Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“போதையற்றதேசம்“ ஜனாதிபதி தலைமையில் யாழில் நிகழ்வு

Featured Replies

“போதையற்றதேசம்“ ஜனாதிபதி தலைமையில் யாழில் நிகழ்வு
 
 
“போதையற்றதேசம்“ ஜனாதிபதி தலைமையில் யாழில் நிகழ்வு
மூன்று வெவ்வேறு நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு  இன்றைய தினம் வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று முற்பகல் 10.45 மணியளவில் யாழ் முற்றவெளியில் நடைபெற்ற 'போதையற்ற தேசம்' என்ற நிகழ்வில் பங்கேற்றார் 
1473417214_m.jpg
நிகழ்வில் மீளும் போதை புகையிலை மதுபாவனையை முற்றாக ஒழிக்க அனைவரும் ஒன்று சிறந்து போதையில் இருந்து விடுதலையக்குவோம் என நம்மை முழு பலத்துடன் செயற்படுத்துவோம் என வந்து இருந்த அனைவரும் உறுதி மொழி எடுத்துகொன்டனர்.
 
இதனை தொடர்ந்து வாழ்க்கை அழகானது போதையை ஒழித்தால் என்ற பாடலுக்கு பாடசாலை மாணவிகள் நடனம் ஆடினர்.
1473417253_m3.jpg
பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றினர். தொடர்ந்து ராமநாதன் நுண்கலை மாணவர்களி்ன்  நடன நிகழ்வு இடம்பெற்றது.
 
பின்னர் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு சின்னம் சூட்டப்பட்டது.மேலும் போதை ஒழிப்புக்காக பாடுபட்டபொலிசாருக்கும்,கடற்படையினருக்கும்,மதுவரிதிணைக்களத்தினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
1473417817_m4.jpg
பின்னர் தேசியகீத ஒலியுடன் நிகழ்வு நிறைவடைந்தது
 
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், சிறுவர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க , பாராளுமன்ற உறுப்பினர்களாகிய ஈ.சரவணபவன், அங்கஜன் இராமநாதன் , தர்மலிங்கம் சித்தார்த்தன்,  டக்ளஸ் தேவானந்தா ,ஆகியோரும்  வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்,வடமாகாண கல்வியமைச்சர் குருகுலராசா,   வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா,அரசாங்க அதிபர் வேதநாயகம்,மதுவரித்திணைக்கள ஆணையாளர் குணதிலக, பொலிஸ்மா அதிபர் பூஜித விஜயசுந்தர ,பாதுகாப்பு செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி உட்பட மாணவர்கள், அரச அதிகாரிகள்   பலர் கலந்து கொண்டனர்.
1473417859_m5.jpg 

http://onlineuthayan.com/news/17378

  • தொடங்கியவர்
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி
 
 
 
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் போராட்டம் நடாத்தப்படாதது ஏன்? கேட்கிறார் ஜனாதிபதி
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையால் யாழ் மாவட்டத்தில் மிகவும் மோசமான சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ள  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவற்றுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்காததை,இட்டு கவலை வெளியிட்டுள்ளார்.
 
பல்வேறு விடையங்களுக்காக போராடும் மக்களும் அரசியல் கட்சிகளும் சமூகத்தை ஒட்டுமொத்தமாக அழித்துவரும் போதைப் பொருள் மற்றும் மது பாவனைக்கு எதிராக போராட வருவதில்லை என்றும் ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டிருக்கின்றார்.
 
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மது மற்றும் போதைப்பொருள் அற்ற நாட்டை கட்டியெழுப்பும் செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணம் முற்றவெளியில்   ஆம்பித்து வைக்கப்பட்டது.
 
இதனையடுத்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி யாழ் மாவட்டமே இலங்கையில் மதுபாவணையில் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
 நான் இன்று யாழ்ப்பாணத்திற்கு வந்ததற்கு விசேட காரணம் ஒன்று இருக்கின்றது.
 
குறிப்பாக இங்கு முன்னர் இங்கு வந்ததை விட முற்றிலும் மாறான ஒரு விடையத்திற்காகவே நான் இங்கு வந்திருக்கின்றேன்.
 
எமது சமூகம் அபிவிருத்தி குறித்தே கதைக்கின்றது. இந்த அபிவிருத்தியின் போது தமக்குக் கிடைக்காத விடையங்களுக்காக பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபடுகின்றனர்.
 
தமக்கான குறைகளை நிவர்த்திக்குமாறு கேட்டே இந்த போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
 
எனினும் நான் இன்று முற்றிலும் மாறுபட்ட விடையமொன்று குறித்து கதைப்பதற்கே இங்கு வந்துள்ளேன்.
 
போராட்டங்களில் ஈடுபடும் தரப்பினர் கவனம் செலுத்தாத எமது சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேறு பல விடையங்களும் எம் மத்தியில் காணப்படுகின்றன.
 
மதுபானசாலைகளை மூடுமாறு எவரும் போராட்டம் நடத்துவதில்ல. போதைப்பொருளுக்கு எதிராக வீதியில் இறங்கி எவரும் போராட்டம் நடத்துவதில்லை.
 
எமது நாட்டில் போதைப்பொருள் மற்றும் மது பாவனை காரணமாக நாளாந்தம் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கின்றனர்.
 
பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் தரப்பினர் இவற்றுக்காக ஏன் போராட்டம் நடத்துவதில்லை என்று கேட்க விரும்புகின்றேன்.
 
இந்தப் பிரச்சனை எமது நாட்டுக்கு மாத்திரம் உரியதல்ல. உலகம் முழுவதும் பெரும் பிரச்ச னையாக உருவெடுத்துள்ளது.
 
ஆனால மக்கள் மத்தியில் இருந்தோ அல்லது அரசியல்வாதிகள் மத்தியிலிருந்தோ போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்கள் இதுவரை வெடிக்கவில்லை.
 
போதைப்பொருளுக்கு எதிரான அமைப்புகள் மாத்திரமே இந்த போராட்டங்களை முன்னெ டுத்து வருகின்றன.
 
இந்த இடத்தில் மிகவும் கவலைகுரிய ஒரு தகவலை தெரிவித்தாக வேண்டும். இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருக்கின்றன.
 
இவற்றில் மதுபானம் விற்று அதிக வருமானத்தை திறைசேரிக்கு வழங்கும் மாவட்டங்களில் யாழ்ப்பாணம் முதல் இடத்தில் உள்ளது.
 
யாழ் நகரில்மாத்திரம் சுமார் 70 மதுபான விற்பனை  நிலையங்கள் இருக்கின்றன.
 
வட மாகாணத்தில் அதுவும் யாழ் மாவட்டம் முகம்கொடுக்கம் பிரதான சமூகப் பிரச்சனை யாகவும் இன்று போதைப்பொருள் பாவனை மாறியுள்ளது.
 
இதனை எவரும் மறந்துவிடக் கூடாது. இதனால் இந்த நிலைமையை தடுக்க மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் அரச அலுவலகங்களும் மேற்கொண்டுவரும் நடவடி க்கை களுக்கு மக்கள் முழுமையான ஆதரவைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/17379

  • தொடங்கியவர்

மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே

 

மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

”போதையிலிருந்து விடுதலையான நாடு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

யாழ். முற்றவெளி மைதானத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

சத்தமிட்டு ஆர்ப்பாட்டம் செய்து பல்வேறு விடயங்களைக் கேட்பவர்கள், எங்களுக்குத் தேவையற்ற விடயங்களும் சமூகத்திலுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். சாராயம் விற்பனை செய்யும் மதுபானசாலையை மூடுமாறு யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. பேதைப்பொருளுக்கு எதிராக யாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுமில்லை, அதற்காக வீதியில் இறங்குவதுமில்லை. தேவையற்ற விடயங்களுக்காக இந்த நாட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் ஏன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என நான் உங்களிடம் கேட்கின்றேன். உங்களுக்கு ஒரு கவலையான விடயத்தைக் கூற விரும்புகின்றேன். நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களுள் யாழ்ப்பாணமும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீ்ர்கள். அதிகமாக மதுபானம் விற்பனை செய்து, அரசாங்கத்தின் திறைசேரிக்கு அதிகப் பணத்தை அனுப்பி வைப்பது யாழ். மாவட்டமே. இங்கு 69 – 70 மதுபானசாலைகள் காணப்படுகின்றன. வடமாகாணத்தில் யாழ். மாவட்டமானது போதைப்பொருள் பாவனை அதிகமாகக் காணப்படுகின்ற மாவட்டம் என்பதை மறந்து விடவேண்டாம்.

என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் போதைப்பொருள் தொடர்பான ஆவணம், அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகத்தால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

அதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வு அதிபர் எஸ்.எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.

யாழ். மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய திறப்பு விழா ஜனாதிபதியால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பொலிஸ் அணிவகுப்பு மரியாதை மற்றும் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட அரசியல் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

14212593_10154354971461327_3202916786714006187_n

14316895_10154354971551327_5789421449390326131_n

14292484_10154354972181327_223471518490697683_n

14212074_10154354972661327_2689883038055361247_n

14317382_10154354973116327_3810160665207368618_n

http://newsfirst.lk/tamil/2016/09/மதுபான-விற்பனை-மூலம்-அரச/

யாழில் பலருக்கு போதை நோய் - ஜனாதிபதி

இலங்கையில் 25 மாவட்டங்களில் அதிகளவு மதுபானம் நுகர்வு காரணமாக அதிகளவு வரியை அரச திறைசேரிக்கு வழங்கும் மாவட்டமாக யாழ்ப்பாணம் இருக்கின்றமை எமக்கு மன வருத்தத்தை கொடுத்திருக்கின்றது என கூறியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணத்தில் போதை நோய் பலருக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

போதையற்ற நாடு என்ற கருப்பொருளில் யாழ். மாவட்டத்திற்கான போதை ஒழிப்பு நிகழ்வு இன்றைய தினம் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இந்த நாட்டில் தேவையற்ற பல விடயங்களுக்காக பலரும் பல ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துகிறார்கள்.

தங்கள் சுய லாபங்களுக்காக பாதை போடுவதற்காகவும், வணக்கத் தலங்களுக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் போராட்டம் நடாத்துகிறார்கள்.

ஆனால் நான் இவை எல்லாவற்றையும் விட அவசியமானதொன்றுக்காக சிந்திக்கிறேன். எங்களுக்குத் தேவையில்லாத ஒன்றுக்காக யாரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை.

சாராயக்கடைகளை மூட வேண்டும் என்று யாரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதில்லை. போதைப் பொருளை நிறுத்த வேண்டும் என்று யாரும் வீதியில் இறங்கிப் போராடுவதில்லை.

எமது நாட்டில் சாராயம், சிகரெட் மற்றும் போதைப் பொருள்களினால் நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்து போகிறார்கள்.

தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் ஏன் இதற்காக ஆர்ப்பாட்டம் நடாத்துவதில்லை என்று உங்கள் முன் நான் கேட்க விரும்புகிறேன். இங்கு மட்டுமல்ல உலகின் எந்தப்பாகத்திலும் இப்படி ஒன்றுக்காக மக்கள் இறங்கிப் போராடுவதைக் காண முடியாது.

உலகத்தில் எந்தப் பகுதியிலும் மக்கள் மூலமாகவோ, அரசியல் வாதிகள் மூலமாகவோ இந்த விடயங்கள் வெளிக் கொண்டுவரப்படுவதில்லை. போதைப் பொருளுக்கு எதிராகக் குரல் கொடுக்கின்ற அமைப்புக்களினால் மாத்திரம் தான் அது சாத்தியமாகிறது.

போதைப் பொருள்கள் எனப்படும் போது சட்டவிரோதமான போதைப் பொருள்களும் உண்டு, சட்ட விரோதமாக விற்கப்படுவனவும் உண்டு.

போதைப் பொருள் விற்பனைக்கு அனுமதி வழங்குவதென்பது மக்களைக் கொல்வதற்காகத் தான். எனவே, போதைப் பொருள் எனும் விடயத்தில் சட்ட ரீதியான அல்லது சட்டவிரோதமான என்று இரண்டு வகை இருக்கக் கூடாது.

எதுவாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் எதிராக நாங்கள் குரல் எழுப்ப வேண்டும். போதைக்கு எதிராக நாங்கள் அணி திரள வேண்டும். மது மற்றும் போதைக்கு எதிராக பொதுக் கருத்தொன்றை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

அரசியல்வாதிகள், பெற்றோர்கள், பிள்ளைகள், பொதுமக்கள் என்று அனைவருக்கும் இந்தப் பொறுப்பு இருக்கின்றது.

உலகில் பல அரசாங்கங்களின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு போதைப் பொருள் வியாபாரிகள் காரணமாக இருந்திருக்கிறார்கள். இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

எமது நாடு ஒரு தீவாக - கடலால் சூழப்பட்டு இருப்பதனால் எமது நாட்டுக்குள் போதைப் பொருள்கள் ஏதோ ஒரு வகையில் வந்து கொண்டே இருக்கின்றன.

அதேபோல உள்நாட்டிலும் போதைப் பொருள் வியாபாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் "போதையற்ற நாடு" என்ற போதைக்கெதிரன தேசிய வேலைத்திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். போதையில் இருந்து விடுதலையான நாடு என்ற சொல்லைத் தாரக மந்திரமாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.

போதையில் இருந்து விடுதலையான நாடு என்ற இந்தச் சொல்லை நீங்கள் உங்கள் உதட்டிலும் உள்ளத்திலும் வைத்திருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நான் இன்று மனவருத்தத்துடன் ஒரு விடயத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

இலங்கையிலுள்ள இருபத்தைந்து மாவட்டங்களிலும் அதிகளவிலான மதுபாவனை காரணமாக உயர்ந்தளவு மது வரியைத் திறைசேரிக்குத் தருவது உங்களுடைய யாழ்ப்பாண மாவட்டம் தான் என்பதைக் கவலையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

யாழ். நகரினுள் மாத்திரம் 69 அல்லது 70 மதுபானக் கடைகள் அனுமதிபெற்று இயங்குகின்றன. கடந்த முறை யாழ்ப்பாணத்துக்கு வந்த போது பாடசாலைப் பிள்ளைகளைச் சந்தித்துக் கலந்துரையாடினேன்.

அவர்களிடம் நான் கேட்டேன் என்னால் உங்களுக்கு ஆக வேண்டியது என்ன என்று. அவர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளைக் கூறினார்கள்.

ஆனால் எல்லோருமாக - ஏகோபித்த குரலில் சொன்ன ஒரு விடயம் தாங்கள் பாடசாலைக்கு வரும் போதும், பாடசாலையை விட்டுப் போகும் போதும் இருக்கின்ற மதுபானக் கடைகள் தங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது தான்.

அநேகருக்குத் தெரிந்திருக்கும், சாராயக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதற்கென்று சில நடைமுறைகள் உண்டு.

பாடசாலைகளுக்கும் வணக்கத் தலங்களுக்கும் 100 மீற்றர் தூரத்தினுள் சாராயக் கடைகளை வைப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்களுக்குப் பாரிய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதே போல கடல் மார்க்கமாக, சட்ட விரோதமாக எடுத்துவரப்படும் போதைப் பொருள்களினாலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இத்தகைய பிரச்சினைகள் என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், வைத்திய அதிகாரிகளும், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகநல மாதுகளும் இந்தப் பிரச்சினைகளைப் பற்றி நன்கு அறிவார்கள்.

பொலிசாரும் மது வரித் திணைக்கள அதிகாரிகளும் இதனைக் கட்டுப்படுத்துதற்காக அரும் பாடுபடுகிறார்கள். ஆனாலும் இந்த விடயத்தில் நாம் அனைவரும் பொறுப்புணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணத்தை நிர்வகிக்கின்ற அத்தனை பேரும் இங்கே கூடி இருக்கிறீர்கள். இங்குள்ள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன்.

உங்களுடைய அலுவலகங்களில் போதைக்கெதிரான அலுவலகம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு உங்களை வேண்டுகிறேன்.

யாழ்ப்பாணத்தில் கூடுதலாக பியரும், கள்ளும் தான் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தக் கூட்டத்துக்கு வந்தவர்கள் மதிய போசனத்துக்காக போகும் போது கூட மது அருந்தலாம்.

இரவு வீட்டுக்குப் போனபின் கூட ஜனாதிபதி இப்படி எல்லாம் சொன்னார். சாராயத்தை விட வேண்டும் தானா என்றெல்லாம் யோசிப்பீர்கள்.

அப்படி யோசித்தால் வீட்டிலுள்ள கண்ணாடியின் முன்னால் நின்று பாருங்கள். என்னைப் போல ஒரு மாடு, எருமை மாடு இருக்க முடியுமா என்று யோசிப்பீர்கள். உங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாதா என்று நான் உங்களைப் பார்த்துக் கேக்கிறேன்.

வயது வந்தவர்கள் இப்படி நடந்தால் சிறியவர்களை நல்ல வழியில் கொண்டு போக முடியுமா? மது மற்றும் போதையினால் நீங்கள் நோயாளி ஆகுவீர்கள். பொருளாதாரத்தில் நொடிந்து பிச்சைக்காரர்கள் ஆகி விடுவீர்கள். சமூகம் உங்களை ஒதுக்கி வைக்கும். சமூகம் உங்களை வெறுக்கும்.

இலங்கையின் வருமானத்தில் 125 முதல் 150 பில்லியன் வரை மதுபான வரியினால் கிடைக்கிறதாம். திறைசேரி அதிகாரிகளின் தகவலின் படி அந்த வருமானம் இல்லாது விட்டால் வரவு - செலவுத் திட்டத்தை வரைய முடியாது என்கிறார்கள். இதனை நினைத்து நான் வேதனைப்படுகிறேன். வெட்கித் தலை குனிகிறேன்.

பிள்ளைகளே ! சட்ட விரோதமாக பல வகைப் போதைப் பொருள்கள் இந்த நாட்டுக்குள் வருகின்றன. அவை வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன.

அவற்றை விற்பனை செய்வதற்காக போதைப் பொருள் வியாபாரிகள் பாடசாலை மாணவர்களைப் பயன்படுத்துகிறார்கள்.

போதைப் பொருள் வியாபாரம் நடப்பதை நீங்கள் அறிந்தால் அதனை ஒதுக்க வேண்டும். எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

தன் நலன் பற்றி சிந்திக்கின்ற, தன் குடும்பத்தைப் பற்றி யோசிக்கின்ற, தன் பிள்ளைகளில் அக்கறை கொண்டுள்ள எவரொருவரும் போதைப் பழக்கத்தைப் பழகமாட்டார்கள்.

இது விடயத்தில் நாங்கள் இன்னும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். எல்லோரும் தங்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/117042

6 hours ago, நவீனன் said:

மூன்று வெவ்வேறு நிகழ்வுகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு  இன்றைய தினம் வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று முற்பகல் 10.45 மணியளவில் யாழ் முற்றவெளியில் நடைபெற்ற 'போதையற்ற தேசம்' என்ற நிகழ்வில் பங்கேற்றார் 

http://onlineuthayan.com/news/17378

14 minutes ago, போல் said:

போதையற்ற நாடு என்ற கருப்பொருளில் யாழ். மாவட்டத்திற்கான போதை ஒழிப்பு நிகழ்வு இன்றைய தினம் யாழ்.பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள வளாகத்தில் இடம்பெற்றது.

http://www.tamilwin.com/politics/01/117042

யாழில் மூன்று நிகழ்வுகளில் இன்று பங்கேற்கிறார் ஜனாதிபதி
யாழில் மூன்று நிகழ்வுகளில் இன்று பங்கேற்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை   யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதுடன் மூன்று நிகழ்வுகளில்பங்கேற்கவுள்ளார்.
 
இன்று காலை விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ்.சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியில் 200 ஆவது ஆண்டு    விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்து கொள்ளவு ள்ளார்.
 
இந்த நிகழ்வினை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைக்கவுள்ளார்.
 
இந்த நிகழ்வுகளில், அமைச்சர் சாகல ரட்ணாயக்க இராஜங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரன், பொலிஸமா அதிபதி பூஜித ஜயசுந்தர  உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
 
எல்லா இடமும் பக்கத்து பக்கத்துலதான். பாவியலா யாராவது இது எங்க நடந்தது எண்டு சொல்லுங்களேனப்பா.

 

On 9/9/2016 at 8:53 PM, நவீனன் said:

http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2016/09/14292484_10154354972181327_223471518490697683_n.jpg

இந்த மேடையின் பின்னணியில் அண்மையில் ஆக்கிரமித்து உருவாகிய நாக விகாரை முதலிலும், இன்னொரு அண்மைக்கால ஆக்கிரமிப்பான அனுமான் இறுதியிலும் உள்ளது. இவை இரண்டுமே பல்லாயிரம் வருட தமிழ் கலாச்சாரத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவை.

இந்த இரண்டு அண்மைக்கால மத ஊடுருவல்களை திணித்தவர்கள், இந்த மேடையைத் தயாரித்த சிங்கள ராணுவப் பயங்கரவாதிகள், சில நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக பின்னிப் பிணைந்துள்ள கிறிஸ்த்துவ அடையாளங்களை தவிர்த்தமை "நல்லாட்சி" என்ற பெயரில் இடம்பெறும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதத்தின் இன்னொரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

 

On 9/9/2016 at 8:53 PM, நவீனன் said:

http://newsfirst.lk/tamil/wp-content/uploads/2016/09/14212074_10154354972661327_2689883038055361247_n.jpg

இதன்போது போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழியும் எடுக்கப்பட்டது.

 

போதைப் பொருள் கடத்தலுக்கும் போதைப் பொருள் விற்பனைக்கும் பெரும் துணை போவார்கள் பலர் சீருடைகளில் முன் வரிசைகளில் நின்று போலி உறுதி மொழி எடுப்பதும் சிங்கள-பௌத்த போலி நல்லாட்சி அரசின் அம்சங்களில் ஒன்றாகிவிட்டது.

சில சர்வதேச முட்டாள்கள் இதையெல்லாம் முன்னேற்றம் என்று கூறுவார்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.