Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ பவல் வாகன விபத்து மரண வழக்கில் 16 வருடங்களின் பின்னர் நட்டஈடு

Featured Replies

இராணுவ பவல் வாகன விபத்து மரண வழக்கில் 16 வருடங்களின் பின்னர் நட்டஈடு

 

இராணுவ பவல் வாகன விபத்து மரண வழக்கில் 16 வருடங்களின் பின்னர் நட்டயீடு

 

 
 
இராணுவ பவல் வாகனம் ஒன்று  மோதியதில் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்ற சிவிலியன் ஒருவர் மரணமாகிய சம்பவம் தொடர்பான வழக்கில் 16 வருடங்களின் பி;ன்னர் ஒன்றரை லட்ச ரூபா நட்டயீடு வழங்கப்பட்டிருக்கின்றது. 
 
திருகோணமலை சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இரண்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட நீதிபதி குழாம் வழங்கிய தீர்ப்பையடுத்து, இந்த நட்டயீட்டுத் தொகையை இராணுவ தளபதி செலுத்தியுள்ளார்.
 
திருகோணமலை மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த விபத்து மரண வழக்கில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதிபதி குழாம் இந்தத் தீர்ப்பை வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது. 
 
திருகோணமலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் நடைபெற்றது.
 
இராணுவ பவல் வாகனத்தை ஓட்டிவந்த இராணுவ சாரதியின் கவனயீனத்தினால் ஹேரத் முதியான்சலாகே ஹீன் பண்டா என்பவர் மரணமாகியதாகக் குற்றம் சுமத்தி திகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் உயிரிழந்தவருக்கு மரணத்தை ஏற்படுத்தியமைக்காக அவருடைய மனைவிக்கு 50 ஆயிரம் ரூபா நட்டயீடு வழங்க வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தில் தீர்;ப்பளிக்கப்பட்டது. 
 
ஆயினும் இதனை ஏற்க மறுத்த இறந்தவரின் மனைவி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பவல் வாகனத்தைச் செலுத்தி வந்த இராணுவ சாரதி, இராணுவ தளபதி, சட்டமா அதிபர் ஆகியோருக்கு எதிராக சிவில் வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தார். 
 
ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இந்த வழக்கு 2008 ஆம் ஆண்டு திருகோணலை மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தப்பட்டது.
 
இந்த வாகன விபத்து மரணம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்று வந்தபோது குற்றம் சுமத்தப்பட்டவராகிய இராணுவ சாரதி மரணமடைந்திருந்தார். 
 
ஆயினும் திருகோணமலை மேன் முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது. 
 
அங்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய வௌ;வேறு குழாமினால் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. இறுதியாக பிரதம நீதியரசரினால் விசேடமாக நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகளான இளஞ்செழியன், ஜயவர்தன ஆகிய இருவர் அடங்கிய குழாமின் முன்னிலையில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. 
 
விபத்து மரணத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட இராணுவ சாரதி உயிரோடு இல்லாத போதிலும், இறந்தவரின் மனைவி அவருக்கு அடுத்ததாக இராணுவ தளபதியையும், அதற்கு அடுத்ததாக சட்டடமா அதிபரையும் எதிரிகளாகக் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்த நிலையில் உயிரழந்தவரின் மனைவிக்கான நட்டயீட்டை இராணுவ தளபதியே வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இராணுவ தளபதி இந்த நட்டயீட்டுத் தொகையை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக இராணுவ தரப்பில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி தெரிவித்திருந்தனர். 
 
அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை, இராணுவ தளபதியின் அந்தத் தொகைக்குரிய காசோலையுடன் நீதிமன்றத்தில் அரச சட்டத்தரணி  முன்னிலையாகியிருந்தார்.
 
இந்த நட்டயீட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் மரணமடைந்தவரின் மனைவி தனது சட்டத்தரணியின் மூலம் இணக்கம் தெரிவித்திருந்தார். 
 
இதனையடுத்து நட்டயீட்டுத் தொகையான ஒன்றரை லட்ச ரூபாவுக்கான காசோலை நீதிமன்றத்தில் வைத்து, அந்தப் பெண்ணிடம் கையளிக்கப்பட்டு 16 வருடங்களாகத் தொடர்ந்த வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136324/language/ta-IN/article.aspx

ஒன்றரை லட்ச ரூபா ஒரு மனித உயிருக்கு சமமாகுமா?
16 வருடங்கள் கழித்து தீர்ப்பு.
சிங்கள அரசின் நீதித்துறையை தமிழர் நம்ப முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
 

நாக்கு வழிக்கவும் காணாது இந்த தொகை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.