Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தனுயிர்க் காதலிக்கு....

Featured Replies

வட்ட நிலவே முகமெனச் சொல்மின்

மதி மாதம் தேய்ந்திங்கு வளரும் பிறை

காண் அதுபோலவள் வதனம் ஆவது நிதம்

கண் கொள்வதற்கு நானிலனே

ஒடியுமிடை தனைக்கொடி யென்று

கூறிடினும் மழைகாணாப் பயிரினம்

கருகி நிலம் வீழும் அதனால்

அதுவுமவளிடைக்கு உவமையிங்கிலையே

செவ்விதழ்ழிரண்டிற்கும் ரோஜா

மலரதனைச் சொல்லொப்பி நிற்கேன்

அது சூறாவளிக் காற்றில் சிக்கும்

உயிரிழந்துதிர்ந்தும் போகும்

அவள் வெண் பல்லுக்குவமை சொல்ல

முத்துக்குமிங்கே திருடர் பயம்

அவளருகில் நானிக்கும் ஆயுள்

நிறைந்து வர தினந் துதிப்பேன்

கருங்கூந்தல் கண்ட மனம்

கார்முகிலை நினைப்பதுண்டால்

கதிரொளியில் வெந்ததுவிண்ணேறும்

கலைந்ததுபார் காற்றுடனே

கோதையவள் கருவிழிக்கிங்கே

கயல்மீன் கண்டுவமை சொல்ல

கறிசெய்து பாதகர் பசி களைய

உண்பர் வேண்டா அதுவுவமை

மொத்தத்தில் நிகர் சொல்ல அவளுக்கு

பூவுலகில் கண்டேன் ஒருபொருளே

அவளுக்கு அவளுவமை என்றும்

என்னுடனே அவளிருக்கவாழ்வேன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதையின் ஒவ்வொரு சொல்லும் அழகோ அழகு.

இப்படி அழகாக வர்ணித்து எழுதிட்டிங்க பார்த்து , இப்படி மௌனமா இருந்திங்க எண்டால் யாராவது வந்து கொத்திண்டு போக போகினம் நோர்வே சார்

  • தொடங்கியவர்

சில ஆண்டுகளுக்குப் பின்.....

மங்கையவள் மனம் மலர்மாலை

மாங்கல்யம் கொண்ட துலர் செங்கமலம்

வட்ட நிலவும் சாட்சி அது விட்டகலும் முன்

தொட்ட பசுங்கை உடல்படர்ந்து அவர்மகிழ

கொடி தளிர் நறுமணம் தருமலர்

வனம்புகுந் திருந்திவர் மகிழ்ந்தனர்

இளந் தென்றலும் தேடிவந்திங்கு நம்

இணைந்த இருமனங்கண்டு வாழ்த்தியதே

ரோஜா மலர் கொய்து குழல் கொண்ட

கோதை பலர் சரம்செய்து தலைசூடும்

பேதை மனங்கண்டு நெகிழ்ந்தேன் நான்

பாதை மறந்திங்கு திரிந்தேன்

அவள் சிரித்த முகம்பார்த்து நிதம் காலை

கோவில் சிலை வீடுவந்த வைகறை என்னை

அழைக்கும் குரல் அவள்பாடும் திருமறை தினம்

அமுதென ஆக்கிடுவாள் பலசுவை

ஆண்டு பலபோயிற்று இன்புற்ற காலம்

மதியெங்கே கொடியெங்கே மணங்கமழ்

நல் ரோஜாமலருமெங்கே முத்தெங்கே

முகிலெங்கே நீர் ஓடும் கயல் மீன்தானெங்கே

பட்டியலில் சொன்ன ஒன்றும் வேண்டா

கட்டியவன் கொண்ட பாங்கான மனையாள்

குணம் பசுஞ்சோலை உடன் கறந்தெடுத்த பால்

அவள் மனம் கண்ட அழகுக்கே நான் அடிமை

(யாவும் கற்பனையல்ல)

ஐயோ..ஒன்டும் விளங்கவில்லை...கொஞ்சம் இலகு தமிழிலும் இதை எழுதி போடுங்கோ,இல்லாட்டி விளக்கம் ஏதாவது கொடுங்கோ. ஒன்டுமே விளங்குதில்லை..

அற்புதம் செய்திருக்கிறீர்கள். எது கவிதை என்று கேட்பார்க்கு இது கவிதை என்று கொண்டு போய்க்காட்டுவேன்.

தீந்தமிழ் நர்த்தனமாடுகிறது உங்கள் பேனா[நா]வில்.

உங்கள் கவிதை நன்றாக இருக்கு நல்ல கற்பனைவளம் உங்களுக்கு. பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ..ஒன்டும் விளங்கவில்லை...கொஞ்சம் இலகு தமிழிலும் இதை எழுதி போடுங்கோஇஇல்லாட்டி விளக்கம் ஏதாவது கொடுங்கோ. ஒன்டுமே விளங்குதில்லை..

நல்ல தழிழ் நயமா தெரியுது பொருள் உண்ணும் விள்ஙகாதம் அண்ணை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ நீங்கள் கேட்டபடி இலகு தமிழ் விளக்கம்:

என்காதலியின் வட்டமுகத்தை நிலவுக்கு ஒப்பிடமுடியாது

ஏனெனில் நிலவானது மாதமொருமுறை தேய்ந்து பின் பிறையாகி வளரும்

அதுபோல அவள் முகமும் ஆவதைப் பார்த்துக் கவலை கொள்ள நான் தயாரில்லை.

ஒடியும் இடைக்குக் கொடியை உவமையாகச் சொல்லப்போனால்

மரங்களினமானது மழையைக் காணாதுவிடின் வாடி நிலத்தில் வீழுமாதலால்

அதுபோல அவள் ஆகிவிட வேண்டாமென அதையும் சொல்லவேண்டாம்.

செவ்விதழுக்கு ரோஜா மலரை உவமையாக்கிச் சொல்வதற்கும் முடியாது

ஏனெனில் அது சூறாவளிக் காற்றில் அகப்பட்டு சின்னாபின்னப்பட்டு உதிர்ந்து

விழுந்து கருகிவிடக்கூடியது.

அவளுடைய வெண்பற்களுக்கு முத்துக்களை உதாரணமாகச் சொல்வோமென்றால்

முத்துக்களைத் திருடும் திருடர்கள் பயமும் இங்குள்ளது ஆதலால் அவளருகில் நான் என்றுமிருக்க இறைவனை வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.

கருங்கூந்தலுக்கு கரியமுகிலை ஒப்பிடலாமென்றாலும் முடியவில்லை ஏனெனில்

அது சூரிய ஒளியின் வெப்பத்தால் ஆகாயத்தை நோக்கி மேலே போய்விடும். அதுமட்டுமன்றி அது காற்றைக்கண்டதும் கலைந்து விடும்.

அவளது கரிய விழிகளுக்கு நிகராகச் சொல்வதற்கு கயல் மீன்களை நினைத்தாலும்

அதை பசியுள்ளவர்கள் வந்து பிடித்து கறிசமைத்து சாப்பிட்டுவிடுவார்கள்.

எனவே அந்த உவமையும் வேண்டாம்.

அவளது அங்கங்கள் எல்லாவற்றிற்கும் சேர்த்து அவளுக்கு உவமையாக இந்தப் பூவுலகத்தில் ஒரேயொரு பொருள்தான் உள்ளது என்று நான் கண்டுகொண்டேன். அதுதான் அவள். அவளுக்கு அவள் தான் உவமை. அவளுடன் நான் சேர்ந்திருந்தால் என்றும் வாழ்வேன்

சில ஆண்டுகள் உருண்டோடின ......

அந்த மங்கையின் மனமானது மலர்போன்றது,

மாலையும் தாலியும் கொண்ட அவள் ஒரு அழகிய செந்தாமரை

வட்டநிலவு சாட்சியாக வானத்தில் நின்றது. அது மறைய முன்னரே

மென்மையான கைகளால் உடலைக் கட்டியணைத்து அவர்கள் மகிழ்ந்தனர்.

கொடியும் தளிர் மரங்களையும் நல்ல வாசனைதரும் மலர்களையுமுடைய

பூந்தோட்டத்திற்கு சென்றமர்ந்து அவர்கள் மகிழ்ந்தார்கள். மெல்லிய

தென்றல்காற்றும் தேடிவந்து இருமனங்களும் இணைந்துவிட்டதைக் கண்டு

வாழ்த்தியது.

நீண்ட தலைமயிரைக்கொண்ட பெண்கள்(தோழியர்) பலர் ரோஜாப் பூவைப் பறித்து

சரங்களாய் கட்டித்தர தலையில் சூடுகின்ற பேதைப் பெண் அவளது

மனத்தையறிந்து நான் இழகி நின்றேன். நான் ஏது செய்வது என்று அறியாது

வந்த வழியையும் மறந்து அலைந்தேன்.

கோவிலின் சிலைபோன்ற அவளது சிரித்த முகத்தைப் பார்த்துத்தான்

ஒவ்வொருநாளும் எனது வீட்டில் காலைப்பொழுது விடியும். அவள் என்னை

அழைப்பது எனக்கு மந்திர உச்சாடனம்போலிருக்கும். ஒவ்வொருநாளும்

அமுதம்போல பல சுவைமிக்க உணவைச்சமைத்து வைப்பாள்.

நாம் பல ஆண்டுகளுக்கு இப்படியே இன்புற்றிருந்தோம். இளமைப்பருவம்

கழிந்தது முன்னர் அவளுக்கு நான் உவமை சொல்லத் தேடிய சந்திரன், மரக்கொடி,

நல்ல மணமுள்ள ஒரு ரோஜாப்பூ, முத்து, முகில், நீரில் நீந்தும்

கயல்மீன் எதுவுமே அவளுக்கு இப்போது தேவையில்லை.

மேலே சொன்ன பொருட்களுடன் தன்னை ஒப்பிட்டு உவமை சொல்ல இப்போது அவள் விரும்பமாட்டாள். அவள் கட்டிய கணவனுடன் இல்லறவாழ்வு நடாத்தும் ஒரு பாங்கான மனைவி. அவளது குணம் பசிய சோலைக்கு இணையானது. உடன் கறந்த பாலைப்போல் வெண்மையானது. அவளுடைய உண்மை அழகு அவளுடைய நல்ல மனத்தில்தான் என்று நான் கண்டு அதற்கு நான் என்றும் அடிமையாகிவிட்டேன்.

அன்புடன்

நோர்வேஜியன்

:o:lol::icon_idea::D:D:unsure:

நல்ல சிந்தனை திறன் தொடர்ந்து கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.