Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிமுகவிலிருந்து சர்ச்சை எம்.பி., சசிகலா புஷ்பா நீக்கம்... ஜெயலலிதா அதிரடி!

Featured Replies

அதிமுகவிலிருந்து சர்ச்சை எம்.பி., சசிகலா புஷ்பா நீக்கம்... ஜெயலலிதா அதிரடி!

4.jpg

சென்னை:  டெல்லி விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் தகராறு செய்ததாக சர்ச்சைக்குள்ளாகிய அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கட்சியிலிருந்து நீக்கி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா.

டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் நேற்று பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். டெல்லி விமான நிலையத்தில் இரண்டு பெரிய கட்சிகளின் எம்.பிக்கள் கை கலப்பில் ஈடுபட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக எம்.பியுடன் மோதலில் ஈடுபட்ட சசிகலா புஷ்பாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.

கழக கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சசிகலா புஷ்பா நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

 

இன்று காலை மாநிலங்களவை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சசிகலா புஷ்பா, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர், “தனக்கு தமிழகத்தில் பாதுகாப்பு உள்ளது. ஆனால் டெல்லியில் பாதுகாப்பு இல்லை. இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் என அஞ்சுகிறேன். மேலும் நான் எனது பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தலுக்குள்ளாகியிருக்கிறேன். எனவே எனக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும்” என்று பேசினார். மாநிலங்களவையில் சசிகலா புஷ்பா தன் பேச்சை நிறைவு செய்வதற்குள்ளாகவே கட்சியிலிருந்து கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அரசியில் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/66710-sasikala-pushpa-removed-from-aiadmk-jayalalitha.art

  • தொடங்கியவர்

'என் தலைவர் என்னை அறைந்தார்!’ - மக்களவையில் அழுத சசிகலா புஷ்பா

sasivc1.jpg

புதுடெல்லி:  திமுக எம்.பி.,யுடனான சர்ச்சை சம்பவத்திற்குப்பின் நடந்த விசாரணையின்போது அதிமுக கட்சித்தலைவர் ஜெயலலிதா தன்னை அறைந்ததாக மாநிலங்களவையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா கூறிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியிலிருந்து சென்னைக்கு திரும்ப, தி.மு.க எம்.பி திருச்சி சிவாவும், அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பாவும் கடந்த சனிக் கிழமை   பிற்பகல் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒருவருக்கொருவர் அப்போது ஒருமையில் பேசிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.  இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவலர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், இன்று மாநிலங்களவை கூட்டத்தில் கலந்து கொண்டார் சசிகலா புஷ்பா. அப்போது பேசிய அவர், “இரு விஷயங்களை பேச விரும்பிகிறேன். கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன்.

திருச்சி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன். ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்தப் பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன். இந்த நாட்டில் பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன்.

என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பி யை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப்  பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில்கூட வாழமுடியவில்லை" என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

 

மாநிலங்களவையில் இப்படி பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்த வேளையில்தான், அதிமுக தலைமை,சசிகலா புஷ்பாவை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு,அனைத்துப் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.   

http://www.vikatan.com/news/tamilnadu/66712-sasikala-pushpa-sensitive-speech-about-her-leader.art

 

  • தொடங்கியவர்

யார் இந்த சசிகலா புஷ்பா? சசிகலா விவகாரத்தில் என்ன நடந்தது? முழு பின்னணி!

sasikalapushpa60011.jpg

துவும் நிரந்தரமல்ல என்பதுதான் அரசியலில் நுழைபவர்கள் எவரும்  முதலில் அறிந்துகொள்ளவேண்டிய பாடம். அதிமுகவில் அதுதான் அரிச்சுவடி.

அரசியலில் யாரும் எதிர்பாராத ஜெட் வேகத்தில் உயரச் சென்று அதிகாரங்களை அடைந்து, புகழையும் பெருமையையும் அடைந்தவர் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. தன் கட்சியின் தலைவர் தன்னை அறைந்தார் என மாநிலங்களவையின் மையத்தில் நின்று அவர் சொல்லிய ஒற்றை வார்த்தையால் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமடைந்திருக்கிறார் அவர். ஏற்கெனவே இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவரான ஜெயலலிதாவை இன்னும் பெரிய சர்ச்சையில் தன் பேச்சினால் சிக்கவைத்திருக்கிறார் சசிகலா புஷ்பா.

யார் இந்த சசிகலா புஷ்பா...

தூத்துக்குடி மாவட்டம் முதலூர் அடையல் என்ற கிராமத்தில் சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்தவர் சசிகலா புஷ்பா. ஆசிரியப் படிப்பு படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்த சமயத்தில், நெல்லை மாவட்டம் உவரி கிராமத்தை சேர்ந்த லிங்கேஸ்வர திலகர் என்பவருடன் திருமணமானது. ஆசிரியை ஆவதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. அதற்காக அடுத்தடுத்து கல்வித் தகுதிகளை ஏற்படுத்திக்கொண்டாலும் வேலை கிடைத்தபாடில்லை. விரக்தியுடன் சென்னைக்கு கணவருடன் ரயில் ஏறினார் சசிகலா புஷ்பா .
சென்னையில் கணவர் எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்துவந்த ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் நர்சரி டீச்சராக சேர்ந்தார். கூடவே மசாஜ் சென்டர் ஒன்றையும் வருமானத்திற்காக நடத்தி வந்தார்.

அந்த சமயத்தில் அ.தி.மு.கவில் செல்வாக்கோடு வலம்வந்த ஜெயக்குமாருடன் அறிமுகம் ஏற்பட்டது. அதன் மூலம் அதிமுகவில் பொறுப்புகள் பெற முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை. அதன் பின்னர், அவரின் செல்வாக்கில் சென்னை அண்ணாநகரில் மகளிருக்கான தங்கும் விடுதி ஒன்றை நடத்திவந்தார். அவரின் கணவரும் இந்த சமயத்தில் வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்தார்.

sasikalapushpa6001.jpg

ஆனாலும் பொருளாதார ரீதியாக சிரம திசைதான். போராட்டம் மிகுந்த வாழ்க்கையை நடத்தி வந்த சூழலில்தான் தான் நடத்திவந்த விடுதியில் படித்த மாணவிகள் சிலரை தற்போதைய மேயர் சைதை.துரைசாமி நடத்திவந்த ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சிக்கு சேர்த்துவிட நேர்ந்தது. சைதை துரைசாமியுடன் அறிமுகம் ஆன அந்த கால கட்டத்தில்தான் சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் அரசியல் ஆசை துளிர்விடத் தொடங்கியது. சைதை. துரைசாமியுடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அதிமுக நிகழ்ச்சிகளில் தலைகாட்ட  தொடங்கினார். கொஞ்ச நாளில் கட்சியின் தலைமை அலுவலகம் பக்கம் அடிக்கடி தலைகாட்டினார். அதன் மூலமாக இரண்டாம் கட்டத் தலைவர்களுடன் நல்ல பழக்கம் ஏற்பட தொடங்கியது.

அ.தி.மு.கவில் பெயரும் புகழும் பெற வேண்டுமானால் தலைமைக்கு நெருக்கமானவர்களுக்கு அறிமுகமாயிருக்கவேண்டும் என்ற திட்டமிடுதலுடன் தலைமையுடன் நெருக்கமான சிலருடன் நட்பு கொண்ட சசிகலா, அந்த வரிசையில் அதிமுக வின் நிழல் மனிதரான மணல் தொழிலதிபர் ஒருவருடன் நட்பு கிடைத்தபின் விடுவிடுவென வளர்ச்சி அடைந்தார்.

மணல் தொழிலதிபருடன் நெருக்கமாக இருந்த சசிகலா, கட்சியில் தனக்கு ஏதாவது பொறுப்பு வாங்கிக் கொடுக்குமாறு அவரை நெருக்க தொடங்கினார். சசிகலா புஷ்பாவின் இந்த தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக அந்த தொழிலதிபர் மூலம், 'மிடாஸ்' மோகனிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவரிடமும் கட்சிப் பொறுப்பு பற்றியே சசிகலா புஷ்பா வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு கார்டனுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நெருக்கமானார். இது கட்சியில் இன்னும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள காரணமானது.

அதனால்,சென்னையில் குடியிருந்த போதிலும் 2010 ம் ஆண்டு நெல்லை மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பொறுப்பு சசிகலா புஷ்பாவுக்கு கிடைத்தது. கட்சி மேலிட வட்டத்தில் நல்ல அறிமுகமானவராக வலம் வரத் துவங்கினார் . 2011 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியின் வேட்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பரவலாக உள்ளூர்க் கட்சி நிர்வாகிகள் பலரும், ‘யார் இந்த சசிகலா புஷ்பா? இவருக்கு எப்படி சீட் கிடைத்தது?’ என்று விவாதிக்க  தொடங்கினார்கள். அந்தத் தேர்தலில்  ஜெயலலிதா மற்றொரு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதுடன், தனக்கு தெரியாமல் முதல் பட்டியல் வெளியானதாகவும் அறிவித்தார்.

sasikalapushpa60022.jpg

இரண்டாவது பட்டியலில் சசிகலா புஷ்பா பெயர் இடம்பெறவில்லை. வாய்ப்பு மறுக்கப்பட்டபோதும், கட்சித் தலைமையுடன் நெருக்கமாக இருக்க பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். 2011ல் கட்சியின் இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் துணைச் செயலாளர் பொறுப்பு கிடைத்தது. சசிகலா புஷ்பாவுக்கென்று ஆதரவு வட்டம் உருவானது. கட்சியின் சார்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படும் அளவுக்கு ஜெயலலிதாவால் அப்போது முக்கியத்துவம் தரப்பட்டது.

அந்த அளவுக்கு கட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்க தொடங்கியது. பின்னர் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக வேண்டும் என்கிற கனவுடன் தீவிரமாகச்  செயல்பட்டார். கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் மூலமாக காய் நகர்த்தினார். ஆனால், சொந்த ஊர்ப் பிரச்னை அதற்கு முட்டுக் கட்டையானது. சென்னையில் வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியம் இல்லை என்பதை புரிந்து கொண்ட அவர், தூத்துக்குடி மாவட்டத்துக்கு தனது வாக்காளர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றினார்.
அவர் எதிர்பார்த்தது போலவே, தூத்துக்குடி மாநகராட்சித் தேர்தலில், மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.அதில் வெற்றி பெற்று மேயராகவும் தேர்வானார். அந்த சமயத்தில் மாநகராட்சிக் கூட்டம் நடந்த போதே ஆணையரை பேச விடாமல் மைக்கை பிடுங்கியதாக சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் வெளியாகி சர்ச்சையானது. கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும், கட்சித் தலைமையுடன் இருந்த நெருக்கம் காரணமாக அவருக்கு ஏற்றம் மட்டுமே ஏற்பட்டது. மேயர் பொறுப்பில் இருந்தபோதே 2013ல் மாநிலங்களவை உறுப்பினராகும் வாய்ப்பைக் கொடுத்தது, அ.தி.மு.க. தலைமை. அத்துடன், மாநில மகளிரணி செயலாளர் பொறுப்பும் அவரைத் தேடி வந்தது. மாநிலங்களவை அதிமுக கொறடாவாகவும் அவர் ஆக்கப்பட்டார். பளபளப்பாக சென்று கொண்டிருந்த  அவரது அரசியல் வாழ்வினை ஒரு ஆடியோ அதகளம் செய்துவிட்டது.

ஆண் நண்பர் ஒருவருடன் சசிகலா புஷ்பா செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி கட்சி எல்லையைத் தாண்டி,  அவர் மற்றவர்களின் கவனத்திற்கும் வந்தார். அந்த ஆடியோவில் அவர், ‘நேற்று நான் *******இருந்தேன். டெல்லியில் குளிரா இருக்குல்ல.. அதான் *****ந்தேன்’ என்கிற ரீதியில் பரபரப்பாக பேசியதுடன், ‘****** மாவட்ட ஆட்சியர் ஒரு தத்தி. அவருக்கு எதுவுமே தெரியாது’ என்று அதிகாரிகளையும் மட்டம் தட்டி,  தம் சொந்தக் கட்சி  தொடர்பான ரகசியங்கள் சிலவற்றையும் பேசியிருந்தார்.

sasikalapushpa6002.jpg

அதன் பின்னர் இறங்கு முகம்தான் கட்சியில். கட்சியின் அனைத்துப் பொறுப்புகளும் பிடுங்கப்பட்டன. அத்துடன் மாநிலங்களவை கொறடா பொறுப்பில் இருந்தும் கழற்றிவிடப்பட்டார். ஆனாலும், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். மீண்டும் இழந்த இடத்தை திரும்பப் பெற்று விடமுடியும் என்கிற நம்பிக்கையுடனேயே அவர் செயல்பட்டார். ஆனால் திமுக எம்.பி சிவாவுடனான சர்ச்சை அதை இன்னும் சிக்கலாக்கியது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக மாநிலங்களவை எம்.பி.,திருச்சி சிவாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், இந்த புகைப்படங்கள் உண்மை இல்லை என்றும் தனது கணவருடன் இருந்த படங்களை யாரோ விஷமிகள் 'மார்பிங்' செய்து வெளியிட்டு தன்னை அசிங்கப்படுத்துவதாகவும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் திருச்சி சிவாவை மையப்படுத்தியே சர்ச்சை அவர் வாழ்வில் மையம் கொண்டுவிட்டது.

சசிகலா, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) சென்னை திரும்ப, டெல்லி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கிருந்த திருச்சி சிவாவை சட்டையைப் பிடித்து அடித்ததாக செய்தி வெளியாகி, இப்போது அவர் கட்சியை விட்டு கட்டம் கட்டப்படும் அளவுக்கு நிலை வந்துவிட்டது. தனது கட்சித் தலைமையை அவமரியாதையாக பேசியதால்தான் உணர்ச்சிவசப்பட்டு சிவாவை அடித்து விட்டதாக அவர் அந்த சம்பவத்திற்கு காரணம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உடனடியாக விளக்கம் அளிக்க சென்னையில் ஜெயலலிதாவை நேற்று சந்தித்தார்.

trichysiva.jpgஅந்த சந்திப்பு அவரது அதிமுகவுடனான அரசியல் வாழ்வின் இறுதி என்றே இப்போது சொல்லப்படுகிறது. காரணம் இரும்புப் பெண்மணி என இந்திய மீடியாக்களால் சொல்லப்படும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இமேஜை அசைத்துப் பார்க்கும் விதமாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் நடுநாயகமாக நின்று சர்ச்சைக் கருத்துக்களைப் பேசியிருக்கிறார்.

கிட்டத்தட்ட அதிமுகவிற்கும் அதன் தலைமைக்கும் பெரும் சங்கடங்களைத் தரும் பேச்சு அது. “கடந்த இரு நாட்களாக சமூக வலைத்தளங்களில் இரு எம்.பிக்கள் தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் பற்றி பேச விரும்புகிறேன். திருச்சி சிவாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். திருச்சி சிவா மிகவும் நேர்மையானவர். என் கட்சித் தலைவர் பற்றி, அவர் பேசியதற்காக, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு செய்துவிட்டேன் . திருச்சி சிவாவிடமும், திமுக தலைவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. நான் என் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய என் தலைவரால் நிர்பந்திக்கப்படுகிறேன்.

ஆனால், எனக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. இந்த பதவியை எனக்கு கொடுத்தற்கு, நான் மிகவும் நன்றி உணர்வோடு இருப்பேன். ஆனால், என்னை இந்தப் பதவியில் இருந்து விலக வற்புறுத்துகிறார்கள். நான் என் பதவியில் இருந்து விலகமாட்டேன்.இந்த நாட்டில்  பெண்கள் பாதுகாப்பு எங்கு இருக்கிறது. இங்கே பேசாமல் எங்கே பேசப்போகிறேன். என்னை அவமானப்படுத்தினார்கள். நேற்று, என் தலைவர் என்னை அறைந்தார். என்னை இங்கு தம்பிதுரை தான் அழைத்துவந்தார். என் குடும்பத்தினரிடம் கூட பேச என்னை அனுமதிக்கவில்லை. ஒரு தலைவர் ஒரு எம்.பியை அறைவது என்ன விதத்தில் சரி. பெண்களின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. தமிழ்நாட்டில் எனக்குப் பாதுகாப்பு இல்லை. என்னால், என் வீட்டில் கூட வாழமுடியவில்லை" என அழுதபடியே தெரிவித்தார் சசிகலா புஷ்பா.

இதன்மூலம் ஜெயலலிதாவை நோக்கி இந்திய மீடியாக்கள் தங்கள் கேமிராவின் வெளிச்சத்தை ஆர்வத்தோடு நீட்ட நாடாளுமன்றத்தில் நடுமையத்தில் நின்று ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தந்திருக்கிறார் சசிகலா புஷ்பா. இந்தப் பேச்சின் சுருக்கத்தை மாநிலங்களவை பத்திரிகையாளர்கள் தங்கள் அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள், சசிகலா புஷ்பா கட்டம் கட்டப்பட்ட செய்தியை அந்த பத்திரிகை அலுவலகங்களுக்கு அனுப்பிவைத்து சசிகலாவுக்கு அதிர்ச்சி தந்திருக்கிறது அதிமுக தலைமை.
 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்திப்பிலும், ஒருபோதும் தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் அப்படி யாரும் தன்னை வற்புறுத்த முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார்.

 


 நாளைய ஜூனியர் விகடனில்...

3e4b4b8f-47ba-4634-9a96-ce2bb9f88128.jpg


 

இது ஒருபுறமிருக்க, சசிகலாவின் வளர்ச்சி அ.தி.மு.கவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பினாமி பெயர்களில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாக அதிமுகவினர் சொல்கிறார்கள். குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பெயரில்தான் சசிகலாவின் சொத்துக்கள் உள்ளதாக அதிர்ச்சிக் கொடுக்கிறார்கள் அவர்கள். திருச்சி சிவாவுக்கும், சசிகலாவுக்கும் ஏற்பட்டமோதலுக்கு பின்னணியும் இதுதான் என்கிறார்கள்.

sasikalapushpajaya.jpg

தங்களுக்கு கீழ்ப் படியாத சந்தர்ப்பங்களில் அதிமுக தலைமை, தங்களை அடித்ததாக கடந்த காலங்களில் புகார்கள் கிளம்பியதுண்டு. பத்துக்கு பத்து அறைகளில் புறப்பட்ட இந்த புகார், இப்போது மாண்புமிகு எம்.பிக்கள் குழுமிய இடத்தில் பேசப்பட்டிருப்பதுதான் சர்ச்சை ஆகியிருக்கிறது.

 

 

“நமது நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா என்று மாநிலங்களவையிலேயே ஒரு உறுப்பினர் கண்ணீருடன் கேள்வி எழுப்பியதன்மூலம் கட்சிக் கட்டுப்பாடு, தலைமையுடன் முரண், அரசியல் சர்ச்சை என்பதையெல்லாம் மீறி அவர் தனது பிரச்னையில் கட்சித் தலைமை மீதான அதிருப்தியை ஒரு இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ்வரும் குற்றப் புகாராகவே மாநிலங்களவையில் முன்வைத்திருக்கிறார். இந்திய அரசியலில் இப்போது சசிகலா புஷ்பா விவாதப் பொருளாகி இருக்கிறார். இன்னும் சில தினங்களுக்கு இந்திய மீடியாக்களின் லைவ் வேன்களை சென்னை தெருக்களில் அதிகம் பார்க்கலாம்.

http://www.vikatan.com/news/tamilnadu/66722-sasikala-pushpa--what-was-actually-happened.art

  • தொடங்கியவர்

என்னை அசிங்கப்படுத்தி ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார்கள்:சசிகலா புஷ்பா பேட்டி!

sasikalapushpalong.jpg

புதுடெல்லி: எம்.பி. சசிகலா புஷ்பா பார்லிமென்ட்டில் இன்று(திங்கள்) பேசிய விவகாரம் குறித்து டெல்லி செய்தியாளர்களிடம் விரிவாக பேட்டியளித்துள்ளார். அப்போது, 'நான் யாருடைய மிரட்டலுக்கும் பயந்து ராஜினாமா செய்யமாட்டேன், அம்மா நடந்துகொண்ட விதம் எனக்குப் பிடிக்கவில்லை. என்னை அசிங்கப்படுத்தி ராஜினாமா செய்ய வற்புறுத்துகிறார்கள். அதனால் எம்.பி. க்கு உள்ள உரிமையோடு நான் நீதிக்காகப் போராடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.        

அந்தப் பேட்டியில் சசிகலா புஷ்பா மேலும் தெரிவித்ததாவது...

"எனது லீடரை பற்றி தவறாகப் பேசியதால் சிவாவிடம் நான் அப்படி நடந்து கொண்டேன். ஆனால் எனது தலைவரே எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை என்பது மிகுந்த வேதனையான ஒன்று. யாருக்கோ இந்தப் பதவியை தர நினைக்கிறார்கள். ஆனால் அதற்காக கம்பெல் பண்ணி என்னிடமிருந்து ராஜினாமா வாங்க நினைக்கிறார்கள். எனது குடும்பத்தினரே இப்போது பயந்துள்ளார்கள். ’தமிழ்நாட்டில் சி.எம்-ஐ எதிர்த்துப் போராட முடியாது. அவங்க கொடுத்த பதவியை திருப்பிக் கொடுத்திடு’ என்கிறார்கள். ஏற்கெனவே செரினா என்ற பெண்ணின்மீது என்ன என்ன வழக்குகள் பாய்ந்தன என்பதும் சின்ன மேடம் சசிகலாவின் கணவரே ஜெயிலில் எவ்ளோ நாள் இருந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
          கார்டனில் இருந்து நேரடியாக டெல்லி அழைத்து வரப்பட்டேன். எனது மொபைல் போனை பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். டெல்லியிலும் என்னை வீட்டுக்குப் போகவிடவில்லை. நான் சண்டை போட்டுத்தான்  வீட்டில் உட்கார்ந்து இருந்தேன். எனக்கு மிரட்டல் இருக்கிறது. அது தொடரும். வேறு ரூபத்திலும் நடக்கும்.
அவையில் காங்கிரஸ், பி.எஸ்.பி., காங்கிரஸ் தலைவர்கள் சோனியாஜி, ராகுல்ஜி என்று எல்லோரும் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க. அது எனக்கு நம்பிக்கையைக் கொடுத்து இருக்கு. வெங்கய்யா நாயுடுஜி எனக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். கனிமொழியும் எனக்கு முழு சப்போர்ட் கொடுத்தார். எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ ஏதாவது நேர்ந்தால், அதுக்கு அ.தி.மு.க. தலைமைதான் பொறுப்பு.

என் மீதான நடவடிக்கை  ரெண்டு மாதம் முன்பிருந்தே தொடங்கியது. பார்லிமென்ட்டில் என்னைப் பேசக் கூடாது என்று கார்டனில் இருந்து  பூங்குன்றன் சொன்னார். எனது இந்தப் பதவியை வேறு யாரோ ஒருவருக்கு கொடுக்க விரும்புகிறார்கள். ஆனால், கண்டிப்பாக திருச்சி சிவா மேட்டருக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. என்னைப் பற்றி தவறாக தொடர்ந்து சி.எம்.-மிடம் யாரோ சொல்லி இருக்கிறார்கள்.  வாட்ஸ்-அப் படங்களும் திட்டமிட்டு அனுப்பி இருக்காங்க. அது தொடர்பாக கட்சித் தலைமையிடம் நான் புகார் கொடுத்தேன்.  ஆனால் என்னைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  நான் ஏன் என் எம்.பி. பதவியை ராஜினாமா  செய்யவேண்டும்.ஜெயா டிவியிலயே, ’சசிகலா புஷ்பா தலைமையில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்படுகிறது. அதற்கு அம்மா பாராட்டினார்’ என்றும்  செய்தி வெளியானது. எனது வாழ்வையே அதிமுகவுக்கு  கொடுத்துள்ளேன்.  அப்போதே அம்மாவிடம் சொன்னேன். எனக்கு மகளிர் அணி வேண்டாம் என்று. ’நீதான் இதைச் சரியா பண்ண முடியும் என்று நம்புகிறேன்’ என்று சொன்னார். அந்தச் சொல்லுக்காக தெருத் தெருவாக அலைந்து கட்சி வேலைப் பார்த்தேன். இப்போது, ’ஜஸ்ட் ரிசைன் பண்ணு’ என்றால்  எப்படி முடியும்? அப்போ நான் படித்த படிப்புக்கு, கட்சிக்காகச் செய்த வேலைக்கு என்ன அர்த்தம். திருச்சி சிவா விஷயத்தை இப்போது பயன்படுத்திக் கொண்டார்கள்.

கார்டனில் எனக்கு நடந்தது அத்தனையும் உண்மை. கம்பெல் செய்து ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அங்கு எனக்கு நடந்தது வேறு. சிவாவிடம் நடந்த விசயம் குறித்து, ’என் மேல இவ்ளோ பாசமா’ என்று அம்மா கேட்பார்  என்று நினைத்தேன். ஆனால் எதிர்பாராத விதமாக என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். நான் என்ன தப்புப் பண்ணினேன். பர்சனல் வேற. பொலிட்டிக்கல் வேற. என்னை ராஜினாமா செய்யச் சொன்னதுக்கும் திருச்சி சிவா விஷயத்திற்கும்  சம்பந்தமில்லை. அதனால்தான் பார்லிமென்ட்டில் நான் மன்னிப்பு கேட்டேன்!"

http://www.vikatan.com/news/tamilnadu/66723-admk-force-me-to-resign-sasikala-pushpa.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தியொருக்கால்  இவதானே படு செக்ஸியாய் ரெலிபோனிலை கதைச்சு பிடிபட்டவ????:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

முந்தியொருக்கால்  இவதானே படு செக்ஸியாய் ரெலிபோனிலை கதைச்சு பிடிபட்டவ????:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
 

ராஜினாமா செய்ய ஜெ. வற்புறுத்தினார்: சசிகலா புஷ்பா டெல்லியில் பேட்டி!

Posted by சிங்கப்பூர் கலைஞர் திமுக on Montag, 1. August 2016

 

  • கருத்துக்கள உறவுகள்

அநாகரிகமான முறையில்.... பொது இடத்தில், சண்டித்தனம் காட்டப் போய்..... இப்ப கட்சியில் இருந்து விலத்தி வைக்கப் பட்டிருக்கின்றா.
இவவின் அறிக்கைகளை பார்க்க.... விரைவில், தி.மு.க. வில் சேருவார் போலுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

'சசிகலாவை அறைந்தாரா முதல்வர்?!' - முதல்வரையே முந்திய பின்னணி

sasikalapushpajaya.jpg

.தி.மு.க தலைமையின் நடவடிக்கை பாய்வதற்கு முன்பே, மாநிலங்களவையில் முந்திக் கொண்டு விட்டார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' என் தலைவர் என்னை அறைந்தார்' என அவர் பேசிய பேச்சு அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ' பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப் பெரிய நாடகத்தை அரங்கேற்றிவிட்டார் சசிகலா' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதலையடுத்து, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. அதேபோல் அறிவாலயத்திலும் சிவாவை அழைத்து விசாரணை நடத்தினார் தி.மு.க தலைவர் கருணாநிதி. தி.மு.கவின் விசாரணை பாணியும் அ.தி.மு.கவின் விசாரணை பாணியும் எதிர் எதிர் துருவங்கள் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை போயஸ் கார்டனில் நடந்த விவகாரத்தைப் பற்றி மாநிலங்களவையில் பேசிய சசிகலா, ' என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. தனி அறையில் ஒரு நாயைப் போல் அடைத்து வைக்கப்பட்டேன். எம்.பி பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்டேன்' என அதிர வைத்தார். சசிகலாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், தி.மு.க எம்.பி கனிமொழி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

trichysiva.jpgமாநிலங்களவையில் சசிகலா பேசிக் கொண்டிருந்த தகவலைக் கேள்விப்பட்ட பிறகே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா. இதன்பின்னரும் பத்திரிகையாளர்களை சந்தித்து தன்னிலை விளக்கம் அளித்தார் சசிகலா. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் ஒருவர், "டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பியுடன் தாக்குதல் ஈடுபட்டதற்கு மிக முக்கியக் காரணமே, சிவாவுடன் தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல் தகராறுதான். அது தொடர்பாக சசிகலா சிவாவைத் தொடர்பு கொள்ளும்போதெல்லாம், 'கால் யூ டுமாரோ' என்றே பதில் கொடுத்து வந்தார் சிவா. இதனால் ஆத்திரமான சசிகலா, விமானநிலையத்தில் சிவாவைப் பார்த்ததுமே, 'வேர் ஈஸ் மை மணி?' என்று கேட்டுத்தான் அவருடைய கன்னத்தில் அறைந்தார். இந்தத் தகவல் தி.மு.க. புள்ளி ஒருவரின் உதவியாளர் மூலமே வெளியில் கசிந்தது. இல்லாவிட்டால் இந்தத் தாக்குதல் வெளி உலகிற்குத் தெரியாமலேயே போயிருக்கும். இதற்கு முன்பு சிவாவுடன் இருப்பதாக வெளியான புகைப்படங்களால் கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. அப்போதே அவரை எச்சரித்திருந்தார் தம்பிதுரை.

thambidurai1.jpgகட்சியின் மகளிரணிச் செயலாளர், மேயர், ராஜ்யசபா எம்.பி என அனைத்து பதவிகளும் சசிகலாவுக்குக் கிடைப்பதற்கு மிக முக்கியக் காரணமே தம்பிதுரைதான். விமான நிலைய தகராறு என செய்தி வெளியானதுமே, முதல்வர் கடும் கோபமடைந்தார். தம்பிதுரையை அழைத்து, ' என்ன நடக்குது?' எனக் கேட்டு கடிந்து கொண்டார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை கார்டனுக்குள் வரவழைக்கப்பட்டார் சசிகலா. உள்ளே வந்த அவரிடம் பூங்குன்றன், ' மேடம்...ரொம்ப கோபமா இருக்காங்க. ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க' எனச் சொல்ல, ' என்னுடைய தனிப்பட்ட விவகாரம் வேறு. அரசியல் பாதை வேறு. தவறே செய்யாத நான் எதுக்கு ரிசைன் பண்ணனும்' என பதில் கொடுத்திருக்கிறார். இதனால் கடுப்பான தம்பிதுரை சில வார்த்தைகளை சசிகலாவை நோக்கிப் பேசினார். இதையடுத்து, ஒரு வெற்றுத் தாளைக் கொடுத்து வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தை எழுதி வாங்கிவிட்டனர்.

 

கார்டனைப் பொறுத்தவரையில், எவ்வளவு பெரிய நிகழ்வு என்றாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முதல்வர் யாரையும் சந்திக்க மாட்டார். தவிர்க்க முடியாத சந்திப்பு என்றாலும், விரும்பினால் மட்டுமே சந்திப்பு நடக்கும். இது கட்சிக்காரர்கள் அனைவருக்கும் தெரியும். முன்பு ஒருமுறை அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து புலமைப்பித்தனை நீக்கும் முடிவுக்கு அம்மா வந்தபோது, ஒரு ஞாயிற்றுக் கிழமைதான் அவருக்கு அழைப்பு வந்தது. அப்போதே அவர், ' ஞாயிற்றுக்கிழமை அம்மா யாரையும் சந்திக்க மாட்டார். அழைப்பு வருகிறது என்றால் ராஜினாமா கடிதத்தை கொண்டு போவதுதான் சரி' என எழுதிக் கொண்டு போனார். அப்போது இண்டர்காமில் மட்டுமே முதல்வர் பேசினார். சசிகலா விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது பூங்குன்றனும் தம்பிதுரையும்தான். கார்டனில் சசிகலாவை முதல்வர் சந்திக்கவே இல்லை. தேசிய அளவில் தனக்கு அனுதாபத்தை சம்பாதித்துவிட்டார் சசிகலா" என்றார் விரிவாக.

திருச்சி சிவாவுடன் மன்னிப்பு, கனிமொழியின் ஆதரவு பேச்சு என அ.தி.மு.கவின் எதிர் முகாமுக்குத் தூதுப் படலத்தைத் தொடங்கிவிட்டார் சசிகலா. ' திருச்சி சிவா அடி வாங்கிய செய்தி மறைந்து போய், முதல்வர் அடித்தார்' என்ற செய்தி முன்னுக்கு வந்துவிட்டது. முதல்வரையே முந்திக் கொண்டு சசிகலா தொடுத்த குற்றச்சாட்டை முதல்வர் உள்பட அ.தி.மு.கவினர் யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/66742-will-jayalalitha-slap-sasikala-pushpa.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.