Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் அமெரிக்கா வருகை சிறிலங்கா அரசாங்கத்தினை பாதுகாப்பதற்கே: - ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது. தமிழர் விடுதலைக்கு சுமந்திரன் புதியவர் என்பது எல்லோரும் அறிந்ததே. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து பங்காற்றியவர் மட்டுமன்றி சிங்கள அரசாங்கத்தினை பாதுகாப்பதில் முன்னணி வகித்ததுவும் எல்லோரும் அறிந்ததே.

சுமந்திரனின் இந்த விஜயத்தின் போது இவர் சிறிலங்காவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடையத்தில் சிறிலங்கா அரசாங்கம் சரியான வழியை கடைப்பிடிப்பதாக கூறுவார் என்று அறியப்படுகின்றது.

தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், ஆயிரக்கணக்கான காணாமல் போனோர் நிலைமைகள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, முள்ளிவாய்க்கால் போற்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை எதிர்க்கும் அரசின் நிலைப்பாடு, 90, ஆயிரம் தமிழ் போர் விதவைகள், வடகிழக்கு இணைப்பு, எல்லா சமயத்திற்கும் சம உரிமை, ஆகியன பற்றி சுமந்திரன் மூச்சு விட போவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

இந்த உத்தியோக பற்றற்ற குழு சுமந்திரனை அழைத்திருந்தாலும், அவருக்கான பயணச்சீட்டு, தங்கும் வசதி ஆகியவற்றினை கொடுக்கவில்லை. இந்த செலவுகளை சிங்கள அரசுக்கு சார்பான குழுவான USTPAC வழங்கியுள்ளார்கள் என்று அறியப்படுகின்றது. இதே USTPAC குழுதான் சமீபத்தில் அமெரிக்கா வந்த அமைச்சர் மங்கள சமரவீரவை இரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள். இவர்கள் பலமுறை சிறிலங்காவிற்கு சென்று சிங்கள அரசின் அமைச்சர்களை சந்தித்து அவர்களின் விருந்தினர்களாக இருந்திருக்கின்றார்கள்.

-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

வாசிங்டன், ஜூன் 13, 2016

http://www.seithy.com/breifNews.php?newsID=159523&category=TamilNews&language=tamil

சுமந்திரன் தனியவோ, சம்சும் இரட்டையர்களாகவோ, சம்சும் + மாவை மூவரோ எங்காவது போனால் அவர்கள் தமிழின விரோத சகுனி வேலை செய்யத்தான் போகிறார்கள் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

இலங்கை அரசாங்கத்தை காப்பாற்ற அமெரிக்கா செல்லவில்லை: சுமந்திரன்

அமெரிக்காவின் காங்கிரஸில் உள்ள இலங்கை ஆர்வலர்களே தம்மை அழைத்துள்ளதாகவும் தாம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அமெரிக்கா செல்லவில்லை என்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தாம் அமெரிக்காவுக்கு சென்றதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழர் பேரவை என்பன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

எனினும் இதில் உண்மையில்லை என்று குறிப்பிட்டுள்ள சுமந்திரன்,

இன்று அமெரிக்க நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு வோசிங்டனில் நடைபெறவுள்ள நிகழ்வில், தாம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாத விடயங்கள் மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் காங்கிரஸ் குழுவுக்கு தெளிவு படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் இலங்கையின் அமெரிக்கா தூதுவர் பிரசாத் காரியவசத்தை தமது உரைக்கு பதிலளிக்கும் வகையிலேயே காங்கிரஸ் குழு அழைத்துள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வின்பின்னர் அமரிக்காவின் தெற்காசிய பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலை சந்திக்கவுள்ளதாகவும் சுதந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/107681

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, போல் said:

சுமந்திரன் தனியவோ, சம்சும் இரட்டையர்களாகவோ, சம்சும் + மாவை மூவரோ எங்காவது போனால் அவர்கள் தமிழின விரோத சகுனி வேலை செய்யத்தான் போகிறார்கள் என்பதில் சந்தேகம் தேவையில்லை.

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அரசாங்கத்தைக் காப்பாற்றவே அமெரிக்கா பயணம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் அமெரிக்கப் பயணத்துக்கு தமிழ் அமைப்புக்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவுக்கு ஆதரவளிக்கும் நோக்கிலேயே அவர் அமெரிக்காவுக்கு பயணம் செய்துள்ளதாக இரண்டு தமிழ் அமைப்புக்களும் குற்றம்சுமத்தியுள்ளன.

அமெரிக்காவுக்கான சிறீலங்காத் தூதுவர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து அமெரிக்க காங்கிரசின் உத்தியோகப்பற்றற்ற தரப்பினரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களின் பிரச்சனையில் கரிசனை கொள்ளாமல் சிறீலங்காத் தூதுவருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் எம்.ஏ.சுமந்திரன் சந்திப்புக்களை நடாத்தவிருப்பதாகவும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்கத் தமிழர் பேரவை போன்ற அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு முன்னர் சுமந்திரன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டவர் எனவும் அவர் தொடர்ந்தும் அக்கட்சியுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதாகவும் அவ்வமைப்புக்கள் குற்றஞ்சுமத்தியுள்ளன.

அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் செயற்பட்டாலும் அவர் அரசாங்கத்தைக் காப்பாற்றும் நடவடிக்கையிலேயே செயற்பட்டுவருவதாகவும் அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதிய அரசாங்கமானது தமிழ் மக்களுக்கு சாதகமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கவே சுமந்திரன் அமெரிக்காவுக்கு வந்துள்ளார் எனவும் அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இவர் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக பேசுவாரென எதிர்பார்க்கமுடியாது எனவும் அவ்வமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

http://thuliyam.com/?p=30420

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப சம் சும் கும்பல் நினைப்பது தான் தமிழ் மக்களின் அரசியல் என்றாகிப் போச்சு. இது புலிகள் விட்ட தவறால் வந்த வினை. 

அதுசரி இந்த ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.. ஒபாமா இன்னும் கொஞ்சக் காலத்தில் பதவியில் இருந்து போன பின்னும் இருக்குமோ...?! ஒபாமாவுக்கு இவர்கள் கடந்த 10 வருசமா என்னத்தைச் சொல்லி என்னத்தை செய்வித்திருக்கிறார்கள். இந்த வெட்டி அமைப்புகளும் தான் சம் சும் கும்பலை பலப்படுத்தி இருக்குது. அவர்களுக்கு தாம் நினைத்ததைச் செய்ய துணிவை கொடுத்திருக்குது. tw_angry:

21 hours ago, தமிழரசு said:

சுமந்திரனும், சிறிலங்கா அரசின் தூதுவர் காரியவம்சமும் இணைந்து உத்தியோகபற்றற்ற குழு ஒன்றின் முன் பேச உள்ளார்கள். இந்த குழுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் தமிழருக்காக குரல் கொடுக்காமல் வழமைபோன்று சிங்கள அரசுக்கு வக்காலத்து வாங்குவார் என நம்பப்படுகின்றது. தமிழர் விடுதலைக்கு சுமந்திரன் புதியவர் என்பது எல்லோரும் அறிந்ததே. நீண்ட காலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்து பங்காற்றியவர் மட்டுமன்றி சிங்கள அரசாங்கத்தினை பாதுகாப்பதில் முன்னணி வகித்ததுவும் எல்லோரும் அறிந்ததே.

சுமந்திரனின் இந்த விஜயத்தின் போது இவர் சிறிலங்காவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைப்பது மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை விடையத்தில் சிறிலங்கா அரசாங்கம் சரியான வழியை கடைப்பிடிப்பதாக கூறுவார் என்று அறியப்படுகின்றது.

தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் ஆட்கடத்தல்கள், பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், ஆயிரக்கணக்கான காணாமல் போனோர் நிலைமைகள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, முள்ளிவாய்க்கால் போற்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பை எதிர்க்கும் அரசின் நிலைப்பாடு, 90, ஆயிரம் தமிழ் போர் விதவைகள், வடகிழக்கு இணைப்பு, எல்லா சமயத்திற்கும் சம உரிமை, ஆகியன பற்றி சுமந்திரன் மூச்சு விட போவதில்லை என்பது எல்லோரும் அறிந்ததே.

இந்த உத்தியோக பற்றற்ற குழு சுமந்திரனை அழைத்திருந்தாலும், அவருக்கான பயணச்சீட்டு, தங்கும் வசதி ஆகியவற்றினை கொடுக்கவில்லை. இந்த செலவுகளை சிங்கள அரசுக்கு சார்பான குழுவான USTPAC வழங்கியுள்ளார்கள் என்று அறியப்படுகின்றது. இதே USTPAC குழுதான் சமீபத்தில் அமெரிக்கா வந்த அமைச்சர் மங்கள சமரவீரவை இரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள். இவர்கள் பலமுறை சிறிலங்காவிற்கு சென்று சிங்கள அரசின் அமைச்சர்களை சந்தித்து அவர்களின் விருந்தினர்களாக இருந்திருக்கின்றார்கள்.

-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு.

இவங்க எப்ப சாத்திரம் பாத்து ஜோசியம் சொல்ல ஆரம்பிச்சானுக. அதுசரி வேற வேல வெட்டி இருந்தாதானே. 

ஆமா இவங்க நவம்பர் 8ம் திகதிக்கு பின்னர் பேர மாத்திடுவானுகளா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.