Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிந்திய திரைப்படங்களே ஆவா,ரொக்டீம் உருவாகக்காரணம்

Featured Replies

தென்­­னிந்­திய திரைப்­ப­டங்­க­ளே ஆவா,ரொக்டீம் உரு­வா­கக்­கா­ர­ணம்

DDoS-attacks.jpg

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களே யாழ்.குடா­நாட்டில் "ஆவா குறூப்", "ரொக்டீம்" போன்ற குண்டர் குழுக்கள் உரு­வாக கார­ண­மாக உள்­ள­தாக விசா­ர­ணைகள் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சாஹல ரட்­நா­யக்க தெரி­வித்தார்.

23 இன் கீழ் 2 இல் ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்­தா எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யிலேயே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபா பீடத்தில் சமர்­பிக்­கப்­பட்ட நீண்ட பதிலில் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களை அதி­க­மாக பார்க்கும் யாழ் குடா­நாட்டு இளை­ஞர்­களைப் போன்று குழுக்­க­ளாக ஒன்று சேர்ந்து யாழ் நகரின் பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் குற்­ற­செ­யல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். யாழில் குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­மை­யினால் கைது செய்­யப்­பட்ட தனி நபர்கள் மற்றும் குழுக்கள் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட போது குறித்த விடயம் கண்டு பிடிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். ‘ஆவா குறூப்’ என்ற பெயரில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட ஆறு பேர் கொண்ட குழு சுன்­னாகம் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளது.

சந்­தேக நபர்­களை நட­ராஜா குரேஷ்­வரன், செல்­வ­ரட்னம் தருணன், ஆனந்­த­ராஜா கஜீபன், கோணேஸ்­வரன் கிரிஷார், கும­ரேஷ்­வரன் வினோதன் எனப்­படும் குமரே, ரத்னம் வினோசன் எனப்­படும் ஆவா மற்றும் சேனா­தி­ராஜா அணேகன் ஆகியோர் காணப்­ப­டு­கின்­றனர். இவர்கள் வீடு­க­ளினுள் அத்­து­மீறி நுழைதல், இரு­வரைத் தாக்கி காயப்­ப­டுத்­தி­யமை வாளால் வெட்டி படு­கா­யங்­களை ஒரு­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யமை போன்ற சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பா­கவே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்கள் மல்­லாகம் நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்டு குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்கு ஒரு வருட சிறைத்­தண்­ட­னையும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மானிப்பாய் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வங்­களில் தொடர்பில் மேற்­படி குழு­வுடன் தொடர்­பு­டைய சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்ட 12 பேர் பிணையில் செல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளனர். மேலும் 3 சந்­தேக நபர்கள் ஆஜர் செய்­யப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

ஆவா குறூப் என்ற குழு­வி­லி­ருந்து பிரிந்து சென்­ற­தாக சந்­தே­கப்­படும் ரொக் டீம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் குழு­வா­னது கடந்த மே மாதம் 8 ஆம் திகதி யாழ் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளது. ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் அக்­கு­ழுவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இந்தக் குழு தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­பட்ட விசா­ர­ணை­களில் ரொக் டீமுடன் அர­சி­யல்­வாதி ஒரு­வரின் புதல்வர் தொடர்­பு­பட்­டுள்­ள­தா­கவோ இக் குழு­விற்கு சுவிட்­சர்­லாந்­தி­லி­ருந்து பணம் வரு­வ­தா­கவோ தெரி­ய­வ­ர­வில்லை.

கைது செய்­யப்­பட்ட அக்­கு­ழுவின் சந்­தேக நபர்­க­ளது வங்கிக் கணக்கு தொடர்­பான அறிக்கை பெறு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. கைது செய்­யப்­பட்ட அந்தக் குழுவில் பாடசாலை மாணவர்களும் இருக்கின்றமை தெரியவரவில்லை. இக்குழு மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுகின்றன. ஆவா குறூப், ரொக் டீம் போன்றவற்றின் செயற்பாடுகளை தடுப்பதற்காக புலனாய்வு பிரிவினரால் தகவல்கள் சேகரிக்கப்படுவதோடு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

http://www.virakesari.lk/article/8021

இது போன்ற ரவுடிக் கும்பல்கள் உருவாக கீழ்த்தரமான திரைப் படங்கள், கீழ்த்தரமான இலங்கை தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், முதிர்ச்சியற்ற ஊடகவியலாளர்கள், போன்றவற்றின் பங்கை மறுக்க முடியாது.  

அதைவிட முக்கிய பங்கு, இது போன்ற கடத்தல், கப்பம், கொலை அடாவடிகளில் நீண்டகாலம் ஈடுபட்ட பல ஒட்டுக்குழுக்களின் (டக்ளசின் ஈபிடிபி ஒட்டுக்குழு, ஹிந்திய நாசகாரக் கும்பலின் ஈபிஆர்எல்எப் ஒட்டுக்குழு, புளொட் ஒடுக்குழு) உறுப்பினர்கள் பலரின் ஊக்கம், தூண்டுதல்.

அதைவிட முக்கிய பங்கு, இந்த ஒட்டுக்குழுக்களின் நாசகார செயல்களுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கும், சிங்கள-பௌத்த பாதுகாப்புத்துறை சதிகாரர்களின் தொடர்ச்சியான ஊக்கம், தூண்டுதல், நேரடி பங்களிப்பு.

அதைவிட முக்கிய பங்கு, பொறுப்பில்லாத பெற்றோர்கள், ஆசிரியர்கள், நெருங்கிய உறவினர்கள், மதகுருமார் போன்றவர்களின் அக்கறையின்மை. இவர்கள் தமது பொறுப்புக்களை, கடமைகளை செவ்வனே செய்தால், முதல் மூன்று நாசகாரக் கும்பல்களின் முயற்சிகள் 99% தோல்வியையே தழுவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.