Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ?

Featured Replies

நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ?

 

நெடுந்தீவு மரபுரிமை குதிரைகள் இராணுவத்தினரால் கடத்தல் ?


வலி.வடக்கில் கடந்த 26 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து அண்மையில் மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட காங்கேசன்துறை பகுதிகளில் நான்கு குதிரைகள் கட்டாகாலிகளாக அலைந்து திரிகின்றன.

இந்த குதிரைகளை இராணுவத்தினரே வளர்ப்பதாக தெரிய வருகின்றது. குறித்த நான்கு குதிரைகளில் ஒரு குதிரை நெடுந்தீவில் வாழும் நபர் ஒருவரின் வளர்ப்பு குதிரை என கண்டறியப்பட்டு உள்ளது. குறித்த குதிரையில் காணப்படும் சூல குறியீடு மூலமே குதிரை அடையாளம் காணப்பட்டு உள்ளது.



இந்த குதிரைகள் எவ்வாறு வலி.வடக்கு பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டது என்பது தெரியவரவில்லை. இராணுவத்தினரால் கடத்தி வரப்பட்டு இருக்கலாம் எனவும் , அதற்கு உடந்தையாக கடற்படையினர் செயற்பட்டு இருக்கலாம் எனவும் நம்படுகின்றது.

யாழ்.மாவட்டத்தில் நெடுந்தீவு பிரதேசத்திலையே குதிரைகளும் கோவேறு கழுதைகளும் உள்ளன இவை 1660 ம் ஆண்டு முதல் 1675ம ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுனராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருந்தார்.



19 ஆம் நூற்றாண்டில் இவை நோலான் என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டன. அன்றில் இருந்து  இத்தீவிலிருந்து இக்குதிரைகளை வெளியே கொண்டு செல்ல முடியாது என்ற ஒரு சட்டம் நெடுந்தீவில் வழக்கில் உள்ளது.

தற்போது அக் குதிரைகள் மரபுரிமை சொத்தாக அறிவிக்கப்பட்டு , குதிரைகள் நெடுந்தீவை விட்டு கடத்தப்படுவது தண்டனைக்கு உரிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.



இந்நிலையிலையே இந்த குதிரைகள் கடத்தி வரப்பட்டு வலி.வடக்கு பிரதேசத்தில் வளர்க்கப்படுகின்றது.


 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136427/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்களும், தண்டனைகளும் தமிழர்களுக்கு மட்டுமே. இராணுவத்துக்கல்ல 

நெடுந்தீவு குதிரைகள் கடத்தல்! காங்கேசன்துறை படை முகாம்களில் கண்டுபிடிப்பு!

நெடுந்தீவில் மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குதிரைகள் சட்டவிரோதமாக அங்கிருந்து கடத்தப்பட்டு காங்கேசன்துறை பகுதியில் உள்ள படைமுகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும். இந்நிலையில் இவை கடத்தப்பட்டு காங்கேசன்துறை படை முகாம்களில் வைக்கப்பட்டுள்ளமை ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. படைத்தரப்பினரால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனக்கருதப்படுகிறது.

காங்கேசன்துறை படை முகாம்களில் உள்ள குதிரைகளில் காணப்படும் குறிகள் நெடுந்தீவில் குதிரை வளர்ப்போரால் பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வரும் குறிகள் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்த போது நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள ஒருவரால்பாரமரிக்கப்பட்டு வந்த குதிரைகள் சில இவற்றில் அடங்கியுள்ளமையும் தெரியவந்தது.

இவரது குதிரையின் இடதுகாலில் மேல் நோக்கிய சூலக் குறியீடு உள்ளது. கடந்த 50வருடத்துக்கும் மேலாக இந்தக் குறியீட்டை பேணி வருவதாக அக்குதிரைகளை பராமரித்து வந்தநபர் தெரிவித்தார்.

நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

கடந்j 2014ம் ஆண்டில் நெடுந்தீவில் இருந்து சில குதிரைகள் தென்பகுதிக்கு கடத்திச்செல்லப்பட்டன. இதனை யாழ்.தினக்குரல் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது.

இதனையடுத்து இக்குதிரைகளை கடத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர்விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டடார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும், வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும்மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குதிரைகளைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை வடக்கு மாகாண சபையின் ஊடாகமேற்கொள்ளவுள்ளதாகவும் முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இங்கிருந்து குதிரைகள் கடத்தப்பட்டு வருவது இம் முயற்சிக்குப் பாதிப்பைஏற்படுத்தக்கூடும் என நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/security/01/119159?ref=morenews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.