Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவுக்கு இலங்கை இலஞ்சம் வழங்கியுள்ளது

Featured Replies

சீனாவுக்கு  கொழும்பு துறைமுகத் திட்டம் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு  இலங்கைக்கான  பாலம் அமைக்கும் திட்டத்தை இலஞ்சமாக அரசாங்கம் வழங்கியுள்ளது எனத் தெரிவித்த  தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், இதனால் இலங்கை இந்தியாவின் காலனித்துவ நாடாக மாற்றும் ஆபத்து இருப்பதாகவும்   அவ்வியக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர்  டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுக நகரத்திட்டம் (போர்ட் சிட்டி) அமைப்பதற்கு சீனாவுக்கு  அனுமதி அளித்துள்ள அரசாங்கம், இதன் காரணமாக இந்தியாவின் அழுத்தத்திற்கு ஆட்பட்டுள்ளது. 

எனவே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே  பாலம்  அமைப்பதற்கான  அனுமதியை  அரசாங்கம்  இரகசியமாக இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. 

அந்த இரகசிய வாக்குறுதியே அமைச்சரொருவரின் ஊடாக  இந்தோனேஷியாவில்  வெளியாகியுள்ளது.  sri_lanka_hochseehafen_karte_body_n.2011

பாலம் அமைப்பதற்கு மட்டுமல்ல, அதன் பின்னர் திருகோணமலையிலிருந்து தமிழ் நாட்டிற்கு 126 கிலோ மீட்டர் தூரத்திற்கான புகையிரதப் பாதையும் அமைக்கப்படவுள்ளது. 

இதன் மூலம் திருகோணமலையிலிருந்தும் இந்தியாவிலிருந்து பொருட்கள் கப்பல்கள் படகுகள் மூலம் வருகின்றதை விடுத்து புகையிரதத்தின் மூலம் வர ஆரம்பிக்கும். 

அத்தோடு இந்தியாவிலிருந்து ஆட்களும் இங்கு  வருவார்கள். 

திருகோணமலையில் எஞ்சியுள்ள  எண்ணெய் குதங்களும்  இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளது. 

இவ்வாறு இரு நாடுகளுக்கும் இடையே பாலம் அமைக்கப்பட்டால், பூகோள  ரீதியில்  மாற்றத்தை ஏற்படுத்தும் போது அது இலங்கையை பாதிக்கும். 

சமூக அரசியல் பொருளாதார ரீதியில்  இலங்கையில் நெருக்கடிகள் பிரச்சினைகள் தலைதூக்கும். 

கலாசார ரீதியில் சீரழிவுகள் ஏற்படும். எனவே  அரசின் இந்த முடிவு  எமது  நாட்டை பயங்கரமாக பாதிக்கும் எனவே இத்திட்டத்திற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. 

அது மட்டுமல்லாது இதனால் இலங்கை இந்தியாவின்  காலனித்துவ நாடாக மாறுவதையும் தடுக்க முடியாது. 

எனவே  நாட்டு மக்களை திரட்டி  இதற்கு  எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். 

 

http://www.virakesari.lk/article/9861

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Athavan CH said:

அது மட்டுமல்லாது இதனால் இலங்கை இந்தியாவின்  காலனித்துவ நாடாக மாறுவதையும் தடுக்க முடியாது. 

இப்ப மட்டும் யாரின்ட காலனி(ணி)யாம்......ஏற்கனவே இந்தியாவின் காலனிதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.