Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன் ரயலட்பார் மூலம் தண்டனை வழங்கவில்லை?

Featured Replies

துப்பாக்கி முனையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி செய்வதாக நல்லிணக்க கருத்தறியும் செயலமர்வின் போது பெண்மணி ஒருவர் சுட்டிக் காட்டினார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் 5ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது இதன் போதே குறித்த பெண்மணி தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார்.

அமர்வின் போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் சட்டம் நீதியான முறையில் நடைபெறவில்லை. அண்மையில் நடைபெற்ற குமரபரம் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 நபர்களுக்கு தண்டணை வழங்குவதற்கு யூரி சபையினை நீதிச்சேவை ஆணைக்குழு நியமித்துள்ளது என்றால், ரலயட்பார் நியமித்து விசாரணை செய்து தண்டனை விதித்திருக்கலாம். ஏன், அந்த ரயலட்பார் மூலம் தண்டனை வழங்கவில்லை.

திருகோணமலையில் நடைபெற்ற அந்த சம்பவத்தை ஏன் அநுராதபுரம் நீதிமன்றில் விசாரணை செய்ய வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியதுடன், அங்கு 7 பேரின் கை உயர்த்தலினால் 6 சிங்கள கொலைகாரர்களும் தப்பிக்கவிடப்பட்டுள்ளார்கள்.

கண் கண்ட சாட்சியங்கள் இருந்தும், படுகொலை செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள் எனின், எமது போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிமன்றமே எமக்குத் தேவையாக இருக்கின்றது.

மேலும், சாலாவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் ருபா நட்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அறிவித்திருந்தார்.

சாலாவ இராணுவ முகாம் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கியவர், ஏன் தமிழ் மக்களுக்கு வழங்க மறுக்கின்றார்? தமிழர் சிங்களவர் என்ற பாகுபாட்டினை மைத்திரிபாலசிறிசேன காட்டுகின்றார் அவ்வகையில் அவர் இனவாதம் கொண்ட ஒரு ஜனாதிபதி.

அங்கு 50 ஆயிரம் ரூபா இழப்பீடு கொடுக்க முடியுமென்றால், ஏன் யுத்தத்தினால் சொந்த நிலங்களை இழந்த மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா சரி வழங்கவில்லை? போன்ற கேள்விகளையும் குறித்த பெண்மனி முன்வைத்தார்.

மேலும், நான் குடும்பத்தினை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட எனது சகோதரனைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றேன். இழப்பீடு கேட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியதற்கு வீடு தருவதாக பதில் அளித்துள்ளார்.

வட மாகாணத்தில் இராணுவத்தினர் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக எடுத்துக் கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சர் கூறுகின்றார். அப்படியாயின், துப்பாக்கி முனையில் நல்லிணக்கம் ஏற்படுத்த முடியுமெனவா அரசாங்கம் நினைக்கின்றது.

மூன்று இனங்கள் நாட்டில் இருக்கும் போது, ஒரு இனத்தினை தாழ்த்துவதற்கு மற்றொரு இனத்தினைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த பெண்மணி சுட்டிக் காட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.

http://www.tamilwin.com/statements/01/113300

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.