Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில், சம்பந்தர் சொன்னது என்ன? நிலாந்தன்

Featured Replies

மன்னாரில், சம்பந்தர் சொன்னது என்ன? நிலாந்தன்

மன்னாரில்,  சம்பந்தர் சொன்னது என்ன? நிலாந்தன்:-

 

    கடந்த ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தது. ஆயர்கள், மதகுருமார்கள் அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் போன்ற கருத்துருவாக்கிகள் ஒன்றாகச்சந்தித்த மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. கடந்த 7 ஆண்டுகளில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது இதுதான் முதல் தடவை எனலாம். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் மன்னாரில் இதைப்போன்ற வேறொரு சந்திப்பு நிகழ்ந்தது. முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குபடுத்தப்பட்ட அந்த சந்திப்பில் அரசியல் கட்சி தலைவர்களும், சிவில் சமூக பிரதிநிதிகளும், மதகுருக்களும் பங்குபற்றியிருந்தார்கள். அந்த சந்திப்பின் முடிவில் தமிழ் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்குவதென்று முடிவெடுக்கப்பட்டது. ஆனால் பிறகெதுவும் நடக்கவில்லை. அது நடந்து மூன்று ஆண்டுகளின் பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றொரு சந்திப்பு நடந்திருக்கிறது. முன்னைய சந்திப்பின் விரிந்த வடிவம் இது. இதில் முடிவுகள் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை.


    முதலில் அரசியல் விமர்சகர்கள் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள். அதன் பின் மதகுருமார்களும், சிவில் சமூகப் பிரதிநிதிகளும் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.  மதிய இடைவேளைக்குப்பின் அரசியற்கட்சித் தலைவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள். முடிவில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் தனது கருத்துக்களைத் தெரிவித்தார். சுமாராக எட்டு மணித்தியாலங்கள் நீடித்த இச் சந்திப்பில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளே பங்குபற்ற அழைக்கப்பட்டிருந்தன. ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை. எனவே கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கு பற்றிய ஒரு சந்திப்பாகவே அது முடிந்தது. அதில் கருத்துத்தெரிவித்த விமர்சகர்கள், மதகுருமார்கள், சிவில் அமைப்புக்ளைச் சேர்ந்தவர்கள் போன்றோர்களை விடவும் கூட்டமைப்பைச் சேர்ந்த கட்சி பிரமுகர்கள் தெரிவித்;த கருத்துக்களே அதிகம் காட்டமாக இருந்தன. தமது தலைமையை நோக்கி நேரடியாகவும், மறைமுகமாகவும் கூர்மையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.


காலை 9.30 மணியிலிருந்து பி.ப 5.30 மணி வரையிலும் தன்மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் சம்பந்தர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். முதுமை காரணமாக மிக நீண்ட நேரம் அவரால் ஆசனத்தில் நிமிர்ந்து இருக்க முடியவில்லை. ஆசனத்தின் ஒரு மூலையில் சரிந்து உட்கார்ந்தவாறு ஒரு கையால் முகத்தைத் தாங்கியபடி ஒன்றில் அரைக்கண்களைத் திறந்தபடி அல்லது முழுவதுமாக கண்களை மூடியபடி எல்லாவற்றையும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.


    முடிவில் அவர் பதில் சொன்னார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அநேகமாக நேரடியாகப் பதில் சொல்லவில்லை. பெருமளவிற்கு மறைமுகமாகவே பதில் வந்தது. ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு ஏதோ ஒரு பதில் சொல்லப்பட்டது. அவர் பதில் கூறியபின் அந்த பதில்களின் அடிப்படையில் அவரைக் கேள்வி கேட்பதற்கு ஏற்பாடுகள் இருக்கவில்லை. நேரமும் போதவில்லை. தவிர இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் பதிலைச் சொல்லிவிட்டு எழுந்து சென்று விடுவதே வழமை என்று அவரது கட்சிக்காரர்கள் சொன்னார்கள். இப்படியாக அவருடைய பதில்களை வைத்து கேள்வி கேட்கக்கூடிய ஒரு சூழல் இல்லையென்றால் அது முற்றுப் பெறாத விவாதமாகவே அமையும் என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இது போன்ற எல்லாக் கூட்டங்களிலும் இறுதியிலும் இறுதியாக அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எழுந்து போகும் ஒரு நிலமைதான் தொடர்ந்து வருகிறது. இதுதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலும் நடந்தது. இவ்வாறான சந்திப்புக்கள் முழு அளவிலான விவாதங்களாக மாற்றப்படாதவரை அவை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விளைவுகளைத் தரப்போவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வட்டாரங்கள் தெரிவித்தன.


    இந்த விமர்சனங்களில் உண்மை உண்டு. அதே சமயம் இது போன்ற சந்திப்புக்கள் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக உள்ளடக்கத்தை பலப்படுத்தக் கூடியவை என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அச் சந்திப்பின் விளைவாக பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமல் விடக்கூடும். ஆனால் அந்த சந்திப்பின் முடிவில் சம்பந்தர் தெரிவித்த கருத்துக்களுக்கூடாக கூட்டமைப்பின் எதிர்கால வழிவரைபடமானது ஓரளவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எனவே சம்பந்தர் தெரிவித்தவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.


    இலங்கைத் தீவில் இதுவரையிலும் உருவாக்கப்பட்ட எந்த ஒரு யாப்பும் தமிழ் மக்களின் பங்களிப்போடு உருவாக்கப்படவில்லை. ஆனால் இம்முறை தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு யாப்பை உருவாக்கத்தக்க நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. நாடாளுமன்றம் சாசனப்பேரவையாக மாற்றப்பட்டிருக்கிறது. யாப்புக்கான வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பும் பங்கேற்கிறது. வழிகாட்டல் குழுவின் கீழ் உபகுழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கூட்டமைப்பு பங்குபற்றுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் புதிய யாப்பானது வரவிருக்கும் வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு முன் நாடாளுமன்றத்தில்; முன்வைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே கூறியிருக்கின்றார். ஆனால் நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் அதை விட வேகமாக அதாவது நொவம்பர் மாதத்திற்கு முன்னதாகவே புதிய யாப்பானது முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.


    அந்த யாப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வேண்டும். அப்படியொரு பெரும்பான்மை ஜெயவர்த்தனாவிடம் இருந்தது. சந்திரிக்காவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்திருந்தால் அவருடைய தீர்வுப்பொதி நடைமுறைக்கு வந்திருக்கும். அதன்பின் மகிந்தவிடம் அப்படியொரு பெரும்பான்மை இருந்தது. இப்பொழுதுள்ள நாடாளுமன்றத்தில் அரசாங்கம் அப்படியொரு பெரும்பான்மையைப் பெறுவதாக இருந்தால் ஆறு வாக்குகள் தேவை. கூட்டமைப்பிடம் பதினாறு வாக்குகள் உண்டு.


ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.ல.சு.கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முன்பு ஒப்புக் கொண்டிருந்தன. அதன்படி இந்த ஆண்டின் முடிவு வரையிலும் இத் தேசிய அரசாங்கத்தை அவர்;கள் பாதுகாப்பார்கள். இத் தேசிய அரசாங்கத்தை கூட்டமைப்பும் ஆதரித்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும். அதன் மூலம் புதிய யாப்புக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறலாம். அதன்பின் அடுத்த ஆண்டில் அந்த யாப்புக்கு பொது மக்களிடம் ஒப்புதல் பெற வேண்டி இருக்கும். அதற்காக ஒரு வெகுசன வாக்கெடுப்பை நடத்த வேண்டி வரும். அந்த வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றால் புதிய யாப்பு நடைமுறைக்கு வரும். அதாவது இனப் பிரச்சினைக்குரிய ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரும்.


    சம்பந்தர் மறைமுகமாக வெளிப்படுத்திய கூட்டமைப்பின் வழி வரைபடம் இதுதான். இதில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எப்படி இருக்கும் என்பது பற்றி அவர் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. அதை அவருடைய பேச்சின் தொடர்ச்சிக்கூடாகவும் அவர் தனது பதிலைப் படிப்படியாகக் கட்டியெழுப்பிய போக்கிற்கூடாகவும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது என்பதே சரி. அவர் சமஷ;டி பற்றிய உலகளாவிய உதாரணங்களை ஒவ்வொன்றாக ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு வந்து முடிவில் ஒற்றை ஆட்சிக்குள் சமஷ;டி என்ற பொருள்பட ஓர் ஆங்கில வார்த்தையைப் பிரயோகித்தார். (ருnவையசல குநனநசயடளைஅ) அப்படியொரு முறைமை ஒஸ்ரியாவில் உள்ளது என்றும் குறிப்பிட்டார். இதை ஏற்கனவே சில மாதங்களிற்கு முன் ரணில் விக்ரமசிங்க கூறி விட்டார். அதைப் போலவே கடந்த ஆண்டு இலங்கைக்கு வந்து போன மகாத்மாகாந்தியின் பேரனும் இதே தொனிப்பட- ஒற்றையாட்சிக்குள் சமஷ;டி உணர்வுள்ள ஒரு தீர்வு ஒன்றைப்பற்றி- குறிப்பிட்டிருந்தார்.


    தமது தீர்வுப் பொதியை தமிழ் மக்களின் முன் வைத்து அதை அவர்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாகவும் சம்பந்தர் தெரிவித்தார். அத் தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பை எதிர்த்து ராஜபக்ஷ அணியினர் விரைவில் போராட்டமொன்றை நடத்த இருப்பதாகவும், அதை அவர்கள் குழப்பப்போவதாகவும் ஆனால் தமிழர்கள் அதை குழப்பக்கூடாதென்றும் அவர் கேட்டுக் கொண்டார். சந்திரிக்காவையும், மைத்திரியையும், ரணிலையும் அவர் நம்புகிறார் என்பது அவருடைய பேச்சில் தொனித்தது. 'நாங்கள் முழுநாட்டுக்குமான மாற்றத்தைத்தான் கொண்டு வந்தோம். வடக்கு கிழக்கிற்கு மட்டுமல்ல' என்று கூறிய அவர் இந்த அரசாங்கத்தை அதாவது ஆட்சி மாற்றத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் வெளிப்படுத்தினார்.


    ஆட்சி மாற்றத்தின் பின்னரும் நிகழ்ந்து வரும் பௌத்த மயமாக்கல் சிங்கள மயமாக்கல் போன்றவற்றையாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கேட்டிருந்தார். அவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும் அரசாங்கத்திற்கு எதிரான தரப்புகளும் படைக்கட்டமைப்புக்குள் மகிந்தவுக்கு ஆதரவாக காணப்படும் அணியும்தான் மேற்கண்டவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர்கள் எல்லாரும் அரசாங்கத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் சம்பந்தர் தனது பதிலில் கூறினார்.


    இது ஏறக்குறைய இவ்வாண்டு ஜெனிவாவில் காணப்பட்ட ஒரு நிலைமைதான். இந்த அரசாங்கம் கடுமையான சவால்களுக்கு மத்தியில் முன்னேறிக்கொண்டிருப்பதாகவும், அதை பலவீனப்படுத்தக்கூடாது என்றும் சில மேற்கத்தைய நாட்டு பிரதிநிதிகள் தமிழ் தரப்பிடம் கூறியிருக்கிறார்கள். அதாவது இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் விதத்தில் நகர்வுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என்ற மறைமுகச் செய்தி அதில் உண்டு. மன்னாரில் வைத்து சம்பந்தரும் அதைத்தான் சொன்னார். அதாவது மகிந்த செய்வதைப் போல தமிழ் மக்களும் இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தக் கூடாது என்று தொனிப்பட.


    எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்து நாம் பின்வருமாறு ஒரு முடிவுக்கு வரலாம். மகிந்த குழப்பா விட்டால் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வையும் உள்ளடக்கிய புதிய யாப்பொன்று வருமாண்டு அமுலுக்கு வரும். அதற்குரிய வாக்கெடுப்பில் தமிழ் மக்களை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கூட்டமைப்பு கேட்கப்போகிறது. மகிந்தவை மறுபடியும் ஒருமுறை தோற்கடிப்பதாக நம்பிக்கொண்டு தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும். ஆனால் இங்குள்ள முக்கியமான கேள்வி என்னவெனில் தமிழ் மக்கள் ஒரு தீர்வுக்காக வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா? என்பதுதான். ஒரு தீர்வுக்காக வாக்களிப்பது நடைமுறையில் மகிந்தவுக்கு எதிராக வாக்களிப்பதுதான் என்று காட்டப்படப்போகிறது.


    வரப்போகும் தீர்வு எத்தகையது என்பதை மக்களுக்கு விளங்கப்படுத்தப் போவதாக சம்பந்தர் கூறுகிறார். யாப்பு விவகாரங்கள் பெருமளவுக்கு சிக்கலானவை. சாதாரண வாக்காளர்கள் அவற்றில் அதிகம் ஈடுபாடு காட்டுவதில்லை. ஒற்றையாட்சியா? சமஷ;டியா? என்பதில் கூட அந்த வார்த்தைகளை அவற்றுக்கான அரசறிவியல் பெறுமானங்களோடு சாதாரண வாக்காளர்கள் விளங்கிக் கொள்வார்கள் என்பதற்கில்லை. சாதாரண வாக்காளர்கள் பெரும்பாலும் உணர்ச்சிகரமான விவகாரங்களால் தான் தூண்டப்படுகிறார்கள். அறிவு பூர்வமான விவகாரங்களால் தூண்டப்படும் வாக்காளர்களின் தொகை ஒப்பீட்டளவில் குறைவு. எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது யாப்பு போன்ற அறிவு பூர்;வமான விவகாரங்களை விடவும் மகிந்த எதிர்ப்பு போன்ற உணர்;ச்சிகரமான விவகாரங்களே அதிகம் எடுபடும். எனவே ஒற்றையாட்சிக்குள் சமஷ;டி அல்லது சிலசமயம் ஒற்றையாட்சிக்குள் 'தமிழரசு' என்ற விதமாக வார்த்தைகளை வைத்து விளையாடும் பொழுது எத்தனை விகிதமான சாதாரண வாக்காளர்கள் அந்த சூழ்ச்சியை விளங்கிக் கொள்ளப்போகிறார்கள்?


    கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஷ;டி பற்றியே கூறப்பட்டுள்ளது. அந்தச் சமஷ;டிக்கும் வரப்போகும் சமஷ;டி என்று சொல்லப்படும் ஏதோ ஒன்றுக்கும் இடையில் இருக்கக்கூடிய வேறுபாடுகளை சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படி விளங்கிக் கொள்வார்கள்? அதிலும் குறிப்பாக மிகக் குறுகிய கால அவகாசத்துள் தீர்வுப் பொதியை முன்வைத்து விளக்கமளித்துவிட்டு வாக்களிக்குமாறு கேட்கப்படும் பொழுது சாதாரண தமிழ் வாக்காளர்கள் எப்படிப்பட்ட முடிவை எடுப்பார்கள்?


    இங்கு கால அவகாசம் என்பது ஒரு முக்;கியமான அம்சம். யாப்புருவாக்கத்தில் சாதாரண சனங்களின் கருத்துக்களைப் பெறப் போவதாக சொல்லிக் கொண்டு உருவாக்கப்பட்ட குழுவானது மிகக் குறுகிய காலமே செயற்பட்டது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும். பல தசாப்த கால பிரச்சினை ஒன்றுக்கான தீர்வை சில மாதங்களுக்குள் விவாதித்து முடிவெடுப்பது எப்படி? நடப்பு நிலைமைகளை வைத்துப் பார்த்தால் தீர்வுப் பொதியை அல்லது புதிய யாப்பை சாதாரண தமிழ் மக்கள் முன்னிலையில் வைத்து விவாதிப்பதற்கான கால அவகாசம் மிகக் குறைவானதாகவே தெரிகிறது. ஏனெனில் சம்பந்தர் கூறுவது போல இப்போதுள்ள தேசிய அரசாங்கத்திற்கான உடன்படிக்கை முடிவுறும் காலமும் புதிய யாப்புக்கான வாக்கெடுப்புக் காலமும் ஏறக்குறைய நெருங்கிய இடைவெளிக்குள் வருகின்றன. எனவே சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ;டியா? அல்லது ஒற்றையாட்சிக்குள் சமஷ;டியா? என்ற வாதப் பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமாகவும், பரவலாகவும் நடத்தப்படுமா? அல்லது கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக் காட்சியில் வருவது போல 'மற்ற வாழைப்பழம் எங்கே?' என்று கேட்டால் அதாவது 'நீங்கள் வாக்குறுதி அளித்த சமஷ;டி எங்கே?' என்று கேட்டால் 'அதாண்ணே இது' என்று கூறப்போகிறார்களா?


    அந்த நகைச்சுவைக் காட்சியில் செந்தில் திரும்பத் திரும்ப அப்பிடிச் சொல்லும் போது ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த கவுண்டமணி அழத் தொடங்கி விடுவார். வருமாண்டில்; சில சமயம் தீர்வற்ற தீர்வு ஒன்றுக்கு விரும்பி வாக்களித்து விட்டு அதன்பின் தமிழ் மக்களின் நிலையும் கவுண்டமணியின் நிலைமையைப் போலாகிவிடுமா?
   

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134317/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஒண்டும் இல்லை இரண்டும் இல்லை ஒண்டான இரண்டு!! (காட்டூன்)

  • தொடங்கியவர்
2009இற்கு பின்­ன­ரான தமிழ் மென்­சக்தி
தொகுப்பு:- ஆர்.ராம்
showImageInStory?imageid=286529:tn
 

மன்னார் மாவட்­டத்­திற்கு ஏதோவொரு முக்­கி­யத்­துவம் இருக்­கின்­றது என்­பதை முதலில் கூறி­யா­க­வேண்டும். முன்னாள் மன்னார் ஆயரால் ஒழுங்குசெய்­யப்­பட்ட இவ்­வா­றா­னதொரு சந்­திப்பு முன்பும் இம்­மண்ணில் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. பெரு­ம­ளவில் கட்­சிப்­பி­ர­தி­நி­திகள் சந்­தித்­துக்­கொண்ட ஒரு சந்­திப்­பாக­ அது­வி­ருந்­தது. அந்த சந்­திப்பின் நிறைவில் தமிழ்த் ­தே­சியப் பேர­வை­யொன்றை உரு­வாக்­கு­வ­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பினும் அப்­ப­டி­யொன்று நட­க்­க­வில்லை. தற்­போது அந்த சந்­திப்பின் விரிந்த வடி­வ­மொன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளது. 2009இற்குப் பின்னர் தமிழ்த் தேசியப் பரப்பில் இவ்­வா­றா­ன­தொரு சந்­திப்பு முதற்­த­ட­வை­யாக நடை­பெறு­கின்­றது.

தமிழ்த் ­தே­சி­யத்தின் ஜன­நா­யக உள்­ள­டக்­கத்தை பலப்­ப­டுத்தும் ஒரு சந்­திப்­பா­க­வுள்­ளது. ஈழத் ­த­மிழ்ப்­ப­ரப்பில் மென் சக்தி பற்­றிய உரை­யாடல் என்­பது பலத்­தின்­பாற்­பட்­டதா? பல­வீ­னத்தின் பாற்­பட்­டதா? என்­றொரு கேள்­வி முத­லா­வ­தாக கேட்­கப்­பட்­டுள்­ளது. ஒரு வன்­சக்தி வெற்­றி­டத்­தி­லி­ருந்து தான் மென்­சக்தி பற்றி உரை­யா­டு­கின்றோம். மென்­சக்தி பற்றி என்­னு­டைய விளக்­கத்தை மூன்று கட்­டங்­க­ளாகப் பிரிக்­கப்­போ­கின்றேன்.

மென்­சக்தி பற்றி உலக அனு­பவம்

ஜோசப் நை எனப்­படும் அமெ­ரிக்க அர­சாய்­வி­ய­லாளர் மென்­சக்தி என்ற வார்த்­தையை கோர்க்­கின்றார். அமெ­ரிக்கா கெடு­பி­டிப்­போரின் இறு­தியில் உலகின் ஏக­போ­க­ வல்­ல­ர­சாக எழுச்சிபெற்­றி­ருந்த பின்­னணி. அத்­த­கைய காலப்­ப­கு­தியில் அர­ச­றி­வியல் பத­மாக மென்­சக்திப் பிர­யோ­கத்­திற்கு வரு­கின்­றது. ஆனால் பிந்­திய தசாப்­தங்­களில், குறிப்­பாக செப்டெம்பர் 11 தாக்­கு­த­லுக்குப் பின்னர் அமெ­ரிக்க மற்றும் மேற்­கத்­தேய நாடுகளின் வெளியு­ற­வுக்­கொள்­கை­யின் பொது இரா­ஜதந்­தி­ர­த்து­றையில் அதிகம் பிர­யோ­கிக்­கப்­படும் ஒரு வார்த்­தை­யா­கவும் நடை­மு­றை­யா­கவும் இது மாறி­விட்­டது.

படைத்­துறை, பொரு­ளா­தாரம் இரண்டும் வன்­சக்தி. இரண்டின் மூலமும் நாம் எதை­யா­வது செய்­யப்­போ­கின்றோம் என்றால் பலப்­பி­ர­யோகம் செய்­கின்றோம். பலப்­பி­ர­யோ­கத்தின் மூலம் ஒன்றை நாம் பெறு­கின்றோம் என்றால் அது வன்­சக்தி. பலப்­பி­ர­யோகம் செய்­யாது எதை­யா­வது பெறு­கின்றோம் என்றால் அது மென்­சக்தி. எங்­களைப் பற்றி மற்­ற­வர்கள் என்ன நினைக்­கின்­றார்கள் என்­பதில் இருந்து மென்­சக்தி உரு­வா­கின்­றது. மற்­ற­வர்கள் எம்­மீது கொண்­டி­ருக்கும் ஈர்ப்பு சக்தி. எமக்­கி­ருக்கும் வசிய சக்தி. அது பலப்­பி­ர­யோ­கத்தால் வரு­வ­தல்ல. பலம் பிர­யோ­கித்து அதனைப் பெற­மு­டி­யாது என்று அமெ­ரிக்க அர­சாய்­வி­ய­லாளர் ஜோசப் கூறு­கின்றார்.

உதா­ர­ண­மாக, வத்­திக்­கானை கூறலாம். ஒரு­முறை சோவியத் தலைவர் ஸ்டாலின், வத்­தி­க்கா­னிடம் எத்­தனை படை­ய­ணிகள் உண்டு எனக் கேட்டார். வத்­திக்­கா­னிடம் படை­ய­ணிகள் கிடை­யாது. உலகில் மிகச்­சி­றிய அரசு. உலகில் மிகப்­பெ­ரிய மென்­சக்­தி­களில் அது­வொன்று. படை­ய­ணி­களை வைத்­தி­ருக்­கா­ம­லேயே உல­கத்தை தன்னை நோக்கி ஈர்த்து வைத்­தி­ருக்­கின்­றது. எப்­படி? புனி­தர்­களின் சிலு­வைப்­பா­டுகள் ஊடாக அந்த ஈர்ப்பு சக்­தியை தன்னை நோக்கிக் கட்­டி­யெ­ழுப்­பி­யுள்­ளது. தனக்கு சரி­யெனப்பட்ட ஒன்­றுக்­காக சிலு­வையில் அறை­யப்­ப­டவும் இரத்தம் சிந்­தவும் புனி­தர்­களின் நூற்­றாண்­டு­கால வியா­பத்­துக்­கூ­டா­கவும் கட்­டி­யெ­ழுப்பப்­பட்­ட­துதான் வத்­தி­கானின் மென்­சக்திக் கவர்ச்சி.

அமெ­ரிக்­காவை ஏக­போ­க­வல்­ல­ரசு எனக் கூறு­கின்றோம். ஆனால், வியட்­நாமில் வெல்ல­மு­டி­ய­வில்லை. நாம் உலகின் ஏக­போக வல்­ல­ர­சாக வந்­த­பின்னர் தான் அல்­குவைதா செப்­டெம்பர் 11 தாக்­கு­தலை மேற்கொண்டது என ஜோசப் நை விளிக்கின்றார். வன்­சக்­தியால் தன்னை பாது­காக்க முடி­ய­வில்லை என்­பதைத் தான் இது காட்­டு­கின்­றது என்­பதை தான் ஜோசப் நை சுட்­டிக்­காட்­டு­கின்றார்.

அமெ­ரிக்கா உலகின் மிகப்­பெ­ரிய வல்­ல­ர­சாக வந்த பின்­னரும் கூட தன் எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து தன்னைப் பாது­காக்க முடி­யா­தி­ருக்­கின்­றது. அமெ­ரிக்­காவின் எதிரி எங்­கோ­வொரு தொலை­தூர அர­புக்­ கி­ரா­மத்தில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்றான். எங்­கோ­வொரு குகைக்குள் இருந்து வெடி­குண்டை சுமந்து கொண்டு அமெ­ரிக்­காவை நோக்கி வரு­கின்றான். அவனை எவ்­வாறு தடுப்­பது என்று ஜோசப் நை கேள்­வி­யெ­ழுப்­பு­கின்றார். எமது பாது­காப்புக் கட்­ட­மைப்பு அதனை தடுக்க­மு­டி­யாது இருக்­கின்­றது. ஆகவே எமது வன்­சக்­தியின் இய­லா­மையை ஒத்­துக்­கொள்­கின்றோம் என்­கிறார் ஜோசப் நை.

வன்­சக்­தியின் போதா­மையை உணர்ந்து கொண்டு தன்னைப் பாது­காப்­ப­தற்­காக உரு­வாக்­கி­யது தான் மென்­சக்தி. வன்­சக்­தியின் ஓட்­டை­க­ளுக்­குள்ளால் எம்மை தாக்­கு­வ­தற்கு எதி­ரிகள் வந்துவிடு­வார்கள். அதனை தடுப்­ப­தற்­காக நாம் நண்­பர்­க­ளான ஒரு பாசத்தை உரு­வாக்­குவோம். அந்த நண்­பர்கள் அமெ­ரிக்­காவை தாக்கக் கூடாது. அது­வொரு ஜன­நா­ய­கத்தின் இதயம். ஹொலி­வூட்டின் மையம். அங்­கி­ருந்­துதான் நாம் ரசிக்கும் கலை வரு­கின்­றது. எமது பிள்­ளைகள் அங்கே கற்­கின்­றார்கள் எனக் கூறும் நண்­பர்­களை உற்­பத்தி செய்வோம். எங்கள் மீது ஈர்ப்­புக்­கொண்ட, நாம் வசீ­க­ரிக்க வல்­ல­வொரு உல­கத்தை உரு­வாக்­குவோம். அதன் மூலம் எமது மென்­சக்­தியை அதி­க­ரிக்­கலாம். அதன் மூலமே வன்­சக்தியால் பாது­காக்க முடி­யாத ஓட்­டை­களை அடைக்க முடியும் என ஜோசப் நை கூறினார்.

அது செப்டெம்பர் 11 இரட்­டைக்­கோ­புரத் தாக்­கு­த­லுக்குப் பின் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­பு­டை­ய­தொரு கோட்­பா­டாக அது மாறி­யது. இன்னும் சிறப்­பாகச் சொன்னால், சிவப்பு ஆபத்தை எதிர்­கொண்ட அமெ­ரிக்கா ஏக­போக வல்­ல­ர­சாக இருந்­த­போது பச்சை ஆபத்து வந்­தது. அதுதான் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம். சிவப்பு ஆபத்து அதி­க­பட்சம் அர­சு­க­ளி­ட­மி­ருந்துதான் வந்­தது. பச்சை ஆபத்து அர­சற்ற தரப்­பு­க­ளி­ட­மி­ருந்து வந்­தது. அதனை அரசின் பாது­காப்பு கட்­ட­மைப்­புக்­குள்ளால் மட்டும் கையாள முடி­ய­வில்லை. எனவே தான் அமெ­ரிக்­கர்கள் மென்­சக்தி பற்றி சிந்­திக்­கத்­தொ­டங்­கி­னார்கள். ஆகவே மென்­சக்தி என்ற வாதம் அமெ­ரிக்­கா­வி­லேயே ஒரு பல­வீ­னத்தின் வெளிப்­பாடு தான்.

வன்­சக்­தியின் போதா­மை­யி­லி­ருந்­துதான் மென்­சக்தி பற்றி சிந்­திக்கத் தொடங்­கி­னார்கள். உதா­ர­ண­மாக, ஆப்கான் தலி­பான்­க­ளி­டமி­ருந்து மீட்­கப்­பட்­டதன் பின்னர் இந்­திய அமைச்சர் ஆப்­கா­னுக்குச் சென்றார். அவர் பொலிவூட் சினிமா இறு­வட்­டு­க்க­ளையே கொண்டு சென்றார்.

ஹொலி­வூட்டில் என்ன உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றதோ அது உலகம் முழு­வ­திலும் எங்கள் மீதான அபிப்­பி­ரா­யத்தைத் தீர்­மா­னிப்­ப­தாக உள்­ளது எனக் கூறும் ஜோசப் நை, ஒரு மென்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்பும் அடிப்­படை மூலக்­கூ­றுகள் என மூன்று பிர­தான விட­யங்­களை அடை­யாளம் காண்­கிறார். சமூகத்தின் பண்­பாட்டுச் செழிப்பு, சமூகத்தின் அர­சியல் நாக­ரிகச் செழிப்பு, கலை, இலக்­கிய சமூக ெவளிப்­பாடு ஆகிய மூன்­றுமே அவை­யாகும்.

எனவே நாம் இந்த விளக்­கத்தின் பின்­ன­ணியை வைத்துப்­பார்ப்­போ­மா­க ­வி­ருந்தால் அமெ­ரிக்­கர்­களின் நோக்கு நிலையில் மென்­சக்தி எனப்­ப­டு­வது வன்­சக்­தி­களின் போதா­மை­களின் விளைவே. தங்­க­ளது மென்­சக்­தியை உலகம் முழு­வதும் பரப்­பு­வதன் மூலம் தமது விருப்­பத்­திற்­கேற்ப உல­கத்தை வடி­வ­மைக்­கலாம் என அமெ­ரிக்­கர்கள் நம்­பு­கின்­றார்கள். இருப்­பினும் ஜோசப் நை அத­னையும் கேள்­வி­க்குட்படுத்து­கின்றார். ஒரு ஹொலிவூட் திரைப்­ப­டத்தைப் பார்க்கும் கீழைத்­தே­யர் அமெ­ரிக்­காவின் ஜன­நா­யகச் செழிப்பை இர­சிப்­பாரா? அல்­லது தன் இலட்­சி­யத்தில் விட்­டுக்­கொ­டுப்­பின்றி இருப்­பாரா?

இதற்கு எங்­க­ளி­டத்­தி­லேயே உதா­ரணம் உண்டு. நாலாம் கட்ட ஈழப்­போ­ரின்­போது விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் ஒரு ஹொலிவூட் படத்தை ஏறக்­கு­றைய ஆறு தட­வை­க­ளுக்குக் குறை­யாமல் பார்த்­த­தாகக் கூறு­கின்­றார்கள். ‘திறி கண்ரட்’ எனப்­ப­டு­கின்ற ஹொலிவூட் படமே அது­வாகும். மன்னன் லியோ­வைப்­பற்­றி­யது. சர­ண­டை­வதா? இல்லை வீர­மாகச் சாவதா என வரு­கின்­ற­போது சர­ண­டை­யாமை என்ற முடி­வுக்குப் போகின்றான் மன்னன் லியோ. முந்­நூறு படை­வீ­ரர்­களைக் தெரிந்தெடுத்­துக்­கொண்ட மன்னன் லியோ தோல்வி நிச்­சயம் எனத் ­தெ­ரிந்துகொண்டும் மூன்று இலட்சம் பெர்­சி­யப்­ப­டை­க­ளுக்கு எதி­ராக யுத்­தத்­திற்குச் சென்றான். இக்­க­தையைக் கொண்­டது தான் திரி கண்ரட் படம். இத்­தி­ரைப்­படம் 2008இல் வெளியா­கி­யது. சில­மா­தங்­க­ளி­லேயே வன்­னிக்கு வந்­து­விட்­டது.

ஈரோஸ் இயக்­கத்தின் தலைவர் பால­கு­மாரன் நான்காம் கட்ட ஈழப்­போரின் போக்கு குறித்து விச­ன­முற்று புலி­களின் தலை­மைக்கு விண்­ணப்­ப­மொன்றைச் செய்தார். அதிலே தமி­ழீழ விடு­த­லைப்­போ­ராட்­டத்தின் வெளியு­ற­வுக்­கொள்கை மீள­ வ­ரை­யப்­ப­ட­வேண்டும். அந்த வெளியு­ற­வுக்­கொள்கை வரை­யப்­ப­டு­வ­தற்கு குழு உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கோரினார். அந்­தக் ­கோ­ரிக்­கைக்கு புலி­களின் தலை­மையின் பதில் என்ன தெரி­யுமா? திறி­கண்ரட் ஹொலிவூட் படம் தான் பதி­லாக இருந்­தது. ஹொலிவூட் உற்­பத்­தி­யி­லி­ருந்து அந்த இயக்கம் எத­னைப் ­பெற்­றுக்­கொண்­டது. சர­ண­டை­யாது சாவ­டையும் மன்னன் லியோ வின் வீரத்தை தான் அவர்கள் பெற்­றுக்­கொண்­டார்கள்.

மாறாக அமெ­ரிக்கா கரு­தி­யது போன்று, இது­வொரு ஜன­நா­யக நாடு. இவ்­வா­றான படங்­களை உற்­பத்திசெய்­கின்­றது என்ற மென்­சக்திக் கவர்ச்­சியை அவர்கள் பெற்­றுக்­கொள்­ள­வில்லை. எனவே ஒரு சமூகம் தன்­னு­டைய பாது­காப்பு, நிதிக்­கட்­ட­மைப்பு என்­ப­வற்­றுக்கு அப்பால் பலத்தை பெற­வேண்­டி­யுள்­ளது. அந்த பலத்தை தான் மென்­சக்தி என ஜோசப் நை கூறு­கின்றார்.

இந்த நிலையில் மென்­சக்தி பற்­றிய சில முடி­வு­க­ளுக்கு வர­மு­டியும். அது அமெ­ரிக்­காவின் கருத்­து­ருவம். ஏக­போக வல்­ல­ர­சாக வளர்ச்­சி­ய­டைந்த அமெ­ரிக்கா தன் ­பா­து­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக தன்­னு­டைய இரா­ஜ­தந்­திர நிகழ்­வுக்குள் உள்­ளெ­டுத்­துக்­கொண்ட ஒரு பிர­யோகம். வன்­சக்­தியின் போதாமை விளைவு. வன்­சக்­தியை அடித்­த­ள­மாக கொண்ட நாடுகள் தான் மென்­சக்தி பற்றி சிந்­திக்­கின்­றன. இது தமி­ழர்­க­ளுக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு விடயம். அதா­வது, வன்­சக்­தியை வைத்­துக்­கொண்டு தான் அவர்கள் மென்­சக்தி பற்றி கதைக்­கின்­றார்கள். இதற்கு சிறந்த உதா­ரணம் ஜேர்­ம­னி­யாகும்.

அண்­மையில் ஆபி­ரிக்­காவில் நடை­பெற்­றது இனப்­ப­டு­கொ­லை­யென ஜேர்­மனி அறி­வித்­தது. அதனால் துருக்­கி­யு­ட­னான உற­வு­களும் பாதிக்­கப்­பட்­டன. ஆனால் கடந்த நூற்­றாண்டின் மிகப்­பெரும் இனப்­ப­டு­கொலையை யூதர்­க­ளுக்கு எதி­ராக ஜேர்­ம­னியே செய்­தது. அதே­நேரம் ஆர்­மேனியப் படு­கொ­லையில் ஜேர்­ம­னியும் மறை­மு­கப்­பங்­காளி. எனவே ஜேர்­மனி தனது பாவக்­கையை கழுவ முற்­ப­டு­கின்­றது. இதன்­மூலம் தன்னை ஒரு மென்­சக்­தி­யாக உயர்த்­திக்­கொள்ள முயல்­கின்­றது. ஏனென்றால் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இரண்­டா­வது பெரும் பொரு­ளா­தார நாடாக ஜேர்­மனி உள்­ளது. உல­கத்தின் நான்­கா­வது பெரி­ய ­பொ­ரு­ளா­தார நாடு ஜேர்­மனி. அது­மட்­டு­மல்ல சிரியா விட­யத்தில் ஜேர்­மனி மிகத்­தா­ர­ள­மாக நடந்­து­கொண்­டது ஏன்?

ஏனென்றால் ஜேர்­மனி தனது முகத்தை மாற்­றிக்­கொள்ள முற்­ப­டு­கின்­றது. கடந்த நூற்­றாண்டில் வன்­சக்­தியைப் பிர­யோ­கித்து இந்த உல­கத்தின் மீது தனது ஆதிக்­கத்தை பெற­மு­னைந்து தோற்­க­டிக்­கப்­பட்ட ஒரு நாடு இந்த நூற்­றாண்டில் தன்­னை­யொரு மென்­சக்­தி­யாக கட்­டி­யெ­ழுப்ப முற்­ப­டு­கின்­றது. அதன் கார­ணத்தால் தான் ஆர்மேனிய இனப்­ப­டு­கொ­லையை இனப்­ப­டு­கொ­லை­யென பகி­ரங்­க­மாக அங்­கீ­க­ரித்­தது. மிக­முக்­கி­ய­மாக கவ­னிக்­க­வேண்­டி­யது ஜேர்மன் தன் வன்­சக்­தியை விட்­டுக்­கொ­டுக்­க­வில்லை.

பிரித்­தா­னியா உலகின் முத­லா­வது மென்­சக்தி நாடென வர்­ணிக்­கப்­ப­டு­கின்­றது. தன் வன்­சக்­தியை விட்­டுக்­கொ­டுக்­க­வில்லை. பிரித்­தா­னிய பிர­தமர் கெமரூன் பத­வி­யி­லி­ருந்து விலகி மிக எளி­மை­யாக தனது வீட்டை விட்டு வில­கிச்­செல்­வதை பார்க்­கின்றோம்; ரசிக்­கின்றோம்; புகழ்­கின்றோம். ஆனால் பிரித்­தா­னியா இந்த வளர்ச்­சியை வன்­சக்தி மூலம் தான் அடைந்­தது. கடந்த நூற்­றாண்­டிலும் அதற்கு முன்­னைய நூற்­றாண்­டு­க­ளிலும் கீழைத்­தேய நாடு­களில் அவர்கள் நடத்­திய ஆக்­கி­ர­மிப்பு யுத்­தங்­களின் மூலம் திரட்­டப்­பட்ட செல்­வங்­களின் மூலமும் தான் பிரித்­தா­னியா தற்­போ­துள்ள வன்­சக்­தியை கட்­டி­யெ­ழுப்­பி­யி­ருந்­தது.

மென்­சக்தி பற்றி கதைக்கும் இந்த நாடுகள் எல்லாம் வன்­சக்தி அடித்­த­ளங்­களை கொண்­டி­ருக்­கின்­றன. வன்­சக்தி இறந்­த­கா­லத்­தினைக் கொண்­டி­ருக்­கின்­றன. வன்­சக்தி இன்றி மென்­சக்தி இல்லை என்ற நிலை தான் உண்டு. ஸ்மாட் பவர் எனப்­ப­டு­வது வன்­சக்­தியும் மென்­சக்­தியும் இணைந்­தது தான் என ஜோசப் நை கூறு­கின்றார். இதுதான் வன்­சக்தி மென்­சக்தி பற்றி உல­க­ளா­விய படம். தற்­போது எமது படத்­திற்கு வருவோம்.

எமது நிலைமை என்ன? புலிகள் இயக்கம் தற்­போது அரங்கில் இல்லை. புலி­களை ஆத­ரிப்­பது சட்­டப்­படி குற்றம். புலி­களின் பாடல்­களை கேட்­பதும் சட்­டப்­படி குற்றம். ஆனால் புலி­களை ஆத­ரிப்­ப­வர்கள் இருக்­கின்­றார்கள். எல்லா ஆபத்­துக்­க­ளையும் மீறி புலி­களின் அபி­மா­னி­க­ளாக இருக்­கின்­றார்கள். வன்­சக்­தி­யாகக் காணப்­பட்ட இயக்கம் தற்­போது மென்­சக்தி கவர்ச்­சி­யாக காணப்­ப­டு­கின்­றதே எப்­படி?

சில கிழ­மை­க­ளுக்கு முன் காஷ்­மீரில் ஒரு இளம் போராளி கொல்லப்­பட்டான். அவரை ஆத­ரிப்­பது அவ­ரு­டைய ஊர்வ­லத்தில் கலந்துகொள்­வது காஷ்­மீரைப் பொறுத்­த­வ­ரையில் சட்­டப்­பி­ரச்­சினை. ஆனால் இரண்டு இலட்சம் காஷ்­மீ­ரி­யர்கள் அந்த இறுதி ஊர்வ­லத்தில் கலந்துகொண்­டார்கள். ஒரு வன்­சக்­திக்கு காட்­டப்­பட்ட மென்­சக்தி ஆத­ரவு அது­வாகும். வன்­சக்தி தமிழ் மக்கள் மத்­தியில் இல்லை. ஆனால் அதன் மென்­சக்தி நீட்சி இருக்­கின்­றது.

தமிழ்த்தரப்பில் மென்­சக்­திக்­கான தேவை உண்டா?

இந்­நி­லையில் எமக்கு ஒரு மென்­சக்தி வேண்டுமா? ஏன் வேண்டும்? தற்­போ­துள்ள நிலை­மையில் முஸ்லிம் பகு­திகள் தவிர்ந்த வடக்கு, கிழக்கை இணைத்து 13ஐ விட கொஞ்சம் செறி­வான அதி­கா­ரங்­களை உடைய ஒரு கட்­ட­மைப்பு போது­மெனக் கரு­து­வோ­மா­க­வி­ருந்தால் மென்­சக்தி தேவை­யில்லை. தற்­போ­துள்ள நிலை­மை­க­ளுக்குள் ஒற்­றை­யாட்­சிக்கு நோகாது ஏதோ­வொன்றைப் பெறப்­போ­கின்றோம் என்றால் எமக்கு மென்­சக்தி தேவை­யில்லை. தமிழ் மக்கள் தங்­களை ஒரு தேசிய இன­மாக சிந்­திக்­கும்­போது தான் மென்­சக்தி அவ­சி­ய­மா­கின்­றது.

(தொடரும்)

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=25/07/2016

 

 
 
 
 
 
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.