Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்

Featured Replies

பூநகரிக் குளத் திட்டத்தை  முன்னெடுக்கவேண்டும் 

 

 

(ப.பன்னீர்செல்வம்இ ஆர்.ராம்)

வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி  மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கொக்குடையான்  மாளாப்பு ஆகிய குளங்களையும்  ஏனைய சிறு குளங்களையும் இணைத்து பாரிய நிலப்பரப்பில் நீரைத் தேக்குவதன் மூலம் குடி நீர்  விவசாய செய்கை  கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கான மேய்ச்சல் தரை உருவாக்கம் என்பவற்றுக்குப் போதியளவு நீரைப் பெற முடியும் என்பதுடன் நிலத்தடி நீரை மேம்படுத்தவும் முடியும். எனவே இதனை அடிப்படையாகக் கொண்ட பூநகரிக் குளத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  டக்ளஸ் தேவானந்தா  நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று  நிலையியற்கட்டளை 23இன் கீழ் இரண்டில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Douglas_Devananda_2.png

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கிளிநொச்சி மாவட்டமானது 1,237.11 சதுர கிலோ மீற்றர் நிலப் பரப்பளவையும், 443.3 சதுர கிலோ மீற்றர் நீர்ப் பரப்பையும் கொண்ட மாவட்டம். இதில் 448.7 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பையும், 85.69 சதுர கிலோ மீற்றர் நீர்ப் பரப்பையும் கொண்டிருக்கும் பூநகரி பிரதேசத்தில் 19 கிராம சேவையாளர் பிரிவுகளில் சுமார் 24 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள நிலப் பரப்பில் 35 சத வீதமானவை விவசாயக் காணிகள். இதில் 35 வீதமானவை நெற் செய்கைக்கான காணிகள். இங்கு சராசரி மழை வீழ்ச்சி 1,100 மில்லி மீற்றர் ஆகும். வருடத்தில் செப்ரெம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரையில் எதிர்பார்க்கப்படும் இந்த மழையை நம்பி பெரும்போகத்தில் சுமார் 500 ஏக்கர் காணிகளில் நெற் செய்கையும்இ சுமார் 100 ஏக்கரில் சிறு தானிய செய்கையும் மேற்கொள்ளப்படுகின்றது.

இப் பகுதியில் நிலையான நீர் நிலைகள் இல்லாதவிடத்தும், சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு குளங்களும்இ கொக்குடையான், மாளாப்பு ஆகிய இரு பெரிய குளங்களும் காணப்படுகின்றன. தற்போது இக்குளங்களில் காணப்படுகின்ற ஓரளவு நீரைக் கொண்டு அதனை அண்டிய பகுதிகளில் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கால்நடைகளும் ஓரளவு பயனைப் பெறுகின்றன. மேற்படி குளங்கள் புனரமைக்கப்படாமை காரணமாகவும், கடல் நீர் உட்புகுவதாலும் இப்பகுதியில் அதிகளவில் குடி நீருக்கான தட்டுப்பாடு நிலவுவதால், சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவிலிருந்தே பவுஸர்கள் மூலம் குடி நீர் கொண்டுவரப்படுகிறது.

எனவே, மேற்படி இரு பாரிய குளங்களையும், ஏனைய சிறு குளங்களையும் இணைத்து, அவற்றைப் புனரமைத்து, உவர் நீர்த் தடுப்பு அணை அமைக்கப்பட வேண்டும். அத்துடன் மண்டக்கல்லாறு, குடாமுறிப்பு ஆகிய ஆறுகளுக்கிடையில் உவர் நீர்த் தடுப்பு அணை கட்டப்பட வேண்டும். மண்டக்கல்லாறானது 300 சதுர கிலோ மீற்றர் நீரேந்து பரப்பைக் கொண்டிருந்தும் இதில் 35.82 வீதமான நீரே தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இந்த ஆற்றை செம்மண்குன்றில் மறித்து அணை கட்டுவதன் மூலம் பூநகரி குளத்திற்குத் தேவையான நீரை கொண்டுவர முடியும்.

இதன் மூலம் அப்பகுதியில் குடி நீர்ப் பிரச்சினையை போதியளவு தீர்க்கவும் மேலும் பாரிய நிலப் பரப்பில் விவசாயச் செய்கையை மேற்கொள்வதற்கும், கால்நடைகள் அபிவிருத்தி மற்றும் அதற்கான மேய்ச்சல் தரைகள் உருவாக்கத்திற்கும் போதியளவு நீரை வழங்கமுடியும். அத்துடன் கிளிநொச்சி, பளை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளுக்கு ஓரளவு குடி நீரையும் வழங்க முடியும் என்றார்.

http://www.virakesari.lk/article/10102

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.