை அகப்பை மட்டுமே பயன்படுத்தி உண்டு திண்டு மகிழ்கிறோம் நாள் தோறும்  ???

எந்த ஆச்சிரமம் முனிவர் ஜீ... :grin:றக்கா ரோட்டா..

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நவீனன் said:

எந்த ஆச்சிரமம் முனிவர் ஜீ... :grin:றக்கா ரோட்டா..

ஹாஹா தம்பி இந்த பக்கமும் வந்திடாதே  துபாய்  பக்கம் தான் றிக்கா ரோடு துபாய் குறுக்கு சந்து டெய்ரா துபாய் ??

  • 1 year later...
Posted

கிராமத்து மீன் குழம்பு

 

தேவையான பொருட்கள் :

மீன் - 1/2 கி
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1(பெரியது )
புளி - எலுமிச்சை அளவு
குழம்பு மிளகாய்த்தூள் - 4 ஸ்பூன் (காரம் உங்கள் விருப்பம் )
விளக்கெண்ணெய் - தாளிக்க
வெங்காய வடகம் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை :

1.மீனை நன்கு சுத்தம் செய்து , மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து நன்கு கிளறி , அலசி விடவும் .(இதுபோல் செய்வதால் அதன் வாடை குறையும் )

2.அலசிய மீனை தண்ணீர் வடித்து தனியாக வைக்கவும் .
3.வெங்காயத்தை தட்டி வைக்கவும் (அ ) நறுக்கி வைக்கவும் .(அம்மி இருப்பவர்கள் சீரகத்தை அம்மியில் பொடித்து ,அதை எடுக்கும் போது , வெங்காயத்தையும் அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும் .

4.தக்காளியும் நறுக்கிக் கொள்ளவும் .

5.ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் வைத்து அதில் புளியை ஊறவிடவும் .

6.ஊறிய புளியை நன்கு சாறு பிழிந்து கொள்ளவும் .அதனுடன் மிளகாய்த்தூள் , மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து சரிபார்த்துக்கொள்ளவும் .காரம் ,உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்ளவும் .

7.பின் மண் சட்டியில் விளக்கெண்ணை விட்டு (குழம்பினால் வரும் சேர்ப்பதால் சூட்டை குறைக்கும் . ) வெங்காய வடகம் , வெங்காயம் , சீரக தூள் , சேர்த்து வதக்கவும் .

8.இதனுடன் தக்காளியும் சேர்த்து நன்கு வதக்கவும் .

9.இதனுடன் புளிகலவையை விட்டு ,நன்கு கொதிக்க விடவும் .

10.சிறிது நேரத்தில் குழம்பு சிறிது கெட்டியாகி வரும் . அப்போது நறுக்கிய மீன் துண்டுகளை சேர்க்கவும் .

11.மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பு நீர்க்கும் .எனவே குழம்பு சிறிது கெட்டியான பிறகே மீன் துண்டுகள் போட்டு வேக விடவும் .

12. அவ்வளவுதான் சுவையான ,மணமான ,நாவூறும் மீன் குழம்பு தயார் .

13.வெங்காய வடகம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக வெந்தயம் ,பொடியாக நறுக்கிய வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

14.மீன் துண்டுகள் சேர்த்த பின் குழம்பை அதிகம் கிளற கூடாது . மீன் உடைந்து விடும் . எனவே சட்டியை பிடித்து குழம்பை பரவலாகும் படி அசைத்து விடலாம் .(அ ) மிக லேசாக கிளறவும் .

15.மீன் குழம்பு பொதுவாக அடுத்த நாள் சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .

16.மீன் குழம்பு சாதத்திற்கு மட்டும் இல்லாமல் ,இட்லி , தோசை ,பழைய சாதத்திற்கும் நன்றாக இருக்கும் .

 
Bild könnte enthalten: Essen
  • 4 months later...
Posted

சூப்பரான கிராமத்து மீன் குழம்பு

 

மீன் குழம்பை கிராமத்து ஸ்டைலில் வறுத்து அரைத்து செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
சூப்பரான கிராமத்து மீன் குழம்பு
 
தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலோ (எந்த மீனாகவும் இருக்கலாம்)
கடுகு - 1 டீஸ்பூன்.
சின்ன வெங்காயம் - 10.
தக்காளி - 1.
கறிவேப்பிலை - சிறிது .
புளி - (ஒரு சிறிய எலுமிச்சை அளவு).
உப்பு - தேவையான அளவு.
நல்லெண்ணெய் - தேவைக்கு.

அரைப்பதற்கு...

தேங்காய் - 1 கப்.
சின்ன வெங்காயம் - 10.

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 10.
தனியா - 2 டேபிள் ஸ்பூன்.
சீரகம் - 1 டீஸ்பூன்.

201803161502234340_1_meenkulambu._L_styvpf.jpg

செய்முறை :

மீனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை நீரில் அரைமணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை வாணலியில் போட்டு வறுத்து, சூடு ஆறியதும் அதனை அம்மியில், தண்ணீர் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும். பின் இதில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயத்தைச் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிச்சாற்றினை கலந்து தனியாக வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.

குழம்பிலிருந்து எண்ணெய் தனியே பிரியும்போது, அதில் மீன் துண்டுகளை சேர்த்து கிளறி, 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.

சூப்பரான சூப்பரான கிராமத்து மீன் குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மீன் கொழம்பு 2 வருசத்திற்கு பிறகு சூடாக வந்திருக்கு 

Posted
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மீன் கொழம்பு 2 வருசத்திற்கு பிறகு சூடாக வந்திருக்கு 

முனிவர் பழைய குழம்பு எப்போதும் சுவையானது.tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.