Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவத்தில் வெளிநபர்களுக்கு தொடர்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
 

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலின் போது மாணவர்களை கற்களை கொண்டு தாக்கியவர்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அமைச்சர் இன்று சந்தித்துள்ளார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் சட்டங்களை யாரும் கையில் எடுக்க அனுமதிக்க முடியாது.

பல வருடங்களாக புதிய மாணவர்கள் எவ்வாறு வரவேற்பார்களோ அவ்வாறே இம்முறையும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

எனினும், இந்த சம்பவத்துடன், வெளிநபர்கள் தொடர்புப்பட்டுள்ளனர். இங்கு இடம்பெற்ற பிரச்சினை தற்போது பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

இதேவேளை, சீ.சீ.டீ.வி கெமரா பதிவுகளை கொண்டு, தாக்குதல் நடத்திய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சனையை பாரியளவில் செல்லாமல் பாதுகாத்த அனைவருக்கும் தாம் நன்றி கூறிக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/crime/01/111371

  • கருத்துக்கள உறவுகள்

புலநாய்வுப் பிரிவு தான் இத் தாக்குதலை மேற்கொண்டது.

இயலுமானால் யாராவது நடவடிக்கை எடுங்கோ பார்ப்பம்.

சிங்கள-பௌத்த இனமதவெறி நிறைந்த ஆக்கிரமிப்புப் படைத் தரப்பினருடன் தொடர்புகளை வைத்திருக்கும் சிங்கள மாணவக் காடையர்கள் அடையாளம் காணப்பட்டு உரிய பாடம் படிப்பித்தால் தான் திருத்துவார்.

யார் யாரை தாக்கினார்? இன்று யாழ். பல்கலையில் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் “வெல்கம் பார்ட்டி” எனப்படும் நிகழ்வு வருடா வருடம் இடம்பெறுவது வழமை. குறித்த வருடத்தில் முதலாம் வருடத்துக்கு புகுமுகமாகும் மாணவர்களை வரவேற்று, சிரேஷ்ட மாணவர்களால் நிகழ்வுகள் நடத்தப்படும். கலை, முகாமைத்துவ, விஞ்ஞான, மருத்துவ பீட மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ற நாளில் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி நடத்துவர்.

இன்றும் அப்படித்தான். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் அதற்கான திட்டமிடல் கடந்த இரண்டு வாரங்களாகவே இடம்பெற்றது. அதன்படி, வழமைபோல நிகழ்ச்சி நிரலில் கடைபிடிக்கப்படும் தமிழ் கலாசார மேளதாள – பாடல்களுடன் ( நாதஸ்வர வரவேற்பு) முதலாம் வருட மாணவர்கள் அழைத்துவர விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.

தடிகள் பொல்லுகளுடன் சிங்கள மாணவர்கள்

தடிகள் பொல்லுகளுடன் சிங்கள மாணவர்கள்

ஆனால் நேற்றுமாலை யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வியைத் தொடரும் சிங்கள மாணவர்கள் புதியதொரு சர்ச்சையைக் கிளப்பினர். தாம் கொழும்பிலிருந்து சிங்கள பாரம்பரியமான கண்டிய நடனக் குழுவை அழைத்து வரவுள்ளதாகவும், அவர்களின் நடனத்தைக் கொண்டே புகுமுக மாணவர்கள் வரவேற்கப்பட வேண்டும் எனவும் வாதாடினர். புகுமுக மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும், திடீரென ஒரு புதிய நிகழ்வை புகுத்த முடியாது எனவும், யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தின் படியே வரவேற்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தமிழ் மாணவர்கள் வாதிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண கலாசார ரீதியில் நிகழ்வை நடத்த தாம் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினர்.
.Jaffna-uni-protest-3
அதன் பின்னர் இந்தப் பிரச்சினை விஞ்ஞான பீட பீடாதிபதியிடம் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது. விஞ்ஞான பீடாதிபதி, சிங்கள மாணவர்களின் வாதத்தை ஏற்று, கண்டிய நடனத்தைக் கொண்டு, புகுமுக மாணவர்கள் வரவேற்கவேண்டும் எனக்கூறினார். பீடாதிபதியின் இந்த முடிவினால் விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களில் சிலர் இன்று இடம்பெற்ற நிகழ்விலிருந்து ஒதுங்கிக் கொள்வது என்ற முடிவோடு, நேற்றிரவு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றது. அதன் பின்னர் குறித்த நிகழ்வை தடைசெய்யக்கோரி, விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர். உடனடியாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விஞ்ஞான பீடதிபதியோடு உரையாடினர். அந்த உரையாடலில் விஞ்ஞான பீடாதிபதி, தாங்கள் சிங்கள கலாசாரத்தை மதிப்பதாகவும், கண்டிய நடனம் கட்டாயமாக இடம்பெறும் என்றும் கூறினார்.

சிங்கள மாணவிகள் ஆடையணிந்தும் ஆடுவார்கள், ஆடையின்றியும் ஆடுவார்கள், அதை அவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். நீங்கள் இதற்குள் தலையிட வேண்டாம் என்று கூறினார். இதனால் விஞ்ஞான பீடாதிபதியுடன் முரண்பட்ட தமிழ் மாணவ பிரதிநிதிகள் அறையை விட்டு வெளியேறினர். தொடர்ந்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், விஞ்ஞான பீட தமிழ் – சிங்கள மாணவர்களை அழைத்து, கண்டிய நடனத்தை நிறுத்த முயற்சிகள் பல எடுத்தனர். அனைத்தும் தோற்றுப்போனது. சிங்கள மாணவர்கள் பக்கம் நின்ற பீடாதிபதி, விரிவுரையாளர்கள் காரணமாக அம்முயற்சிகள் தோற்றுப் போயின.

IMG_2405-768x576

தொடர்ந்தும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், தனியாக சென்று விஞ்ஞான பீட பீடாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். அந்த உரையாடலின் முடிவில், தமிழ் கலாசாரத்தின்படி நிகழ்வுகள் இடம்பெறட்டும் எனவும், கண்டிய நடனத்தை நிறுத்துவதாகவும் கூறி, மாணவ பிரதிநிதிகளை அனுப்பிவைத்தார் பீடாதிபதி.

அந்த உறுதிமொழிக்கு அமைவாக, இன்று காலை வரவேற்பு நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக வித்தியானந்தன் நூலக வாயிலிலிருந்து தொடங்கின. தமிழ் கலாசார முறைப்படி நாதஸ்வரம், மிருதங்கம் வாசிக்கப்பட்டு மாணவர்கள் வரவேற்கப்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரெனக் குறுக்கிட்ட சிங்கள மாணவர்கள், தாம் அழைத்து வந்த கண்டிய நடனக் குழுவை ஆடவிட்டனர். கண்டிய நடனக்காரர்கள் சற்றுத்தூரம் ஆடிச் சென்றதும் கலவரம் தொடங்கியது. திட்டமிட்ட ரீதியில் தமிழ் மாணவர்களைக் குழுமி நின்று தாக்கினர். பின்னர் தமிழ் மாணவர்களின் ஏனைய பீடங்களின் மாணவர்களும் அங்கு கூடியதும் அவ்விடத்தில் கலவரமே வெடித்தது.

Jaffna-uni-protest-2

“இது எங்கள் நாடு. இது சிங்களத் தேசியம். இங்கு எங்கள் பண்பாடு மட்டும்தான் இருக்க வேண்டும்” எனக் கோசம் எழுப்பியவாறு தடிகள், பொல்லுகள், கம்பிகளைக் கொண்டு தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் தாக்கினர். தாக்குதல் உச்சமாக சிங்கள மாணவர்கள் அனைவரும் வேகமாக விஞ்ஞான பீட ஆய்வுகூடத்துக்குள் குவிந்தனர்.

ஆய்வு கூடத்தின் கதவு, யன்னல்களை அடித்து நொறுக்கினர். தங்கள் சிங்கள மாணவிகளை கம்பிகளால் கீறி காயப்படுத்திக் கொண்டனர். தமக்குத் தாமே அடித்துக் கொண்டனர். கம்பிகளால் கை, கால்களில கீறி காயமேற்படுத்திக் கொண்டனர். தமிழ் மாணவர்கள் தாக்கித்தான் தமக்குக் காயம் ஏற்பட்டது என, உடனடியாகவே அவ்விடத்தில் கூடிய பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களிடம் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் சிங்கள மாணவர்களைப் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றனர்.

இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களைத் தாக்கவும் ஓடிவந்தனர் சிங்கள மாணவர்கள்.

கலவரங்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட, விஞ்ஞான பீட விரிவுரையாளர்களையும், யாழ்.பல்கலைக்கழக மார்ஷலையும் சிங்கள மாணவர்கள் தாக்கியுள்ளனர். இப்போது தாம் செய்தது பிழை என விஞ்ஞான பீட விரிவரையாளர்கள் தமிழ் மாணவர்களிடம் கூறி வருகின்றனர்.

Jaffna-uni-protest-1

மறுபுறத்தில் கலவரத்தில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களை அடையாளம் காட்டித் தருமாறும், அவர்களின் வீடியோக்கள், புகைப்படங்களை தருமாறும் புலனாய்வாளர்கள் மாணவர்களை மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. விடுதியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறும்படி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக சூழலில், பொலிஸாரும், புலனாய்வாளர்களும் குழுமி நிற்கின்றனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் திடீர் அறிவிப்பால் செல்லும் இடம் தெரியாமல் தெருவில் நின்று தவிக்கின்றனர்

http://thuliyam.com/?p=34280

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.