Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னிலங்கைத் தாக்குதல்கள்! யாரால் ? ஏன் செய்யப்பட்டது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கைத் தாக்குதல்கள்! யாரால் ? ஏன் செய்யப்பட்டது?

-By Andrew http://www.sooriyan.com

Sunday, 14 January 2007

தமிழர் தாயகத்தில் அறிவிக்கப்படதா ஒரு யுத்தம், ஒரு முழுமையான யுத்தமாக மாறிவரும் நிலையில், தென்னிலங்கையின் சுமூகமான வாழ்வியல், அரசியல் என்பன வேறொரு பரிமாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

தென்னிலங்கையின் கரப்பிட்டிய – நித்தம்புவப் பிரதேசத்திலும், ஹிக்கடுவப் பிரதேசத்திலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மட்டுமல்ல கட்சி சாரா இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழமைபோல புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தாலும் உண்மையில் இந்தக் குண்டுவெடிப்புக்குள் அரசியல் ரீதியான ஒரு எச்சரிக்கையை மஹிந்த ராஜபக்ஸவிற்கு கொடுத்துள்ளது.

நிகழ்ந்த இரண்டு தாக்குதல்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளிற்குள் உருவாகியுள்ள இரண்டு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற உண்மை உலகுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

சந்திரிக்காவின் அரசியல் வருகை

ஐக்கிய நாடுகள் சபையில் சந்திரிக்காவின் பதவி பறிபோனத்ற்கான முக்கிய நபர்கள் வேறு யாருமல்ல ஜனாதிபதியும் அவரது சகோதரர்களும் என்கின்ற விடயம், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மூலம் அம்மையாருக்கு தெரிவிக்கப்பட்டது.

மஹிந்தரின் இந்த நடவடிக்கைக்கு பாடம் புகட்டவும், பழிக்குப்பழி தீர்hக்கும் முகமாகவும் சந்திரிகா அரசியலுக்கு வருவதற்கு முடிவெடுத்தார்.

யார் இந்த இரண்டு குழுக்கள் ?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா தலையிலான பாதுகாப்புப் புலனாய்வாளர்கள்.

ராஜபக்ஸ சகோதரர்கள் மேற்பார்வையிலான புலனாய்வாளர்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அம்மையார் அண்மையில் தமது குடும்பத்தின வலுவான தேர்தல் தொகுதியின் அரசியல்வாதிகளுடன் தீடீர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது, அரசியலுக்கான தனது மீள் வருகை குறித்து விவாதித்ததுடன், மஹிந்தரின் நடவடிக்கைகள், மற்றும் அரசாங்கத்தில் அதிருப்தி கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்திருந்தார்.

சந்திரிகா அம்மையாரின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வாளர்களினால் விபரமாக மஹிந்தருக்கு வழங்கப்பட்டது.

சந்திரிகாவுடன் ஆலோசனைகளில் ஈடுபட்ட அனைவரும், மஹிந்தரின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில், புலனாய்வு (மஹிந்தர் பிரிவு) பிரிவினரால் எச்சரிக்கப்பட்டனர்.

மேலும், சந்திரிகா மீண்டும் அரசியலில் நுழைவதற்கான ஆதரவு கொடுக்கப்படக்கூடாது என்றும் அப்படி மீறும் பட்சத்தில் கொல்லப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.

இதேவேளை, சந்திரிக்காவின் தகப்பனார் எஸ்.டபுள்யு.ஆர்.டீ பண்டாநாயக்காவின் சிரார்த்த தின நிகழ்வில், நாட்டின் ஜனாதிபதியான மஹிந்தருக்கு தகுந்த மரியாதையை கொடுக்க சந்திரிக்கா மறுத்தார்.

தனது அரசின் அதிகாரிகளுக்கு முன்னிலையில் தன்னை அவமானப்படுத்திய சந்திரக்காவுக்கு விடுதலைப்புலிகளின் பெயரைச் சாட்டாக வைத்து எச்சரிக்கை அச்சுறுத்தலைக் கொடுப்பதற்கு திட்டம் தீட்டப்பட்டது.

முதல் தாக்குதல்

பாதுகாப்பு படைகளில் தமக்கு விசுவாசமாக உள்ள சிலர் தெரிவு செய்யப்பட்டு, தாக்குதல் குறித்த திட்டம் விவரிக்கப்பட்டது. முதலில் சந்திரிக்காவின் உயிரைக் குறிவைத்தே தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது. இருப்பினும் ஒரு சில சந்தர்ப்ப சு10ழ்நிலை கருதி குண்டுத் தாக்குதலாக திட்டம் மாற்றம் செய்யப்பட்டது.

இந்தக் குண்டுத் தாக்குதலில் ஆறு அப்பாவிச் சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்காவின் பதில்

சந்திரிக்காவின் ஆட்சி முடிவின்போது, ஒரு சில புலனாய்வாளர்களை அரசிற்குள் செலுத்தியதன் பலன் இப்போது சந்திரிகாவிற்கு கிடைத்தது.

நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விபரம் இவர்கள் மூலமாக சந்திரிக்காவுக்கு கிடைக்கப்பெற்றது.

இரண்டாவது தாக்குதல்

தனது அரசியல் பலமிக்க மாவட்டத்தில் கொடுக்கப்பட்ட அச்சுறுத்தலின் தாக்கம் குறையும் முன்னரே மறுதாக்கத்தினை ராஜபக்ஸவிற்கு கொடுப்பதற்கு சந்திரிக்கா முனைந்தார்.

பாதுகாப்புப் படைகளில் தனக்கு விசுவாசமானவர்களின் உதவியோடு தெற்கின் தலைமகனுக்கு, துட்டகைமுனுவின் வாரிசு என மார்தட்டிக்கொள்ளும் ராஜபக்ஸவிற்கு அரவது இடத்தில் வைத்து அவரது ஆதரவாளர்களுக்கு பதிலளித்தார்.

இதிலும், பலியானது அப்பாவிச் சிங்களப் பொதுமக்களே!

தென்னிலங்கையின் எதிர்காலம்;

எனவே, இன்று தென்னிலங்கையின் வாழ்வியல், அரசியல் என்பன சிங்கள மக்களின் அரசியலாளர்களினாலேயே பாதிக்கப்படப்போகின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுள் மட்டுமல்லாமல் சிங்கள அரசியலில் நிகழப்போகும் திருப்பங்கள், தமிழர் தரப்புக்கு வலிமை சேர்க்கப்போகின்றது என்பது உண்மை.

சிங்களம் தனது போக்கு தெரியாது ஈடாடப்போகின்றது என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்ததிற்கு வந்துகொண்டிருக்கின்றது.

இது உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்

பொறுங்கோ இப்ப கொஞ்சத்தால யாழ்கள இக்பாலும் நெருப்பு அண்ட் செருப்படி செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் குட்டை பிடிச்ச சொறி பிடிச்ச நாயும் ஆன எடு எடு என நெடு நெடுவாக போனவர் வந்து சொல்லுவார் உலக நிலமையும் சிங்கள நிலமையும் வடக்கு கிழக்கு மக்கள் நிலமையும்.....

Edited by I.V.Sasi

பொறுங்கோ இப்ப கொஞ்சத்தால யாழ்கள இக்பாலும் நெருப்பு அண்ட் செருப்படி செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் குட்டை பிடிச்ச சொறி பிடிச்ச நாயும் ஆன எடு எடு என நெடு நெடுவாக போனவர் வந்து சொல்லுவார் உலக நிலமையும் சிங்கள நிலமையும் வடக்கு கிழக்கு மக்கள் நிலமையும்.....
இது நடக்க வாய்ப்புண்டு.இருந்தாலும் இந்த எல்லாளன் படை மீது அல்லவா பழிவீழ்ந்துள்ளது.

பொறுங்கோ இப்ப கொஞ்சத்தால யாழ்கள இக்பாலும் நெருப்பு அண்ட் செருப்படி செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் குட்டை பிடிச்ச சொறி பிடிச்ச நாயும் ஆன எடு எடு என நெடு நெடுவாக போனவர் வந்து சொல்லுவார் உலக நிலமையும் சிங்கள நிலமையும் வடக்கு கிழக்கு மக்கள் நிலமையும்.....

யார் அது வசி நிதர்சனம் ஆசிரியர் தானே? அவரா நெருப்பின் ஆசிரியரும் நம்பவே முடியவில்லை? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் நம்ப முடியவில்லை கோத்தபயவின் கொலைமுயற்சியில் சந்திரிக்கா ஈடுபட்டிருப்பார் என்று. ஏனெனில் அம்மையார் பல்லுபிடிங்கிய பாம்பாக உள்ளார். ஜே.வி பியினர் தான் பெருத்த சந்தேகத்துக்கு உரியவர்களாகவர். இவர்கள் தான் காடுகளில் பயிற்சி எடுப்பதாகவும் அரசை கவிழ்பதற்கு பகீரத பிராயத்தனம் எடுக்கின்றார்கள்.(இது எனது யூகம் மட்டுமே)

பொறுங்கோ இப்ப கொஞ்சத்தால யாழ்கள இக்பாலும் நெருப்பு அண்ட் செருப்படி செய்தி நிறுவனத்தின் பிரதம ஆசிரியர் குட்டை பிடிச்ச சொறி பிடிச்ச நாயும் ஆன எடு எடு என நெடு நெடுவாக போனவர் வந்து சொல்லுவார் உலக நிலமையும் சிங்கள நிலமையும் வடக்கு கிழக்கு மக்கள் நிலமையும்.....

:lol: யார் யாழ்கள இக்பால்?

:lol: நெருப்பு அண்ட் செருப்படி செய்தி நிறுவனம்?

பஸ்சில் இறந்துகிடந்த ஒரு பெண்ணை தற்கொலை போராளி என்றார்கள் பின்னர் அது 60 வயது சிங்கள பெண் என்றார்கள்; வேறுஒரு செய்தியில் அந்தஇரண்டு பஸ்சிலும் தமிழர்கள் பிரயாணம் செய்தஅறிகுறி இல்லைஎன்றார்கள் எனவே மேற்படி

செய்தியில் உண்மை இருக்கலாம்

வீ.வீ.சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.