Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முழுமையான இழப்பீடு-அமைச்சர் சுவாமிநாதன்

Featured Replies

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முழுமையான இழப்பீடு-அமைச்சர் சுவாமிநாதன்
 
 
கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு முழுமையான இழப்பீடு-அமைச்சர் சுவாமிநாதன்
கிளிநொச்சி மாவட்டத்திற்கான வர்த்தக சந்தைக்கு நிரந்தர கட்டடமொன்றை அமைப்பதற்கு அடுத்த வருடம் நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
 
கிளிநொச்சி சந்தைக் கட்டடத் தொகுதி தீக்கிரையானதை அடுத்து, அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவும், வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கான உதவிகளை மேற்கொள்ளவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
அதற்கமைய இது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (வியாழக்கிழமை) மீள்குடியேற்ற புனர்வாழ்வளிப்பு அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தற்காலிகமாக தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இடம்பெறும். அதேவேளை, அவர்களுக்கான முழுமையான இழப்பீடுகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எனவே, குறித்த அனர்த்தத்தின் போதான சேத விபரங்களை உள்ளடக்கிய முழுமையான இழப்பீட்டு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளேன்.
அதற்கேற்ப அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்து, நிதித் தொகையினை பெற்று உரியவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன், இதுவரை நிரந்தர சந்தைக் கட்டடமற்ற கிளிநொச்சி மாவட்டத்திற்கு, நிரந்தர சந்தைக் கட்டடமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/18342

  • கருத்துக்கள உறவுகள்

வெறுமனே கலந்தரையாலோடு நிற்காது செயல்வடிவம் பெற வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.