Jump to content

பன்றி இறச்சி ஃப்ரை (cape comorine style)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்கள்

பன்றி இறச்சி              –        1 கிலோ

மஞ்சள்தூள்               –        1 தேக்கரண்டி

மிளகாய் தூள்              –        1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்              –        2

இஞ்சி   விழுது           –        1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்      –        1 தேக்கரண்டி

உப்பு                       –        தேவையான அளவு

மசாலாவுக்கு

வெங்காயம்            –        2 கப்

உப்பு                      –        தேவையான அளவு

பூண்டு                    –        3 தேக்கரண்டி

இஞ்சி                    –        2 தேக்கரண்டி

கரமசாலா தூள்       –        2 தேக்கரண்டி

மல்லித் தூள்            –        2 தேக்கரண்டி

மிளகாய் தூள்          –        4 தேக்கரண்டி

தேங்காய்               –        1கப் (துண்டுகளாக வெட்டியது)

செய்முறை

02%20sunsamayal%20Pork%20Fry.jpg

சுத்தம் செய்த பன்றி இறச்சியை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் பச்சை மிளகாய் இஞ்சி விழுது நல்ல மிளகு தூள் உப்பு சேர்த்து நன்கு கிளறி சிறிது நேரம் வைக்கவும். பின்பு 2 தேக்கரண்டி நீர் சேர்த்து மூடி வைத்து வேக 45 நிமிடம் வேக வைக்கவும். குக்கரில் 1-2 விசில் வரும் வரை வைக்கவும்

அதிகபடியான எண்ணெயை பானிலிருந்து நீக்கி விடவும். இல்லையெனில் இறுதியில் எண்ணெய் அதிகமாக இருக்கும்

03%20sunsamayal%20Pork%20Fry.jpg

பின்பு பானில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் தேங்காய் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து தனியே வைக்கவும்

(துருவிய தேங்காய் பயன்படுத்தினால் ¾ கப் பயன்படுத்தவும்).பின்பு தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.

04%20sunsamayal%20Pork%20Fry.jpg

மீண்டும் கானில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் சின்ன வெங்காயம் உப்பு அதிக அளவு கறி வேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு அதனுடன் பூண்டு மற்றும் இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்

05%20sunsamayal%20Pork%20Fry.jpg

அதற்கு பிறகு கரம் மசாலா மல்லி தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்

06%20sunsamayal%20Pork%20Fry.jpg

பின்பு வேக வைத்த பன்றி இறச்சி மற்றும் தேங்காய் சேர்க்கவும்.உப்பை சரிபார்த்துக் கொள்ளவும். குறைந்த தீயில் வைத்து 15 – 20 நிமிடம் வேக வைக்கவும். தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.இடையிடையே கிளறிக் கொள்ளவும்.

01%20sunsamayal%20Pork%20Fry.jpg

பன்றி இறச்சி ஃப்ரை ரெடி

http://sunsamayal.com/

மனசு ரொம்ப இளசா? பன்றிக்கறி சாப்பிடுங்க!

என்னதான் ‘சிக்ஸ் பேக்’ வைத்திருந்தாலும், ‘அதில்’ வீக் என்றால், எல்லாமே போச்சு. புகுந்து விளையாடி விடவேண்டும் என்று பாடாய்படுகிறவர்களை நம்பித்தான் நிறைய லேகிய பிஸினஸ்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. ‘மனசு இன்னும் இளசாத்தான் இருக்கு; உடம்புதான்...’ என்று அலைபாய்பவர்களுக்காகவே அறிமுகமானதுதான் வயாகரா சமாசாரங்கள்.

வயதான காலத்தில், ‘அதுக்கு’ ஆசைப்பட்டு, எதையாவது சாப்பிட... வேறு ஏதாவது பிடித்துக் கொண்டால் சிக்கல் இல்லையா? வாரத்துக்கு ஒரு முறையாவது வறுத்த பன்றிக்கறி சாப்பிடுங்க... ச்சும்மா பிச்சு உதறலாம்! என்று ஐடியா கொடுப்பவர் பிரபல பாலியல் நிபுணர் இல்லை... ஒரு நாட்டின் அதிபர், அதுவும் பெண் அதிபர். அர்ஜென்டினா மக்களுக்குத்தான் அந்தக் கொடுப்பினை.


தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த நடுத்தர வயதினருக்கான மருத்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மைக் பிடித்தவர் பொளந்து கட்டி விட்டாராம். ‘மனசு மட்டுமல்ல... உடம்பும் இளமையாக இருக்க வேண்டும். வயாகரா, கியாகரா எல்லாம் தேவையே இல்லை. வாரத்துக்கு ஒருமுறை வறுத்த பன்றிக்கறி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தூள் கிளப்பலாம். நம் உடலில் உள்ள செக்ஸ் உணர்வுகளை அதுதூண்டி விடும்’ என்று அட்வைஸ் வழங்கியிருக்கிறார் அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். வந்திருந்தவர்கள் ஆளுக்கு அரைக்கிலோ வாங்கிக் கொண்டுதான் கிளம்பியிருக்கிறார்கள். பின்ன.. அதிபர் சொன்னா சும்மாவா!world-daily-news-950.jpg

http://www.eegarai.net/t43392-topic

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா.... கொழும்பான், 
வெள்ளிக்கிழமை.... அதுவுமாய், பன்றியா?   Pig smileysPig smileys
சைவ முறையில், சமைக்கக் கூடியதாக போட்டிருக்கலாமே.  :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா கொழும்பான் ,

வெள்ளிக்கிழமை இதைப் போட்டாத்தான் சாமான் சட்டுகள்  எல்லாம் வாங்கி ஆயத்தப் படுத்திக் கொண்டு சனிக்கிழமை சந்தோசமாய் சமைக்கலாம் என்று சிந்தித்து வெள்ளிக் கிழமை போட்டீங்கள் பாருங்க அந்த இடத்திலதான் நீங்கள் நிக்கிறீங்கள்....! tw_blush:  tw_blush:

ஆனால் பன்றி, கோழியை 45 + 20 நிமிடங்கள் வேகவைப்பது கொஞ்சம் அதிகம் என நான் நினைக்கின்றேன்.  ஆடு, மாடுக்கு சரி ...! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.