Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரியோ 2016 | ஒலிம்பிக் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

ரியோ துளிகள்: வியட்நாம், தாய்லாந்துக்கு முதல் தங்கம்

 

வியட்நாம், தாய்லாந்து முதல் முறையாக ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. ஆடவருக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் 41 வயதான வியட்நாமின் ஹோயாங் ஜுவான் தங்கம் வென்றார்.

மகளிருக்கான பளு தூக்குதலில் தாய்லாந்தின் சோபிடா தனசான் 48 கிலோ எடை பிரிவில் மொத்தம் 200 கிலோ தூக்கி தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.

சைக்கிள் பந்தயத்தில் பெல்ஜியத்தின் கிரேக் வான் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். அவர் பந்தய தூரத்தை 6:10:05 விநாடிகளில் கடந்தார்.

ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தவித்த ரஷ்யா பதக்க வேட்டையை தொடங்கியது. ஆடவருக்கான ஜூடோ 60 கிலோ எடை பிரிவில் அந்த நாட்டின் பெஸ்லன் முட்ரனோவ் தங்கப் பதக்கம் வென்றார்.

அகதிகள் அணியை சேர்ந்த சிரியாவின் யசுரா மர்தினி மகளிருக்கான 100 மீட்டர் பட்டர்பிளை ஹீட் பிரிவில் வெற்றி பெற்றார். எனினும் அவர் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான தகுதியை எட்ட முடியாமல் போனது.

ஆடவருக்கான ஜிம்னாஸ்டிக் தகுதி சுற்றில் பிரான்ஸ் வீரர் சமிர் டைவிங் செய்த போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது இடது கால் உடைந்தது. உடனடியாக மருத்துவக்குழு விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இரட்டையர் பிரிவில் தோல்வியடைந்தாலும் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறப்பாக செயல்படுவேன் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நம்பிக்கை தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/ரியோ-துளிகள்-வியட்நாம்-தாய்லாந்துக்கு-முதல்-தங்கம்/article8958989.ece

 

 

 

 

ரியோ ஒலிம்பிக் ; இலங்கையின் முதல் வாய்ப்பு பறிபோனது

 

ரியோ ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நீச்சல் வீராங்கனை கிமிகோ ரஹிம் தனது ஒலிம்பிக் பதக்கத்தை வெல்லும் கனவை தவறவிட்டுள்ளார்.

Dxasd1.jpg

பெண்களுக்கான 100 மீற்றர் பின்னோக்கிய நீச்சல் போட்டியில் இரண்டாவது சுற்றில் 4 இடத்தை பெற்ற இவர் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளார்.

இவர் குறித்த பட்டியலில் 28 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

100 மீற்றர் தூரத்தை 1.04.21 என்ற நேரக்கணக்கில் நிறைவுசெய்து 4 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதேவேளை இவர் குறிப்பிட்ட 100 மீற்றர் தூரத்தை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 1.03.78 என்ற நேரக்கணக்கில் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9906

 

 

 

 

இலங்கையர்கள் மூவர் இன்று ஒலிம்பிக் களத்தில்
2016-08-08 10:23:30

(பிரேஸிலிலிருந்து நெவில் அன்தனி)

 

18429sudesh-peiris.jpgரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் 31ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் மூன்றாம் நாள் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த மூவர் பங்குபற்றவுள்ளனர்.

 

ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் அன்டன் சுதேஷ் பீரிஸ் இன்று பங்குபற்றவுள்ளார்.


184292016_Summer_Olympics_logo.jpgஇரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பதக்கம் வென்ற ஒரே ஒருவரான சுதேஷ் பீரிஸ் இன்றைய தினம் நடைபெறவுள்ள முன்னோடி சுற்றில் பங்குபற்றவுள்ளார்.


உலக நாடுகளின் பளுதூக்கும் வீரர்களுடன் போட்டியிடுவதென்பது இலகுவான காரியமல்ல. எனினும் ரியோவில் குறைந்தது இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முயற்சிப்பதாக சுதேஷ் பீரிஸ் கூறினார்.

 

மங்கள சமரக்கோன்

 

18429mangala-samarakoon.jpg10 மீற்றர் தூரத்திலிருந்து காற்றழுத்து துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் தகுதிகாண் போட்டியில் இலங்கையின் மங்கள சமரக்கோன் பங்குபற்றவுள்ளார்.


இலங்கை நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு இப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.


இப் போட்டியில் அதிகப்பட்ச ஆற்றலை வெளிப்படுத்த முயற்சிப்பதாக தனது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றும் மங்கள சமரக்கோன் தெரிவித்தார். லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்குபற்றிய இவர் அங்கு தகுதிகாண் சுற்றுடன் வெளியேறினார்.


ஸ்கொட்லாந்தில் 2014இல் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிலும் பங்குபற்றிய அனுபவசாலி ஆவார்.

 

ஜூடோவில் சாமர

 

18429chamara.jpgஇன்று நடைபெறும் ஆண்களுக்கான 73 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கையின் ஜூடோக்கா சாமர நுவன் தர்மவர்தன பங்குபற்றவுள்ளார்.


இவர் பங்குபற்றும் முதலாவது ஒலிம்பிக் போட்டி இதுவாகும். அத்துடன் சர்வதேச மட்டத்தில் அவர் செய்யம் கன்னிப் பிரவேசமும் இதுவேயாகும்.


இன்றைய முன்னோடி சுற்றுப் போட்டியில் வெற்றிபெற்று முதலாம் சுற்றுக்கு செல்லும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளதாக தேசிய ஜூடோ போட்டிகளில் 2010 முதல் தேசிய சம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ள சாமர நுவன் தர்மவர்தன தெரிவித்தார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18430#sthash.l5VecCr8.dpuf

Edited by நவீனன்

  • Replies 145
  • Views 19.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

19-க்கு எகிறியது எண்ணிக்கை... பெல்ப்ஸ் சரித்திர சாதனை!

ரியோ ஒலிம்பிக்கில்  தனது 19வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தார் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ்.
 

mic1.jpg

கடந்த லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை, அமெரிக்க நீச்சல் வீரர் மைகேல் பெல்ப்சின் கணக்கில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் இருந்தன. போதுமென்ற மனதுடன் லண்டன் ஒலிம்பிக்குடன் ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்தார். ஆனால் அவரால் வீட்டில் சும்மா கிடக்க முடியவில்லை. அதே வேளையில் கடந்த 2013ம் ஆண்டு பிரான்சில் நடந்த உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் பெல்ப்ஸ் இல்லாத அமெரிக்க அணி தொடர் நீச்சலில் பிரான்ஸ் அணியிடம்  தோல்வியடைந்து, வெள்ளிப் பதக்கத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

இதையடுத்து, பெல்ப்ஸ் ஓய்வுக்கு ஓய்வு அளித்து விட்டு மீண்டும் நீச்சல் குளத்திற்குள் குதித்தார். இதனால், ரியோ ஒலிம்பிக்கிலும் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நீச்சல் போட்டிகளை பொறுத்தவரை இந்த இரு நாடுகளுக்குமிடையேதான் எப்போதும் கடும்போட்டி இருக்கும். அதைப் போலவே ரியோவில் நேற்று 4x100  மீட்டர்  பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் அமெரிக்காவுக்கும் பிரான்சுக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது.

mics.jpg

எனினும் அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் கடந்து தங்கத்தை தட்டி சென்றது. பெல்ப்சின் ஸ்பிலிட் டைம் 47.12 விநாடிகளாக இருந்தது. மற்றொரு அனுபவமிக்க அமெரிக்க நீச்சல் வீரர் நாதன் ஆட்ரியனின் ஸ்பிலிட் டைம்  46.97 விநாடிகள். பெல்ப்ஸ் மற்றும் ஆட்டிரியனின் முயற்சியே அமெரிக்கக் குழு தங்கப் பதக்கம் வெல்ல  உதவியாக இருந்தது.

தற்போது பெல்ப்சின் ஒலிம்பிக் தங்கப்பதக்க எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 200 மீட்டர் பட்டர்ஃபிளை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெல்ப்ஸ் பங்கேற்கவிருக்கிறார். அதனால் அவரது கணக்கில் தங்கப்பதக்க எண்ணிக்கை இருபதை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில்  6 தங்கமும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கமும் லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கமும் பெல்ப்ஸ் வென்றிருந்தார்.

 

http://www.vikatan.com/news/sports/66926-michael-phelps-wins-19th-olympic-gold-medal.art

  • தொடங்கியவர்

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது... கொசோவாவின் தங்க மகள்!

kosova-vc1.jpg

லிம்பிக் பதக்கம் என்பது அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு ஜஸ்ட் லைக் தட் விஷயம். ஆனால் எத்தனையோ நாடுகள் பல ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற போதிலும், பதக்கப்பட்டியலில் இடம் பெற முடியாமல் தவித்து வருகின்றன. இந்தியா கூடவும் அப்படித்தானே. ஆனால் தனது முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற கொசோவோ என்ற குட்டிநாடு, ஒலிம்பிக்கில் தங்கம் வென்று, அதுவும் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று சாதித்துள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் இரு நாடுகள் புதுமுகங்களாக களம் கண்டன. ஒன்று, ஐரோப்பிய நாடானா கொசோவா; மற்றொன்று தெற்கு சூடான். செர்பியாவின் பிடியில் இருந்த கொசோவா,  கடந்த 2008 ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. கடந்த இரு வருடங்களுக்கு முன்புதான் கொசோவாவை தனிநாடாக ஏற்று,  சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரித்தது. இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் கொசோவாவின் கனவு நிறைவேறியது.

சிறிய நாடான கொசோவா,  8 பேரைக் கொண்ட ஒரு  அணியைத்தான் ரியோ ஒலிம்பிக்கிற்கு அனுப்பியிருந்தது. அணியில் இடம் பெற்ற எட்டு பேருமே ஒவ்வொரு விஷயத்தில் கில்லிகள்.  அவர்களில் ஒருவர்தான் 25 வயது மஜிலிண்ட் கெல்மெண்டி.  ஜூடோவில், மகளிர் 52 கிலோ பிரிவுக்கான இறுதிப் போட்டியில், இத்தாலியின் கஃப்ரிடியை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளதன் மூலம்,  ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் கொசோவாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

 

         

 

''நாங்கள் போர்களை மட்டுமே கண்டு வளர்ந்தவர்கள். எங்கள் நாடு வெறும் போர்களை மட்டும் சந்திக்கும் நாடு மட்டுமல்ல. திறமையாளர்கள் நிறைந்த நாடு என்பதை இந்த உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்தேன். வாழ்க்கை சிதைந்து போன  நிலையிலும்  எங்களால் சாதிக்க முடியும் என்று நம்பினேன். தற்போது அதனை நிறைவேற்றியுள்ளேன்.

எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள், தங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா எனக் கூடத் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.  கல்விக்கு வழி கிடையாது. படிப்பதற்கு புத்தகங்கள் கிடையாது. அத்தகைய ஏழ்மை நிலையில் நாங்கள் வாழ்கிறோம். அதனால் இந்த வெற்றி எங்களுக்கு மகத்துவமானது. எங்கள் நாட்டிற்கே இது மிகப்பெரிய வெற்றி. ஒட்டுமொத்த கொசோவாவும் நான் வெற்றி பெற வேண்டுமென விரும்பியது, வேண்டியது, வாழ்த்தியது. அதுவே என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது” என்கிறார் நீர் வழியும் கண்களோடு கெல்மெண்டி.

பதக்கப்பட்டியலில்  கொசவாவின் பெயரை பார்த்து பார்த்து ஆனந்தமிகுதியால் கண்ணை கசக்கிக் கொண்டிருக்கின்றனர் அந்த நாட்டு மக்கள்!

http://www.vikatan.com/news/sports/66941-kelmendi-wins-kosovos-first-olympic-gold-medal.art

  • தொடங்கியவர்

ஒலிம்பிக்கில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்கள் நீச்சல் போட்டியில் பிரிட்டனுக்கு தங்கம்

 

பிரிட்டன் நீச்சல் வீரர் ஆதாம் பீட்டி 100 மீட்டர் ஆடவர் குப்புறப்படுத்து (பிரஸ்ட் ஸ்டோக்) நீந்தும் போட்டியில் தன்னுடைய உலகச் சாதனை பதிவையே முறியடித்து, ரியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் தனது நாட்டிற்கு முதலாவது தங்கப் பதக்கத்தை வென்று தந்திருக்கிறார்.

1988 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் வெல்லும் முதல் பிரிட்டன் நீச்சல் வீரர் இவர் தான்.

இப்போட்டியில் 57.13 வினாடிகள் பதிவில் பதிய உலகச் சாதனை பதிவை உருவாக்கியிருக்கிறார்.

151216155656_2016sport_ledecky_dhub_624x 

400 மீட்டர் பெண்கள் சுதந்திர பாணி (ஃபீரி ஸ்டைல்) நீச்சல் போட்டியில் புதிய உலகச் சாதனை பதிவை உருவாக்கி இருக்கும் அமெரிக்க வீராங்கனை கேத்றி லிடிக்கி தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.

160808054822_andy_and_jamie_murray_640x3 

டென்னிஸ் போட்டியில் மூன்று முறை தங்கம் வென்றுள்ள அமெரிக்காவின் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகளை போல, பிரிட்டனின் ஆன்டி மற்றும் ஜமியே மெர்ரி வீரர்களும் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

http://www.bbc.com/tamil/sport/2016/08/160808_rio_olympic

  • தொடங்கியவர்

சீனாவுக்குப் போட்டியாக இந்தியா உருவாக்கிய ரப்பர் குண்டு!

லிம்பிக்கை பொறுத்த வரை ஜிம்னாஸ்டிக்கில் சீனா, ஜப்பான், தென்கொரிய வீரர் வீராங்கனைகளின் ஆதிக்கம்தான் இருக்கும். இந்திய வீராங்கனைகள் அந்த பக்கமே தலை வைத்து படுப்பது கிடையாது. தற்போது சீன ரப்பர் வீராங்கனைகளுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளார் தீபா கர்மகர்.

deepa.jpg

கடந்த 1993 ம் ஆண்டு, ஆகஸ்ட் 9 ம் தேதி,  திரிபுராவின் அகர்தாலா நகரில் தீபா  பிறந்தார். தற்போது இவருக்கு 22 வயதாகிறது. ஆறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக் களம் கண்டவர்.  பிபேஷ்வர் நன்டி என்பவர்தான், அப்போது முதல் இப்போது வரை தீபாவின் பயிற்சியாளர்.

கடந்த 2007 ம் ஆண்டுதான் தீபாவின் பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது. ஜபல்பூரியில் நடந்த தேசிய ஜுனியர் தடகளப் போட்டியில், பதக்கம் வெல்லும் போது தீபாவின் வயது 14 மட்டுமே. கடந்த 2010 ம் ஆண்டு, காமன்வெல்த் இந்திய அணியில் தீபா இடம் பெற்றிருந்தார்.

 கடந்த 2011 ம் ஆண்டு,  தேசியத் தடகளப் போட்டியில் தீபா 5 தங்கப்பதக்கங்ளை வென்று அசத்தினார். ஃபுளோர், வால்ட், ஆல் அரவுண்ட், பீம் பேலன்ஸ், அன்ஈவன் பார்ஸ் பிரிவுகளில் தீபா தங்கம் வென்றார்.

கடந்த 2014 ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வால்ட் பிரிவில்  தீபா வெண்கலம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் தீபா. கடந்த 2010 ம் ஆண்டு ஆஷிஷ் குமார், காமன்வெல்த்  ஜிம்னாஸ்டிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்.

deeps.jpg

 இன்ஷியான் ஆசியப் போட்டியில் தீபா 4வது இடத்தை பிடித்து, அனைவரது கவனத்தையும் கவர்ந்தார்.

ஜப்பானில் நடந்த ஆசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில், produnova வால்ட் பிரிவில், தீபா வெண்கலம் வென்றார். பீம் பேலன்சிங்கில் 8வது இடம் பெற்றிருந்தார்.

கடந்த ஏப்ரல் 18ம் தேதி, ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீபா பெற்றார்.

கடந்த 2007 ம் ஆண்டு முதல் இப்போது வரை 77 பதக்கங்களை தீபா வென்றுள்ளார்.  இதில் 67 தங்கப்பதக்கங்கள் ஆகும்.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
 

தீபா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதும்  தகுதி சுற்றில் முதலிடம் பிடித்த அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமியோன் பைல்ஸ், நேரில்  பார்த்து பாராட்டினார்.  வரும் ஆகஸ்ட் 14ம்தேதி இறுதி சுற்றில் அவர் போட்டியிடப் போகிறார்.  ஒலிம்பிக்கில் மட்டும் தீபா பதக்கம் வென்றால், இந்திய ஜிம்னாஸ்டிக் வரலாறே மாற்றி எழுதப்பட்டு விடும்.

http://www.vikatan.com/news/sports/66939-10-things-to-know-about-indias-dipa-karmakar.art

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல்: 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு அபினவ் பிந்தரா தகுதி

 

  • abhinav%20binthra.jpg

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 10மீட்டர் ஏர்  ரைபிள்  பிரிவில் இறுதிப்  போட்டிக்கு இந்தியாவின்  அபினவ் பிந்தரா தகுதி பெற்றார்.

10மீட்டர் ஏர்  ரைபிள்  பிரிவில் தகுதிச் சுற்றுப்போட்டிகள்  இன்று நடைபெற்றன. இதில் இந்தியாவின் அபினவ் பிந்தரா மற்றும் ககன் நரங் ஆகிய இருவரும் பங்கு பெற்றனர். இதில் 525.7 புள்ளிகளுடன் ஏழாம் இடம் பிடித்த அபினவ் பிந்தரா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

அதே வேளையில் தகுதிச் சுற்றில் 23ஆவது இடம் பிடித்த ககன் நரங்  போட்டியில் இருந்து வெளியேறினார் .

http://www.dinamani.com/sports/2016/08/08/ரியோ-ஒலிம்பிக்-துப்பாக்கி-ச/article3569695.ece

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் 2016: ஆண்கள் ஹாக்கியில் ஜெர்மனியிடம் இந்தியா தோல்வி

 

ரியோ: ரியோ ஒலிம்பிக் 2016: ஜெர்மனிக்கு எதிரான ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. ஜெர்மனியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா  தோல்வி அடைந்தது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237284

  • தொடங்கியவர்

140136_2.jpg

140136_1.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி இண்டுவரைக்கும் ஒரு  வெள்ளியோ பித்தளையோ எடுக்கேல்லை எண்டு நினைக்கிற ஆக்களுக்கு.......:cool:

ஜேர்மன் ஒலிம்பிக் விளையாட்டு தலைவர் பிரேசிலுக்கு போறதுக்கு முதல் சொன்னவர்....தங்களுக்கு  பதக்கங்கள் எடுக்கோணும் எண்டது முக்கியமில்லையாம். ஒலிம்பிக்கிலை போய் விளையாடோணும் எண்டதுதான் முக்கியமாம்...tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
Rank Country
Total
1 USA.pngUnited States
5
7
7
19
2 CHN.pngChina
5
3
5
13
3 JPN.pngJapan
3
0
7
10
4 RUS.pngRussia
2
5
3
10
5 ITA.pngItaly
3
4
2
9
6 AUS.pngAustralia
4
0
3
7
7 KOR.pngRepublic of Korea
2
2
1
5
8 THA.pngThailand
2
1
1
4
9 GBR.pngGreat Britain
1
1
2
4
10 CAN.pngCanada
0
1
3
4
11 HUN.pngHungary
3
0
0
3
12 TPE.pngChinese Taipei
1
0
2
3
13 KAZ.pngKazakhstan
0
1
2
3
14 BRA.pngBrazil
1
1
0
2
14 SWE.pngSweden
1
1
0
2
16 BEL.pngBelgium
1
0
1
2
17 INA.pngIndonesia
0
2
0
2
17 NZL.pngNew Zealand
0
2
0
2
17 RSA.pngSouth Africa
0
2
0
2
20 UKR.pngUkraine
0
1
1
2
21 UZB.pngUzbekistan
0
0
2
2
22 ARG.pngArgentina
1
0
0
1
22 COL.pngColombia
1
0
0
1
22 CRO.pngCroatia
1
0
0
1
22 KOS.pngKosovo
1
0
0
1
22 NED.pngNetherlands
1
0
0
1
22 VIE.pngVietnam
1
0
0
1
28 AZE.pngAzerbaijan
0
1
0
1
28 PRK.pngDPR Korea
0
1
0
1
28 DEN.pngDenmark
0
1
0
1
28 FRA.pngFrance
0
1
0
1
28 MGL.pngMongolia
0
1
0
1
28 PHI.pngPhilippines
0
1
0
1
34 GEO.pngGeorgia
0
0
1
1
34 GRE.pngGreece
0
0
1
1
34 POL.pngPoland
0
0
1
1
34 POR.pngPortugal
0
0
1
1
34 ESP.pngSpain
0
0
1
1
  • தொடங்கியவர்
மெத்யூ அபேசிங்க இன்று களமிறங்குகிறார்
2016-08-09 09:57:58

(பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி)
 

ஒலிம்பிக் நீச்சல் போட்­டிக்­கான அடைவு மட்­டத்தை எட்­டிய முத­லா­வது இலங்­கை­ய­ரான மெத்யூ அபே­சிங்க தனது முத­லா­வது ஒலிம்பிக் தடா­கத்தில் நீந்­த­வுள்ளார்.

 

1845229.jpgரியோ டி ஜெனெய்­ரோவில் அமைந்­துள்ள ஒலிம்பிக் நீர்­நிலை விளை­யாட்­டுத்­துறை அரங்க தடா­கத்தில் ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் சாதா­ரண நீச்சல் (ப்றீ ஸ்டைல்) போட்­டியில் அவர் இன்று கலந்­து­ கொள்­ள­வுள்ளார்.

 

"இலங்­கையின் ஒலிம்பிக் வர­லாற்றில் நீச்­ச­லுக்­கான அடைவு மட்­டத்தை (58.87 செக்) எட்­டிய முத­லா­வது இலங்­கையர் என்ற வகையில் நான் பெருமை அடை­கின்றேன். அதே­வேளை இன்­றைய போட்­டியில் எனது அதி­க­பட்ச ஆற்­றலை வெளிப்­ப­டுத்த முயற்­சிப்பேன்.

 

இப்போட்­டியை 58 செக்­கன்­க­ளுக்குள் நீந்­திக்­க­டக்க வேண்டும் என்­பதில் உறு­தி­யா­க­வுள்ளேன்" என மெத்யூ அபே­சிங்க நேற்­று­முன்­தினம் மாலை தெரி­வித்தார்.

 

 

ஒலிம்பிக் நீச்சல் போட்­டியில் அழைப்பு போட்­டி­யா­ள­ராக பங்­கு­பற்­று­வ­தற்கு இலங்­கையின் தேசிய ஒலிம்பிக் குழு­வினால் மெத்யூ பிரே­ரிக்­கப்­பட்­டி­ருந்­த ­போ­திலும் தாய்­லாந்தில் அண்­மையில் நடை­பெற்ற நீச்சல் போட்­டியை 50.87 செக்­கன்­களில் நிறைவு செய்து ஒலிம்பிக் அடை­வு­மட்­டத்தை எட்டி ஒலிம்பிக் தகு­தியைப் பெற்­றி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

18452_Matthew%20abeysinghe.jpgஇதே­வேளை, ஞாயி­றன்று நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான 100 மீற்றர் மல்­லாக்கு (பேக்ஸ் ட்ரோக்) நீச்சல் போட்­டியில் இலங்­கையின் கிமிக்கோ ரஹீம் சிறந்த ஆற்­றலை வெளிப்­ப­டுத்த தவ­றினார்.

 

இப் போட்­டி யின் இரண்­டா­வது தகு­திகாண் மல்­லாக்கு நீச்சல் போட்­டியில் பங்­கு­பற்­றிய கிமிக்கோ ரஹீம் அப் போட்­டியை 1 நிமிடம் 02.21 செக்­கன்­களில் நிறைவு செய்து நான்காம் இடத்தைப் பெற்றார். தகு­திகாண் சுற்று முடிவில் ஒட்­டு­மொத்த நிலையில் கிமிக்­கோ­வினால் 28ஆவது இடத்­தையே பெற­மு­டிந்­தது.

 

இப் போட்டி முடிவு தனக்கு பெரும் ஏமாற்­றத்தைக் கொடுத்­த­தாக கிமிக்கோ ரஹீம் தெரி­வித்தார்.

 

"உண்­மையில் நான் நீச்­ச­லி­லி­ருந்து வில­கு­வது குறித்து ஆலோ­சித்து வந்தேன். எனினும் தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் சகல போட்­டி­க­ளிலும் வெற்­றி­ பெற்­றதை அடுத்து என்னால் சாதிக்க முடியும் என எனது உள்­மனம் கூறி­யது.

 

என­வேதான், ஒலிம்பிக் போட்­டி­களில் பங்­கு­பற்­று­வ­தற்­காக தீவிர பயிற்­சி­களில் ஈடு­பட்டேன். ஆனால், என்னால் அதி சிறந்த ஆற்­றலை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போன­தை­யிட்டு வருத்­தமும் ஏமாற்­றமும் அடை­கின்றேன்" என ரியோ வருகை தந்­துள்ள இலங்கை செய்­தி­யா­ளர்­க­ளிடம் கிமிக்கோ ரஹீம் செய்­தி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்தார்.

 

இதே­வேளை, இலங்­கையின் நீச்சல் சாதனை வீரரும் நீச்சல் தடாக நட்சத்திரமுமான மெத்யூ அபே சிங்க இன்று போட்டியிட வுள்ளார். இவர் ஆண்க ளுக்கான 100 மீற்றர் சாதாரண நீச்சல் (ப்றீ ஸ்டைல்) தகுதிகாண் சுற்றில் இன்று பங்கு பற்றவுள்ளார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18452#sthash.WOzFYAkg.dpuf
  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கா

 

இடம்பெற்றுவரும் ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில், பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.

அமெரிக்கா 5 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 19 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டுள்ள சீனா  5 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்  என 13 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலிய, இத்தாலி போன்ற நாடுகள் முறையே 3 ஆம், 4 ஆம் இடங்களை பிடித்துள்ளன.

இதுவரையில் நடந்த போட்டிகளின் அடிப்படையிலான பதக்கப்பட்டியல் இதோ...

Capture.JPG

 

http://www.virakesari.lk/article/9964

  • தொடங்கியவர்

ஊக்க மருந்து பயன்படுத்தியாக குற்றம்சாட்டப்பட்ட சீன வீரர் தங்கம் வென்று பதிலடி

 

ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் சீன நீச்சல் வீரர் சுன் யாங் 200 மீட்டர் சுதந்திர பாணி (ஃ பீரி ஸ்டைல்) நீச்சல் போட்டி பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

160809041157_sun_yang_became_the_first_c

சுன் யாங் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு ஏமாற்றுவதாக, ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் 400 மீட்டர் ஃ பீரி ஸ்டைல் நீச்சல் போட்டி பிரிவில் தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் மாக் ஹோர்டன் வெளிப்படையாக குற்றம்சாட்டி இரண்டு நாட்களுக்கு பிறகு, சுன் யாங் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த குற்றச்சாட்டு குறித்து மாக் ஹோர்டன் மன்னிப்பு கோரவேண்டுமென்று. சீன நீச்சல் விளையாட்டுப் பிரிவு அதிகாரிகள் கோரியுள்ளனர்.

இதனிடையே. ஆண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில், அமெரிக்க நீச்சல் வீரர் ரியான் மர்பி தங்கம் வென்றார். பெண்கள் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில், முதலாவதாக வந்த ஹங்கேரி வீராங்கனை கட்டின்கா தங்கம் வென்றார். இந்த ஒலிம்பிக்ஸ் போட்டியில் அவர் வென்ற இரண்டாவது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.com/tamil/sport/2016/08/160809_sun_yang

  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் ; இலங்கைக்கு தொடரும் ஏமாற்றம்

ரியோ ஒலிம்பிக்கில் நேற்று இடம்பெற்ற போட்டிகளில் பங்கேற்ற இலங்கை, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும்  தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளது.

asdasd2.jpg

ஆண்களுக்கான 62 கிலோகிராம் எடைப்பிரிவில் பழு தூக்கல் போட்டியில் பங்கேற்ற என்டன் சுதேஷ் பீரிஸ் குருகுலசூரிய போட்டியை நிறைவுசெய்யாமல் வெளியேறினார்.

இந்நிலையில் 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் மங்கள சமரகோன் 50 ஆவது இடத்தை பெற்று போட்டியிலிருந்து வெளியெறினார்.

இதேவேளை ஒலிம்பிக் ஜுடோ போட்டியில் பங்கேற்ற ரிப்பியல்லகே சமீர  9 இடத்தை பெற்று வெளியேறினார்.

http://www.virakesari.lk/article/9962

  • தொடங்கியவர்

19 விநாடிகளுக்குள் இலக்கை எட்டி 200மீ ஓட்டத்தில் சாதனை படைப்பேன்: உசைன் போல்ட் உறுதி

 

 
உசைன் போல்ட். | படம்: ஏஎப்பி.
உசைன் போல்ட். | படம்: ஏஎப்பி.

தனது கடைசி ஒலிம்பிக் போட்டித் தொடரில் விளையாடும் உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் தனது உலக சாதனையான 19.19 விநாடிகளை முறியடிப்பேன் என்று உறுதி கூறியுள்ளார்.

100மீ, 200மீ மற்றும் 4X100மீ ஓட்டம் ஆகியவற்றிலும் புதிய சாதனை படைப்பேன் என்று உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் உலக சாம்பியன் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார்.

“இது எனது கடைசி ஒலிம்பிக் தொடர் என்பது உறுதி. நான் அனைத்தையும் செய்துவிட்டேன், நிரூபித்துள்ளேன். ஆனாலும் நிறைய பேர் மகிழ்ச்சியாக இல்லை.

எனவே 200மீ ஓட்டத்தில் 19 விநாடிகளுக்குள் இலக்கினை எட்டுவேன். 100 மீ ஓட்டம் எனக்கு பிரச்சினையல்ல, ஆனால் 200மீ எனக்கு பதற்றமளிக்கிறது. எனவே இம்முறை பதற்றத்தை வென்று 19 விநாடிகளுக்குள் இலக்கை எட்ட அனைத்தையும் செய்து வருகிறேன்” என்றார் உசைன் போல்ட்.

http://tamil.thehindu.com/sports/19-விநாடிகளுக்குள்-இலக்கை-எட்டி-200மீ-ஓட்டத்தில்-சாதனை-படைப்பேன்-உசைன்-போல்ட்-உறுதி/article8963926.ece

  • தொடங்கியவர்

13876402_1222313117787927_58336286710561

  • தொடங்கியவர்
வூ மிங்ஸியாவுக்கு ஐந்தாவது தங்கம்
2016-08-09 17:48:45

ஒலிம்பிக் முக்­கு­ளித்தல் (டைவிங்) வர­லாற்றில் ஐந்து தங்கப் பதக்­கங்­களை வென்ற முத­லா­வது வீராங்­கனை என்ற பெரு­மையை சீனாவின் வூ மிங்­ஸியா பெற்றுக்­கொண்டார்.

 

18468swimming.jpg

 

ரியோ டி ஜெனெய்­ரோவில் அமைந்­துள்ள ஒலிம்பிக் நீர்­நிலை அரங்­கத்தில் நேற்­று ­முன்­தினம் நடை­பெற்ற இரட்­டை­ய­ருக்­கான முக்­கு­ளித்தல் போட்­டி யில் ஷி டிங்­மா­ஓ­வுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்­றதன் மூலம் வூ மிங்­ஸியா ஐந்­தா­வது தங்கப் பதக்­கத்தை தன­தாக்­கிக் ­கொண்டார்.

 

இவர் ஏதென்ஸ் 2005, பெய்ஜிங் 2008, லண்டன் 2012 ஆகிய ஒலிம்பிக் போட்­டி­களில் இதே நிகழ்ச்­சியில் தங்கப் பதக்­கங்­களை வென்­ற­துடன் லண்­டனில் தனி ­ந­ப­ருக்­கான 3 மீற்றர் துல்லல் மேடை முக்­கு­ளித்தல் போட்டியிலும் தங் கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.   

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18468#sthash.pJj5orJ5.dpuf
  • தொடங்கியவர்

ஜிம்னாஸ்டிக் பிரிவில் சீன வீரர்களின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஜப்பான்

Date: 2016-08-09@ 16:27:46

Daily_News_849376916886.jpg

ரியோ: எட்டு ஆண்டுகளாக ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் பிரிவில் சீன வீரர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஜப்பான் முடிவிற்கு கொண்டுவந்துள்ளது. ரியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், இன்று நடந்த ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஜப்பான் அணி 274 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

ரஷியாவிற்கு வெள்ளி பதக்கமும், சீனாவிற்கு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் பிரிவுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து மூன்றுமுறை தங்கம் வென்றுவந்த சீனாவின் ஆதிக்கத்தை ஜப்பான் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237574

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் ஹாக்கி: ஸ்ரீஜேஷ் அபாரம்; மீண்டும் கடைசி 15 நிமிட நெருக்கடியை மீறி இந்தியா அபார வெற்றி

 

 
 
அர்ஜெண்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.
அர்ஜெண்டினாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் அர்ஜென்டினா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

2009-க்குப் பிறகு அர்ஜென்டின அணியை இந்தியா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் அர்ஜென்டினா முற்றிலும் வேறு ஒரு அணியாக திரண்டெழுந்து கடும் நெருக்கடி கொடுத்தது முதல் 3 கால் மணி நேர ஆட்டத்தில் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கூட வழங்காத இந்திய அணி கடைசி 15 நிமிட ஆட்ட நெருக்கடியில் முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பை அர்ஜெண்டினாவுக்கு வழங்கியது, அதில்தான் முதல் கோலை அடித்தது அந்த அணி. இதே கால் மணி நேர ஆட்டத்தில் மேலும் 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை அர்ஜென்டினா பெற்றது, ஆனால் உலகின் தலைசிறந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் வடிவில் நம்மிடையே இருப்பதால் தப்பித்தோம்.

தொடர்ந்து வரிசையான நெருக்கடி ஆட்டத்தில் பந்து இந்திய அணியினரின் ஸ்டிக் வாசனையின்றி அர்ஜென்டினா தரப்பிலேயே இருந்ததால் தொடர்ச்சியாக பெனால்டி கார்னர்கள் வந்தன. இதில் ஒன்றை மேல் நடுவரிடம் முறையீடு செய்து முறியடித்தது இந்திய அணி, ஆனால் மீண்டும் உடனேயே பெனால்டி கார்னர் வாய்ப்பு வந்தது, காரணம் நிகின் திம்மையா காலில் அர்ஜென்டினா அடித்தது இம்முறை ஸ்ரீஜேஷ் அற்புதமாகத் தடுத்தார், கையில் தட்டி விட்ட பந்து எகிற அதனை குச்சியால் புல்டாஸில் அடிக்க மீண்டும் பெனால்டி கார்னர், இம்முறை இந்திய தடுப்பாட்டக் காரர்கள் கோல் அடிக்கவிடாமல் செய்தனர்.

முதல் கோலை அர்ஜென் டினா அடித்த பிறகு டி-யிலிருந்து அர்ஜென் டினா அடித்த அபாரமான சக்தி வாய்ந்த ஷாட்டை ஸ்ரீஜேஷ் அற்புதமாக தட்டி விட்டார், இன்னொரு ஷாட்டை அவ்வளவு நெரிசலிலும் ஸ்ரீஜேஷ் காலால் தடுத்தார், மொத்தத்தில் கடைசியில் இந்திய அணிக்கு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை. கடும் நெருக்கடிக்குள்ளாகின்றனர், அதையும் மீறி இன்று வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றனர்.

கடைசி 15 நிமிடத்தில் இந்திய அணிக்கும் 2 கோல் வாய்ப்புகள் கிடைத்தன, ஆகாஷ்தீப் சிங் அருமையாக மின்னல் போல் கடைசியில் ஆடினார், ஆனால் 3-வது கோல் வரவில்லை. எதிர்த்தாக்குதல் ஒன்றே சிறந்த தடுப்பு என்பதை உணர வேண்டும். 2 கோல்கள் அடித்து விட்டோம் போதும் என்று நினைத்து முழுதும் தடுப்பில் இறங்குவது தவறுகளுக்கு வழிவகுக்கிறது.

ஆட்டம் தொடங்கியது முதல் 3 கால் மணி நேர ஆட்டத்தில் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது, ஒரு பெனால்டி வாய்ப்பு கூட அர்ஜெண்டினாவுக்கு கிடைக்கவில்லை, வலுவான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர். 3-வது கால் மணி நேர ஆட்ட முடிவில் ஸ்ரீஜேஷ்தான் மீண்டும் காப்பாற்றினார், இந்திய கோல் அருகே அர்ஜென்டின வீரர்கள் குவிய கோலுக்கான 2-3 முயற்சிகளை ஸ்ரீஜேஷ் தடுத்தார், பந்தை கோழிக்குஞ்சு போல் அமுக்கினார். இது அர்ஜென்டினாவுக்கு ஒரு நெருக்கமான வாய்ப்பாக அமைந்தது.

முன்னதாக ஆட்டம் தொடங்கி 8-வது நிமிடத்தில் இந்தியா நெருக்கடி கொடுக்க பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அர்ஜெண்டினா அதனை கிளியர் செய்தது. ஆனால் கோல் கீப்பர் விவால்டி, ருபீந்தர் பந்தை தடுக்கும் போது இன்னொரு பெனால்டி கார்னர் விளைந்தது. இந்த வாய்ப்பில் சிங்ளிசனா சிங் முதல் கோலை அபாரமாக அடித்தார். ரியோவில் இந்தியாவின் 4 கோல்களும் பெனால்டி மூலமே வந்தது. பீல்ட் கோல் கிடைக்குமா என்ற ஆவல் பெருக,

35-வது நிமிடத்தில் ரமந்தீப் டி-வட்டத்துக்குள் பந்தை விறுவிறுவென எடுத்துச் செல்ல அர்ஜெண்டின தடுப்பு சரியாக அமையாமல் பந்து கோதாஜித் சிங்கிடம் வர அருமையான ஒரு அடியில் கோலாக மாற்றினார், இந்தியா அடிக்கும் முதல் பீல்டி கோல் இது. 2-0 என்று இந்தியா முன்னிலை பெற்றது.

கடைசியில் ஆகாஷ்தீப் சிங், எஸ்.வி.சுனில், ரமந்தீப் சிங் சில முயற்சிகளை செய்தும் 3-வது கோல் கிடைக்கவில்லை, ஆனால் கடைசி 15 நிமிட நேர ஆட்டத்தில் இந்தியா தப்பிப் பிழைத்தது ஸ்ரீஜேஷின் அசாத்திய கோல்கீப்பிங்கினால் என்றால் மிகையாகாது.

http://tamil.thehindu.com/sports/ஒலிம்பிக்-ஹாக்கி-ஸ்ரீஜேஷ்-அபாரம்-மீண்டும்-கடைசி-15-நிமிட-நெருக்கடியை-மீறி-இந்தியா-அபார-வெற்றி/article8964889.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஹங்கேரிக்கு 2வது தங்கம் : கலக்கினார் கடின்கா

Date: 2016-08-10@ 00:34:02

Daily_News_1943126916886.jpg

மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஹங்கேரி வீராங்கனை ஹோஸ்ஸு கடின்கா (58.45 விநாடி) தங்கப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்சில் அவர் பெறும் 2வது தங்கம் இது. முன்னதாக 400 மீட்டர் தனிநபர் மெட்லி பிரிவிலும் அவர் தங்கம் வென்றிருந்தார். அமெரிக்காவின் பேக்கர் கத்லீன் (58.75) வெள்ளிப் பதக்கமும், கனடா வீராங்கனை கைலி மாஸே (58.76) வெண்கலமும் வென்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=237670

  • தொடங்கியவர்

மேலும் 2 தங்கம்! ஒலிம்பிக்கில் 21 தங்கங்களை வென்று மைக்கேல் பெல்ப்ஸ் சாதனை!

 

  • phelps33.jpg

ரியோ ஒலிம்பிக் போட்டியில் மேலும் 2 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ்.

ரியோ ஒலிம்பிக் ஆடவர் 4*100 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சல் போட்டியில் டிரெஸ்ஸல் கேலப், மைக்கேல் பெல்ப்ஸ், ஹெல்ட் ரியான், அட்ரியான் நாதன் ஆகியோர் அடங்கிய அமெரிக்க அணி தங்கம் வென்றது. திங்கள்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்க அணி 3 நிமிடம், 09.92 விநாடிகளில் இலக்கை எட்டியது. இந்தப் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் 19-ஆவது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார் பெல்ப்ஸ்.

இந்நிலையில் இன்று அவர் மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். ஆடவர் 200 மீ. பட்டர்ஃபிளை போட்டியில் தங்கம் வென்றார் மைக்கேல் ஃபெல்ப்ஸ். பிறகு ஆடவர் 4*200 மீ. ஃப்ரீஸ்டைல் தொடர் போட்டியில் அமெரிக்கா தங்கம் வென்றது. அமெரிக்க அணியில் மைக்கேல் பெல்ப்ஸும் இடம்பெற்றிருந்தார். இதன்மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் பெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டியில் இதுவரை அவர் 21 தங்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு, ஒலிம்பிக்கில் 22 பதக்கங்கள் வென்றவர் மைக்கேல் பெல்ப்ஸ். ஒலிம்பிக் போட்டியில் 5-வது முறையாக பங்கேற்றுள்ள நீச்சல் வீரர் பெல்ப்ஸ், இதற்கு முன்பு ஒலிம்பிக்கில் 18 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் அவர் 3-வது பதக்கத்தை வென்றபோது ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்றவரான சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிஸாவின் 48 ஆண்டுகால சாதனையை (18 பதக்கம் வென்றது) முறியடித்தார். இந்த ஒலிம்பிக் போட்டியில் இதுவரை 3 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.

http://www.dinamani.com/sports/2016/08/10/மேலும்-2-தங்கம்-ஒலிம்பிக்கில/article3572715.ece

  • தொடங்கியவர்
பிரேஸிலுக்கு முதலாவது தங்கம்
2016-08-10 09:56:26

18483brazil.jpgநவீன ஒலிம்பிக்கின் வரலாற்றில் முதல் தடவையாக ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னின்று நடத்தும் பிரேஸில், ரியோ ஒலிம்பிக் போட்டியில் தனது முதலாவது தங்கப் பதக்கத்தை நேற்றுமுன்தினம் வென்றெடுத்தது. 

 

பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப்பிரிவில் உலகின் முதல் நிலை ஜூடோக்காவான மோங்கோலியாவின் சுமயா டோஜ்சுரேனை ரபேலா சில்வா வெற்றிகொண்டு பிரேஸிலின் முதலாவது தங்கப் பதகத்தை சுவீகரித்துகொடுத்தார்.

 

ரபேலா வெற்றிபெற்றபோது அரங்கில் குழுமியிருந்த பிரேஸில் இரசிகர்கள் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18483#sthash.fIBEdJI7.dpuf
  • தொடங்கியவர்

ரியோ ஒலிம்பிக் ; பதக்கப்பட்டியலின் இன்றைய நிலவரம்

 

ரியோ ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது.

9 தங்கம் 8 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் என 26 பதக்கங்களை அமெரிக்கா வென்றுள்ளது.

இதேவேளை சீனா 8 தங்கம் 3 வெள்ளி 6 வெண்கலம் என  16 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

3 ஆம் இடத்தில் ஹங்கேரி 4 தங்கம், 1 வெள்ளிப்பதக்கத்துடனும், அவுஸ்திரேலியா 4 தங்கம் 5 வெண்கலப்பதக்கத்துடன் 4  ஆவது இடத்தினையும் பிடித்துள்ளது.

பதக்கப்பட்டியலில் முதல் 20 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் இதோ...

Olympic_medal_list_10.JPG

http://www.virakesari.lk/article/10026

  • தொடங்கியவர்
ஜூடோ போட்டியில் இலங்கை வீரர் சாமர 2 ஆம் சுற்றில் வெளியேறினார்; முதல்சுற்று வெற்றியை வாழ்நாளில் பெரு வெற்றியாகக் கருதுகின்றேன் என்கிறார்
2016-08-10 10:21:00

பிரே­ஸி­லி­லி­ருந்து நெவில் அன்­தனி


ரியோ டி ஜெனெய்­ரோவில் நடை­பெற்­று­வரும் 31ஆவது ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவின் ஓர் அம்­ச­மாக இடம்­பெறும் ஆண்­க­ளுக்­கான ஜூடோ போட்­டியில் இலங்­கை யின் சாமர நுவன் தர்­ம­வர்­தன முதலாம் சுற்றில் வெற்­றி­ பெற்ற போதிலும் இரண்டாம் சுற்றில் தோல்­வி­யுற்று வெளி­யே­றினார்.

 

1848625.jpg

 

 

காரி­யோக்கா எரினா 2 உள்­ளக அரங்கில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற 73 கிலோ கிராம் எடைப் பிரிவில் முதல் 32 பேர் சுற்றில் பங்­கு­பற்­றிய சாமர நுவன் தர்­ம­வர்­தன, தன்னை எதிர்த்துப் போட்­டி­ யிட்ட அமெ­ரிக்க சமோவா நாட்டைச் சேர்ந்த பெஞ்­சமின் வோட்­டர்­ஹவுஸ் என்­ப­வரை வெற்­றி­கொண்டு அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றினார்.

 

சில மணித்­தி­யா­லங்­களின் பின்னர் நடை­பெற்ற இரண் டாம் (16 பேர்) சுற்றில் ஜோர்­ஜி­யாவின் லஷா ஷவ்­தாத்­து­வாஷ்­விலி என்­ப­வ­ரிடம் முழு­மை­யான இப்பொன் புள்ளி ஒன்றை தாரை­வா­ர்த்­ததால் சாமர நுவன் இரண்டாம் சுற்­று டன் வெளி­யேற நேரிட்­டது.

 

ஜூடோ விளை­யாட்டில் இவர் பங்­கு­பற்றும் முத­லா­வது பிர­தான சர்­வ­தேச போட்டி இது­வாகும். ஒரு வரு­டத்­திற்கு முன்னர் இவர் கனிஷ்ட உலக ஜூடோ வல்­லவர் போட்­டி­களில் பங்­கு­பற்­றி­யி­ருந்தார்.

 

1848626.jpg

 

 

ரியோ ஒலிம்பிக் போட்­டி யில் பங்­கு பற்­றிய இலங்கை ­யரில் அதி சிறந்த பெறு­பேறை பதிவு செய்­தவர் சாமர நுவன் ஆவார். இவர் அதி சிறந்த நுட்­பத்­தி­ற­னுடன் போட்­டி­யிட்டு இரண்டாம் சுற்­று­வரை முன்­னே­றி­யி­ருந்தார்.

 

"நான் முதல் சுற்றில் வெற்­றி­ பெ­றுவேன் என்று ஆரம்­பத் தில் நினைக்­க­வில்லை. ஆனால், என்­னிடம் இரண்டாம் சுற்­றுக்கு (16 பேர்) முன்­னே­றக்­ கூ­டிய தகுதி இருப்­ப­தாக தெரி­வித்த எனது பயிற்­றுநர் அமல் ரட்­நா­யக்க என்னை வெகு­வாக உற்­சா­க­மூட்டி வந்தார்.

 

அதன் பல­னா­கவே நான் வெற்­றி­பெற்றேன். இந்த வெற்­றியை எனது வாழ்­நாளில் பெரு வெற்­றி­யாகக் கரு­து­ கின்றேன். அத்­துடன் இந்த வெற்றி எனக்கு பெருமை தரு­வ­துடன் அடுத்த சுற்­றி லும் வெற்­றி­பெற முயற்­சிப்பேன்" என சாமர நுவன் தெரி­வித்தார்.

 

சுதேஷ் பீரிஸ் பிர­கா­சிக்­க­வில்லை
இதே­வேளை, கிளாஸ்கோ பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவில் பளு­தூக்­கலில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுதேஷ் பீரிஸ், ரியோ ஒலிம்பிக் விழாவில் சோடை போனார்.

 

1848623.jpg

 

முதல் முயற்­சியில் ஸ்னெச் வகையில் 115 கிலோ கிராம் எடை­யையும் கிளீன் அண்ட் ஜேர்க் வகையில் 145 கிலோ கிராம் எடை­யையும் சுதேஷ் பீரிஸ் தூக்­கினார். ஆனால் இரண்­டா­வது முயற்­சியில் ஸ்னெச் வகையில் 123 கிலோ கிராம் எடையைத் தூக்க தவ­றினார். 

 

இந்த எடையைத் தூக்க அவர் எடுத்த மூன்று முயற்­சி­களும் தோல்­வியில் முடி­வ­டைந்­தன.

 

1848624.jpgமங்­கள சம­ரக்­கோ­னுக்கு கடைசி இடம்
ஆண்­க­ளுக்­கான 10 மீற்றர் தூரத்­தி­லி­ருந்து காற்­ற­ழுத்த துப்­பாக்­கியைக் கொண்டு குறிபார்த்து சுடும் தகுதிகாண் போட்டியில் மங்கள சமரக்கோன் கடைசி இடத்தைப் பெற்றார். 

 

இவர் ஆறு சுற்றுகளில் 589.60 புள்ளிகளைப் பெற்று 50 போட்டியாளர்களில் கடைசி இடத்தைப் பெற்றார்.

 

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18487#sthash.GxEyUjzM.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஒலிம்பிக் நடைபெறும் ரியோ நகரில்..:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.