Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜ் இராஜரத்தினம் என்னுடைய நண்பர் தான்:புதிய ஆளுநர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

மிகப்பெரிய அளவில் மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது அமெரிக்காவில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் இலங்கை-அமெரிக்க கோடீஸ்வரரான ராஜ் இராஜரத்தினம் தன்னுடைய நண்பர் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இராஜரத்தினம் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் ஒன்றாக இரண்டு வருடங்கள் படித்தவர் என்றும், அவருடைய கெலியன்ஸ் குரூப் நிறுவனத்தில் நிதி நிர்வாகத்தில் தான் அவருக்கு உதவி புரிந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தான் பத்து மாதங்களாக அவரது நிறுவனத்தில் பொருளாதார சிக்கல்கள் தொடர்பில் ஆய்வறிக்கைகள் தயாரித்துள்ளதாகவும் புதிய ஆளுநர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இராஜரத்தினம் என்பவர் இலங்கையில் தன்னார்வ பணிகளுக்காக நிதி செலவிட்ட ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை தான் சவாலாக ஏற்றுக்கொள்வதாகவும், பொருளாதார அடிப்படைகளை அறிமுகப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/110037

  • கருத்துக்கள உறவுகள்

சனிப்பெயற்சியோ....குருப் பெயற்சியோ.......வாயிலை...

தைரியமாக உண்மைகளை சொல்வது வரவேற்கப்பட வேண்டியது!

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசியல்வாதிகள் 95% ஆனவர்கள் கடந்த 68 வருடங்களில் செய்த குற்றங்களைவிட  ராஜ் இராஜரத்தினம் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை.

கடந்த 15 வருடங்களில் மட்டும் ராஜபக்ச கும்பல்கள் செய்த பாரிய குற்றங்களின் 0.000000001% குற்றங்களை  ராஜ் இராஜரத்தினம் செய்துவிடவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்க பங்கு சந்தை மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜ் ராஜரட்னத்திற்கு தொழில்சார் உதவிகளையே வழங்கியதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜ் ராஜரட்னத்திற்கு தாம் பொருளியலாளர் என்ற அடிப்படையில் சில தொழில்சார் சேவைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க பங்கு சந்தை மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பதினொரு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராஜ் ராஜரட்னத்திற்கு தொழில்சார் உதவிகளையே வழங்கியதாக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜ் ராஜரட்னத்திற்கு தாம் பொருளியலாளர் என்ற அடிப்படையில் சில தொழில்சார் சேவைகளை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

   

ராஜ் ராஜரட்னத்திற்கு ஆய்வு அறிக்கை வழங்குவதே எனது பணியாக அமைந்திருந்தது. பல்கலைக்கழக நாட்களில் ராஜ் ராஜரட்னத்துடன் நட்பு ஏற்பட்டது. நண்பர் என்ற ரீதியில் அவரைத் தெரியும். அவர் இலங்கைக்கு பல்வேறு நலன்களை செய்துள்ளார். நன்கொடைகளை வழங்கியுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=160937&category=TamilNews&language=tamil

மத்திய வங்கியின் ஆளுநர் புலி இல்லை! மஹிந்த தரப்பின் மற்றும் ஒருவர் நற்சான்று

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியை விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி மஹிந்த தரப்பினர் வெளியிடும் குற்றச்சாட்டுக்களை நம்புவதற்கு காரணங்கள் இல்லை என்று சமசமாஜக்கட்சி தெரிவித்துள்ளது.

சமசமாஜக்கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரன இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்திரஜித் குமாரசுவாமியை பொறுத்தவரையில் அவர் தமது துறையில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

இந்நிலையில் இந்த நியமனத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் இணக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்ட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்திரஜித் குமாரசுவாமியின் நியமனம் தொடர்பில் மஹிந்த தரப்பில் இன்னும் முரண்பாடுகள் தொடர்கின்றன.

அந்த அணியின் நாடாளுமன்ற குழு தலைவரான தினேஸ் குணவர்த்தன இந்த நியமனத்தை ஏற்கனவே வரவேற்றிருந்தார்.

இருப்பினும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மற்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர், மத்திய வங்கியின் புதிய ஆளுநர், ராஜ்ராஜரட்ணத்தின் ஆலோசகராக செயற்பட்டவர் என்று குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் ராஜரட்ணத்தின் தனிப்பட்ட வர்த்தகத்திலும் இந்திரஜித் குமாரசுவாமிக்கு தொடர்பிருந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்நிலையில் தாம் ராஜரட்ணத்தின் வர்த்தகத்துறை நிதிநிர்வாகத்தில் உதவி புரிந்துள்ளதாக இந்திரஜித் குமாரசுவாமி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தயும் குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/110153

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.