Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது பௌத்த மதகுரு தெரிவிப்பு:-

Featured Replies

கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது பௌத்த மதகுரு தெரிவிப்பு:-

 

கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது பௌத்த மதகுரு தெரிவிப்பு:-


கனகாம்பிகை புத்தகோவில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது என பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்    மதகுரு விமலகனா  தேரர் தெரிவித்தார்  
 

இன்றைய  தினம் செவ்வாய் கிழமை 09.08.2016 கிளிநொச்சி பொன்னகர் பகுதிக்கு கம்போடியா பௌத்த மதகுரு லெச் சொனான்   சகிதம்  வருகைதந்த  பாலியகொட  கங்காராம பௌத்த விகாரையின்    மதகுரு விமலகனா தேரர் அங்குள்ள நூறு குடும்பங்களுக்கு பாலியகொட  கங்காராம விகாரையின் நிதி உதவியில்  உணவுப் பொருட்கள், மற்றும் ஆடைகள் அடங்கிய சிறிய பொதியினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார் நிகழ்வின் இறுதியில் கனகாம்பிகைக் கோவிலின் அருகில் ஆலயத்தின் மூன்றாவது வீதியினை மறித்து அனுமதி ஏதும் இன்றி  புத்த கோவில் ஒன்று கட்டப்பட்டுவருகின்றது இது சம்பந்தமாக பௌத்த மதத்தின் மதகுரு என்றவகையில் நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்ட  கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் நாமும் இந்து தெய்வங்களை வணங்குகின்றோம் ஒரு இந்துக் கோவிலின் அருகில் பௌத்த விகாரை அமைப்பது தவறில்லை அனால் உங்களால் குறிப்பிடப்பட்ட கனகாம்பிகைக் கோவிலுக்கு அருகில் அமைக்கப்படுகின்ற பௌத்த விகாரை அவ்  ஆலய  நிர்வாகத்தின் அனுமதி இன்றியோ அல்லது மக்களின் விருப்பமின்றியோ அமைக்கப்பட்டதாயின் அது பௌத்த ஆகமத்திற்கு முரணானது ஆனால்  இக் கருத்தினை ஊடகங்களிற்கு என்னால்  தெரிவிக்க முடியாது ஆனால் இவ் விகாரை அமைப்பு சம்பந்தமாக கிளிநொச்சியில் உள்ள பௌத்த மதகுருவுடன் உரையாடி ஒரு நல்ல முடிவை எடுப்பதாக தெரிவித்தார்.


அத்துடன்  அவர் அங்கு நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போது சிங்கள மக்களுக்கே அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன என்று கூறுகின்றார்கள் அது உண்மையல்ல நானும் ஒரு வறுமையான பிரதேசத்தில்தான் வசிக்கின்றேன் அங்கு மக்கள் செறிவாக வாழ்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு எதுவித உதவியும் வழங்கப்படவில்லை இங்குள்ள தமிழ்மக்ககளுக்கும்  அவ்வாறே உள்ளது ஆனால்  நாட்டில் நிலவிய  அசாதாரண நிலையால் தமிழ் மக்கள் பாரிய துன்பத்தை அனுபவித்திருப்பது உண்மைதான் தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள்  என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கின்றோம் அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் அவ் உரையில்  தெரிவித்தார்

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134792/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

கனகாம்பிகை புத்தகோயில் விவகாரம் பௌத்த மதத்திற்கு முரணானது

Published by RasmilaD on 2016-08-10 09:36:36

1
 

1.jpg

கன­காம்­பிகை கோயி­லுக்கு அருகில் எந்­த­வி­த­மான அனு­ம­தியும் இன்றி பௌத்த விஹாரை அமைக்­கப்­ப­டு­மாயின் அது பௌத்த மதத்­திற்கு முர­ணா­ன­தாகும் என்று பேலி­ய­கொடை கங்­கா­ராம பௌத்த விகா­ரையின் விம­ல­கனே தேரர் தெரி­வித்தார்

கிளி­நொச்சி பொன்­னகர் பகு­திக்கு கம்­போ­டியா பௌத்த மத­குரு லெச் சொனான் சகிதம் வரு­கை­தந்த பேலி­ய­கொடை கங்­கா­ராம பௌத்த விகா­ரையின் மத­குரு விம­ல­கனா, அங்­குள்ள நூறு குடும்­பங்­க­ளுக்கு பேலி­ய­கொடை கங்­கா­ராம விகா­ரையின் நிதி உத­வியில் உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் அடங்­கிய சிறிய பொதி­யினை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்தார்.

நிகழ்வின் இறு­தியில் கன­காம்­பிகைக் கோயிலின் அருகில் ஆல­யத்தின் மூன்­றா­வது வீதி­யினை மறித்து புத்த கோயில் ஒன்று கட்­டப்­பட்­டு­வ­ரு­கின்­றது.

இது சம்­பந்­த­மாக பௌத்த மதத்தின் மத­குரு என்­ற­ வ­கையில் நீங்கள் என்ன சொல்­கின்­றீர்கள் என ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடுத்த கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் அவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாமும் இந்து தெய்­வங்­களை வணங்­கு­கின்றோம். ஒரு இந்துக் கோயிலின் அருகில் பௌத்த விகாரை அமைப்­பது தவ­றில்லை.

ஆனால், உங்­களால் குறிப்­பி­டப்­பட்ட கன­காம்­பிகைக் கோயி­லுக்கு அருகில் அமைக்­கப்­ப­டு­கின்ற பௌத்த விகாரை அவ் ஆலய நிர்­வா­கத்தின் அனு­மதி இன்­றியோ அல்­லது மக்­களின் விருப்­ப­மின்­றியோ, அமைக்­கப்­பட்­ட­தாயின் அது பௌத்த ஆக­மத்­திற்கு முர­ணா­னது.இக்கருத்­தினை ஊட­கங்­க­ளிற்கு என்னால் தெரி­விக்க முடி­யாது. ஆனால் இவ் விகாரை அமைப்பு சம்­பந்­த­மாக கிளி­நொச்­சியில் உள்ள பௌத்த மத­கு­ரு­வுடன் உரை­யாடி ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்­டி­யுள்­ளது.

சிங்­கள மக்­க­ளுக்கே அனைத்து வச­தி­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று கூறு­கின்­றார்கள். அது உண்­மை­யல்ல.

நானும் ஒரு வறு­மை­யான பிர­தே­சத்­தில்தான் வசிக்­கின்றேன். அங்கு மக்கள் செறி­வாக வாழ்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு எது­வித உத­வியும் வழங்­கப்­ப­ட­வில்லை.

இங்­குள்ள தமிழ்­மக்­க­ளுக்கும் அவ்­வாறே உள்­ளது. ஆனால் நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலையால் தமிழ் மக்கள் பாரிய துன்­பத்தை அனுபவித்திருப்பது உண்மைதான். தென்னிலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சிங்கள மக்கள் என்ற வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்கின்றோம். அதேபோல் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/10011

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.