Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பௌத்தமதம்

Featured Replies

5228_1472114704_PhototasticCollage-2016-

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்பொழுது பௌத்தமதம் பரப்பப்படுகின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2009 ற்கு பின்னபின்னரான காலப்பகுதியில் இருந்து படிப்படியாக மாணவர் உள்ளீர்ப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றம் இன்று மிக பெரிதாக வியாபித்து சிங்களதேச பல்கலைக்கழகம் ஒன்றுக்கு ஒப்பான மாணவர் எண்ணிக்கையை கொண்ட பல்கலைக்கழகம் ஒன்றாக மாற்றம் பெற்றுவிட்டது.

சிங்கள தேசம் ஒன்றின் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் எந்தளவு விகிதாசாரத்தில் உள்ளீர்க்கப்படுகிறார்களோ,அதே நடைமுறை பின்பற்றப்படும் பல்கலைக்கழகம் ஒன்றாக தமிழர்தேச பல்கலைக்கழகம் மாற்றமடைந்துவிட்டது.

தற்போது கிழக்குப் பலகலைக்கழகத்தில் காணப்படும் அனைத்து பீடங்களிலும் மிக அதிகமான சிங்கள மாணவர்கள் அனுமதிக்கப் பட்டிருப்பதுடன் கலைப்பீடத்திற்கு மட்டுமே தற்போதைய நிலையில் கணிசமான தமிழ் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதனடிப்படையில் தற்போதைய காலகட்டத்தில் பல்கலைக்கழக்சூழலில் சிங்கள மாணவர்களே அதிகம்.அவர்களே அங்கு தீர்மானிக்கும் சக்தி.

இன்னும் சில காலங்களில்,தற்போது தமிழ் மொழியில் கற்கைகளை மேற்கொண்டுவரும் கலைப்பீடம் ஆங்கில மொழிக்கு மாற்றப்படவுள்ளது.இது தொடர்பான துரித செயற்பாடுகளை பல்கலைக்கழக நிருவாகமும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் மிக துரிதமாக முன்னெடுத்து வருகின்றது.இதன்படி எதிர் காலத்தில் கலைப்பீடத்திற்கும் சிங்கள மாணவர்கள் மிக அதிகம் அனுமதிக்கப்படுவர்.

ஆகவே,தமிழர்களின் போராட்டம்,அர்ப்பணிப்புகள்,தியாகம் போன்றவற்றால் உருவாக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகம் இன்று சிங்களதேசம் ஒன்றின் பல்கலைக்கழகமாக மாறி சிங்கள கலை,இலக்கியங்கள்,கலாச்சாரம்,மதம் என்பவற்றின் அடையாளமாக தோற்றம்பெறவுள்ளது.

இதற்கான முன்னெடுப்புகள் கச்சிதமாகவும் மிக தீவிரமாகவும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.அண்மையில் பலத்த பாதுகாப்புகள் மற்றும் மத வழிபாடுகளுடன் வெள்ளரசு மரக் கன்றொன்று பல்கலைக்கழக வளாகத்தினுள் நடப்பட்டுள்ளது.2001 ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழக சமூகம் நடாத்திய பொங்குதமிழ் நிகழ்வை நினைவுகூரும் நடுகல் படிப்படியாக அழிக்கப்பட்டு அவ்விடத்தில் புத்தர்சிலை நிர்மாணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.

சிங்கள தேச கலாச்சாரமும் பண்பாடுகளும் பகிடிவதை எனும் பெயரில் படிப்படியாக தமிழ்மாணவர்கள் மத்தியியில் வலுக்கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.தமிழ் மாணவர்களும் அவர்களது கலாச்சாரத்துக்கு பழக்கப்படும் அசாதாரண சூழல் தோன்றியுள்ளது.

பல்கலைக்கழக நிருவாகமோ இவற்றைக் கண்டுகொள்ளாது தமக்கிடையே பதவிகளுக்காகவும் வரப்பிரசாதங்களுக்காகவும் முட்டி மோதி நிற்கின்றனர்.இத்தகைய பதவி போராட்டத்தை தமக்கு சாதகமாக்கிக்கொள்ளும் சிங்கள மாணவர்கள் தமது அமைச்சர்கள் மூலமாக உயரதிகாரிளை விலைக்கு வாங்கி,பேசா மடந்தைகளாக்கிவிட்டனர்.


இதற்கான சிறந்த உதாரணமாக அண்மையில் சிங்கள மாணவர்களால் தாக்கப்பட்ட தமிழ் மாணவன் தொடர்பான விசாரணையை கொழும்புக்கு மாற்றியமையை கொள்ள முடியும்.

எனவே மட்டக்களப்பின் கல்விச் சமூகம் ஆபத்தை உணர்ந்து தமிழர்களுக்கான கல்விச்சாலையை 
பாதுகாக்க புறப்பட வேண்டும்.

5228_1472114704_IMG_1924.JPG

 

5228_1472114704_IMG_1925.JPG

 

 

5228_1472114704_IMG_1927.JPG

 

5228_1472114704_IMG_1928.JPG

 

5228_1472114704_IMG_1929.JPG

 

 

http://battinaatham.com/description.php?art=5228

 

  • கருத்துக்கள உறவுகள்

பேராதெனியவிலும்.. களனியிலும்..சிறீ ஜெயவர்த்தன புரத்திலும்.. மொரட்டுவவிலும்.. கோவில் கட்ட முடியுமா..

முடியாது.

சிங்களவனுக்கு சாதகமான வகையில் சர்வதேச நிலைப்பாடுகளை மாற்றி அமைத்து.. சொந்த மக்களுக்கே அநியாயம் செய்யத் துணிந்திட்ட சோர அரசியல்வாதிகளின் இருப்பால் தான்.. இந்த அநியாயங்கள் எல்லாம்.. 2009 மே க்குப் பின் சிங்களத்தால் முழுவீச்சில் அமுலாக்கப்படுகிறது.

இன்று கிழக்கு.. நாளை வடக்கு.

அதன் பின் மொத்த சொறீலங்காவும்.. சிங்கள பெளத்த தேசம். 

இந்த தனித்துவ அடையாளத்துக்காகவே பாடுபட்டோம்.. என்று சந்திரிக்கா சொல்லமாட்டார்.. சம் சும் மாவை கும்பல் சொல்லிக் கொள்ளும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.