Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லசந்த விக்கிரமதுங்க, பிரகித் எக்னளிகோடா குறித்த ஆவணங்கள் மாயம்

Featured Replies

லசந்த விக்கிரமதுங்க, பிரகித் எக்னளிகோடா குறித்த ஆவணங்கள் மாயம்

 

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப் பட்டது மற்றும் பிரகித் எக்னளிகோடா காணாமல் போனது ஆகிய சம்பவங்கள் குறித்த போலிஸ் விசாரணைகளுக்கு அவசியமான ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக ஆராய்வதற்கு இரண்டு ராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

 
  160217105035_lasantha_wickrematunge_512x

ராணுவ தளபதி இந்த இரண்டு ராணுவ நீதிமன்றங்களை நியமத்துள்ளதாக இலங்கை ராணுவம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் கொலை செய்யப்பட்ட 'சண்டே லீடர்' பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ஊடகவியலாளர் பிரகித் எக்னளிகோடா காணாமல் போனமை தொடர்ப்பாக தற்போது போலிஸ் குற்ற புலனாய்வு துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

150824142652_prageeth_eknaligoda_512x288 

இந்த விசாரணைகளுக்கு இலங்கை ராணுவத்தின் சில முக்கிய ஆவணங்கள் தேவைப்படுவதாக போலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ள போதிலும், போலிசாருக்கு தேவைப்படும் சில ஆவணங்கள் தற்போது ராணுவத்திடம் இல்லாத நிலை காணப் படுகின்றது.

இதன் காரணமாக போலிஸ் விசாரணைகளுக்கு இலங்கை ராணுவம் போதிய ஒத்துழைப்பு வழங்குவதை தவிர்த்து வருவதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ராணுவ ஆவணங்கள் காணாமல் போயுள்ளமை சம்பந்தமாக ஆராய்வதற்கு இரண்டு ராணுவ நிதிமன்றங்களை அமைக்க ராணுவ தளபதி தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/06/160621_murder_srilanka_military_court

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.