Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்

Featured Replies

வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் மீட்பு : யாழில் சம்பவம்

 

ரி.விரூஷன்Jaffna-fake-notes.jpg

யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் அது தொடர்பான விசாரனைகளை மேற்கொண்டு வருவதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் காலை இளவாளை பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று திருமண செலவுக்காக மானிப்பாயில் உள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர்.

இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கிகளிடமிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்த சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி பணம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த வங்கியில் இருந்த சீ.சீ.டிவி. வீடியோவை பரிசோதித்து பார்த்ததில் குறித்த நபர்கள் வங்கியில் பணத்தை பெற்றுக்கொண்டு பையினுள் வைத்து செல்வது பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான மேலதிகமான பூரண விசாரனைகளை மேற்கொள்வதற்காக இவ் வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/8014

  • தொடங்கியவர்

2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள் ; அச்சகத்தில் தொழில் புரியும் பெண் கைது

 

( ரி.விரூஷன் ) 

யாழிலுள்ள வங்கியொன்றில் 2 இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் நேற்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இன்று தனியார் அச்சகத்தில் தொழில் புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Three_people_arrested_25465.jpg

நேற்றைய தினம் காலை இளவாலைப் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் திருமண செலவுக்காக மானிப்பாயிலுள்ள தனியார் வங்கியொன்றுக்கு சென்று பதினேழு பவுண் நிறையுடைய ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர். இவ்வாறு அடகு வைத்து அவர்கள் வங்கியிலிருந்து 4இலட்சத்து 90ஆயிரம் ரூபா பெறுமதியான பணத்தை பெற்றுச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அப் பணத்தை குறித்த திருமண மண்டபத்திற்கு செலுத்தச் சென்ற போது அதில் சுமார் இரண்டு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக குறித்த தரப்பினரால் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இது தொடர்பாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தலமையில் இளவாளை பொலிஸார், குறித்த வங்கி அதிகாரிகளிடமும் முறைப்பாட்டை செய்தவர்களிடமும் விசாரனைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இது தொடர்பான மேலதிகமான பூரண விசாரனைகளை மேற்கொள்வதற்காக இவ் வழக்கை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக காங்கேசன்துறைக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார். இதையடுத்தே இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் அச்சகத்தில் தொழில் புரியும் பெண்ணொருவர் சந்தேகத்தின் பேரில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/8049

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குச் சுற்றுலா செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விடயம்.
வெளிநாட்டுப் பணத்தில் கள்ள நோட்டு இருக்கும் என்ற அவர்கள் நினைக்கும் நேரத்தில் உங்களுக்கும் கள்ள நோட்டுக்கள் வாரி வழங்கப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.