Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன் பத்திரிகை நிறுவனத்தில் சிறுமியொருவர் வன்புனர்வு!

Featured Replies

உதயன் பத்திரிகை நிறுவனத்தில் சிறுமியொருவர் வன்புனர்வு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகத்தில் அங்கு இரவு வேலைகளில் ஈடுபடும் பணியாளர் ஒருவர் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு கிளிநொச்சியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் உடந்தையாக இருந்துள்ளனர்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

திருகோணமலையைச் சொந்த இடமாகக் கொண்ட சிறுமியொருவர் போரினால் தனது தாய் தந்தையரை இழந்த நிலையில் தனது பேத்தியாருடன் கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார்.

அச்சிறுமியை உதயன் பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞன் ஒருவர் அவரது பேத்தியாருக்குத் தெரியாமல் பத்திரிகை நிறுவனத்திற்கு அழைத்து வந்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு வந்ததை அவதானித்த பேத்தியார் சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தியவேளை அவர் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியின் மாமா கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி காவல்நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்தார். முறைப்பாட்டின் படி காவல்துறையினர் விசாரித்தபோது சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கிளிநொச்சி உதயன் பணிமனையில் வேலைசெய்யும் இளைஞன் ஒருவரைக் கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞன், கிளிநொச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டார். சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞனை எதிர்வரும் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, புதன்கிழமை உத்தரவிட்டார். இதன்போது, சிறுவர் நன்னடத்தை அதிகாரியுடன் சென்ற சிறுமி நீதிவானின் அறையில் இரகசியமான முறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறுமியின் வாக்குமூலத்தின்படி, இந்தச் சம்பவத்தில் குறித்த இளைஞனுக்கு துணையாக மேலும் இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. அவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உதயன் பத்திரிகை நிறுவனமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனால் நடாத்தப்படும் ஒரு நிறுவனம். இச்செயற்பாட்டால் தனது நிறுவனத்துக்கு களங்கம் வந்துவிடும் என அஞ்சிய சரவணபவனின் நிறுவனமான உதயன் பத்திரிகை நிறுவனம் இதனை இதுவரை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://thuliyam.com/?p=30688

அங்கு பணிபுரிபவர்கள் சிலர் செய்யும் அநியாங்களுக்கு உதயன் நிர்வாகத்தை குறை சொல்வது எவ்வளவு தூரம் சரி என்பது தெரியவில்லை.

ஆனாலும் இந்த செய்தியை அவர்கள் முதலில் பிரசுரித்திருந்தால் அது நேர்மையான ஊடகமாக கருதப் பட்டிருக்கும்.

அவர்களது காரியாலயத்தில் நடந்த சம்பவம் என்பதால் அந்த சிறுமிக்கு நிவாரணம் வழங்க வேண்டிய கடமை பொறுப்பில்லாமல் இருந்த சரவணபவனுக்கும் உண்டு.  

பல தாக்குதல் சம்பவங்கள் உதயன் நிறுவனத்தில் நடந்த பின்னரும் ஒரு CCTV பாதுகாப்பு கமெரா தொகுதியை சகல கிளைகளிலும் நிறுவும் புத்தி வராத அளவுக்கு சரவணபவன் ஒரு முட்டாள் என்பது மட்டும் தெளிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.