Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

Featured Replies

சிங்கப்பூரில் அடுத்த பிரதமராக ஒரு ஈழத்தமிழர்!

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஈழத் தமிழர் ஒருவருக்கே சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக உள்ள தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக வரவேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் தெரிவுக்கான போட்டிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் வேளையில், யாகூ இணையத்தளத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகமென கருத்துக்கணிப்பொன்றை நடாத்தியிருந்தது.

இக்கருத்துக்கணிப்பின்படி, தற்போதைய பிரதமர் லீ செயீன் லூங் இன் வெற்றிடத்திற்கு தற்போது துணைப்பிரதமராக இருக்கும் தர்மன் சண்முகரத்தினம் தான் வரவேண்டுமென பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 59 வயதுடைய தர்மன் சண்முகரத்னம் ஏற்கனவே சிங்கப்பூர் பிரதமர் வேட்பாளர்களில் போட்டியிடவுள்ளார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்த நிலையில், மற்றுமொரு துணைப் பிரதமரான தியோ சீ ஹேன்னுக்கு 34 வீதமானோரும், நிதி அமைச்சர் ஹெங் சயீ கியாட் 25 வீதமானோரும், பிரதமர் அலுவலக அமைச்சர் சான் சுன் சிங் இற்கு 24 வீதமானோரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

http://thuliyam.com/?p=42775

  • கருத்துக்கள உறவுகள்

தர்மன் சண்முகரத்னத்திற்கு(Shang Da Man) முன்கூட்டிய வாழ்த்துக்கள்..!

 

இதற்கு முன் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை சேர்ந்த "சின்னத்தம்பி ராசரத்தினம்(S.Rajaratnam)" என்ற ஈழத்தமிழர் சிங்கப்பூரின் துணைப் பிரதமாரக ஐந்தாண்டுகள்(1980-1985) பதவி வகித்துள்ளார்.

நன்யாங் பல்கலைக்கழகத்தில் இவரின் நினைவாக ஒரு கட்டிட தொகுப்பு "S.ராசரத்தினம் சர்வதேச ஆய்வுகளுக்காகன பள்ளி" என்று இருந்ததை பார்த்தேன்.

2ptyvll.jpg

 

பிரதமராக தகுதியற்றவன்! பணிவுடன் வாய்ப்பை மறுத்தார் ஈழத்தமிழர்

சிங்கப்பூரின் அடுத்த பிரதமாக தகுதியானவன் நான் அல்ல எனத் தெரிவித்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், என்னை பற்றி எனக்கு நன்கு தெரியும். எனவே பிரதமர் பதவிக்கு நான் தகுதியானவன் அல்ல. நான் கொள்கை வகுப்பதில் சிறப்பாக செயற்படுவேன்.

அத்துடன், இளைய சகாக்களுக்கும் பிரதமருக்கும் ஆலோசகனைகளை வழங்கும் தகுதி எனக்கு உண்டு. எனினும் பிரதமர் பதவியை ஏற்க எனக்கு தகுதியில்லை எனக் கருதுகிறேன்.

எனவே, அரசாங்கமானது நாட்டின் வலுவான எதிர்காலத்தை கருத்திற் கொண்டு, நீண்டகால அடிப்படையில் சிந்தித்து சிறந்த ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னம் வர வேண்டுமென 69 வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/119186?ref=morenews

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்.... ஆதவன் இணைத்த   இந்தச் செய்தியை வாசித்த போது.... மனது ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோசத்தால் துள்ளிக் குதித்தது.
பின்பு... துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்பை திட்டவட்டமாக மறுத்துள்ளார். என்ற செய்தியை... வாசித்த போது.... கவலையாக இருந்தது.

இப்படித்தான்.... காமராஜரும், இந்தியாவின் பிரதமராக வரக் கூடிய சந்தர்ப்பத்தை மறுத்ததால்.... 
அந்த இடத்தை,  இத்தாலி குடும்பம் பிடித்து.... நாட்டை கேவலப் படுத்தி விட்டார்கள்.
தமிழர்கள்.... தலைமை தாங்கும் விடயத்தில்... பின் நிற்பது ஏன்?:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.