Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய திருப்பத்துடன் கொழும்பு துறைமுக நகர்த்திட்டம்

Featured Replies

புதிய திருப்பத்துடன்

கொழும்பு துறைமுக நகர்த்திட்டம்

 

 

 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதுடன் இதன்போது இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகள் விரிவாக கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன. மிகவும் முக்கியமாக இந்த விஜயத்தின்போது கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் தொடர்பில் மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

குறிப்பாக கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் தொடர்பில் தற்போது இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் திருத்தப்பட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. அதாவது மூன்று தரப்புக்களின் பங்களிப்புடன் முத்தரப்பு உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு அரசாங்கமும் குறித்த சீ. எச். ஈ.சி. என்ற சீன நிறுவனமும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன

அத்துடன் சீன நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்படவுள்ள கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் நான்கு திருத்தங்களை செய்வதற்கும் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதாவது புதிய திருத்தங்களின் பிரகாரம் மாநகர அபிவிருத்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சீன நிறுவனம் ஆகியன முத்தரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.

புதிய திருத்தங்களின்படி கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டத்தில் காணிகள் 99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும். முன்னர் இணக்கம் காணப்பட்டதைப்போன்று 20 ஹெக்டெயர் காணிகள் சீன நிறுவனத்துக்கு சொந்தமாக வழங்கப்படமாட்டாது. அனைத்து காணிகளும் 99 வருட குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படும்.

இதேவேளை, கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் தாமதமாகியமைக்காக குறித்த சீன நிறுவனத்துக்கு எவ்விதமான நட்டஈட்டையும் அரசாங்கம் வழங்கவேண்டியதில்லை. அதற்கான மாற்று ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த அனைத்து திருத்தங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தின் முக்கிய விடயங்கள் வருமாறு

அதாவது மாநகர அபிவிருத்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் சீன நிறுவனம் ஆகியன இந்த முத்தரப்பு உடன்டிபக்கையில் கைச்சாத்திடவுள்ளன. கடந்த அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் படி நிரப்பப்படும் காணிகள் தொடர்பான தெ ளிவற்ற தன்மை காணப்படுகிறது. புதிய சட்டத்தின் கீழ் இப்பூமியானது, கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் பகுதியொன்றாக இனங்காட்டப்படுவதோடு, அது கொழும்பு மாநகர சபையிடமிருந்து பிரேரிக்கப்பட்ட நிதி கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ் - நிரப்பப்படுகின்ற அனைத்து காணிகளும் ஜனாதிபதியினால் வர்த்தமானியில் பிரசுரித்து, அதன் பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒதுக்கி கொடுக்கப்படும். இதன் போது நகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் இப்பூமியானது நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படும்.

புதிய ஒப்பந்தத்தின் கீழ் - மீனவ மற்றும் நீர்வளங்கள் அபிவிருத்தி அமைச்சினை விசாரித்து பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் மூலம் செயற்படுத்தப்படும் மீனவர்களின் வருமானத்துக்கு ஆதரவு வழங்கும் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் ரூபா சீன கம்பனியின் மூலம் ஒதுக்கப்படும்.

சுகாதார நலன்புரி மத்திய நிலையம் மற்றும் ஆரோக்கியசாலைகள், கண்காட்சி மாநாட்டு நிலையங்கள் மற்றும் கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலையம் ஆகியவற்றை அவ்விடங்களில் அமைப்பதற்கு ஏதுவான முறையில் மேற்கூறப்படுகின்ற கட்டுப்பாடுகளினை விஸ்தரிப்பதற்கு புதிய ஒப்பந்தத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதேபோன்று கொழும்பு துறைமுகத்தில் வடக்கு மற்றும் மேற்கு கப்பல் துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட மாட்டாது. அதற்கும் மேலாக, ஆரம்பத்தில் நிரப்பப்படுகின்ற காணிகள் உட்பட புதிய கொழும்பு சர்வதேச நிதி மத்திய நிலைய கட்டடத்தை தாபிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தேவையான சூழலியல் அறிக்கையினை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை துறைமுக அதிகார சபையில் முன்னர் காணப்பட்ட நிர்வாகத்துக்கு முடியாது போனது. அதனால் வேலைத்திட்டத்தினை நிறுத்தியமையினால் ஏற்பட்ட நட்டத்தினை மீட்டுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இழப்பீட்டு கோரிக்கைகளை, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் சீன விஜயங்களின் போது ஏற்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் விலக்கிக் கொள்வதற்கு சீனக் கம்பனி இணக்கம் தெரிவித்துள்ளது.

இழப்பீடுகளை குறைத்துக் கொள்வதற்காக நிரப்புவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற காணிகளின் அளவினை அதிகரித்தல் மற்றும் 62 ஹெக்டெயர் இலங்கை அரசாங்கத்தின் உரிமையினை குறைக்காமல், தமக்கு உரித்தான பெறுமானத்துக்கு மேலதிகமாக விற்பனை செய்வதற்கு முடியுமான 2 ஹெக்டெயர் நிலப்பரப்பினை பெற்றுத் தருமாறு வேலைத்திட்ட கம்பனியினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

வேலைத்திட்ட கம்பனிகள் மூலம் வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒதுக்கீடுகளுடன், முழுமையான புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடொன்றினை மேற்கொள்வதற்கு 2015 ஆம் ஆண்டு பாரிய நகர மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிங்கப்பூர் மற்றும் டுபாய் இடையிலான இடைவெளியை நிரப்பும் நோக்கில் நிதி நகரம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக இப்பூமி பரப்பினை பயன்படுத்துவதாக சீன அரசுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கடல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இதற்காக, டுபாயில் நடைமுறைப்படுத்தும் வகையில் கடற்கரை நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்காக தேவையான புதிய சட்ட திட்டங்கள் அரசாங்கத்தின் மூலம் முன்மொழியப்பட உள்ளன. இந்நிதி நகரம், இலங்கைக்காக பிரதான வருமான மார்க்கமாக மற்றும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . இவ்வாறு இந்த திருத்தங்களில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கமே இந்த திட்டத்துக்கான உடன்படிக்கையை சீன நிறுவனத்துடன் செய்துகொண்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி இதனை எதிர்த்தது. அது மட்டுமன்றி தமது கட்சி ஆட்சிக்கு வரும்பட்சத்தில் இந்தத் திட்டம் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.

எனினும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இந்தத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் தற்போது கொழும்பு துறைமுக நகர்த்திட்டம் தொடர்பான உடன்படிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட்டு திட்டத்தை தொடர இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒரு துண்டு காணி கூட சீன நிறுவனத்துக்கு சொந்தமாக வழங்கப்படமாட்டாது என்ற அடிப்படையிலேயே தற்போது மீண்டும் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை மீண்டும் தொடர்வது குறித்த அரசாங்கத்தின் முடிவு தொடர்பில் சிரேஷ்ட பொருளாதாரத்துறை ஊடகவியலாளர் சிஹார் அனீஸ் கருத்துப் பகிர்கையில்

கொழும்புத் துறைமுக நகர்த்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமைக்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன. விசேடமாக தற்போதைய நிலைமையில் சீனாவினால் மட்டுமே இவ்வாறான பிரமாண்ட திட்டத்தை மேற்கொள்ள முடியும். வேறு ஒரு நாட்டினால் இதனை முன்னெடுக்கக்கூடிய நிலைமை தற்போது இல்லை.

அது மட்டுமன்றி தற்போது இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. எனவே, பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்துகொள்ளவேண்டுமாயின் சீனா போன்ற நாட்டை பகைத்துக்கொள்ள முடியாது. எனவே, இதுபோன்ற ஏற்கனவே உடன்பாட்டுக்கு வந்த பாரிய திட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டியது அவசியமாகும். அந்தவகையில் அரசாங்கம் இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளது. தற்போதைய நிலைமையில் சீனா போன்ற ஒரு நாட்டை பகைத்துக்கொள்ள முடியாது.

அது மட்டுமன்றி புதிய அரசாங்கம் தான் உரிய விதி முறைமைகளை பின்பற்றியே இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியுள்ளது. குறிப்பாக எந்தவொரு காணியும் சீனாவுக்கு உரிமையாக வழங்கப்படவில்லை. இது இந்தியாவை பொறுத்தவரை முக்கியமான விடயமாகும். அரசாங்கம் 99 வருட குத்தகை அடிப்படையில் காணிகளை சீன நிறுவனத்துக்கு வழங்குகின்றது.

அத்துடன் கடந்த அரசாங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையை இந்த அரசாங்கம் நிறுத்திவிடுவது என்பது ஆரோக்கியமான விடயமல்ல. இது எதிர்கால பொருளாதார உடன்படிக்கைளை பாதிக்கும். எனவே அனைத்து காரணிகளையும் கவனத்திற்கொண்டே அரசாங்கம் இந்த முடிவை எடுத்திருக்கும் என்றார்.

இதேவேளை சிரேஷ்ட சர்வதேச ஊடகவியலாளர் அமல் ஜயசிங்க இது தொடர்பான தனது அவதானிப்புக்களை குறிப்பிடுகையில்

கொழும்பு துறைமுக நகர்த்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்ததன் மூலம் அரசியல் யதார்த்தம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சீன ஜனாதிபதி இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டிருந்தார். எனவே இதனை நிறுத்துவது என்பது சீனாவை பொறுத்தவரை பாரிய தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தது. எனவே அவர்கள் இந்த விடயத்தில் உறுதியாக இருந்தனர். அது மட்டுமன்றி புதிய அரசாங்கம் பதவிக்கு வரும்போது இதில் பல செயற்பாடுகள் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டன. அதனை மீண்டும் நிறுத்த முடியுமான நிலையில் அரசாங்கம் இல்லை. எனவே, மீண்டும் இந்தத் திட்டத்தை ஆரம்பிக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இதுதான் யதார்த்தம். அரசாங்கம் சீன நிறுவனத்துக்கு நட்டஈடு கொடுக்கவேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் இரண்டு ஹெக்டெயார் காணிகளை வழங்குகின்றது. அப்படிபார்க்கும்போது நட்டஈடு வழங்கத்ங தேவையில்லை என்ற விடயம் முரண்டுபடுகின்றது.

மேலும் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் உள்நாட்டில் பொருளாதாரம் வலுப்படுவதுடன் வேலைவாய்ப்புகளும் ஏற்படுகின்றன. இதன்மூலம் நாட்டின் நிர்மாணத்துறையில் பாரிய வளர்ச்சி ஏற்படும் என்றார்.

 

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=13&editionDate=09/08/2016

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.