Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்

Featured Replies

சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள்
 

சவூதி அரேபியாவில் புனித நகரான மதீனா மற்றும் கத்தீப் நகரங்களில் திங்களன்று  தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

 

மதீனா நகரில் அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளி வாசலின் பாதுகாப்புத் தலைமையகத்துக்கு அருகில் கார் குண்டுவெடிப்பு இடம்பெற்றது. இதில் தற்கொலை குண்டுதாரியுடன் படையினர் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

17775_Prophet-Mohammed-Mosque-in-the-Sau

புனித மதீனா  நகரிலுள்ள  அல் மஸ்ஜித் அன் நபவி பள்ளிவாசல்


 


இதேவேளை கத்தீவ் நகரிலும் பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் தற்கொலை குண்டுத்தாக்குல் ஒன்று இடம்பெற்றதாக செய்தி வெளியாகியுள்ளது.

 

17775_madina.jpg

மதீனாவில் குண்டு வெடிப்பையடுத்து....

- See more at: http://www.metronews.lk/article.php?category=world&news=17775#sthash.AIDyvt9l.dpuf
  • தொடங்கியவர்

மதினாவில் முகமது நபி மசூதி அருகே தற்கொலைக் குண்டு தாக்குதல்

 

சௌதி அரேபியாவில் இஸ்லாத்தின் மிகப் புனித ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி மசூதிக்கு வெளியே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்ததாக செய்திகள் வந்துள்ளன.

160529154037_hajj_640x360_getty_nocredit

 

 தாக்குதல் நடந்த மதினா முகமது நபி மசூதி (ஆவணப்படம்)

முகமது நபியின் மசூதிக்கு அருகே உள்ள பாதுகாப்புத் தலைமையகத்திற்கு வெகு அருகே தற்கொலை குண்டுதாரி ஒரு குண்டை வெடிக்கச் செய்தார் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்ட வீடியோ படங்கள் அங்கிருந்து கரும்புகை எழுவதையும், ஒரு கார் எரிவதையும் காட்டுகின்றன.

இரண்டு பேர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்த மசூதியில்தான் முகமது நபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம், கிழக்கு பகுதி நகரான கத்திஃப் நகரில் உள்ள ஒரு ஷியா மசூதிக்கு அருகே தற்கொலை குண்டு ஒன்று வெடித்த சம்பவத்தைத் தொடர்ந்து வருகிறது.

அந்த சம்பவத்தில் குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டார் வேறு எந்த உயிர்ச்சேதமும் விளையவில்லை.

இன்று திங்கட்கிழமை முன்னதாக, ஜெட்டா நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு அருகே நடந்த மற்றொரு தற்கொலை குண்டு தாக்குதலில் இரண்டு பாதுகாப்பு காவலர்கள் காயமடைந்தனர்.தற்கொலை குண்டுதாரி கொல்லப்பட்டார்.

அந்தத் தாக்குதல் அமெரிக்க சுதந்திர தினத்தின் அதிகாலை நேரத்தில் நடந்தது.

http://www.bbc.com/tamil/global/2016/07/160704_medinablast

6 hours ago, நவீனன் said:

அந்தத் தாக்குதல் அமெரிக்க சுதந்திர தினத்தின் அதிகாலை நேரத்தில் நடந்தது.

இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதம் சரியான திசையில் தான் செல்கிறது.

  • தொடங்கியவர்

Update ; மதினாவில் தற்கொலைக் குண்டு தாக்குதல் ; 4 பேர் பலி (வீடியோ இணைப்பு)

 

சவுதி அரேபியாவில் முஸ்லிம்களின் இரண்டாவது புனித நகரமாக கருதப்படும் மதினா நகரில் உள்ள முகமது நபி பள்ளிவாசலுக்கு அருகில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 

குறித்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியதோடு, ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக  சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நேற்றைய தினத்தில் சவுதியில் நடந்த 3 ஆவது குண்டுத்தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016-07-05_at_07-50-05.jpg

"நான்கு பாதுகாப்பு அதிகாரிகள் பலியாகியுள்ளதோடு, தற்கொலை குண்டுத்தாரி குண்டை வெடிக்கச்செய்யும் போது பள்ளிவாசலுக்கு வந்து கொண்டிருந்த ஐந்து பேர்  காயமடைந்துள்ளனர்," என சவுதி உள்துறை அமைச்சின் டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

மேலும் தற்கொலை குண்டுதாரி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்துல்லாஹ் கான் (வயது 35) என்றும், இவர் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோருடன் ஜித்தா நகரில் வசித்துவந்துள்ளமை அவரின் அடையாள அட்டை மூலம் தெரியவந்துள்ளது.

2016-07-05_at_07-51-12.jpg

குறித்த தாக்குதலை ஜ.எஸ் தீவிரவாதிகள் நடத்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றனர்.

35F4362700000578-3674113-image-a-31_1467

35F36D5600000578-3674113-Several_cars_ca

 

35F43BEE00000578-3674113-image-a-28_1467

35F43EE200000578-3674113-image-a-100_146

35F43C9200000578-3674113-image-a-32_1467

http://www.virakesari.lk/article/8527

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.