Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் முதலமைச்சருக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம்!

Featured Replies

வவுனியா உள்ளுர் உற்பத்தி விளைபொருள் விற்பனையாளர் சங்கம் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும்.

இதற்கான முழு ஒத்துழைப்பை முதலமைச்சர் வழங்க வேண்டும் என கோரியே இவ்வுணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் வவுனியா றோயல் காடன் மண்டபத்தில் இடம்பெற்றது.

உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதன் போது தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இப்போராட்டத்திற்கு மேலும் பல அமைப்புகள் ஆதரவு தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/community/01/108617

  • தொடங்கியவர்

வட மாகாணத்துக்கான பொருளாதார மையம் வவுனியா நகருக்கு அருகில் தான் அமைய வேண்டும் என்று தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள-பௌத்த, முஸ்லிம் இனமதவெறியர்களால் கிளறிவிடப்பட்ட பிரதேசவாதத் தீக்கு வவுனியா வர்த்தகர்களும் இரையாவது தமிழன அழிப்பின் அடித்த கட்டத்துக்கு அவர்களே உதவுவது ஆகும்.

வட மாகாணத்தில் வவுனியா மட்டும் இல்லை. எனவே வட மாகாணத்துக்கான இந்தப் பொருளாதார மையம் வட மாகாணத்துக்கு மையமான மாங்குளம் பகுதியில் அமைவதே சகல வட மாகாண மக்களுக்கும் பயன்தரக் கூடியது ஆகும்.

மாங்குளமே, மன்னர், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களுக்கு ஓரளவு மையமாக அமைந்த பகுதி என்பதுடன் நேரடி வீதி இணைப்புக்களையும், ஏனைய அடிப்படைக் கட்டமைப்புக்களையும் கொண்டது.  

1960 களில் இருந்து திருகோணமலை மாவட்டத் தமிழர் (சம்பந்தன், தங்கத்துரை போன்றவர்கள் வழிநடத்தலில்) இது போன்ற (வடமாகாண தமிழரைப் புறக்கணிக்கும்) பிரதேசவாத நடவடிக்கையால் தம்பலகாமம் முதலிய பல தமிழர் பகுதிகளை ஏனைய இனத்தவரிடம் பறி கொடுத்தனர்.

முன்னர் மலையகத் தமிழரும் ஏனைய இனவெறியர்களின் தூண்டுதலில் வடகிழக்கு தமிழரைப் புறக்கணிக்கும் பிரதேசவாத நடவடிக்கையால் தம்மை ஏனைய இனத்தவரின் அடிமைகளாகவும், அவர்களின் சுரண்டலை தட்டிக் கேட்க முடியாதவர்களாகவும் ஆகியுள்ளார்.

கிழக்கு மாகாணத்திலும் இனவெறியர்களின் தூண்டுதலில் பிரதேசவாதம் தலை தூக்கியத்தில் தமிழினமே பாரிய அழிவுகளை சந்தித்தது. அதன் மோசமான விளைவுகளை இன்று கிழக்கு மாகாண தமிழர் அதிகமாகவே அனுபவிக்கின்றனர்.

பாராளுமற்ற உறுப்பினர் சிறிதரன் சிலவருடங்களின் முன்னர் மிக மோசமான கிளிநொச்சி பிரதேசவாத உணர்வுகளை தூண்ட முயற்சித்தார். இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.

இன்று அதே போன்ற ஒரு கீழ்த்தர நடவடிக்கையை ஏனைய இனவெறியர்களின் தூண்டுதலில் வவுனியாத் தமிழரும் மேற்கொள்வது வவுனியாவை இழப்பதற்கே. ஏனைய இனவெறியர்களின் தூண்டுதலில் வவுனியாத் தமிழரும் விலைபோவது வவுனியாவையும் ஏனைய இனத்தவரிடம் பறிகொடுக்கும் தற்கொலை முயற்சி.  

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள்.

5 hours ago, போல் said:

உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம், வவுனியா வர்த்தகர் சங்கம், வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் மற்றும் வரியிறுப்பாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

இதன் போது தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

இதனடிப்படையில், எதிர்வரும் திங்கட்கிழமை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.

இப்போராட்டத்திற்கு மேலும் பல அமைப்புகள் ஆதரவு தரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்ல முன்னேற்றம் - நமக்கு எதிரா நாமே போராட வேண்டிய நிலைமை. மக்கள் தெளிவாகவே உள்ளார்கள். போராடுங்கள் மக்களே, போராடாது விட்டால், வீடுகள் இன்றி நடுத்த தெருவில் நிற்பது போன்ற நிலைமைதான் வரும். அரசியல் வாதிகள் சொகுசான வாழ்க்கை வாழ்கின்றார்கள், அவர்களின் அடிவருடிகளும் வெளிநாட்டில் இருந்து பஜனை பாடுவார்கள். கஷ்டத்தை அனுபவிப்பது, அனுபவிக்க போவது மட்டும்தான் நீங்கள்.  எப்படியாயினும் உங்கள் வாழ்க்கை வளமுற வாழ்த்துக்கள். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.