Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு

Featured Replies

அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு
 
 
அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு
மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன் காய ப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.
 
யாழ்மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் இன்று (சனிக்கிழமை)  நடைபெற்றது.
இந்நிகழ்வின்போது, புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
 
‘தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறன. காணாமல் போனவர்கள் தொடர்பான உன்மை நிலையை கண்டறிவதற்காக காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் இருக்கி றார்களா? இல்லையா? என காண்பதற்கே இந்த அலுவலகம். இதற்கு ஒரு கால எல்லை இல்லை. என்பதுடன் பழிவாங்கும் எண்ணமும் இல்லை. இது மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சியே ஆகும்.
 
ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் பிறந்த நாள் இன்றாகும்.

அவர் பெரும் போராட்டத்தின் மத்தியில் 13ஆம் திருத்த சட்டத்தை கொண்டுவந்தார். அதற்கு எதிராக தெற்கிலும், வடக்கிலும் பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன. அவரை கொல்வோம். என்றார்கள். ஆனால் அவரையும், அவர் உருவாக்கிய 13ஆம் திருத்த சட்டத்தையும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அது அரசியல் தீர்வின் அடிப்படையானது.
 
போர் நிறைவடைந்த பின்னர் 13ஆம் திருத்தச்சட்டம் அரசியல் தீர்வுக்கான அடிப்படையாக அமையும் என நாங்கள் நம்பினோம். ஆனால் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 பிளஸ் என்றார்.

ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.
 
இந்த நிலையிலேயே ஐ.தே.கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கினோம். 
 
‘நாம் நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றி, வழிகாட்டல் குழு, மற்றும் 6உப குழுக்கள் ஆகியவற்றை உருவக்கி அதன் ஊடாக சகல மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றிருக்கின்றோம்.
 
இதன் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, அதிகார பகிர்வு தேர்தல் முறமை மாற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக பேசி வருகின்றோம்.
 
குறிப்பாக தேர்தல் மறுசீரமைப்பு விடயத்தில் 80வீதமான முன்னேற்றம் காணப்பட்டிருக்கி ன்றது.

இதேபோல் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பா கவும் நாம் தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கின்றோம். அதிகார பகிர்வு விட யத்தில் மத்தியில் இருந்து மாகாணங்களுக்கும், நகரசபைகளுக்கும், பிரதேச சபைகளுக்கும் வரை யில் அதிகாரங்கள் பகிரப்பட்டிருக்கும் வகையில் ஒரு அதிகார பகிர்வு குறித்துப் பேசி வரு கின்றோம்.
 
இதேபோல் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான வாக்கெடுப்பு பொதுசன வாக்கெடுப்பாக அமைவும். மேலும் 9 மாகாணங்களுக்கும் செனற்சபை ஒன்றும் உருவாக்கப்படும். அதற்கான அதிகாரங்கள் தொடர்பாகவும் பேசி வருகிறோம்.
 
மேலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பாக ஆலோசனைகள் பெறப்படுகின்றது.

இந்நிலையில் புதிய அரசியலமைப்பின் உத்தேச யோசனைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிறைவு செய்யப்படும்.
 
மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் பகிரப்பட்டதன் பின்னர் மத்திய அரசாங்கத்தினால் அவை மீள பெறப்படும் என்ற அச்சமும் உள்ளது. எனவே அவை தொடர்பாகவும் நாங்கள் சரியான முறையில் பேசியிருக்கின்றோம்’
 
இப்போது சிலர் பௌத்தம், தேசிய கொடி, தேசிய கீதம் பாதுகாக்கப்படவேண்டும்.

என்கி றார்கள். பௌத்த சமயம் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி இனவாதம் பேசுகி றார்கள்.
 
சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டபோது தலதா மாளிகையில் பௌத்த பிக்குகள் போரா ட்டம் ஒன்றை நடத்த இருந்தனர். அப்போது அங்கே சென்று அவர்களை அச்சுறுத்தி புதிய பீடம் ஒன்றை உருவாக்குவோம் என கூறியவர்கள் இப்போது கூச்சலிடுகிறார்கள்’ என்றும் கூறினார்.

http://onlineuthayan.com/news/17734

  • கருத்துக்கள உறவுகள்

அட ஈத்தறைகளா.. 2009 ல் இருந்து  2050.. 3050 வரைக்கும் குழுக்கள்..  போடுவது .. ஆணையம் அமைப்பது.. இதைதான் திரும்ப திரும்ப செய்ய போறீங்க !!!  ..இனவாததிற்குக்கு நல்ல சப்பொர்ட்டூ ஜனநாய்கம்.!!  ஜனநாய்கதிற்கு பேரு சிங்கள இனவாதம்.. !!

டிஸ்கி...

நமக்கு தேவை... பஜ்ஜி.... போண்டா.....சிங்கள் டீ.. இப்படித்தானே அந்த குழு விவாதம் நடைபெறும் .. அட போங்கப்பா.....!!

  • தொடங்கியவர்

 

showImageInStory?imageid=297767:mr

 

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மாகாண சபைகளுக்கு மட்டுமல்ல உள்ளூராட்சி மன்றங்கள் வரையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்ட செயலகத்தின் நிருவாகக் கட்டடத்தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், அமைச்சர்களான வஜிர அபேவர்த்தன, டி.எம்.சுவாமிநாதன், சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதியமைச்சர் நிமல் லங்ஸா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், தருமலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உள்ளுராட்சி மன்றங்கள் வலுவாக இருந்தால் மாத்திரமே நாட்டின சிறந்த ஆட்சி நிலவும். அதற்காகத்தான் இன்று யாழ்ப்பாணத்தில் யாழ்.மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வடக்கில் சிவில் நிர்வாகத்திற்கான அடிப்படைக் காரணிகள் இரண்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரத்தில் பொலிஸ் நிலைய தலைமையகத்தை திறந்து வைத்திருந்தார்.

எனவே தற்போது எஞ்சியிருப்பது அரசியல் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்காக ஒன்றிணைவதாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் 110ஆவது ஜனனதினம் இன்றாகும் (நேற்று)

ஜே.ஆரின் போராட்டம்

13ஆவது அரசியமைப்பை கொண்டுவருவதற்காக அவர் பல சவால்களுக்கு மத்தியில் போராடினார். வடக்கிலும் தெற்கிலும் 13ஆவது அரசியமைப்பை எதிர்த்து போராட்டங்கள் மேலோங்கியிருந்தன. அதிகாரத்தைப் பகிர்ந்து அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென ஜே.ஆர்.ஜயவர்த்தன அன்று கடுமையாக போராடினார்.

ஆனால், ஜே.ஆர்.ஜயவர்த்தனவை கொலை செய்வோமென அச்சுறுத்திக் கூட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஆயுட்காலத்தை முழுமையாக வாழ்ந்துவிட்டே உயிரிழந்தார். அவரைக் கொலை செய்யவோ அவரால் கொண்டுவரப்பட்ட 13ஆவது அரசியமைப்பை இல்லாதொழிக்கவோ யாராலும் முடியாமல்போனது.

13 தான் அடிப்படை

தற்போது அதனை அடிப்படையாகக் கொண்டு முன்னோக்கிச் செல்லவேண்டிய நிலையே எமக்குள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் 13ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத்திட்டத்தை நோக்கி அரசாங்கம் நகரும் என நாம் நம்பினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

ராஜபக் ஷ 13பிளஸ் தருவதாக கூறினார்.

ஆனால் அவ்வாறு எந்தவொரு தீர்வுத் திட்டமும் முன்வைக்கப்படாத நிலையில் வடக்கில் நிலைமை மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அதேபோன்று நாட்டில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் ஏற்பட்டன. மல்வத்த பீடத்திற்கு அச்சுறுத்தலான நிலைமை கூட உருவானது. எனவேதான் மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராக நிறுத்தி தேர்தல் வெற்றி ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்காக ஒன்றிணைந்தோம்.

ஒரே நிலைப்பாடு

தேசிய பிரச்சினை விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் கொள்கை ஒன்றாகவே காணப்படுவதாக ஐ.தே.கவின் 70ஆவது சம்மேளனத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஒன்றிணையவேண்டும்

நிலையான தீர்வை நோக்கி நகர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். இதற்காகவே தேசிய அரசாங்கமும் உருவாக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வை எட்டுவதற்கு இணைந்து முன்னோக்கிச் செல்லவேண்டும்.

எமது நடவடிக்கைகள்

ஆனால் எவ்விதமான அறிக்கைகளும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார். அரசியல் அமைப்பினூடாக தீர்வை ஏற்படுத்துவதற்கு அனைத்து தரப்புகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

வழிநடத்தும் குழு

அதற்காக பாராளுமன்றத்தில் வழிநடத்தும் குழுவை ஸ்தாபித்துள்ளோம். இதில் அமைச்சர் சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர். மேலும் ஆறு உபகுழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் முறைமையை மறுசீரமைத்தல், அதிகாரத்தை பகிர்தல், மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தல் இவை தொடர்பான நெறிப்படுத்தல்களை வழிநடத்தும் குழு மேற்கொள்கின்றது.

அதிகாரப்பகிர்வு

அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலேயே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு உத்தேசித்துள்ளோம். மாகாண சபைகளுக்கு மட்டுமல்ல, உள்ளுராட்சி மன்றங்கள் வரை அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அத்தோடு நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.

செனட் சபை முறைமை

ஒன்பது மாகாணசபைகளை உள்ளடக்கிய செனட்சபை குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதோடு அதற்கான அதிகாரங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கு இடையிலான உறவுகளை பாதுகாக்கும் வகையில் அனைத்தும் இடம்பெறவேண்டும்.

நவம்பரில் சமர்பிப்பு

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பில் இரண்டு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை கவனத்தில் கொண்டுள்ளோம். அத்துடன் குறித்த விடயங்களின் முன்னேற்றங்களை நவம்பர் மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் உத்தேசித்துள்ளோம்.

பௌத்த மதம், தேசிய கீதம், தேசிய கொடி என்பவற்றுக்கு பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றதாக இனவாதிகள் பிரசாரம் செய்கின்றனர். ஆனால் அவ்வாறு எதுவும் ஏற்படப்போவதில்லை. ஏனென்றால் அவை ஏற்கனவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகும்.

தமிழில் தேசிய கீதம்

தமிழில் தேசிய கீதம் இசைத்தமையை தேசத்துரோகம் என்று கூறுகின்றனர். ஆனால் டி.எஸ்.சேனாநாயக்க தமிழில் தேசிய கீதத்தை இசைக்க முடியுமென கூறியுள்ளார். ஆகவே அது தேசத்துரோகச் செயலாக அமையாது.

ஏனைய மதங்கள்

தங்களுக்கான மதங்களை சுதந்திரமாக பின்பற்றக்கூடிய சூழலை ஏற்படுத்தி தருமாறு ஏனைய மதத்தலைவர்கள் எம்மிடம் கோருகின்றனர். அதில் தவறில்லை. நியாயமான கோரிக்கையாகும். அதனைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

பௌத்தத்திற்கு அச்சுறுத்தல் இல்லை

அதேவேளை பௌத்த மதத்திற்கு இனவாதிகளால் அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது. ஏனென்றால் கடந்த கால "மன்னர் ஆட்சியில்" சரத்பொன்சேகா சிறைவைக்கப்பட்டபோது கண்டி தலதா மாளிகையின் மாமலுவ வளாகத்தில் பிக்குகள் ஒன்றுகூட முனைந்தபோது அதனை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. கீர்த்தி ராஜசிங்க மன்னனின் பௌத்த கொள்கை மற்றும் அரசியலமைப்பு இந்த நடவடிக்கையினால் மீறப்பட்டுள்ளது.

இந்த விடயத்திற்கு தூதுபோனவர்களுக்கு நிதி வழங்கப்பட்டது. ஆகவே இவ்வாறு பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசியலமைப்பு ஊடாக நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்ய வேண்டுமாயின் அது குறித்து மகாநாயக்கர்களுடன் கலந்தாலோசிக்க திட்டமிட்டுள்ளோம்.

நல்லிணக்க செயற்பாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான செயலணி ஜனாதிபதி செயலகத்தில் செயற்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் அதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்.

அரசியல் கைதிகள்

காணாமல்போனோர்ர்

அடிப்படை குற்றமற்றவர்களை வழக்கு விசாரணைகள் ஊடாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல்போனவர்கள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் தமது உறவினர்கள் உயிருடன் இருக்கின்றனரா? இல்லையா? என்பதை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அறிந்துகொள்ள முடியும். தமிழ் மக்களின் மனக்கவலையை தீர்ப்பதற்கான விடயமாகவே இது காணப்படுகின்றது.

ஆணைக்குழு

இதனூடாக யாரையும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது. ஆனால் உண்மைகள் கண்டறியப்படவேண்டும். இதற்காக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

யாருக்கும் பயனில்லை

முப்பது ஆண்டுகால போராட்டம் இடம்பெற்றிருக்காவிடின் இலங்கை வளர்ச்சியடைந்த நாடாகவிருக்கும். இனவாதத்தால் எவ்விதமான பலனும் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை.

சொத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளே ஏற்பட்டன. ஜே.ஆர்.ஜயவர்த்தன இதனாலேயே பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு முற்பட்டார். தமிழ், சிங்கள, முஸ்லிம், பேகர் ஆகிய இன மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர். இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களின் மொழி, கலாசாரம் மற்றும் மரபுரிமைகளை உள்வாங்கியே இலங்கையின் சிங்கள கலாசாரம் உருவெடுத்துள்ளது. இதனை எமக்கு நினைவுபடுத்தியது ஆனந்தகுமாரசுவாமியாவார். நாம் அதனை மறந்து விடக்கூடாது.

இலங்கைத் தமிழர்கள் முக்கியமானவர்கள். இந்திய, ஒல்லாந்து, போர்த்துக்கேய, பௌத்த கலாசாரங்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்துள்ளார்கள். ஆனால் இங்குள்ள தமிழர்களை இனவாதிகள் தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகின்றனர். அதேபோன்றுதான் முஸ்லிம் மக்களையும் இனவாதிகள் ஒப்பிடுகின்றனர்.

ஆகவே இலங்கையில் காணப்படுவதே தேரவாத பௌத்த மதமாக உள்ளது. விரைவாக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு பொருளாதார போட்டிகளில் நாம் பங்கேற்க வேண்டும். இந்து சமுத்திரம் முக்கியமானதாக கருதப்படும் தற்போதைய காலப்பகுதியில் அதன் மையத்தில் இருக்கும் நாம் பலன்களை பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். இதுவே தேசப்பற்றாகும். இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். மஹந்த ராஜபக் ஷவுக்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.

http://epaper.virakesari.lk:8080/home/index?editionId=19&editionDate=18/09/2016

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.