Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுத்தாது – GTF

Featured Replies

ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுத்தாது – GTF

 

ஜெனீவா தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுத்தாது – GTF




ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை இணை அனுசரணை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்கா மலினப்படுது;தாது என க்ளோபல் தமிழ் போராம் அமைப்பு தெரிவித்துள்ளது. க்ளோபல் தமிழ் போராம் அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பான நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியம் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


கடந்த ஜனவரி மாதம் ஜெனீவாவிற்கான அமெரிக்கப் பிரதிநிதி கீத் ஹார்பர் இதனை வலியுறுத்தியிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நல்ல விடயங்கள் மேற்கொள்ளப்படும் போது அதனை வரவேற்பது அமெரிக்க அரசாங்கங்களின் வழமையான நடவடிக்கையாகும் எனவும், அவ்வாறே சர்வதேச உறவுகள் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் முழு அளவில் நிறைவேற்றப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அதனை விடவும் குறைந்த தீர்வுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அதனை ஏற்றுக்கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை ஏற்றுக் கொண்டு அமுல்படுத்துவதாக உறுதியளித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதனை மேலும் காலம் தாழ்த்துவது நியாயமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


காணாமல் போனவர்கள் தொடர்பிலான பொறிமுறைமையில் சர்வதேச நாடுகளின் பங்களிப்பு அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்களில் நாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132971/language/ta-IN/article.aspx

அமெரிக்கா இந்தக் கூற்றை சொன்னால் பரவாயில்லை.
அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் இந்தக் கூற்றை சொல்ல வைப்பதை விட்டுவிட்டு இவர்களுக்கு ஏன் தேவையில்லாத வேலை?
இவர்கள் என்ன அமெரிக்காவின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களா? அல்லது வால் பிடிப்பவர்களா?

இது போன்ற பயனற்ற அறிக்கைகள் விடுவதை விட்டுவிட்டு அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதத்தை விஞ்சிய சிங்கள இனமதவெறி அரசின் பயங்கரவாதத்தை விளங்க வைத்தால் பயன் உள்ளதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.