Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மொழியில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ள வவுனியா,மன்னார் மக்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Featured Replies

தமிழ்மொழியில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ள வவுனியா,மன்னார் மக்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
 
 
தமிழ்மொழியில் பொலிஸாருடன் தொடர்பு கொள்ள வவுனியா,மன்னார் மக்களுக்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்
வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தமிழ் மொழியில் அவசர பொலிஸ் அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கைள அறிமுகப்படுத்தும் நிகழ்வு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நேற்று  வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்ந நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னர்ர் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தமிழ் மொழியில் உதவிகளையும் முறைப்பாடுகளையும் செய்துகொள்ளமுடியும்.
va.jpg
அமைதி, நல்லிணக்கம், சகவாழ்வு என்பவற்றை ஏற்படுத்தும் முகமாகவும் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் தொடர்பை விஸ்தரிக்கும் முகமாகவும் இத்திட்டம் இலங்கையில் முதன் முதலாக வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
 
இதேவேளை சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் சிலருக்கும் மேற்படி இலக்கத்திற்கு இலவசமாக அழைப்புகளை ஏற்படுத்துவதற்கு ஏற்ற தொலைபேசி சிம் அட்டைகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
va1.jpg
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் பொலிஸ்மா அதிபர் மற்றும் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர், பொலிஸ் அதிகாரிகள், மத குருமார், வர்த்தக பிரதிநிதிகள், சிவில் பாதுகாப்புகுழுக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

http://onlineuthayan.com/news/17408

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் அழைப்பதற்கு விசேட இலக்கம் கொடுத்திருந்தால் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
தமிழன் வாழும்  தமிழ்ப் பிரதேசத்தில் தமிழ் மொழிக்கு விசேட இலக்கம்.
நல்லிணக்கம்.... நல்லிணக்கம்...... கண்டு கொள்ள வேண்டாம்

சிங்கள போலீஸ் பயங்கரவாதிகளின் அட்டகாசங்களில் ஒன்று!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.