Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனியான பிரதேச சபைக்காக 26 வருடங்கள் காத்திருக்கும் ஒட்டுசுட்டான் மக்கள்!

Featured Replies

தனியான பிரதேச சபைக்காக 26 வருடங்கள் காத்திருக்கும் ஒட்டுசுட்டான் மக்கள்!
 
 
தனியான பிரதேச சபைக்காக 26 வருடங்கள் காத்திருக்கும் ஒட்டுசுட்டான் மக்கள்!
1466330027_download.jpg
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானுக்கு தனியான  பிரதேச சபை பிரிவு அமைக்கப்பட்டு தனியான அலுவலக சேவைக்காக 26 வருடங்களாக காத்திருப்பதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
முல்லைத்தீவின் முக்கிய பகுதியாக கருதப்படும் ஒட்டுசுட்டான் கிராமத்தில் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதி, பிரதேச செயலாளர் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.
 
இதன்போது, உதவி அரசாங்க அதிபர் அலுவலகம் என்ற பெயருடன் ஒட்டுசுட்டான் மேல்பற்று வடக்கு கிராம சபையின் கட்டிடத்தில் இப்பணியை அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடைமையாற்றிய காலஞ்சென்ற கந்தையா பொன்னம்பலம் திறந்துவைத்தார்.
 
ஒட்டுசுட்டானுக்கு தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைக்கப்பட்டு தனியான அலுவலகம் அமைக்கப்பட்டபோது, இப்பகுதி மக்கள் தமது நீண்ட கால கோரிக்கை நிறைவேறியமையையிட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
 
எனினும் மேல்பற்று வடக்கு கிராம சபையின் கட்டிடத்தில் அமைக்கப்பட்ட இவ் அலுவலகம் 1998 ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது முத்தஜயன்கட்டு இடதுகரை பிரதேசத்திற்கு மாற்றப்பட்டு பின்னர், புதுக்குடியிருப்புக்கு இடம்பெயர்ந்து சென்றது.
 
புதுக்குடியிருப்பில் தற்காலிகமாக இயங்கிய இந்த அலுவலகம் 2000 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் கற்சிலைமடுவிலுள்ள தனியார் வீட்டில் இயங்கி, பின்னர் மீண்டும் ஒட்டுசுட்டானிலுள்ள தனியார் வீட்டில் இயங்கி வந்தது.
 
ஒட்டுசுட்டானிலுள்ள தனியார் வீட்டில் இயங்கி வந்த இந்த அலுவலகம் 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி புதிதாக அமைக்கப்பட்ட நிரந்தர கட்டடத்தில் இயங்க ஆரம்பித்தது.
 
1990 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் தனக்கென சொந்த நிரந்தர கட்டிடத்தை அமைக்கவே 16 ஆண்டுகள் சென்றுவிட்டன.
 
தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து இயங்குவதனால், இப்பிரதேச மக்கள் தங்களின் பிரதேசசபை தொடர்பான சேவைகளை பெற புதுக்குடியிருப்பு செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.
 
திருமுறிகண்டி கிராமத்தில் உள்ள மக்களும் கூழாமுறிப்பு, ஒதியமலை, பெரியகுளம், தண்டுவான், பழம்பாசி, எபரிய, இத்திமடு மக்களும் தமது சேவைகளை பெற பல பேரூந்து சேவைகளையும் அதிக துரத்தையும் கடந்து புதுக்குடியிருப்புக்கு 26 வருடங்களாக சென்றுவருகின்றனர்.
 
இப்பிரதேச சபையை தனியாக பிரிப்பதற்கு அரச உயரதிகாரிகள் பல இடங்களில் கூட்டங்கள் நடத்தி தரவுகள் சேகரிக்கப்பட்டும், இன்றுவரை ஒட்டுசுட்டான் பிரதேச சபையை அமைப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை என இப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.  
 
காலத்திற்கு காலம் இடம்பெறும் தேர்தல் காலங்களில் இப்பகுதி மக்களின் வாக்குரிமையை பெற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகளும் ஒட்டுசுட்டான் பிரதேச சபையை அமைப்பதில் கூடுதலான கவனம் செலுத்தவில்லை.
 
எனவே, சொல்லெணா கஷ்டங்களை அனுபவித்து வருவதாகவும் தமக்கென தனியான பிரதேச சபையை ஏறப்படுத்தி தருமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

http://onlineuthayan.com/news/13902

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.