Jump to content

கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்


Recommended Posts

கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்தியது சாம்சங்

 

 
 
சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து.
சாம்சங் கேலக்ஸி 7 ரக செல்போன் | படம்: சாம்சங் இணையதளத்தில் இருந்து.

பேட்டரிகள் வெடிப்பதாக புகார் எழுந்ததையடுத்து கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனையை நிறுத்துவதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்பட இரண்டே வாரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சாம்சங் மொபைல் நிறுவனத்தின் கோ டோங் ஜி கூறும்போது, "சாம்சங் கேலக்ஸி 7 புதிய ரக மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர். தொடர்ந்து அத்தகைய புகார்கள் வந்ததால் கேலக்ஸி 7 ரக செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே இந்த ரக போனை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த தேதியில் வாங்கியிருந்தாலும் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

சாம்சங் கேலக்ஸி 7 அறிமுகப்படுத்தப்படதில் இருந்து இதுவரை 10 லட்சம் போன்கள் விற்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/world/கேலக்ஸி-7-ரக-செல்போன்-விற்பனையை-நிறுத்தியது-சாம்சங்/article9065515.ece?homepage=true

Link to comment
Share on other sites

சாம்சங் கேலக்ஸி நோட் 7 தாமதத்துக்கு என்ன காரணம்?

k72.jpg

லகம் முழுவதும் சாம்சங் நிறுவனம் விற்ற, தனது கேலக்ஸி நோட் 7 போனை மீண்டும் திரும்ப ரீ-கால் செய்துள்ளது. பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்த நோட் 7, கொரியாவில் மட்டுமே 4 லட்சம் போன்களை விற்பனை ஆகியிருந்தது. இந்தியாவிலும் பல பேர் இதற்காக, ப்ரீ-ஆர்டர் செய்திருந்த நிலையில், "கேலக்ஸி நோட் 7-க்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.எங்களால் குறித்த நேரத்தில் போனை டெலிவரி செய்ய முடியவில்லை. அதற்காக வருந்துகிறோம். ஆனால் விரைவில் உங்களுக்கு டெலிவரி செய்ய முயற்சிக்கிறோம்" என செய்தி அனுப்பியுள்ளது சாம்சங் இந்தியா.

இந்த பிரச்னைகளுக்கு காரணம், கடந்த சில நாட்களாக பல இடங்களில் கேலக்ஸி நோட் 7-ன் பேட்டரிகள் வெடித்ததாக வந்த புகார்கள்தான். பல வாடிக்கையாளர்கள் தனது நோட் 7, சார்ஜ் செய்யும் போதோ, அல்லது சார்ஜ் ஏற்றியதற்கு பிறகோ, வெடித்துவிட்டதாக புகார்களை சாம்சங்கிற்கு தட்டிவிட்டனர். அத்துடன், போன் வெடித்த வீடியோவை ஒருவர் வீடியோவாக யூ-டியூபில் எடுத்துப் போட, வைரல் ஆனது சிக்கல். அடுத்த வாரம் ஐ-போன் 7 வரவிருப்பதால், அதற்கு முன்பாகவே நோட் 7 விற்பனையைத் துவங்க சாம்சங் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த பேட்டரி பிரச்னை திடீர் சிக்கலை உண்டு பண்ண, இதுவரை விற்ற போன்களை திரும்ப அழைத்துள்ளது. உலகளவில் மொத்தம் 35 புகார்கள் இது தொடர்பாக சாம்சங் நிறுவனத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட போன்களை கொடுத்துவிட்டு, வேறு போன்களை வாங்கிக் கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளது. 

k7.jpg

இதனையடுத்து, "சாம்சங் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு கருத்துமே எங்கள் முக்கியம். தரமான பொருட்களை விற்பனை செய்வதே சாம்சங் நிறுவனத்தின் நோக்கம். இந்த பேட்டரி பிரச்னை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். எங்களுக்கு வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எனவே கேலக்ஸி நோட் 7 போன்களின் விற்பனையை தற்போது நிறுத்துகிறோம். ஏற்கனவே போன் வாங்கியவர்கள் அதனை மாற்றிக் கொள்ளலாம். உங்களுக்குத் தரமான சேவையை வழங்குவதற்கு முயற்சிக்கிறோம்" எனக் கூறியுள்ளது சாம்சங் நிறுவனம்.

 இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன்,  59,900 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/information-technology/67957-samsung-recalls-note-7-flagship-over-explosive-batteries.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரும்பப்பெறப்பட்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7ல் திருத்தம்

 

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங், அடுத்த வாரத்திலிருந்து தென் கொரிய வாடிக்கையாளர்கள் அதன் சமீபத்திய சாதனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

கேலக்ஸி நோட் 7
 கேலக்ஸி நோட் 7

டஜன் கணக்கான சாம்சங் தயாரிப்பு கேலக்ஸி நோட் 7 அலைபேசிகள், தீப்படித்து அல்லது வெடித்து சிதறிய பிறகு திரும்ப்பப் பெறப்பட்டது.

ஒரு புதிய மென்பொருள், அலைபேசிகளின் பாட்டரிகள் 60 சதவீதம் வரை மட்டுமே நிறைவடையச் செய்து அதை அதிக வெப்பமடைவதிலிருந்து தடுக்கிறது என தென் கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிந்த நிலையில் இருக்கும் கேலக்ஸி நோட் 7  எரிந்த நிலையில் இருக்கும் கேலக்ஸி நோட் 7

இந்த மாற்றம் உலகம் முழுவதும் எப்போது அமல்படுத்தப்படும் என்பது தெளிவாக தெரியவில்லை.

http://www.bbc.com/tamil/global-37348197

Link to comment
Share on other sites

#GalaxyNote7 : மீண்டும் விற்பனையைத் துவங்குகிறது சாம்சங்!

galaxy-note-7-1200x801.jpg

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 போனின் விற்பனையை வரும் 28-ம் தேதி முதல் தென் கொரியாவில் மீண்டும் துவக்குகிறது. சாம்சங் கேலக்ஸி நோட் 7, ஆகஸ்ட் 19-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால்  பல்வேறு நாடுகளில் எழுந்த பேட்டரி வெடிப்பு புகார்களால் தனது விற்பனையை நிறுத்தியது சாம்சங் நிறுவனம். மேலும் விற்பனை செய்யப்பட்ட, சுமார் 2.5 மில்லியன் போன்களை தென்கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளில் திரும்ப அழைத்தது. இந்தியாவிலும் இதன் விற்பனை இதனால் தள்ளிப்போனது.

அமெரிக்காவில் மட்டுமே, போனின் பேட்டரி அதிகமாக சூடாவதாக 92 புகார்கள் வந்தன. இத்துடன் உலகம் முழுக்க இருந்து, போன் பேட்டரி சார்ஜ் செய்யும் போது வெடித்ததாக நிறைய புகார்கள் கிளம்பின. இதனால் சாம்சங், தனது கேலக்ஸி நோட் 7 போன்களை திரும்ப அழைக்க, வணிகத்தில் இதனால் பின்னடவை சந்தித்தது. இந்நிலையில், கேலக்ஸி நோட் 7-ன் விற்பனையை மீண்டும், தென் கொரியாவில் வரும் 28-ம் தேதி துவங்க உள்ளதாக சாம்சங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏற்கனவே திரும்ப அழைக்கப்பட்ட குறைகள் உடைய போனை, செப்டம்பர் 19-ம் தேதி முதல் தென் கொரியாவிலும், 21-ம் தேதி முதல் அமெரிக்காவிலும் சரிசெய்து திரும்ப வழங்குகிறது. போனில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா அல்லது பேட்டரி மட்டும் மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
68218_thumb.jpg

இம்மாத இறுதியில் இறுதியில், மீண்டும் விற்பனையை தென் கொரியாவில் துவங்கும் சாம்சங், படிப்படியாக மற்ற நாடுகளிலும் விற்பனையைத் துவங்குகிறது. இன்னும் இந்தியாவில் விற்பனையைத் துவங்கவில்லை. அடுத்த மாத ஆரம்பத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது.

http://www.vikatan.com/news/information-technology/68476-samsung-galaxy-note-7-sales-to-resume-in-south-korea-from-sept-28.art

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தென் கொரியாவில் கேலக்ஸி நோட் 7 விற்பனையை தாமதப்படுத்தும் சாம்சங் நிறுவனம்

 

உலகெங்கிலிருந்தும்,  கேலக்ஸி நோட் 7 கைப்பேசியை திரும்பப் பெறுவதில் சாம்சங் நிறுவனத்துக்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதால், தென் கொரியாவில் அதன் விற்பனை மீண்டும் தொடங்குவதைத் தான் தாமதப்படுத்தவிருப்பதாக  சாம்சங் தெரிவித்துள்ளது.

Samsung Note 7
 

மிகப்பெரிய தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், பேட்டரிகள் அதிக வெப்பமடையும் பிரச்சினை காரணமாக  உலகளவில் சுமார் 2.5  மில்லியன் கைப்பேசிகளை மீண்டும் திரும்பப்பெற வேண்டிவந்தது.  

பல டஜன் கணக்கான கைப்பேசிகள் தீ பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கைப்பேசி செப்டம்பர் 28 ஆம் தேதி மீண்டும் விற்பனைக்கு வர இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி வாக்கில்  அது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கைப்பேசியின் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்தது. மேலும், ஏற்கனவே விற்கப்பட்ட கைப்பேசிகளுக்கு மாற்று கைப்பேசியை வழங்க முன்வந்தது.

ஏற்கனவே விற்கப்பட்ட கைப்பேசியை பயன்படுத்த வேண்டாம் எனவும் சாம்சங் வலியுறுத்தி இருந்தது. 

உலகளவில் கேலக்ஸி நோட் 7 கைப்பேசியின் திரும்பப்பெற்ற சம்பவம் 10 சந்தைகளை பாதித்தது. தென் கொரியாவில் சுமார் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் கைப்பேசியை திருப்பி அளித்துள்ளதாகவும், அதே எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் இன்னும் திருப்பி அளிக்கவில்லை என்றும் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லித்தியம் பேட்டரிகள் எதனால்  தீ பிடிக்கின்றன?

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இந்தியாவில் பயணிகள் விமானம் ஒன்றில், விமான பணியாளர் குழு, தீ அணைக்கும் கருவியை கொண்டு பழைய சாம்சங் கைப்பேசியிலிருந்து வெளிவந்த புகையை அணைத்துள்ளனர்.   

அந்த சம்பவத்தில், 2012ல் விற்பனைக்கு வெளியான கேலக்ஸி நோட் 2 கைபேசி, எரிந்து கொண்டிருந்ததாகவும், தீப்பொறிகளை உமிழ்ந்து கொண்டிருந்ததாகவும் இண்டிகோ விமான நிறுவனத்தில் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில், நோட் 7 கைப்பேசிகளை மீண்டும் திரும்பப்பெற அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதே சமயம், நாட்டின் மத்திய விமான போக்குவரத்துறையானது, விமான பயணிகள் நோட் 7 கைப்பேசியை விமானத்திற்குள் கொண்டுவர வேண்டாம் என்றும், அப்படி எடுத்து வந்தால் அதனை அணைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

Samsung Galaxy Note 7  உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் விமானத்தில் நோட் 7 கைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.

மேலும், விமான பயணத்தின் போது அதனை சார்ஜ் ஏற்ற கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது.

உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் விமானத்தில் நோட் 7 கைப்பேசியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளன.

முதலில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன் விற்பனைக்கு வந்தது. விமர்சகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்தின் போட்டியாளரான ஆப்பிள் நிறுவனம், அதன் புதிய ஐ போன் 7-ஐ வெளியிட்ட சமயத்தில் சாம்சங் நிறுவனத்தின் நோட் 7 கைப்பேசிகள் திரும்பப் பெறப்பட்டன.

http://www.bbc.com/tamil/global-37472926

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் கேள்விக்கு உண்மையைக் கூறுங்கள் என்றே உறவுகள் அனேகர் பதில் பதிந்திருந்தார்கள், அதிலிருந்து யாழ்உறவுகளிடம் உறைந்துள்ள பொய்யற்ற உள்ளங்களும் வெளிப்படுகிறது, இருந்தும் உண்மை சுடும் என்பதால் என்பேரன் சூடுதாங்கும் பருவம்வந்தபின் அறிந்துகொள்ளட்டும் என்று மனதைத் தேற்றிக்கொண்டேன்.  ‘உண்மையில் நான் பொருள்தேடி வரவில்லை, காகித ஆலையில் கண்காணிப்பாளர் பதவியில் இருந்த எனக்கு வழங்கப்பட்ட சம்பளமே வாழ்கை நடாத்தப் போதுமானது, சிங்ளப் பாடத்தில் தேர்ச்சி பெறவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் என்பதவி உயர்வைத் தடுத்தது. தொழிலநுட்ப அறிவு குறைந்தவர்களாக மற்றவர்களால் நோக்கப்பட்ட, என் அதிகாரத்தின்கீழ் வேலைபார்த்த சில சிங்களரும், சிங்களமொழி தேர்ச்சி பெற்றவர்களும் என்னை அதிகாரம் செய்யும் நிலை ஏற்படுவதை யேர்மனியில் உள்ள என்நண்பனும் அறிந்து அங்கு வரும்படி அழைத்தார்.  இனக்கலவரம் என்ற பெயரில் தமிழினம் அழிக்கப்பட்ட ஒவ்வொரு கலவரத்திலும் அகப்பட்டு மயிரிழையில் உயிர்தப்பிய அனுபவங்கள் மனதில் பயத்தையும் சோர்வையும் ஏற்படுத்தி புலம்பெயரும் முடிவை உறுதிப்படுத்தியது. அங்செல்வதற்கு எனக்கு அனுகூலமாகி உதவிய நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக உள்ளது. சிறிது காலத்தில் பிறந்தமண் திரும்ப எண்ணிய வேளை 83 கலவரம் என் குடும்பத்தை புலம்பெயரவைத்து என்னுடன் வந்து இணையும்  நிலையை ஏற்படுத்தியது. சென்ற மாதம் எங்கள் மூத்த பேத்தியுடன் நானும் மனைவியும் பிறந்தமண் சென்றிருந்தோம், அங்குள்ள இயற்கை நிகழ்வுகளை பேத்தி வீடியோ படம்பிடித்து பதிவுசெய்திருந்தார், மரங்களில் தொங்கும் கனிகளை அணில்கள் இரு கைகள்போன்ற கால்களால்  ஏந்திக் கடிப்பதையும், பறவைகள் கொத்தி உண்பதையும் அவற்றைத் துரத்த அவை பயந்து ஓடிப் பறப்பதையும், காயப்போட்ட வத்தல்களை கொத்தவரும் கோழி மற்றும் அதன் குஞ்சுகளை பெரியம்மா விரட்டுவதையும், கடற்கரையில் அலைகள் வரும்போது சிறுவர்கள் ஓடுவதையும், அலைகள் பின்வாங்கும்போது அவர்கள் அவற்றைத் துரத்திச் செல்வதையும் திரும்பத் திரும்ப போட்டுப் பார்த்துத் துள்ளி ரசித்தாராம். இங்கு இவைபோன்ற காட்சிகள் காண்பதற்கு இல்லையே என்ற ஆதங்கம் “சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்” என்ற கேள்வியை கேட்கவைத்துள்ளதுபோல் தெரிகிறது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் சிறிசுகளின் கேள்விகளுக்குப் பதில்கூற முடியாது பெரிசுகள் முழிப்பது ஒன்றும் புதுமையல்ல.🤔😳  
    • 1980ம் ஆண்டுகளில் கூட சின்ன மேளம் என்று சொல்வது இலங்கையில் இருந்தது. 1980ம் ஆண்டுகளில் வருடம் தோறும் என்னுடைய ஊர் இந்திரவிழாவில் இப்படியான பெயரில் ஒரு குழுவினர் வந்து நடனம் ஆடுவார்கள். இருவர் தான் மேடையில் இருப்பார்கள், ஆனால் குழுவில் பலர் இருந்தனர். இந்தப் பெயரே ஏறக்குறைய ஒரு வசவுச்சொல் ஆகவே பிறநாட்களில் பயன்பட்டது. அசோகமித்ரனின் 'புலிக்கலைஞன்' சிறுகதையை எப்போது வாசித்தாலும், ஊரில் இடம்பெற்ற இந்த நடன நிகழ்வுகள் மனதில் வந்து வாட்டும். சமீபத்தில் 'ஜமா' என்றொரு திரைப்படம் பார்த்தேன். அந்த திரைப்படம் பற்றிய எந்த தகவலும் தெரியாமலேயே தான் பார்த்தேன். கலைகளால் மீட்சியா அல்லது அதுவே சிலருக்கு ஒரு பெரும் துன்பமாக முடிகின்றதா என்ற குழப்பம் இன்னும் கூடியது.  
    • மிக்க மகிழ்ச்சி!   தம்பதிகளுக்கு யாழ் கள நல்லுள்ளங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து விடுங்கள். 
    • நாடு இருக்கும் நிலையில்... ஒரு வீட்டிற்கு சமைக்க,  16 சமையல்காரரை கேட்டால்... அப்படித்தானே நினைப்பார்கள். 😂
    • ஹன்ரர் பைடனுக்கு சீனியர் பைடன் மன்னிப்புக் கொடுக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் சிறை போகாமல் பாதுகாக்க பைடன் குடும்பத்திற்கு ஏனைய வழிகள் இருக்கின்றன. செனட்டர் மெனண்டெசுக்கு என்ன நடக்குமெனச் சொல்லக் கடினமாக இருக்கிறது. வன்முறைக் குற்றங்கள் அல்லாமல், ஊழல் மோசடிக் குற்றங்களால் தண்டனை பெற்ற அரசியல் பிரபலங்களுக்கு இரு கட்சிகளின் ஜனாதிபதிகளும் முன்னர் மன்னிப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால், மெனெண்டஸ் தன் குற்றங்களுக்கு மன வருத்தம் கூட தெரிவிக்காமல் சமாளிக்கும் ஆளாக இருப்பது, மன்னிப்புப் பெற உதவாது.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.