Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு

Featured Replies

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனந்தி சசிதரனிடம் விசாரணைக்கு உத்தரவு

 

வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காக அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் வியாழனன்று புலனாய்வு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அனந்தி சசிதரன் (கோப்புப்படம்)
அனந்தி சசிதரன் (கோப்புப்படம்)

விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவியான அனந்தி சசிதரன் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் இராணுவத்திடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்கள் என கூறப்படுபவர்கள் தொடர்பில் பொய்யான ஆவணம் ஒன்றை அரச சட்டத்தரணியும், இராணுவத்தினரும் அடுத்த தவணைக்குக் கொண்டு வருவார்கள் என்றார்.

மேலும் அவர், நீதிமன்ற விசாரணையில் நம்பிக்கையில்லை என, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தமை தொடர்பில் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து, அவரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அனந்தி சசிதரன் இந்தக் கருத்தைக் கூறியிருந்தார் என அதற்கான இறுவட்டு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எழிலன் என்றழைக்கப்படும் சின்னத்துரை சசிதரன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பிலான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக நடைபற்று வருகின்றன.

இந்த நிலையிலேயே இந்த வழக்கு விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு அனந்தி சசிதரன் வருவதாக ஊடக பேட்டியில் தெரிவித்துள்ளதாகவும், அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என அரச தரப்பில் உதவி அரசு வழக்கறிஞர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-37506362

3 இலட்சம் தமிழ் மக்களின் சுதந்திர நடமாட்டத்தை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகள் முடக்கி முள்ளுவேலிக்குள் அடைத்த போது,
1983 தமிழர் சொத்துக்களை சூறையாடிய போது,  
1980 களில் தமிழரின் நூலகங்கள்  எரிக்கப்படும் போது,
2009 இன் பின்னர் தமிழரின் சொத்துக்கள் ஆலயங்கள் சிங்கள-பௌத்த ராணுவப் பயங்கரவாதிகளால் சூறையாடி அழிக்கப்பட்ட போது, நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரைகள் தமிழர் காணிகளில் அமைக்கப்படும் போது,
இது போன்ற பல்லாயிரம் சந்தர்ப்பங்களில்,
மூடிக் கொண்டிருந்த பௌத்த பயங்கரவாத அரசுகளின் தமிழின அழிப்புக்கு பெரும்துணை போன சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் கூடாராமே சட்டமா அதிபர் திணைக்கள பயங்கரவாதிகள்   

தமிழர்களுக்கு சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் (அ) நீதித்துறையால் இழைக்கப்பட்ட அநீதிகள் கொஞ்ச நஞ்சமல்ல.

சுயாதீனமாக தமிழரிடம் ஒருவாக்கெடுப்பு நடத்தினால் இலங்கை நீதிமன்ற செயற்பாடுகள் மீது தமிழருக்கு நம்பிக்கை இல்லை என்ற மாபெரும் உண்மை வெளிவரும்.

குறிப்பாக சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசுகளின் தமிழின அழிப்புக்கு பெரும்துணை போன சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின், சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் கூடாராமே சட்டமா அதிபர் திணைக்களம் எனப்படும் இடம்.

இதை ஒரு சர்வதேச நீதிமன்றில் மிக சுலபமாக நிரூபிக்க முடியும். தைரியம் இருந்தால் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசின் சிங்கள-பௌத்த பயங்கரவாதிகளின் கூடாராமான சட்டமா அதிபர் திணைக்களத்தில் உள்ள பயங்கரவாதிகள் சர்வதேச நீதிமன்றில் அனந்தி சசிதரனின் மீது வழக்கு தொடரட்டும் பார்க்கலாம்.  

சிங்கள-அரச நீதித்துறைப்  பயங்கரவாதிகளின் அராஜகத்தை எதிர்த்து அனந்தி சசிதரன் உடனடியாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யவேண்டும்.

 

Edited by போல்
சிறு திருத்தம்

14 minutes ago, போல் said:

சிங்கள-அரச நீதித்துறைப்  பயங்கரவாதிகளின் அராஜகத்தை எதிர்த்து அனந்தி சசிதரன் உடனடியாக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யவேண்டும்.

நல்ல விடயம், மற்றவர்களை எதிர்பாக்காமல் நீங்களே முன்னின்று செய்யுங்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையாயின் நிச்சயமா நானும் கள உறவுகளும் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

19 minutes ago, போல் said:

1980  தமிழரின் நூலகங்கள்  எரிக்கப்படும் போது

மற்றது நூலகம் எரிக்கப்பட்டது 1 ம் திகதி ஜூன் மாதம் 1981.

1 minute ago, ஜீவன் சிவா said:

நல்ல விடயம், மற்றவர்களை எதிர்பாக்காமல் நீங்களே முன்னின்று செய்யுங்கள். உங்களுக்கு ஏதாவது உதவி தேவையாயின் நிச்சயமா நானும் கள உறவுகளும் செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

 

மற்றது நூலகம் எரிக்கப்பட்டது 1 ம் திகதி ஜூன் மாதம் 1981.

நன்றி!
1980 களில் என திருத்த வேண்டும்.

எரிக்கப்பட்டது ஒரு நூலகம் மட்டுமல்ல. 

Just now, போல் said:

நன்றி!
1980 களில் என திருத்த வேண்டும்.

எரிக்கப்பட்டது ஒரு நூலகம் மட்டுமல்ல. 

அது ஒருகாலத்தில் எனது வீடு.

பாடசாலை விடுமுறைகளில் நான் வீட்டில் முழித்திருந்ததைவிட இங்கு விழித்திருந்து அதிகம்.

நாட்டில் இரண்டு விதமான பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலாவது பொலிஸ் பயங்கரவாதம். இரண்டாவது நீதிமன்றமயப்படுத்திய பயங்கரவாதமாகும் என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் ஐக்கிய தேசிய கட்சியின் அலுவலகமாக மாறியுள்ளதாகவும் தேசப்பற்றுள்ள பெங்கமுவே நாலக்க தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.