Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

தொடர்ச்சியாக 25.3 மெய்டன் ஓவர்கள்: ஆஸி.யை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

 

 
ஆஸ்திரேலியாவை 2-வது முறையாக டெஸ்ட்டில் வென்ற இலங்கை அணி. | படம்: ஏ.எஃப்.பி.
ஆஸ்திரேலியாவை 2-வது முறையாக டெஸ்ட்டில் வென்ற இலங்கை அணி. | படம்: ஏ.எஃப்.பி.

பல்லெகிலே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இலங்கை 106 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் அரிய டெஸ்ட் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களான ஓ கீஃப் மற்றும் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் ஆகியோர் இணைந்து 29.4 ஓவர்கள் இலங்கை பந்து வீச்சை வெறுப்பேற்றி 9-வது விக்கெட்டுக்காக 4 ரன்களையே சேர்த்தனர். அதாவது 178 பந்துகளைச் சந்தித்து 4 ரன்களை மட்டுமே சேர்த்து அசாத்தியமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி போராடினர். இதில் 25.3 ஓவர்கள் மெய்டன் என்ற புதிய டெஸ்ட் சாதனையும் நிகழ்த்தப்பட்டது. இன்னிங்ஸின் 63-வது ஓவரின் 5-வது பந்தில் ஓ கீஃப் பவுண்டரி அடித்தார். இதுதான் கடைசி ஸ்கோரிங் ஷாட். ஸ்கோர் 161/8 என்று இருந்தது, ஆனால் ஆட்டம் 88.3-வது ஓவரில் முடியும் போதும் ஸ்கோர் 161 ரன்கள்தான். எனவே 64-வது ஓவரில் தொடங்கிய மெய்டன் 88.3 ஓவர் வரை தொடர் நீடித்து அதே ஸ்கோரிலேயே ஆஸ்திரேலியா ஆட்டமிழந்தது.

இதில் பீட்டர் நெவில் 115 பந்துகளைச் சந்தித்து ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள். ஓ’கீஃப் 98 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள். வெளிச்ச அச்சுறுத்தல் இருந்ததால் டிராவுக்காக மகத்தான தடுப்பாட்ட போராட்டத்தை இருவரும் வெளிப்படுத்தினர்.

83/3 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா மழை அச்சுறுத்தல்களுக்கிடையே தனது இரண்டாவது இன்னிங்சில் 161 ரன்களுக்குச் சுருண்டு 106 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது, இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது 2-வது டெஸ்ட் வெற்றியையே பெற்றது. ரங்கனா ஹெராத் 54 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆஸ்திரேலிய தோல்வித் துயரத்துக்கு பெரும் காரணமாக அமைந்தார்.

முதல் இன்னிங்ஸில் அதுவும் முதல் நாளிலேயே 117 ரன்களுக்கு சுருண்ட இலங்கை அணி தன் 2-வது இன்னிங்சில் குசல் மெண்டிஸின் அபாரமான மிகப்பெரிய சதத்தின் மூலம் உயிர் பெற்றது. ஆஸ்திரேலியா தனது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீஃபை 2-வது இன்னிங்சில் காயம் காரணமாக இழந்ததும் அந்த அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆனாலும் குசல் மெண்டிஸின் இரண்டாவது இன்னிங்ஸ் 176 ரன்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்று டெஸ்ட் இன்னிங்ஸாக அமைந்தது. மேலும் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் லக்சன் சந்தகன் இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். குறிப்பாக ஜோ பர்ன்ஸை 2-வது இன்னிங்ஸில் அவர் பவுல்டு செய்தது இடது கை ஷேன் வார்ன் பந்தாகும். ரங்கனா ஹெராத் இந்த போட்டியில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

காரணம் 1999-ம் ஆண்டு கண்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பிறகு தற்போது ஆஸ்திரேலியாவை இலங்கை வீழ்த்தியுள்ளது. இது மொத்தமாகவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் வெற்றியாகும்.

இன்று காலை ஆடம் வோஜஸ் 12 ரன்கள் எடுத்து ரங்கனா ஹெராத் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பந்து மட்டையில் பட்டு தரையில் பட்டிருக்கலாம் என்ற ஐயத்தில் 3-வது நடுவர் ரிவியூவுக்குச் சென்றது, ஆனால் அது தரையில் படாமல் வந்தது உறுதியானது.

96/4 என்ற நிலையிலிருந்து கேப்டன் ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 43 ரன்களைச் சேர்த்தனர். 37 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்த மிட்செல் மார்ஷ், ஹெராத் பந்து ஒன்று நேராக உள்ளே சறுக்கிக் கொண்டு வர காலில் வாங்கினார். பலத்த முறையீட்டில் நடுவர் நாட் அவுட் என்றார், பந்து மட்டையில் முதலில் பட்டிருக்கலாம் என்ற ஐயத்தில் நாட் அவுட் கொடுக்கப்பட்டது, ஆனால் மேத்யூஸ் ரிவியூவுக்குச் சென்றார். அதில் கால்காப்பில் முதலில் பட்டது தெரியவந்தது, அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஸ்மித் நிதானப் போக்கில் ஆடி 125 பந்துகளில் 1 பவுண்டரி மட்டுமே அடித்து 55 ரன்கள் எடுத்து இலங்கை வெற்றிக்கு குறுக்காக இருந்த போது மார்ஷுக்கு வீசியது போலவே ஒரு பந்தை ஸ்டம்புக்கு நேராக கோணத்தில் உள்ளே கொண்டு வர உள்விளிம்பைத் தாண்டி பேடைத் தாக்கியது இதில் சந்தேகம் எதுவும் இல்லை, ஆனாலும் ஸ்மித் ரிவியூ செய்தார். ஆனால் ஸ்மித்தை ரிவியூ காப்பாற்றவில்லை. ஸ்டார்க் ரன் எடுக்காமல் சந்தகன் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து மென்மையாக ஆட்டமிழந்து சென்றார். நேதன் லயன் முன்னால் வந்து ஆட வேண்டிய பந்தை பின்னால் சென்றார் பந்து திரும்பி பேடைத் தாக்க எல்.பி.ஆனார். இவரும் ரிவியூ செய்து விரயம் செய்தார்.

இதன் பிறகுதான் பீட்டர் நெவில், ஓ’கீஃப் இணைந்து 178 பந்துகள் போராடினர் 4 ரன்களையே அடித்தனர். இலங்கை இடையில் சில்வா பந்தில் பெரிய எட்ஜ் எடுத்து ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்தார் ஓ கீஃப் ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார், இலங்கை ரிவியூக்கள் காலியானதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கடைசியில் சில்வா, 178 பந்துகள் வெறுப்பேற்றிய ஜோடியை முறியடித்தார், நெவில் விக்கெட் கீப்பர் சந்திமாலிடம் கேட்ச் கொடுத்தார். ஓ’கீஃப் 4 ரன்களில் ஹெராத்திடம் பவுல்டு ஆனார். மொத்தம் 88.3 ஓவர்கள் ஆடிய ஆஸ்திரேலிய அணி அதில் 37 ஓவர்களை மெய்டன்களாக்கியது.

பேட்டிங் சரிவு காரணமாகவே ஆஸ்திரேலியா தோல்வி தழுவியது. ஆனால் 117 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டு மீண்டு எழுந்தது இலங்கை. ஆட்ட நாயகனாக் மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார்.

http://tamil.thehindu.com/sports/தொடர்ச்சியாக-253-மெய்டன்-ஓவர்கள்-ஆஸியை-வீழ்த்தி-இலங்கை-அபார-வெற்றி/article8921669.ece

  • Replies 52
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இலங்கை அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

 

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணிக்கு ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Capturea.PNGCapture.PNG

http://www.virakesari.lk/article/9598

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையணிக்கு வாழ்த்துக்கள்...வெற்றிப்பாதை தொடரட்டும்

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் அசத்தல் வெற்றிக்கு பின்னர் அஞ்சேலோ மெத்தியூஸ் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து (முழுமையான விபரம்) 

 

received_10210013604046213இலங்கை அணியின் அசத்தல் வெற்றிக்கு பின்னர் அஞ்சேலோ  மெத்தியூஸ் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து (முழுமையான விபரம்)

நாம் மிக கடினமான காலத்தை கடந்து வந்திருக்கிறோம். இந்தப் போட்டியில் எமக்குக் கிடைத்த வெற்றி மகத்தானது என்றே நான் கருதுகிறேன். ஒட்டு மொத்த அணி வீரர்களின் சிறப்பான பங்களிப்போடு எமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது,

குறிப்பாக குசல் மெண்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரது பங்களிப்பினூடாக வரலாற்று வெற்றியை பெற முடிந்தது என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய அணியுடனான வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மெத்தியூஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் எஞ்சலோ மெத்தியுஸ் வழங்கிய பதில்களையும் இங்கே தொகுத்து தருகிறோம்.

கேள்வி: இலங்கை அணி இன்று சிறப்பானதொரு வெற்றியை பெற்றிருக்கிறது. பாரிய சவால்களுக்கு மத்தியில் வெற்றி எப்படி சாத்தியமானது?

பதில்: ஆம். முதல் நாளைப் பொருத்தவரையில் திறமையை வெளிப்படுத்த முடியாமல்போனபோது பின்னடைவை சந்திக்கப்போகிறோமா என நினைத்தோம்.

இந்தக் களம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவுஸ்திரேலிய அணியை மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையில் மட்டுப்படுத்துவதற்கு நாம் திட்டமிட்டோம்.

அத்தோடு இரண்டாவது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி பந்துவீச்சாளர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வாறு முகம்கொடுக்க முடியும் என்பது பற்றியும் அனைவரும் இணைந்து கதைத்தோம்.

குசல் மெண்டிஸ் மிகச் சிறப்பாக துடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஒத்தாசையாக ஏனைய வீரர்களும் செயற்பட்டனர். இடைநிலை வீரர்களின் முயற்சியின் பயனாக சிறந்த இலக்கினை எட்ட முடிந்தது.

கேள்வி: குசல் மெண்டிஸ் மிகச் சிறப்பாக விளையாடினார். எனினும் ஏனைய முக்கியமான வீரர்கள் சோபிக்கத் தவறிவிட்டார்களே?

பதில்: குசல் மிகத் திறமையான வீரர். அதேபோல் ஏனையவர்களும் திறமையானவர்கள் தான். எனினும் எல்லா சந்தர்ப்பங்களிலும் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போய்விடும்.

எம்மைப் பொருத்தவரையில் குறித்த தினத்தில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ஏனைய வீரர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றே நாம் எண்ணியிருந்தோம்.

கேள்வி: வேகப்பந்து வீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்தியமைக்கான காரணம் என்ன?

பதில்: அவுஸ்திரேலிய அணி வீரர்கள் வேகப்பந்து வீச்சுக்கு மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடியவர்கள். எமது வீரர்களைப் பொருத்தவரையில் கடந்த காலங்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அணியின் வெற்றிக்கு காரணமாயிருந்திருக்கிறார்கள்.

குறிப்பாக சுரங்க லக்மால் உபாதைக்கு உள்ளாகியதன் காரணமாகவே சந்தகானை அணியில் இணைத்துக்கொள்ள தீர்மானித்தோம். அது எமக்கு சாதகமாகவே அமைந்தது.

இந்த ஆடுகளத்தின் தன்மை வேகப்பந்துவீச்சாளர்களை விட சுழற்பந்து வீச்சாளர்களுக்கே சாதகமாக இருந்தது.

கேள்வி: இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்காலத்தில் பின்னடைவை சந்தித்திருந்தது. கிரிக்கெட் ரசிகர்கள் ஒருவித மனக்கசப்பில் இருந்தார்கள். இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இரண்டாவது வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இதனை எவ்வாறு நோக்குகிறீர்கள்?.

பதில்: கடந்த ஆறு,எட்டு மாதங்களாக நாம் பின்னடைவை சந்தித்தோம். கிரிக்கெட் ரசிகர்கள் கூட எம்மைவிட்டு தூர செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவர்களது மனக்கவலையை புரிந்துகொள்ள முடிந்தது. விளையாட்டு வீரர்களாக நாம் அதை வெகுவாக உணர்ந்தோம்.

நாம் வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் மிக அன்பாக எம்மை ஆதரித்தார்கள். தோல்வியின் போதும் ஆதரிக்கிறார்கள். அதை மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த வெற்றி எமக்கு பெரிதும் தேவைப்பட்டது. இது எமக்கு நல்லதொரு அனுபவமாகும்.

அனைத்து போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்றுதான் நாம் களத்தில் விளையாடுகிறோம். ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் செயற்படுகிறோம். வெற்றிபெறுவதற்கு முயற்சிக்கிறோம்.

ஆனால் சில சந்தர்ப்பங்களில் தோல்வி ஏற்படுகிறது. எவ்வாறெனினும் எங்களோடு இருக்கும், எங்களுக்கு அன்பு செலுத்தும் அனைத்து ரசிகர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

கேள்வி: மிக இளம் வீரர்கள் அணியில் சிறப்பாக விளையாடுகிறார்கள். அணித் தலைவர் என்ற வகையில் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன?

பதில்: கடந்த காலங்களில் நாம் தோல்விகள் பலவற்றை சந்தித்தோம். திறமையான இளையவர்களின் தேவைப்பாடு உள்ளது என்பதை அறிவுறுத்திய காலம் அது என நான் நினைக்கிறேன்.

இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடுகிறார்கள். அது மிக அவசியமானதாகும். நாம் ஓரிரு போட்டிகளில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை. அணியை சிறந்தநிலைக்கு கொண்டு செல்வதாயின் அனுபவங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்தும் விளையாட வேண்டும்.

கேள்வி: இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் திறமையை வெளிப்படுத்தவில்லையே? மாற்றம் அவசியப்படுகிறது என நினைக்கிறீர்களா?

பதில்: இந்தப்போட்டியில் குசல் மெண்டிஸ், தனஞ்சய, சந்திமால், ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனையவர்கள் சோபிக்கவில்லை என்றே கூற வேண்டும். ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு எமக்கு மிக அவசியமாகும்.

ஏனென்றால் பந்து எந்தக் கோணத்தில் திசை திரும்புகிறது என்பதை அவர்களே முதலில் கணிப்பார்கள். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசும்போது அதற்கு முகங்கொடுக்கக் கூடிய சூழல் அங்கு உருவாகிறது.

எமது தேர்வுக்குழுவுடன் நான் இதைப்பற்றிக் கதைக்க வேண்டும். இப்போதுள்ள வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி அவர்களுடன் பயணிக்கவே நாம் விரும்புகிறோம். எனினும் தேவைப்பட்டால் மாற்றத்தை கொண்டு வரவும் தயாராகவே இருக்கிறோம்.

கேள்வி: அவுஸ்திரேலியாவுடன் சிறந்த வெற்றி பெற்றிருக்கிறீர்கள். தரவரிசையில் முன்னேறுவது பற்றிய அடுத்த கட்ட செயற்பாடுகள் என்ன?

பதில்: இன்று நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம். நாளைமுதல் அடுத்த போட்டிக்காக எம்மை எவ்வாறு தயார்படுத்துவது என்பதை பற்றி சிந்திப்போம். அவுஸ்திரேலிய அணி அடுத்த போட்டியில் பலம்மிக்க அணியாக விளங்கலாம். ஆகையால் காலியில் நடைபெறும் போட்டியில் திறமையை வெளிப்படுத்தி வெற்றிகாண்பது குறித்தே நோக்க வேண்டியிருக்கிறது.

என்னைப்பொருத்தவரையில் தரவரிசை குறித்து நான் கவலைப்பட்டது கிடையாது.

கேள்வி: இந்த வெற்றி அருகிலுள்ள இளம் வீரரால் (குசல் மெண்டிஸ்) பெற்றுக்கொடுக்கப்பட்ட வெற்றியா?

பதில்: நிச்சயமாக. அவர் அவுஸ்திரேலிய அணியுடன் முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருக்கிறார். அந்த அணியின் பலம்மிக்க பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துடுப்பெடுத்தாடிய விதம் சிறப்பானது. அவர் பல மிகச் சிறப்பாக செயல்பட்டு எதிரணிக்கு சவாலாக திகழ்ந்தார். அவரது துடுப்பாட்டம் ரசிக்கும்படியாகவும் இருந்தது.

http://vilaiyattu.com/16615-2/

  • கருத்துக்கள உறவுகள்

அறிமுகப் போட்டியிலே அவுஸ்திரேலியாவை கதிகலங்க வைத்துள்ளார் இலங்கையின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான லக்ஷான் சந்தகன்.

பல்லேகலவில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் அவர் அனுபவ வீரர் ஹேரத்துடன் கைகோர்த்து அவுஸ்திரேலியாவை மிரள வைத்தார்.

முதல் இன்னிங்சில் அவர் 58 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் 81 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுகப் போட்டியில் 4 விக்கெட் கைப்பற்றிய இடதுகை பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

1935ம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் இடது கை பந்தவீச்சாளர் லெஸ்லி ஸ்மித் தனது அறிமுகப் போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றியமையே இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் தனது முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட அதிக விக்கெட்டுகளாகும்.

இந்நிலையில் 2வது இன்னிங்சிலும் லக்ஷான் சந்தகன் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.

அவுஸ்திரேலிய தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ்க்கு அவர் வீசிய ஒரு சுழற்பந்து அனைவரையும் வியக்க வைத்தது. அந்த பந்தை எதிர்கொள்ள திணறிய பர்ன்ஸ் (29 ஓட்டங்கள்) போல்ட் ஆனார்.

அவுஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 27 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 7 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 185 ஓட்டங்கள் தேவை.

http://www.tamilwin.com/cricket/01/112631

  • தொடங்கியவர்
81 வருட கால சாத­னையை முறி­ய­டித்தார் சந்­தகான்
 
showImageInStory?imageid=287816:tn
 

இலங்கை கிரிக்கெட் அணியின் புது­வ­ர­வான லக் ஷான் சந்­தகான் அறி­முகப் போட்­டியில் 'சைனா மென்' வகை பந்து வீச்சில் சிறந்த பந்து வீச்சு பெறு­தியை கொண்­டவர் என்ற 81 வருட கால சாத­னையை முறி­ய­டித்­துள்ளார்.

இவர் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் முதல் இன்­னிங்ஸில் அனு­பவ வீர­ரான ரங்­கன ஹேரத்­துடன் கைகோர்த்து அவுஸ்­தி­ரே­லி­யாவை மிரள வைத்தார்.

முதல் இன்­னிங்ஸில் அவர் 58 ஓட்­டங்­களை விட்டுக் கொடுத்து 4 விக்­கெட்­டு­களை வீழ்த்­தினார். இதன் மூலம் 81 ஆண்­டு­க­ளுக்கு பிறகு அறி­முகப் போட்­டியில் 4 விக்­கெட்­டு­களை கைப்­பற்­றிய 'சைனா மென்' வகை இட­துகை பந்­து­வீச்­சாளர் என்ற சாத­னையை படைத்தார்.

1935ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லிய அணி யின் 'சைனா மென்' வகை இடது கை பந்­து­வீச்­சாளர் லெஸ்லி ஸ்மித் தனது அறி­முகப் போட்­டியில் 64 ஓட்­டங்­க­ளுக்கு 4 விக்­கெட்­டு­களை கைப்பற்­றி­ய­மையே 'சைனா மென்' வகை இடது கை பந்­து­வீச்­சாளர் ஒருவர் தனது அறி­முகப் போட்­டியில் பெற்­றுக்­கொண்ட அதி சிறந்த பந்து வீச்சுப் பெறு­தி­யாகும்.

இந்­நி­லையில், 2ஆவது இன்­னிங்­ஸிலும் லக் ஷான் சந்­தகான் ஆதிக்கம் செலுத்­தி­யி­ருந் தார்.

அவுஸ்­தி­ரே­லிய தொடக்க வீரர் ஜோ பேர்ன்­ஸுக்கு அவர் வீசிய சுழற்­பந்­தா­னது அனை­வ­ரையும் வியக்க வைத்­தது. அந்த பந்தை எதிர்­கொள்ள திண­றிய பேர்ன்ஸ் தனது விக்­கெட்டை பறி­கொ­டுத்தார்.

 
 
 
  • தொடங்கியவர்

ஆஸியுடனான அடுத்த போட்டியில் நுவான் பிரதீப் விளைாடுவதில் சந்தேகம்

 

ஆஸி அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெறவுள்ளது

247917.jpg

இந்த போட்டியில்  இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

நேற்று (01) பயிற்சியின் போது தொடைப்பகுதியில் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமா பிரதீப் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் புதன்கிழமை இடம்பெறும் உடற்தகுதி பரிசோதனையின் பின்னரே இவர் விளையாடுவதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில் இவர் அடுத்த போட்டியில் விளையாடாத சந்தர்ப்பத்தில் உபாதையிலிருந்து குணமாகியுள்ள வேகப்பந்து வீச்சாளர்  சுரங்க லக்மால் அல்லது புதுமுக வேகப்பந்து வீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ அல்லது அஷித பெர்னாண்டோ விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் இலங்கை அணி அடுத்த போட்டியில் பிரதான 3 சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.virakesari.lk/article/9694

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியாவுக்குக் காத்திருக்கிறது சுழல் பரீட்சை
 
03-08-2016 10:10 PM
Comments - 0       Views - 66

article_1470230453-TamilnkaklhdLEAD-%281இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி, பல்லேகெலையில் இடம்பெற்றபோது, இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி, அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்திருந்தது. பல்லேகெலை ஆடுகளத்தோடு ஒப்பிடும் போது, காலி ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு அதிகமான உதவியை வழங்கக்கூடியது. ஆகவே, சுழற்பந்து வீச்சுப் பரீட்சையொன்றை, அவுஸ்திரேலியா மீண்டும் எதிர்கொள்ளவுள்ளது.

காலி மைதானத்தில் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை, 15 போட்டிகளின் வென்றுள்ளது. இறுதி 14 போட்டிகளில் 9 போட்டிகளின் வென்றுள்ளது. இறுதி 2 போட்டிகளிலும் கூட, இலங்கை அணி வென்றுள்ளது.

இலங்கை அணியில் 2009ஆம் ஆண்டு மீள்வருகையை மேற்கொண்ட பின்னர், 12 போட்டிகளில் பங்குபற்றியுள்ள ரங்கன ஹேரத், 22.77 என்ற சராசரியில் 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அதில் 5 விக்கெட் பெறுதிகள் 8உம், 10 விக்கெட் பெறுதிகள் 3உம் உள்ளடங்குகின்றன. ஆகவே, பல்லேகெல என்பது அவுஸ்திரேலியர்களுக்குக் கடினமானதாக அமைந்திருந்தால், காலி என்பது ஹேரத்தின் கோட்டை. அதை எவ்வாறு எதிர்கொள்ளும் அவுஸ்திரேலியா?

இப்போட்டியில், இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் பிரதீப்பின் உடற்றகுதி தொடர்பாகச் சந்தேகம் எழுந்துள்ளதோடு, அப்போட்டியில் அவர் பங்குபற்றுவாரா என்ற முடிவு, இன்று காலையே எடுக்கப்படவுள்ளது. அவர் விளையாடவில்லையெனில், தனது டெஸ்ட் அறிமுகத்தை விஷ்வா பெர்ணான்டோ மேற்கொள்வார்.

எதிர்பார்க்கப்படும் அணி: திமுத் கருணாரத்ன, கௌஷால் சில்வா, குசால் மென்டிஸ், டினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, குசால் பெரேரா, டில்ருவான் பெரேரா, ரங்கன ஹேரத், லக்ஷான் சந்தகன், விஷ்வா பெர்ணான்டோ.

அவுஸ்திரேலியா சார்பாக, காயமடைந்த ஸ்டீவன் ஓஃப் கீ-க்குப் பதிலாக, ஜோன் ஹொலன்ட், தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொள்ளவுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி: டேவிட் வோணர், ஜோ பேர்ண்ஸ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், அடம் வோஜஸ், மிற்சல் மார்ஷ், பீற்றர் நெவில், மிற்சல் ஸ்டார்க், நேதன் லையன், ஜொஷ் ஹேஸல்வூட், ஜோன் ஹோலன்ட்.

- See more at: http://www.tamilmirror.lk/178587#sthash.QFT7mIon.dpuf
  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கை துடுப்பாட்டம் ( நேரடி ஒளிபரப்பு )

 

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டி இன்று (04) காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில்  துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

17 வருட சாதனையை முறியடித்து முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி இந்த போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த அவுஸ்திரேலிய அணி இந்த போட்டியில் மிகவும் பல்வேறு யுத்திகளுடன் பலமான அணியாக களமிறங்கும்.

இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப்புக்கு பதிலாக புதுமுக வீரர் விஷ்ல பெர்னண்டோ களமிறங்கியுள்ளார்.

ஆஸி அணி சார்பில் புதுமுக வீரரான பெகிவ் கிரீன் மற்றும் ஷோன் மார்ஸ் களமிறக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு இரு அணிகளும் பலமான நிலையில் களமிறங்க  இரண்டு அணி ரசிகர்களுக்கும் இந்த போட்டி விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

http://www.virakesari.lk/article/9771

  • தொடங்கியவர்

இலங்கை முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்கள் (படங்கள் இணைப்பு)

Published by Pradhap on 2016-08-04 16:37:39

 

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான  இரண்டாவது டெஸ்ட்  கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளை இழந்துள்ளது.

Co_rqxeVMAECyF6.jpg

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 86 ஒட்டங்களயும் அணித்தலைவர் மெத்தியுஸ் 54 ஒட்டங்களையும் பெற்றதுடன், குசல் பெரேரா 49 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழந்தார்.

248959.3.jpg

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

தற்போது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலிய அணி 19 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டினை இழந்துள்ளது.

குறித்த விக்கட்டினை தனது முதலாவது போட்டியில் விளையாடும் விஷ்வ பெர்னாண்டோ கைப்பற்றியுள்ளார்.

248965.jpg248967.3.jpg248971.3.jpg248969.jpg248951.3.jpg248945.3.jpg248941.3__1_.jpg248935.3.jpg

http://www.virakesari.lk/article/9804

  • தொடங்கியவர்
ஹட்-ட்ரிக் சாதனை புரிந்தார் ஹேரத்
 

article_1470374674-Herath.jpgஇலங்கை அணியின் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், டெஸ்ட் போட்டிகளில் ஹட்-ட்ரிக் சாதனை புரிந்த இரண்டாவது இலங்கையர் என்ற சாதனையைப் புரிந்துள்ளார். இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் காலியில் இடம்பெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலேயே இச்சாதனையை அவர் புரிந்தார்.

இப்போட்டியின் இரண்டாவது நாளான இன்று, போட்டியின் 25ஆவது ஓவரின் முதலாவது பந்தில், அடம் வோஜஸை ஆட்டமிழக்கச் செய்த ஹேரத், அடுத்த பந்தில், பீற்றர் நெவிலை ஆட்டமிழக்கச் செய்தார். ஹட்-ட்ரிக் பந்தில், ஹேரத்தின் பந்தை எதிர்கொண்ட வேகப்பந்து வீச்சாளர் மிற்சல் ஸ்டார்க்கின் காலில் பந்து அடித்தது. ஆனால், அது ஆட்டமிழப்புக் கிடையாது என நடுவர் அறிவித்தார்.
எனினும், தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் மூலமாக அந்தத் தீர்ப்பை, இலங்கைத் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், மறுபரிசீலனை செய்ய, அது ஆட்டமிழப்பு என அறிவிக்கப்பட்டது. எனவே, ரங்கன ஹேரத்தின் ஹட்-ட்ரிக் உறுதிப்படுத்தப்பட்டது.
நுவான் சொய்ஸாவுக்குப் பின்பு, டெஸ்ட் போட்டிகளில் ஹட்-ட்ரிக் சாதனை புரிந்த இலங்கையர் என்ற பெருமை, ரங்கன ஹேரத்துக்குக் கிடைத்தது.

- See more at: http://www.tamilmirror.lk/178720/ஹட-ட-ர-க-ச-தன-ப-ர-ந-த-ர-ஹ-ரத-#sthash.123czaGR.dpuf

 

 

 

106 ஓட்டங்களுக்குச் சுருண்டது அவுஸ்திரேலியா
 
 

article_1470376622-SL-2.jpgஇலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் இப்போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ஓட்டங்களுடன் இன்றைய நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி, சுழற்பந்து வீச்சாளர்களின் சுழலில் சிக்கித் தடுமாறியது. இன்றைய தினத்தில் 19.5 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 52 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், 106 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் நேற்றைய தினம் ஆட்டமிழந்த டேவிட் வோணரின் 42 ஓட்டங்கள், இன்றைய தினம் இறுதிவரை போராடி, இறுதி விக்கெட்டாக ஆட்டமிழந்த மிற்சல் மார்ஷின் 27 ஓட்டங்கள், இன்றைய தினம் முதலாவது விக்கெட்டாக வீழ்த்தப்பட்ட உஸ்மான் கவாஜாவின் 11 ஓட்டங்கள் ஆகியன மாத்திரமே, இரட்டைப்படை ஓட்டங்களாக அமைந்தன.

பந்துவீச்சில் ஹட்-ட்ரிக் சாதனை புரிந்த ரங்கன ஹேரத், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டில்ருவான் பெரேராவுக்கும் 4 விக்கெட்டுகள் கிடைக்க, லக்‌ஷான் சந்தகானும் அறிமுக வீரர் விஷ்வா பெர்ணான்டோவும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் முதல் இனிங்ஸில் இலங்கை அணி 281 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், 175 ஓட்டங்களால் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/178727/-ஓட-டங-கள-க-க-ச-ச-ர-ண-டத-அவ-ஸ-த-ர-ல-ய-#sthash.Kk3PDOww.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஹெராத் அபார ஹாட்ரிக்: 106 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா

 

மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டுடன் ஹாட்ரிக் சாதனை புரிந்த ஹெராத்தை பாராட்டும் இலங்கை வீரர்கள். | படம்: ஏ.பி.
மிட்செல் ஸ்டார்க் விக்கெட்டுடன் ஹாட்ரிக் சாதனை புரிந்த ஹெராத்தை பாராட்டும் இலங்கை வீரர்கள். | படம்: ஏ.பி.

கால்லே மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-நாள் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா தனது ஆகக்குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ரங்கனா ஹெராத் 25-வது ஓவரின் 4, 5, மற்றும் 6-வது பந்தில் முறையே வோஜஸ் (8), நெவில் (0), ஸ்டார்க் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். ஆஸ்திரேலியா 106 ரன்களுக்குச் சுருண்டது. இலங்கை தன் முதல் இன்னிங்சில் 281 ரன்கள் எடுக்க (மீண்டும் மெண்டிஸ் 86) தற்போது 2-வது இன்னிங்சில் இலங்கை அணி 6விக்கெட்டுகள் இழப்புக்கு 121ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், மேத்யூஸ் 47 ரன்கள் எடுத்து லயனிடம் சற்று முன் ஆட்டமிழந்தார். தனஞ்ஜய டிசில்வா 9 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

இன்று காலை 54/2 என்று தொடங்கிய ஆஸ்திரேலியா அடுத்த 52 ரன்களுக்கு ஹெராத், திலுருவன் பெரேரா சுழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் மீதி 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களுக்குச் சுருண்டது.

2-ம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 11 விக்கெட்டுகள் விழுந்தது ஏதாவது சாதனையாக இருக்கலாம். உஸ்மான் கவாஜா 11 ரன்களில் ஆஃப் ஸ்பின்னர் திலுருவன் பெரேராவின் வொர்க் அவுட்டுக்கு பணிந்தார், ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை கவாஜாவுக்கு வெளியே திருப்பி கொண்டிருந்த பெரேரா ஒரு பந்தை அதே லெந்தில் பிட்ச் செய்து திருப்பாமல் விட்டார், பின்னால் சென்று ஸ்பின்னரை ஆடும் கெட்டப் பழக்கம் உள்ள ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருவரான கவாஜா பவுல்டு ஆனார்.

முன்னதாக ஸ்மித்துக்கு ஒரு பந்தை ஹெராத் ஆஃப் அண்ட் மிடிலிலிருந்து வெளியே திருப்ப பீட் ஆன ஸ்மித் கொடுத்த ஸ்டம்பிங் வாய்ப்பை சந்திமால் தவறவிட்டார்., ஆனால் இதை ஸ்மித் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை,, ஹெராத் பந்தில் உடனடியாக பவுல்டு ஆனார்.

ஹெராத் வீசிய 7-வது ஓவரில்தான் வோஜஸ், நெவில், ஸ்டர்க் ஆகியோர் ஆட்டமிழந்தனர். வோஜஸ் கவர் திசையில் கருணரத்னவின் அருமையான கேட்சுக்கு முதலில் வெளியேறினார். அடுத்த பந்து ஹெராத் உள்ளே கொண்டு வர பீட் ஆகி கால்காப்பில் வாங்கினார் நெவில் நேர் அவுட். மிட்செல் ஸ்டார்க்கும் கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். நுவான் சோய்ஸாவுக்கு பிறகு டெஸ்ட் ஹாட்ரிக் எடுத்த பவுலர் ஆனார் ஹெராத்.

நேதன் லயன் ஷார்ட் லெக்கில் மெண்டிஸின் அருமையான கேட்சிற்கு பெரேராவிடம் அவுட் ஆனார். கடைசியில் ஹெராத் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசிய மிட்செல் மார்ஷ் 27 ரன்களில் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் பந்தில் லாங் ஆஃபில் கேட்ச் ஆகி வெளியேறினார். ஆஸ்திரேலியா 33.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 106 ரன்களுக்குச் சுருண்டது.

தற்போது இலங்கை 2-வது இன்னிங்சில் 143/6 என்ற நிலையில் 318 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஹெராத் 4 விக்கெட்டுகளையும் பெரேரா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

http://tamil.thehindu.com/sports/ஹெராத்-அபார-ஹாட்ரிக்-106-ரன்களுக்கு-சுருண்டது-ஆஸ்திரேலியா/article8948072.ece?homepage=true

Sri Lanka 281 & 202/7 (53.0 ov)
Australia 106
Sri Lanka lead by 377 runs with 3 wickets remaining

13912497_1095271683854858_80845704904940

  • தொடங்கியவர்

413 ஓட்டங்கள் எடுத்தால் அவுஸ்திரேலியா வெற்றி பெறலாம்...

இன்று மாத்திரம் 18 விக்கெட்கள் வீழ்த்தபட்டுள்ளது. இன்னும் 6 ஓவர்கள் இன்றைய ஆட்டத்தில் வீசபட வேணும்.

Sri Lanka 281 & 237 (59.3 ov)
Australia 106
Sri Lanka lead by 412 runs with 0 wickets remaining

காலி மைதானத்தில் ஒரே நாளில் பல விக்கெட்கள் காலி ஆவது ஒன்றும் புதுமை அல்ல..tw_blush:

இன்றுதான் 2 வது நாள் ஆட்டம் அதுக்குள் 3 இன்னிங்க்ஸ் முடிந்து விட்டது...<_<

மொத்தம் 30 விக்கெட்கள் 2 நாளில் இதுவரை.

Sri Lanka 281 & 237
Australia 106 & 3/1 (1.0 ov)
இன்றையதினம் 18 வது விக்கெட்டும் வீழ்ந்துள்ளது..
 
JA Burns c de Silva b Herath 2 (4b 0x4 0x6) SR: 50.00

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இன்றையதினம் 20 வது விக்கெட்டும் வீழ்ந்துள்ளது..

NM Lyon c Silva b MDK Perera 0 (7b 0x4 0x6) SR: 0.00

இன்றையதினம் 21 வது விக்கெட்டும் வீழ்ந்துள்ளது..

MDK Perera to Khawaja, OUT

UT Khawaja b MDK Perera 0 (1b 0x4 0x6) SR: 0.00

Smith to face the hat-trick ball

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2 நாளில் 33 விக்கெட்கள் 649 ஓட்டங்கள்

  • தொடங்கியவர்

தொடரை இழக்கும் தோல்வியின் பிடியில் ஆஸ்திரேலியா: 2-வது இன்னிங்சிலும் சரிவு

நோபாலன்

Comment (1)   ·   print   ·   T+  
 
 
 
 
 
உஸ்மான் கவாஜா, திலுருவன் பெரேரா பந்தில் பவுல்டு ஆன காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.
உஸ்மான் கவாஜா, திலுருவன் பெரேரா பந்தில் பவுல்டு ஆன காட்சி. | படம்: ஏ.எஃப்.பி.

தொடர்ந்து ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தாறுமாறாக தடுமாறி வரும் ஆஸ்திரேலிய அணி கால்லே டெஸ்ட் 2-ம் நாள் ஆட்ட முடிவில் 413 ரன்கள் இமாலய வெற்றி இலக்கை எதிர்கொண்டு 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் என்று தோல்வியின் பிடியில் உள்ளது.

டேவிட் வார்னர் ஆக்ரோஷமான 18 பந்து 22 ரன்களிலும் கேப்டன் ஸ்மித் 1 ரன்னிலும் களத்தில் உள்ளனர். ஜோ பர்ன்ஸ் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆனார், இம்முறை 2 ரன்கள் எடுத்து ஹெராத் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இரவுக்காவலனாக இறங்கிய நேதன் லயன் பெரேராவின் பந்தில் அருகிலேயே சில்வாவின் அருமையான கேட்ச்சிற்கு ரன் எடுக்காமல் வெளியேறினார்.

அடுத்த பந்தே உஸ்மான் கவாஜா ரன் எடுக்காமலேயே பெரேராவின் பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ஒரே நாளில் ஒரே பவுலரிடம் ஒரே மாதிரியாக அவுட் ஆகி ‘அசத்தினார்’ கவாஜா. இந்த பலவந்த மீள்நிகழ்வுக்கு தான் தள்ளப்படுவது பற்றி கவாஜாவுக்கு மோசமான கனவுகள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு ஒரு பந்து ஸ்பின் ஆகுமா அல்லது ஆகாதா என்பதை கணிப்பதே கடினமாக இருக்கிறது, அதனால் முன்னால் வந்து ஆடுவதா, பின்னால் சென்று ஆடுவதா என்ற குழப்பத்தில் ஆடிவருகின்றனர். ஆனால் அவர்கள் பெரும்பாலும் முன்னாலும் வருவதில்லை பின்னாலும் செல்வதில்லை.

தாக்குதல் ஆட்டம் என்றால் ஸ்வீப் ஷாட் மட்டும்தான் அவர்கள் கைவசம் உள்ளது, ஸ்வீப் ஷாட் கத்தி மேல் நடப்பது போன்று, ஒவ்வொரு முறையும் மட்டையை பந்துட கனெக்ட் செய்து விட முடியாது, விட்டால் எல்.பி.தான், பந்து வெளியே பிட்ச் ஆகிறதா என்பதை கணிக்க வேண்டும் அத்தகைய பந்துகள் கூட உட்புறமாக திரும்பினால் ஸ்வீப் ஷாட் ஆடுவதில் பீட் ஆனால் எல்.பி. நிச்சயம்.

இன்று மொத்தம் 21 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. 2 நாள் ஆட்டத்தில் சுமார் 171 ஓவர்களில் 33 விக்கெட்டுகள் விழுந்துள்ளன என்றால் பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலியாவை ஹாட்ரிக் சாதனை புரிந்த ஹெராத், பெரேரா ஆகியோர் 106 ரன்களுக்குச் சுருட்ட தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி உணவு இடைவேளைக்கு முன்னரே, சில்வா, கருணரத்னே, மெண்டிஸ் ஆகியோரை முறையே ஹேசில்வுட், ஸ்டார்க் ஆகியோரிடம் இழந்தது. எம்.டி.கே.ஜெ. பெரேரா ஆக்ரோஷமாக ஆடி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 38 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து லயன் பந்தில் பவுல்டு ஆனார். மேத்யூஸ் ஆக்ரோஷ அணுகுமுறை மேற்கொண்டார். 47 ரன்களில் அவர் 5 பவுண்டரிகள் அடித்து லயன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்று பவுல்டு ஆனார். முன்னதாக சந்திமால் மிட்செல் ஸ்டார்க்கின் 3-வது விக்கெட்டாக எட்ஜ் செய்து வெளியேறினார்.

பந்து வீச்சிலும் கலக்கி வரும் திலுருவன் பெரேரா 2-வது இன்னிங்சில் பேட்டிங்கிலும் கலக்கினார், இவர் 89 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 ரன்கள் எடுத்தார். ஹெராத் மீண்டு 26 ரன்கள் பங்களிப்பு செய்தார். இலங்கை தன் 2-வது இன்னிங்ஸில் 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 413 ரன்கள்.

மிட்செல் ஸ்டார்க் 50 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது, ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களான நேதன் லயன் அறிமுக வீச்சாளர் ஜோன் ஹாலந்து ஆகியோருக்கு சாத்துமுறை.

ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. இன்னொரு தொடர் தோல்வியை ஆஸ்திரேலியா தவிர்ப்பது கடினம் என்றே தெரிகிறது. காரணம் ஸ்பின்னுக்கு எதிராக மிகமிக பலவீனமான அணுகுமுறையைக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.

http://tamil.thehindu.com/sports/தொடரை-இழக்கும்-தோல்வியின்-பிடியில்-ஆஸ்திரேலியா-2வது-இன்னிங்சிலும்-சரிவு/article8948883.ece?homepage=true

  • தொடங்கியவர்
Sri Lanka 281 & 237
Australia 106 & 133/7 (39.0 ov)
Australia require another 280 runs with 3 wickets remaining
  • தொடங்கியவர்

13679989_1298592490159844_57710422494502

இலங்கை  281 & 237
அவுஸ்திரேலியா 106 & 183 (50.1 ov)
Sri Lanka won by 229 runs

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸியை கதிகலங்க வைத்து தொடரை கைப்பற்றியது இலங்கை

 

 

இலங்கை மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 229 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

249183.3__1_.jpg

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று தனது ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசால் மெண்டிஸ் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

ஆஸி அணி சார்பில் மிச்சல் ஸ்டார்க் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸி அணி 106 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா மற்றும் ஹேரத் தலா 4 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 237 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து, ஆஸி அணிக்கு வெற்றியிலக்காக 413 ஓட்டங்களை நிரிணயித்தது.

இதன்படி துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 183 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் டில்ருவான் பெரேரா 6 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

http://www.virakesari.lk/article/9869

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை

 

 
திலுருவன் பெரேரா, மேத்யூஸ், ஹெராத். | படம்: ஏ.எப்.பி.
திலுருவன் பெரேரா, மேத்யூஸ், ஹெராத். | படம்: ஏ.எப்.பி.

கால்லே டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 229 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இலங்கையின் திலுருவன் பெரேரா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

25/3 என்ற நிலையில் இன்று களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களையே தாக்குப் பிடிக்க முடிந்தது. வார்னர் மட்டுமே அதிரடி முறையில் 41 ரன்களை அதிகபட்சமாக எடுக்க ஆஸ்திரேலியா 183 ரன்களுக்குச் சுருண்டு 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வார்ன் - முரளிதரன் கோப்பையை அடுத்த டெஸ்ட் முடிந்தவுடன் இலங்கை கேப்டன் மேத்யூஸ் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

திலுருவன் பெரேரா அரைசதம் எடுத்தும், ஒரே டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் இலங்கை வீரரானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 25 முறையே அரைசதம், 10 விக்கெட்டுகள் மைல்கல் நடைபெற்றுள்ளது, இதில் பெரேரா 11-வது டெஸ்டில் தனது 50-வது விக்கெட்டைக் கைப்பற்றி அதிவேக 50 விக்கெட்டுகளுக்கான இலங்கை சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

கடந்த 19 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் கூட அரைசதம் எடுக்காமல் இந்த டெஸ்ட் முடிந்துள்ளது. 38 பந்துகள் தங்கள் அணியின் மானத்தைக் காக்க போராடிய பீட்டர் நெவில் கடைசியில் ஹெராத் பந்தை பிளிக் செய்து விட்டு இரண்டு அடிகள் கிரீசுக்கு வெளியே எடுத்து வைத்ததுதான் தாமதம், ஷார்ட் லெக்கில் நின்றிருந்த குசல் மெண்டிஸ் அபாரமாக பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க ரன் அவுட் ஆனார், இலங்கை வெற்றிக் கொண்டாட்டம் தொடங்கியது.

டேவிட் வார்னர் 31 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்து இன்று முதலில் ஆட்டமிழந்தார். பெரேரா பந்து திரும்பும் என்று எதிர்பார்த்தார் திரும்பவில்லை கால்காப்பில் வாங்கினார், அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ரிவியூ தோல்வியில் முடிந்தது. ஸ்டீவ் ஸ்மித் இன்று அருமையான கவர் டிரைவ், ஆன் டிரைவுடன் இன்று தொடங்கினார், இறங்கி வந்து ஆடினார், ஆனால் 30 ரன்களில் அவர் பெரேரா பந்தில் பேட்-பேடு கேட்சில் வெளியேறினார், இம்முறை நடுவர் நாட் அவுட் என்றார், ஆனால் ரிவியூவில் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

மிட்செல் மார்ஷ், இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் சந்தகன் பந்தை ஆடாமல் கால்காப்பில் தடுத்தார், கடுமையான முறையீட்டை நடுவர் மறுக்க மீண்டும் ரிவியூ கிங் மேத்யூஸ் முடிவெடுக்க, சந்தகன் பந்து திரும்பி ஸ்டம்பை அடிக்கும் என்று ரீப்ளேயில் தெரிய 18 ரன்களில் மிட்செல் மார்ஷ் அவுட்.

ஆடம் வோஜஸ் 28 ரன்களில் ஸ்பின்னை முறையாக ஆட முடியாமல் ரிவர்ஸ் ஸ்வீப் உத்தியைக் கையாண்டார், ஒரு முறை பெரேரா பந்தை அப்படிச செய்யப்போக பந்தை விட்டார் பவுல்டு ஆகி வெளியேறினார். இது உணவு இடைவேளைக்கு முன்பான நடப்பு.

இடைவேளைக்குப் பிறகு சம்பிரதாயம் நிறைவேறியது, மிட்செல் ஸ்டார்க், ஒரு சிக்ஸ் 3 பவுண்டரி அடித்து 26 ரன்களில் ஹெராத் பந்தில் பவுல்டு ஆனார். ஹேசில்வுட் பெரேரா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இது பெரேராவின் 10-வது விக்கெட்டாகும். அதன் பிறகுதான் பீட்டர் நெவில், மெண்டிஸின் ‘ரிப்ளெக்ஸிற்கு’ ரன் அவுட் ஆனார். இலங்கை முகாமில் கொண்டாட்டம்! குதூகலம்!

ஆட்ட நாயகனாக பெரேரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கை ஸ்பின்னர்கள் கிராஸ் சீம் பவுலிங்கையும் மேற்கொண்டனர் இதனால் சில பந்துகள் பிட்ச் ஆகி திரும்பாமல் சறுக்கிக் கொண்டு சென்றன, இத்தகைய பந்துகளையும் திரும்பும் பந்துகளையும் ஆஸி.வீரர்களால் ஒரு போதும் திருப்திகரமாகக் கணிக்க முடியவில்லை. ஸ்மித் ஆட்டம் முடிந்து கூறியபோது, “இத்தகைய பவுலிங்கை எதிர்கொள்வது எங்களுக்கு அன்னியமானது” என்று கூறியதில் உண்மை உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலியாவை-229-ரன்கள்-வித்தியாசத்தில்-வீழ்த்தி-தொடரை-வென்றது-இலங்கை/article8952916.ece?homepage=true

  • தொடங்கியவர்

17 வருடங்களின் பின் அவுஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றது இலங்கை அணி. 

 

 

FB_IMG_1470471992897

#SLvAUS 2வது டெஸ்ட் – 17 வருடங்களின் பின் அவுஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றது இலங்கை அணி.

இலங்கை – அவுஸ்திரேலியா அணிகளிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இலங்கையணி வென்றதன் மூலம் 17 வருடங்களுக்கு பின் ஒரு டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றது.

காலி மைதானத்தில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

முதல் இரு விக்கெட்களையும் 9 ஓட்டங்களுக்கு இழந்த இலங்கை அணி குசல் பெரேரா (49) மற்றும் குசல் மெண்டிஸ் இணைப்பாக பகிர்ந்த 108 ஓட்டங்கள் மூலம் 100 ஓட்டங்களை கடந்தது. குசல் மெண்டிஸ் 86 ஓட்டங்களை பெற்று 4வது விக்கெட்டாக இலங்கை 184 ஓட்டங்களை பெற்ற போது ஸ்டார்க்கிடம் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்களை சாய்த்தார் மிட்செல் ஸ்டார்க்.

மத்தியூஸ் 54 ஓட்டங்களையும் தனஞ்சய டீ சில்வா 37 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஸ்டார்க் 5 விக்கெட்களையும் லயோன் இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

Australian cricketer Mitchell Starc (3L) acknowledges the crowd after taking a haul of five Sri Lankan wickets during the second day of the second Test cricket match between Sri Lanka and Australia at The Galle International Cricket Stadium in Galle on August 5, 2016. / AFP / ISHARA S.KODIKARA (Photo credit should read ISHARA S.KODIKARA/AFP/Getty Images)

*ஸ்டார்க்கின் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் பெறுதி காலி மைதானத்தில் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரின் சிறந்த பெறுதியாகும். இதை பின் தானே 2ம் இன்னிங்சில் முறியடித்தார்.

*ஆஸியின் விக்கெட் காப்பாளர் பிற்றர் நெவில் 50 ஆட்டமிழப்புக்கு காரணமான விக்கெட் காப்பாளரானார்.

முதல் இன்னிங்ஸில் இலங்கையின் 281 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடிய ஆஸி தன் முதலாவது விக்கெட்டை ஓட்டமெதும் பெறாத நிலையில் இழந்தது (பெர்ன்ஸ் அறிமுக வீரர் பெர்னாண்டோவின் பந்தில் ஆட்டமிழந்தார்). அதிரடியாக ஆடிய டேவிட் வார்னர் 42 ஓட்டங்களுடன் டில்றூவன் பெரேராவின் பந்தில் ஆட்டமிழக்க 2ம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

249177.4

இதன் போது ஆஸி 54 ஓட்டங்களை பெற்று இரு விக்கெட்களை இழந்திருந்தது. உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

1ம் நாள் ஆட்ட நேர முடிவில் இரு விக்கெட்களை இழந்து 54 ஓட்டங்களை பெற்றிருந்த ஆஸி, 2ம் நாள் ஆட்டம் ஆரம்பமான போது 52 ஓட்டங்களுக்குள் தனது 8 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

FB_IMG_1470378096225

இறுதி விக்கெட்டாக மார்ஷ் 27 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் ஹேரத் மற்றும் டில்றுவான் பெரேரா தலா நான்கு விக்கெட்களை வீழ்த்தினர்.

*இது இலங்கையில் ஆஸி பெற்ற குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். இதற்கு முன் 120 ஓட்டங்கள்.

*இப்போட்டியில் இலங்கையின் ஹேரத் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இலங்கை சார்பில் ஹாட்ரிக் சாதனை படைத்த 2வது  வீரரானார் ஹேரத்.

FB_IMG_1470413056062

2ம் இன்னிங்ஸை 175 ஓட்டங்கள் முன்னிலையுடன் ஆரம்பித்த  இலங்கை அணி, 237 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

முதல் இன்னிங்ஸ் போல் 9 ஓட்டங்களுக்கு இரு விக்கெட்களை இழந்த இலங்கை அணி, 3வது விக்கெட்டாக குஷால் மெண்டிசை 31 ஓட்டங்களை பெற்ற நிலையில் இழந்தது.

குஷால் பெரேரா 35 ஓட்டங்களையும் மத்தியூஸ் 47 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். டில்ருவான் பெரேரா மற்றும் டீ சில்வா (34) ஆகியோர் 7வது விக்கெட்டுக்காக  51 ஓட்டங்களை பகிர்ந்தனர். டில்ருவான் பெரேரா, ஹேரத் (26) ஆகியோர் இணைந்தும் 61 ஓட்டங்களை பகிர்ந்தனர். டில்ருவான் பெரேரா 64 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சில் மிட்சேல் ஸ்டார்க் ஆறு விக்கெட்களையும் லெயோன் இரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.

*ஸ்டார்க்கின் இந்த பந்து வீச்சுப் பெறுதி , இலங்கையில் ஆஸி பந்து வீச்சாளரின் மிகச்சிறந்த பெறுதி என்பதுடன் காலியில் வேகப் பந்து வீச்சாளரின் மிகச்சிறந்த பெறுதியும் ஆகும். இதுவே ஸ்டார்கின் மிகச்சிறந்த பெறுதியும் ஆகும்.

சூழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் 11 விக்கெட்களை மிட்ச்செல் ஸ்டார்க் சாய்த்திருந்தார்.

இலங்கை, ஆஸிக்கு 413 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முதல் இடத்தை தக்க வைக்க வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அவுஸ்திரேலியா களமிறங்கியது.

ஆஸி முதல் பந்துப்  பரிமாற்றத்திலே ஜோ பேர்ன்ஸை(2) இழந்தது. ஆஸி 10 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரா காப்பாளராக வந்த நாதன் லயோனையும்(0) உஸ்மான் கவாஜாவையும்(0) அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழக்க செய்தார் டில்ருவான் பெரேரா.

FB_IMG_1470399096611

2ம் நாள் நிறைவில் ஆஸி மூன்று விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை பெற்றது. களத்தில் ஆஸியின் தலைவர் ஸ்மித்(1*) மற்றும் உபதலைவர் வார்னர்(22*) ஆகியோர் களத்தில்  இருந்தனர்.

3ம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமான போது வார்னர், ஸ்மித் ஆகியோர் 51 ஓட்டங்களை இணைப்பாக பெற்ற போது வார்னர் 41 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஸ்மித்தும் சிறிது நேரத்தில் 30 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அடம் வோஜசும்(28) மிச்சேல் மார்ஷும்(18) இணைப்பாக 39 ஓட்டங்களை பகிர்தனர். ஸ்டார்க் 26 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க இறுதி விக்கெட்டாக பீட்டர் நெவில் 24 ஓட்டங்களை பெற்று ரன்அவுட் ஆக 183 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது ஆஸி.

பந்து வீச்சில் டில்ருவன் பெரேரா 6 விக்கெட்களை வீழ்த்தினார்.249161

*பதினோரு போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்தின டில்ருவன் பெரேரா, இலங்கை சார்பில் விரைவாக 50 விக்கெட்களை சாய்த்த வீரரானார்.

இந்தப் போட்டியில் 229 ஓட்டங்களால் வென்று 17 வருடங்களின் பின் அவுஸ்திரேலியா அணியை டெஸ்ட் தொடர் ஒன்றில் வென்றது இலங்கை அணி.

இன்றைய தோல்வி மூலம் ஆஸியின் அணித்தலைவர் ஸ்மித் தனது தலைமையில் முதல் டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்தார்.

போட்டியில் ஆட்ட நாயகன் விருதை டில்ருவான் பெரேரா தனதாக்கினார்.

 

FB_IMG_1470472006935 FB_IMG_1470472012367

249189

http://vilaiyattu.com/17-வருடங்களின்-பின்-அவுஸ்த/

  • தொடங்கியவர்

காலியில் இலங்கையின் சுழல் சுறாவளியில் சிக்குண்டு காணமல் போன கங்காருக் கூட்டம். 

 

 

249183.4

காலியில் இலங்கையின் சுழல் சுறாவளியில் சிக்குண்டு காணமல் போன கங்காருக் கூட்டம்.

காலி மைதானத்தில் ஆரம்பமான அவுஸ்ரேலியாவுடான இலங்கைக்கான டெஸ்ட் போட்டி ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக மாறியுள்ளது. இந்த போட்டி இலங்கையின் 250வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கவொரு விடயமாகும்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. முதல் இனிங்சில் இலங்கை அணி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றது. முதல் டெஸ்டில் கலக்கிய குஷால் மென்டிஸ் 86 ஓட்டங்களையும், மதேயூஸ் மற்றும் குஷால் பெரேரா முறையே 49, 54 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணிக்கு வலுச் சேர்த்தனர். ஸ்டார்க் மிகச் சிறப்பாகப் பந்து வீசி 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார். முதலாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 106 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இது அவுஸ்ரேலிய அணியின் இலங்கைக்கு எதிரான இனிங்சொன்றில் பெற்றுக் கொண்ட ஆகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும். இதற்கு முதல் அவுஸ்ரேலிய அணியினரின் இலங்கைக்கு எதிரான குறைவான ஓட்டங்கள் 120 ஆகும். இந்த இனிங்சில் ஹேரத் ஹட்ரீக் சாதனையைப் புரிந்தார்.

இலங்கை அணி சார்பில் டெஸ்டில் ஹட்ரீக் சாதனை புரிந்த இரண்டாவது பந்து வீச்சாளர். இதற்கு முன்னர் சிம்பாவேயிற்கு எதிரான போட்டியில் நுவான் சோய்சா ஹட்ரீக் சாதனையைப் புரிந்திருந்தார். ஹேரத் மற்றும் டில்ருவான் பெரேரா தலா நான்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார்.

தொடர்ந்து தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 237 ஓட்டங்களைப் பெற்றனர். டில்ருவான் பெரேரா மற்றும் மத்தேயூஸ் முறையே 64, 47 ஓட்டங்களைப் பெற்றனர். இந்த இனிங்சிலும் ஸ்டார்க் 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி மொத்தமாக 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார். 413 எனும் வெற்றி இலக்கோடு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி தில்ருவான் பெரேராவின் சூழலிற்குள் மூழ்கி போனது.

183 ஓட்டங்களுக்குள் போட்டியின் மூன்றாவது நாளிலேயே அனைத்து விக்கெட்டுக்களையும் அவுஸ்ரேலிய அணி இழந்தது. 229 எனும் மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியைத் தனதாக்கியது.

FB_IMG_1470472006935

டில்ருவான் பெரேரா 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இந்த டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார். வேகமாக இலங்கை அணிசார்பில் 11 போட்டிகளில் 50 விக்கெட்டுகளைக் கடந்த ஒரு பந்து வீச்சளாராகவும் டில்ருவான் பெரேரா மாறியுள்ளார். முதலில் அஜந்த மென்டிஸ் 12 போட்டிகளிலே 50 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இருந்தார்.  மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அரைச்சதத்தினையும், 10 விக்கெட்டுக்களையும் கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் டில்ருவான் பெரேரா தான்.

ஒரே நாளில் 21 விக்கெட்டுக்கள் சாய்க்கப்ப்ட்டுள்ளன. அதனை விட முதல் இரு நாட்களிலும் மொத்தமாக 33 விக்கெட்டுக்கள் சாயக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் தரவரிசையில் ஏழாம் நிலையிலுள்ள இலங்கை அணி முதலாவது நிலையிலுள்ள அவுஸ்ரேலியாவினை வெற்றி கொண்டு தொடரைக் கைப்பற்றியதென்பது மிகப் பெரிய விடயமாகும்.

249201

அஞ்சலோ மத்யூஸ் எனும் இலங்கை அணித்தலைவரே, இலங்கை அணி இரு தடவைகள் வெற்றி பெற்ற சமயத்தில் தலைவராகக் கடமையாற்றிய பெருமைக்குரியவர். அதனோடு தொடரையும் கைப்பற்றி இருந்தார்.

இந்த இரு போட்டிகளையும் வைத்து இலங்கை அணி வீரர்களை நிச்சயம் ஒரு அலசல் அலச வேண்டும்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான டிமிது கருணாரத்னா மற்றும் கௌஷால் சில்வா என்ன செய்கிறார்கள் என்று இன்று மட்டும் எனக்கு விளங்கவில்லை. ஒரு போட்டியில் துடுப்பாட்டத்தில் ஆரம்ப இணைப்பாட்டம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததது. நல்ல ஒரு ஆரம்பத் துடுப்பாட்டத்தை ஆரம்பிக்கும் பட்சத்தில் அடுத்து வரும் வீரர்களுக்கு மன ரீதியிலான அழுத்தம் ஏற்படுவது குறைவாக இருக்கும். ஆனால் இந்த இணைப்பாட்ட ஜோடியின் இறுதி பதினொரு இனிங்க்சுகளில் இவர்கள் பெற்றுக் கொண்ட இணைப்பட்டங்கள் பின்வருமாறு, 0,1,8,11,1,56,1,0,6,6 ,0. ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் இணைப்பாட்டம் அரைச்சதத்தினைக் கடந்துள்ளனர்.

ஏனைய போட்டிகளில் பூச்சியத்தினைக் கடக்கவே மிகக் கஷ்டப்படுகின்றனர். இந்த இணைப்பாட்டம் தேவை தானா என்று நிச்சயம் தெரிவுக் குழு யோசிக்கவேண்டும். உபுல் தரங்கவிற்கு வாய்ப்பினை வழங்கி பார்க்கலாம்.

முதலாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் குஷால் பெரேரா சிறப்பாக துடுப்பெடுத்தாடுகிறார் என்றே சொல்ல வேண்டும். தேவையான தருணத்தில் அடித்தும், தனது ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து, ஓரு பக்கத்தால் தனது விக்கெட்டினைப் பாதுகாத்து வருகிறார்.

இரண்டாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் குஷால் மென்டிசினைப் பற்றி கடந்த எனது பதிவில் அதிகம் அலசியுள்ளேன். உண்மையில் ஒரு இளைய வீரர் இப்படியான திறமையை வைத்திருப்பார் தொடர்ந்து இலங்கை அணிக்குத் தேவை. அவரின் சொட்ஸ் தெரிவு என்னைப் பொறுத்தவரையில் மிகச் சிறப்பு.

அடுத்து மூன்றாவது வீரரான மத்யூசினை பற்றி சொல்லித் தெரியா வேண்டியதில்லை. எந்த நேரத்தில் எது தேவையோ அதற்கேற்றாற் போல துடுப்பெடுத்தாடும் சிறந்த தலைமைத்துவப் பண்புடையவர்.

நான்காவது வீரரான சந்திமாலிற்கு ஏன் இன்னும் வாய்ப்புக்களினை  வழங்குகின்றனர் என்று இன்னும் எனக்குப் புரியவில்லை. ஏதும் ஒரு இனிங்சில் மாத்திரம் விளயாடி விட்டு மிகுதி அனைத்துப் போட்டிகளில் சொதப்பும் ஒரு வீரர் இலங்கை அணிக்குத் தேவையா என்ற கேள்வி தான் எழுகிறது. விக்கெட் காப்பளாராக ஒருவர் தேவை எனின் அதற்கு குஷால் பெரேராவினைப் பயன்படுத்தலாமே!!

உண்மையில் மத்திய வரிசைத் துடுப்பாட்டம் டெஸ்ட் போட்டிகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது யாவரும் அறிந்த்தது. திலான் சமரவீர போன்ற வீரர்களை இலங்கை அணி எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கு சந்திமால் சரியான வீரராக எனக்குத் தெரியவில்லை. முடியுமெனின், அவரினை ஆரம்ப துடுப்பாட்டத்தில் இணைய வைத்தால் ஏதும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.

ஐந்தாவது துடுப்பாட்ட வீரரான தனஞ்சய சில்வாவிற்கும் அனுபவம் தேவை. மத்திய வரிசைத் துடுப்பாட்டத்தின் பலத்தினை அதிகரிக்க இவரின் பங்கும் அளப்பரியது.

அடுத்து ஆறாவது துடுப்பாட்ட வீரர் டில்ருவான் பெரேரா. முதலே கூறி விட்டேன். மேற்கூறிய ஏழு வீரர்களில் நால்வர் ஐவராவது சிறப்பாக விளையாடும் பட்சத்தில் இலங்கை அணி ஒரு ஸ்திரமான ஓட்ட எண்ணிக்கையைக் கடக்கும்.

249207

பந்துவீச்சினை எடுத்து நோக்கும் போது, சுழற்பந்து வீச்சாளர் ஹேரத் உள்ளார். இவரிற்கு பக்கபலமாக  சண்டகன் மற்றும் டில்ருவான் பெரேரா. சுழற்பந்து வீச்சின் பலம் ஏனைய அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. சரியான முறையில், சரியான நேரத்தில் இவர்களைப் பயன்படுத்தப்படல் வேண்டும். மேலும் தனன்ஞ்ய சில்வாவும், ஏனைய சுழற்பந்து வீச்சாளர்களோடு இணைந்து, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஒரு பந்து வீச்சினை வீசுகிறார்.

ஆனால் வேகப்பந்து வீச்சு எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியே. முதலாவது இனிங்சில் தனது கன்னிப்போட்டியில் விளையாடிய பெர்னாண்டோ தனது இரண்டாவது பந்திலேயே விக்கெட்டினைக் கைப்பற்றியிருந்தார். இவரும் வளர்க்கப்பட வேண்டிய ஒரு பந்துவீச்ச்ளாராவார். மத்யூஸ் தேவையான நேரத்தில் கை கொடுக்கும் ஒரு பந்து வீச்சாளர்.

இலங்கையைப் பொறுத்தவரை இனிமேல் ‘இல்லாமல் போகப்போகின்ற அணி’ என்கின்ற எதிர்மறை நம்பிக்கையை இந்த தொடர் சுக்கு நூறாக்கியிருக்கின்றது!

இந்தியா, பாகிஸ்தான் தவிர்த்து இலங்கை மண்ணில் வேறெந்த அணியும் ஆதிக்கம் செலுத்த இனியும் இடமில்லை என்பதை மத்தியூஸ் குழுவினர் உரக்க சொல்லி விட்டார்கள்!

புதிய வீரர்கள் கொடுத்த நம்பிக்கையில்; மலிங்கா (?), சமீர மீள வரும் போது இலங்கை ஒருநாள் போட்டிகளில் மீண்டும் எந்த களத்திலும் சிறப்பாக ஆடுவார்கள் என்கின்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது, பார்க்கலாம்…!

அடுத்து SSC போட்டியின் வெற்றி / சமநிலை மனோதிடத்தை தக்கவைக்க அவசியம். SSC மைதானத்தின் ஒவ்வொரு புல்லும் அரவிந்த, சனத், மஹேல, சங்கா, சமரவீர போன்றோருக்கு அத்துப்படி; ஆனால் இன்றய இலங்கை வீரர்களுக்கு SSC யின் அனுபவம் மிக மிக குறைவு. வேகம், சூழல், துடுப்பாட்டம் என மூன்றுக்கும் சாதகமாக SSC மைதானம் அமைக்கப்பட்ட வரலாறு உண்டு!

புதியவர்கள் நம்பிக்கை தந்தாலும்; ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதற்கு / சமநிலைக்கு இட்டுச்செல்ல அவசியமான நீண்டநேர துடுப்பாட்ட திறன் அவசியம் தேவை.

Sri Lankan cricketers Angelo Mathews, center, and Rangana Herath, right, with team members acknowledge the crowd as they celebrate their victory over Australia by 229 runs in the second test cricket match in Galle, Sri Lanka, Saturday, Aug. 6, 2016. (AP Photo/Eranga Jayawardena)

அடுத்த போட்டியினை வெற்றி கொள்ளுமிடத்து, வெள்ளையடிப்பு என்ற ஒரு அதிசயத்தக்க நிகழ்வு இடம்பெறும். இல்லாவிடினும் தொடரை வெற்றி பெற்று விட்டோம் என்ற குதூகலமே போதும்.

கொண்டாட வேண்டிய வெற்றியை நிச்சயம் கொண்டாட வேண்டும்.

அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இலங்கை அணிக்கு விளையாட்டு.கொம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

http://vilaiyattu.com/16932-2/

1 hour ago, நவீனன் said:

காலியில் இலங்கையின் சுழல் சுறாவளியில் சிக்குண்டு காணமல் போன கங்காருக் கூட்டம்

இதை எழுதியவரும் இணைத்தவரும் அவுசுக்கு போனால் இருட்டடி விழும் என்பதை மறந்தது ஏனோ? :grin::grin:

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
12 minutes ago, ஜீவன் சிவா said:

இதை எழுதியவரும் இணைத்தவரும் அவுசுக்கு போனால் இருட்டடி விழும் என்பதை மறந்தது ஏனோ? :grin::grin:

இணைத்தவருக்கு அங்கு போகும் தேவையில்லை..<_<

  • தொடங்கியவர்
டெஸ்ட் தரவரிசையில் முதல் நிலை அணியை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது: ஏஞ்சலோ மெத்யூஸ்
2016-08-08 22:32:18

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் உலகின் முதல் நிலை அணியாக விளங்கும் அவுஸ்திரேலியாவை வென்றமை மிகவும் திருப்தி அளிக்கிறது என இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

 

அவுஸ்திரேலியாவுடனான வோர்ன் முரளி டெஸ்;ட் கிரிக்கெட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வென்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் வெற்றியையும் இலங்கை அணி தனதாக்கியுள்ளது.

 

18445dilruwan-perera.jpg

டில்ருவன் பெரேரா, ஏஞ்சலோ மெத்யூஸ், ரங்கன ஹேரத்



பல்லேகலையில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் வென்றதன் மூலம், 1999 ஆம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியொன்றின் வெற்றியை இலங்கை அணி முதல் தடவையாக சுவைத்தது. காலியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வென்றதன் மூலம் 17 வருடங்களின் பின் முதல் தடவையாக அவுஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்துள்ளது.

 

இரண்டாவது போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 281 ஓட்டங்களைப் பெற, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்டங்களுடன் சுருண்டது. இலங்கை வீரர் ரங்கன ஹேரத் இப்போட்டியில் ஹெட்றிக் விக்கெட்களை வீழ்த்தினார். இலங்கையின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நுவன் சொய்ஸாவுக்கு அடுத்தாக ஹெட்றிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் ரங்கன ஹேரத் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் முதல் இன்னிங்ஸில் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

அதேவேளை டில்ருவன் பெரேரா 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை  237 ஓட்டங்களைப் பெற்றது. தில்ருவன் பெரேரா 64 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு மேலும் 481 ஓட்டங்கள் தேவையான நிலையில் போட்டியின் 3 ஆவது நாளான நேற்றுமுன்தினம் அவ்வணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது. ஆனால், 183 ஓட்டங்களுடன் அவ்வணி சுருண்டது.

 

முதல் இலங்கையர்

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் தில்ருவன் பெரேரா 70 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தினார். ரங்கன ஹேரத் 74 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 

டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 4 ஆவது தடவையாக 5 அல்லது அதற்கு அதிகமான விக்கெட்களை வீழ்த்தினார் டில்ருவன்  பெரேரா. இப்போட்டியில் மொத்தமாக 99 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்களை வீழ்திய டில்ருவன்  பெரேரா, ஒரு டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அரைச் சதம் குவித்ததுடன் பந்துவீச்சில் 10 விக்கெட்களையும் பெற்ற முதல் இலங்கையரானார். டெஸ்ட் கிரிகெட் வரலாற்றில் 25 தடவைகள் மாத்திரமே இச்சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் டில்ருவன் பெரேரா தெரிவானார்.

 

18445galle.jpg

 


இப்போட்டில் வென்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் கருத்துத் தெரிவிக்கையில், 'இந்த போட்டி முழுவதும் எனது அணியினர் எனக்கு பின்புலமாக நின்றனர். அவர்களுக்கு எனது விசேட நன்றி. அதேபோன்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தேர்வாளர்கள் அளித்த ஆதரவுக்கும் நன்றி. தரவரிசையில் முதல் நிலையிலுள்ள அணியை வென்றமை மிகுந்த திருப்தியளிக்கிறது. எமக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கும் நாம் நன்றி கூறுகிறோம்' எனக் கூறினார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=18445#sthash.ltbTvGsm.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.