Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிலரிக்கு ஆதரவாக மிஷேல் ஒபாமா உணர்ச்சிகர உரை ; ட்ரம்ப் மீது கடும் சாடல்

Featured Replies

ஹிலரிக்கு ஆதரவாக மிஷேல் ஒபாமா உணர்ச்சிகர உரை ; ட்ரம்ப் மீது கடும் சாடல்

160726041707_michelle_obama_640x360_afp_

 

அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டனை அறிவிப்பதில் அமெரிக்க ஜனநாயகக் கட்சி ஒற்றுமையுடன் இருப்பதற்கு, உணர்ச்சிமிக்க உரை ஒன்றை அமெரிக்காவின் முதல் பெண்மணி மிஷேல் ஒபாமா ஆற்றியுள்ளார்.

செனட் அவை உறுப்பினர் பெர்னி சான்டர்ஸின் ஆதரவாளர்களால் அமளியோடு நடத்தப்பட்டப் போராட்டங்களுக்கு பின்னர் பேசிய மிஷேல், ஹிலாரி கிளிண்டன் அழுத்தங்களால் ஒருபோதும் சோர்ந்து போகவில்லை என்று கூறி அமெரிக்க வெளியுறவு செயலாராக அவர் செய்த பணியை புகழ்ந்து பேசினார்.

160726040709_hillary_clinton_640x360_get

 

அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட 140 எழுத்துச் சொற்களைப் பயன்படுத்தி மட்டுமே, பிரச்சனைகளை எளிமைப்படுத்திவிட முடியாது என்று ஹிலாரி கிளிண்டனுக்கு தெரியும் என்று பிலடெல்பியாவில் நடைபெறும் ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் மிஷேல் ஒபாமா கூறினார்.

140 எழுத்து அல்லது இட வடிவங்களை மட்டுமே அதிகபட்சமாக அனுமதிக்கும் ட்விட்டரில் செய்தி அனுப்புவதில் மிகுந்த ஈடுபாடு காட்டும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மீதான தெளிவான தாக்குதல் இதுவென கருதப்படுகிறது.

  160722162521_trump_candidate_640x360_bbc

அணு ஆயுதங்களை ஏவக்கூடிய சங்கேதத் தரவுகாலை அமெரிக்க அதிபராகப் பதவி வகிப்பவர் விரல்நுனிகளில் வைத்திருக்கும்போது, அவர் திடீரென தீர்மானங்களை எடுத்துவிட முடியாது என்று மிஷேல் கூறினார்.

டிரம்ப் பேசி வருவதற்கு கடும் பதிலடியாக, அமெரிக்கா உயர்ந்தது அல்ல என்றும், மீண்டும் உயர்ந்தது ஆக்கப்பட வேண்டும் என்றும் யாரும் ஒருபோதும் சொல்ல அனுமதிக்க கூடாது என்று மிஷேல் வலியுறுத்தியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160726_michelle_obama_speech

  • கருத்துக்கள உறவுகள்

obama.jpg

அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமா ஜனநாயக கட்சியின் மாநாட்டில் ஹிலாரி கிளின்டனை ஆதரித்து உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தினார். அந்த உரை இதோ...

''நன்றி, உங்களுக்குத்  தெரியும் எட்டு வருடங்களுக்கு முன்னால் என் கணவர் ஏன் அதிபராக‌ வேண்டும் என்று நான் உங்களுடன் பேசினேன். எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது அவரது குணம், நேர்மை மற்றும் அன்பைப்  பற்றி உங்களிடம் கூறியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அமெரிக்காவிற்காக எங்களின்  பணியை நாங்கள் சிறப்பாக ஆற்றியுள்ளோம்.

எனது மகள்களைப்  பற்றியும் உங்களிடம் கூறியுள்ளேன். அவர்களுடன் வெள்ளை மாளிகையில் கழித்த காலம், வாழ்வில் மறக்க முடியாத அனுபவத்தைத்  தந்துள்ளது. இங்கு என் குழந்தைகள்  'பப்ளி' குழந்தைகளாக நுழைந்து எட்டு வருடங்களில் இளம் பெண்களாக வளர்ந்துள்ளனர்.இந்தப்  பயணம் எல்லையற்ற மகிழ்ச்சியைத்  தந்துள்ளது. நாங்கள் வாஷிங்டனுக்கு வந்த பிறகு எனது குழந்தைகளைப்  புதிய பள்ளியில் சேர்த்த முதல் நாள் அனுபவம் எனக்கு இன்னமும் நினைவில் உள்ளது. நான் அந்த நாட்களை மறக்கவே இல்லை. 

அது ஒரு அழகான குளிர்கால காலை நேரம், எனது குழந்தைகளைப்  பார்த்தேன். ஒரு கருப்பு நிற  SUV காரில் துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அவர்களின்  முகங்கள் ஜன்னல் ஓரமாக நன்றாக‌ப்  பதிந்து வெளியில் பார்த்துக்  கொண்டிருந்தனர். அப்போது எனக்குத்  தோன்றியது ஒன்றே ஒன்று தான். ''நாம் என்ன செய்தோம்?''. அந்த நொடியில் நான் ஒரு புரிதலுக்கு வந்தேன். இந்த வெள்ளை மாளிகை நாட்கள் இவர்களுக்கு  ஒரு சிறப்பான அடித்தள‌த்தை, அமைத்துக்  கொடுக்க வேண்டும் என்று சிந்தித்தேன்.

DEM2016Conventionvelu.jpg

நானும் ஒபாமாவும் தினமும் எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வின்  சவால்களை எப்படி, இந்த இடத்தில் இருந்து எதிர் கொள்வது என்பதைக்  கூறி வந்தோம். அவர்களிடம் தந்தையின் குடியுரிமை மற்றும் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளுக்கும், தொலைக் காட்சிகளில் கூறப்படும் புள்ளிவிவரங்களுக்கும், தவறான விமர்சனங்களையும் எப்படி எதிர்கொள்வது என்று கூறி அவர்களை முன்கூட்டியே தயார்ப்படுத்தி வந்தோம். சிலர் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டால் நாமும் அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை. நமது நோக்கம் எப்போதெல்லாம் அவர்கள் கீழே போகிறார்களோ அப்போதெல்லாம் நாம் ஒரு படி மேலே செல்கிறோம் என்பது தான்.

நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும், நாங்கள் பேசும் ஒவ்வோரு வார்த்தையையும் அவர்கள் கவனிக்கிறார்கள். ஒரு பெற்றோர்களாக அவர்களுக்கு மிக முக்கியமான ரோல்மாடல்களாக விளங்கியுள்ளோம். மேலும் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதிபராக பராக்கும், ஃப்ர்ஸ்ட் லேடியாக நானும் எங்கள் வேலையைச்  சரியாகச்  செய்துள்ளோம். எங்களுக்குத்  தெரியும் எங்களது வார்த்தைகளும், செயல்களும் எங்கள் குழந்தைகளுக்கானவை  மட்டுமல்ல ஒட்டுமொத்த அமெரிக்காவின் குழந்தைகளுக்கானவை  என்று. அமெரிக்க குழந்தைகள் எங்களிடம் கூறியுள்ளனர். ''உங்களை நான் டிவியில் பார்த்துள்ளேன். உங்களைப்பற்றி பள்ளியில் கட்டுரை எழுதியுள்ளேன்.  கருப்பாக உள்ள சிறுவர்கள் சிலர் என் கணவரைப்  பார்த்து, அவரின் நம்பிக்கை நிறைந்த கண்களைப்  பார்த்து வியந்து, எனது தலைமுடி உங்களைப்  போன்ற இருக்கிறது" என்று கூறியுள்ளனர். 

அதில் எந்தத்  தவறுமில்லை. இந்த நவம்பர் மாதம் வாக்களிக்கப்போகும் போது ஒரு திடமான முடிவோடு செல்வோம். ஜனநாயகக்  கட்சியோ, குடியரசு கட்சியோ, வலதுசாரிகளோ இல்லை இடது சாரிகளோ. இந்த தேர்தல் மட்டுமல்ல, இனிவரும் எல்லா தேர்தல்களிலுமே யார் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறார்களோ, அடுத்த நான்கு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு யார் குழந்தைகள் நலனில் கவனம் செலுத்துகிறார்களோ அவர்களுக்கு தான் வாக்களிக்க உள்ளோம் என்று முடிவு செய்துகொள்வோம்.  இந்த முறை நான் இந்த பொறுப்புள்ளவர்களில் ஒருவராக ஒரு நபரை பார்க்கிறேன். அமெரிக்க அதிபர் என்ற பெயருக்குப்  பொருத்தமானவர் என்று அவரை பார்க்கிறேன். அவர்தான்  எனது தோழி ஹிலாரி கிளின்டன்.

 வீடியோ

அவர் நாட்டுக்காகவும், நாட்டின் குழந்தைகளுக்காகவும்  தனது வாழ்க்கையில் பல விஷயங்களை செய்துள்ளார்.  அவர் குழந்தைக்காக மட்டுமல்ல நாட்டின் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் உள்ளது. குழந்தைகளிடம் பெற்றோர்கள் வெறும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் வாழ்க்கைக்கான கனவுகளை அடைய சொல்லி தர வேண்டும்.அது அவர்களை என்னவாக வர வேண்டும் என்பதை நோக்கி நகர்த்தும். 

ஹிலாரியின் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்ததே. அவரின்  செயல்பாடுகள் அமெரிக்க குழந்தைகளின் வாழ்வில் பெரிய மாற்றங்களை நிகழ்த்தியுள்ளன. அவர் எட்டு வருடங்களுக்கு முன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை. அதனால் அவர் துவண்டு விடவில்லை. கோபப்படவில்லை, அதேபோல் தோல்வியடைந்துவிட்டோம் என்று வீட்டுக்குள் முடங்கிவிடவும் இல்லை. ஏனெனில் அவர் ஒரு மக்களின் ஊழியர். அவர் மீண்டும் நம் நாட்டுக்காக உழைக்க முன் நிற்கிறார். உலகம் முழுவதும் சென்று நமது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இருக்கிறார். அவர் கடுமையாக உழைக்க முடிவு செய்துள்ளார். மக்களின் மதிப்பு மிகவும் உயர்ந்தது. அவர் எதிலிருந்தும் எளிதில் தன்னை வெளியேற்றிக்கொள்ளாத நபர், கடுமையாக வெற்றிக்காக போராடக்கூடியவர்.

DEM2016Conventionvelu1.jpg

எனக்கு ஹிலாரியை நன்றாக தெரியும், அவர் அமெரிக்காவின் அதிபராக அனைத்துத்  தகுதியும் கொண்டவர். அதனால் தான் இந்தத்  தேர்தலில் நான் அவருக்கு ஆதரவளிக்கிறேன்.ஹிலாரி ஒரு விஷயத்தை நன்கு அறிந்து வைத்துள்ளார். நமது குழந்தைகளுக்குச்  சிறந்தவைகளை உருவாக்கி தரவேண்டும் என்பது தான் அது. 

நான் தினமும் காலையில், அடிமைகளால் கட்டப்பட்ட அந்த வீட்டில் தான் எழுந்திருக்கிறேன். எனது இரண்டு மகள்களும் அங்கு தனது நாய்க்குட்டியுடன் விளையாடுவதைப்  பார்த்து  ரசித்திருக்கிறேன். இப்போது இதே இடத்தில் ஒரு பெண்ணை அமெரிக்காவின் அதிபராக பார்க்க விரும்புகிறேன்.

யாரும் அமெரிக்கா சிறந்த நாடு இல்லை என்று கூறவிடாதீர்கள். அமெரிக்கா ஏற்கெனவே உலகின் சிறந்த நாடாகத்  தான் உள்ளது. உண்மையான  தலைவர்களை விரும்புகிறேன். அமெரிக்க குழந்தைகளுக்கு பாதுகாப்பை வழங்கி அவர்களை வழி நடத்தவும் தகுதியுள்ள ஒரு அதிபரை விரும்புகிறேன். அதற்காக நாம், நமது ஒவ்வொரு அவுன்ஸ் ஆர்வம், திறமை, அன்பை நாட்டுக்காக வழங்குவோம்.அதற்காக ஹிலாரி கிளின்டனை அமெரிக்காவின் அதிபராக்குவோம்!

நமக்கான வேலைகளைத் தொடங்குவோம். அனைவருக்கும் நன்றி.

தொகுப்பு: ச.ஸ்ரீராம்

 

http://www.vikatan.com/news/world/66538-michelle-obamas-speech-at-democratic-national-con.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப நடக்கிற பிரச்சனையளை பார்த்தால் டொனால்ட் ரம்ப் வாறது நல்லம் போலை கிடக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.