Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏவு தளத்தில் வெடித்துச் சிதறிய அமெரிக்க நிறுவன ராக்கெட்

Featured Replies

ஏவு தளத்தில் வெடித்துச் சிதறிய அமெரிக்க நிறுவன ராக்கெட்

160411105540_space_x_rocket_512x288_epa_

 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கன்னாவ்ரல் பகுதியில் உள்ள ஏவுதளத்தில், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியது.

இந்த வெடிப்பில் காயமடைந்தவர்கள் குறித்த எவ்வித தெளிவான தகவலும் இன்னும் கிடைக்கவில்லை.

வரும் சனிக்கிழமையன்று, இஸ்ரேலிய செயற்கைகோள் ஒன்றை ஏவ திட்டமிட்டிருந்த நிலையில், சோதனை அடிப்படையில் ஆளில்லா ராக்கெட் ஒன்றை ஏவியபோது அது வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.

ராக்கெட் ஏவப்பட்ட இடத்திலிருந்து பெரும் புகை கிளம்பியதாகவும், அதிர்ச்சி அலை ஒன்றை உணர்ந்ததாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ஃபால்கன் 9 என்ற அந்த ராக்கெட், கடலுக்கு மத்தியில் உள்ள மிதக்கும் மேடையில் தரையிறங்கும் திறன் கொண்டது. மேலும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்லும் கலனை அனுப்பவும் இது பயன்படுத்தப்படுகிறது.

http://www.bbc.com/tamil/global/2016/09/160901_rocket_america

  • கருத்துக்கள உறவுகள்

போன வாரம் செவ்வாய்க்கிழமை Kennedy Space Center க்குப் போயிருந்தேன். SpaceX ரொக்கெற் தளத்தையும் அவர்களின் சுற்றுலா பஸ்ஸிலிருந்து பார்த்திருந்தேன். நல்லவேளை அப்போது வெடிக்கவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

போன வாரம் செவ்வாய்க்கிழமை Kennedy Space Center க்குப் போயிருந்தேன். SpaceX ரொக்கெற் தளத்தையும் அவர்களின் சுற்றுலா பஸ்ஸிலிருந்து பார்த்திருந்தேன். நல்லவேளை அப்போது வெடிக்கவில்லை!

குரு மாற்றம் நல்லாக வேலை செய்திருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, alvayan said:

குரு மாற்றம் நல்லாக வேலை செய்திருக்கு...

இவருக்கு குரு மாற்றம் ஒகே.....ஆனால் இவர் போனதாலை சனி பார்வை பட்டுட்டுது எண்டு சற்ரலைற் விட்டவன் குழம்ப வெளிக்கிட்டால்......

  • தொடங்கியவர்

வெடித்துச் சிதறிய பேஸ்புக் செயற்கைக்கோள்! (வீடியோ)

space%20x.jpg

பேஸ்புக் நிறுவனம் ஆப்பிரிக்க கண்டத்தின் 14 நாடுகளில் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை மேற்கொண்டது. இதற்காக, சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஒரு செயற்கைகோள் ஒன்றை பேஸ்புக் நிறுவனம் உருவாக்கியது. அந்த செயற்கைகோளின் பெயர் ஆமோஸ்-6. இதனை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்புவதற்காக, எரிபொருள் சோதனை நடந்து கொண்டிருந்த நிலையில், திடீரென வெடித்துச் சிதறியதால், அதிர்ச்சியில் இருக்கிறது பேஸ்புக்.

நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும், தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவும் வகையில் இந்த ஆமோஸ்-6-ஐ உருவாக்கியது பேஸ்புக். இணையத்தை மேம்படுத்தும் செயற்கைகோள்களை எடுத்துச்செல்வதே ஆமோஸ்-6 இன் வேலை. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு “யுடெல்சாட் என்னும் பிரெஞ்சு தகவல்தொழில்நுட்ப செயற்கைகோள் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளியில் இருந்து இணைய சேவையை அளிப்பது பேஸ்புக் நிறுவனத்தின் கனவுத் திட்டம். இதற்காக ஆமோஸ்-6 என்னும் செயற்கைகோள் மூலம் அந்த கனவு நிறைவேற்றப்படும்” என அறிவித்தார் மார்க்.

space%20x%202.jpg

அதன்படி, ஆமோஸ்-6 செயற்கைகோள் சில மாதங்களுக்கு முன் இருந்தே ஆரம்பிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை விண்ணில் செலுத்துவதற்காக உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள 'கேப்கனவெரல்' மையத்தில் இருந்து ஸ்பேஸ்-எக்ஸ்ஸின் பால்கான்-9 என்னும் ராக்கெட்டின் மூலம் நாளை (சனிக்கிழமை) விண்ணில் செலுத்துவதற்கான பரிசோதனைகள் நேற்று நடந்து கொண்டிருந்தன. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த ராக்கெட் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதற தொடங்கியது. அந்த விபத்தில் அந்த ராக்கெட்டுடன் பேஸ்புக்கில் இருந்த 6 செயற்கைக்கோள்களும் முற்றிலுமாக அழிந்தது. விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தற்போது ஆப்பிரிக்காவில் சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள மார்க் ஸக்கர்பேர்க் “பல விதமான மக்களுக்கு பலன் அளித்திருக்க வேண்டிய இத்திட்டம் இந்த விபத்தால் தோல்வி அடைந்திருப்பதால், தான் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், அதே வேளையில் பேஸ்புக்கின் மற்ற தொழில்நுட்ப திட்டமான 'அக்யூலா' மூலம் தங்களின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பணி செய்வோம் என தெரிவித்துள்ளார்”.

Mark Zuckerberg
vor 16 Stunden

As I'm here in Africa, I'm deeply disappointed to hear that SpaceX's launch failure destroyed our satellite that would have provided connectivity to so many entrepreneurs and everyone else across the continent.

Fortunately, we have developed other technologies like Aquila that will connect people as well. We remain committed to our mission of connecting everyone, and we will keep working until everyone has the opportunities this satellite would have provided.

 
 
80.274

விண்வெளி ஆராய்ச்சியில் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இந்த விபத்தின் மூலம் கிட்டத்தட்ட 390 மில்லியன் டாலர் இழப்பை ஒரே நாளில் சந்தித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வெடித்துச் சிதறிய வீடியோ..

 

 

vikatan

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இவருக்கு குரு மாற்றம் ஒகே.....ஆனால் இவர் போனதாலை சனி பார்வை பட்டுட்டுது எண்டு சற்ரலைற் விட்டவன் குழம்ப வெளிக்கிட்டால்......

சனிப்பார்வைதான் போலிருக்கு.

சூறாவளிப் புயல் வேறு 2005 க்கு பின்னர் வந்திருக்காம்!

http://www.yarl.com/forum3/topic/180858-மணிக்கு-130-கிமீ-வேகத்தில்-வீசிய-புயலால்-நிலைகுலைந்த-ஃபுளோரிடா/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2.9.2016 at 11:14 AM, நவீனன் said:

வெடித்துச் சிதறிய பேஸ்புக் செயற்கைக்கோள்!

உலகத்துக்கு நல்லதொரு விசயம் நடந்திருக்கு....கடவுளுக்கு நன்றி.
மண்ணாங்கட்டி....பணியார பேஸ்புக்கு......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.