Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகள் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க அச்சே தயார்

Featured Replies

அச்சேயில் நிர்க்கதியாகியுள்ள இலங்கை அகதிகளின் படகுக்கான விநியோக உதவிகளை வழங்க இந்தோனேஷிய அரசாங்கம் முன்வந்துள்ளது

இதன்படி குறித்த படகு தமது பயணத்தை தொடர்வதற்காக எரிபொருள் மற்றும் உணவு என்பவற்றை வழங்க தயாராகவுள்ளதாக அச்சே ஆளுநர் செய்னி அப்துல்லா தெரிவித்துள்ளார்

அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியிலேயே இந்தப்படகு இந்தோனேஷியாவில் நிர்க்கத்திக்கு உள்ளானது என்று நம்பப்படுகிறது. இந்த படகில் 44 பேர் பயணம் செய்கின்றனர். இதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படகு கடந்த 11 ஆம் திகதி அச்சேயில் தரை தட்டியது. எனினும் இவர்கள் இலங்கையில் இருந்தா? அல்லது தமிழகத்தில் இருந்தா? புறப்பட்டார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை

http://www.tamilwin.com/living/01/107810

 

  • தொடங்கியவர்

இந்தோனேஷியா அல்லது ஆஸ்திரேலியா நாடுகள் இவர்களை கைது செய்து காலதாமதம் இன்றி இலங்கைக்கு திருப்பி அனுப்புவதே இந்த நாடுகள் தமிழினத்துக்கு செய்யும் பேருதவியாக இருக்கும்.

  • தொடங்கியவர்

இலங்கை அகதிகளை தரையிறங்க மன்னிப்புசபை கோரிக்கை

இந்தியாவுக்கு திருப்பியனுப்ப அதிகாரிகள் தீர்மானம்இந்தோனேசியாவின் அச்சே பிராந்தியத்தில் நிர்க்கதியாகியுள்ள படகில் இருந்து இலங்கை அகதிகளை தரையிறங்க அனுமதிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

இந்தோனேசிய மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அகதிகள் தரையிறங்கி, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்திக்கவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.

இந்த படகில் கர்ப்பிணி தாய் ஒருவர் உட்பட்ட 44 பேர் உள்ளனர். இதேவேளை, இந்த படகை இந்தியாவை நோக்கி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்றுஇந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான முடிவு நேற்று மாலை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய கொடியுடன் இந்த படகு பயணிப்பதால், எரிபொருள் மற்றும் அதிலுள்ளவர்களுக்குஉணவுகளை வழங்கி, படகை இந்தியா நோக்கி அனுப்ப அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

http://www.tamilwin.com/politics/01/107845

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.