Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை மறைத்த அதிபருக்கும் விளக்கமறியல்

Featured Replies

துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை மறைத்த அதிபருக்கும் விளக்கமறியல்
 

article_1466756974-gavel05.jpg-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளைத் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரின் குற்றச்செயலை மறைக்க முனைந்த குற்றச்சாட்டில் அந்தப் பாடசாலையின் அதிபர் மற்றும் பிறிதொரு ஆசிரியர் ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன், நேற்று வியாழக்கிழமை (23) உத்தரவிட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஆசிரியர், நேற்றுக் காலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் இவர்கள் இருவரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

எனினும், அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவதற்கான உத்தரவு கிடைக்கப்பெற்றதையடுத்து, அவர்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் நேற்று மாலை ஆஜர்ப்படுத்தினர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது, பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் விடயத்தை மூடிமறைப்பதாகக் கூறிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து பாடசாலை முன்றலில் கடந்த புதன்கிழமை (22) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பாடசாலைச் சூழலில் நிலவிய பதற்றத்தை தணிக்க, அப்பகுதியில் அதிகளவான கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, கோட்ட மற்றும் வலயக் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் குற்றத்தை மறைப்பதற்கு உடந்தையாக செயற்பட்ட அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் கைதுசெய்யப்படவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இதனடிப்படையில் ஆசிரியர், புதன்கிழமை (22) மாலை கைதுசெய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது, 3 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/175459#sthash.U9EcBMSu.dpuf

யாழில் மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலி: விளக்கமறியலில் அதிபர், 2 ஆசிரியர்கள்

யாழ். நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவியுடன் துர்நடத்தையில் ஈடுபட முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரையும், சம்பவத்தை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் மற்றொரு ஆசிரியரையும் எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாணவியின் முறைப்பாட்டை அதிபருக்கு தெரியப்படுத்தியபோதும், அதனைப் பொலிஸாருக்கு அறிவிக்காத குற்றச்சாட்டில் மற்றொரு ஆசிரியை விசாரணையில் உள்ளார் என்று யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரானிஸ்லஸ் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுவலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் கடந்த புதன்கிழமை போராட்டம் நடத்தியிருந்தனர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் அந்தப் பாடசாலை அதிபருக்கு முறைப்பாடு செய்தபோதும், அதுபற்றி பொலிஸாருக்கு ஏன் அறிவித்திருக்கவில்லை என்ற கோணத்திலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னரே அந்த ஆசிரியை விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் யாழ். பிராந்திய மூத்தபொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் தென்மராட்சி வலயப் பாடசாலை ஒன்றைச்சேர்ந்த ஆசிரியர் மற்றும் சம்பவங்களை மறைத்த குற்றச்சாட்டில் அதிபர், உப அதிபர் மற்றும் 2 ஆசிரியைகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilwin.com/crime/01/108849

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.