Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி ஆசை கொண்டலையும் சுயநலவாதிகளுக்காக முஸ்லிம் காங்கிரஸை அடகுவைக்க முயற்சிக்க வேண்டாம்

Featured Replies

அம்பாறை மாவட்ட ஆதரவாளர் ஒன்றியம் ஹக்கீமிடம் வலியுறுத்தல்

பதவி ஆசை கொண்டு அலையும் சுயநல நோக்கம் கொண்டவர்களுக்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை எவருக்கும் அடகு வைக்க முற்பட வேண்டாமென்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் ஒன்றியம் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.

வெளிச்சக்திகளதும் உட்சக்திகளதும் சவால்களுக்கு உறுதியுடன் நின்று தலைமைத்துவம் முகம் கொடுக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைமைத்துவத்தையும் பாதுகாக்க அதன் ஆதரவாளர்களைக் கூட்ட தயாராகவே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியம் செவ்வாய்க்கிழமை தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவற்றைக் குறிப்பிட்டிருக்கின்றது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் ஆணையைப் பெற்ற பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற அடிப்படையில் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள 9 நிபந்தனைகளும் சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் நலன் குறித்து ஆழமாக சிந்தித்து முன்வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகளாகும்.

இக்கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயக்கமோ, தாமதமோ காட்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் முடிவை எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டபோதும் கண்டிப்பாக மீள்பரிசீலனை செய்தாக வேண்டும்.

மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை தோற்றுவித்ததும், பிரதேச வேறுபாடின்றி முஸ்லிம் சமூகம் அவர் பின்னால் அணி திரண்டதும் தனிப்பட்ட ஒரு சிலருக்கு பட்டம் பதவிகள் வழங்கி அழகுபார்ப்பதற்காகவல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கும், பாதுகாப்புக்கும் குரல் கொடுப்பதற்காகவும், அதன் தன்மானம், சுயகௌரவத்தைப் பாதுகாப்பதற்காகவும், உரிமைகளை வென்றெடுக்க போராடுவதற்காகவுமே முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது என்ற வரலாற்றை தங்களின் வசதிக்காக இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் மறந்திருந்தாலும் கட்சிப்போராளிகள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

அந்த உயர்ந்த இலட்சியங்களில் குறிப்பிடத்தக்களவுக்காவது நிலைத்து இருந்ததன் காரணமாகவே இதுகாலவரை முஸ்லிம் மக்களின் மனங்களில் முஸ்லிம் காங்கிரஸ் வேரூன்றியிருக்க முடிந்தது.

அந்த மக்கள் சக்தி என்ற அரணே கட்சிக்கெதிராக மிகப் பயங்கரமாக சீறியெழுந்த கடல்கோளிலும் சூறாவளிகளிலுமிருந்து இந்தக் கட்சியைப் பாதுகாத்தது.

அந்த வகையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகள் அதனை நம்பியுள்ள முஸ்லிம் சமூகத்துக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதுடன், கட்சி குறித்த விசுவாசத்தையும் அதிகரித்துள்ளது. இதனைச் சீர்குலைத்து கட்சியை மேலும் சின்னாபின்னப்படுத்தி தங்களது பிச்சைப்பாத்திரங்களை நிரப்பிக்கொள்ள கட்சிக்குள் இன்னுமொரு கூட்டம் கச்சை கட்டிக்கொண்டு காத்துக்கிடப்பதையும் கட்சிப் போராளிகள் அறியாமலில்லை.

சுயநல அரசியலுக்காக பிரதேச வாதத்தை துணைக்கழைப்பவர்கள் இன்று பாராளுமன்ற உறுப்பினர்களாக அலங்கரிப்பது, தங்களுடைய பிரதேசத்தினால் அல்ல, முஸ்லிம் காங்கிரஸின் கருணைக்கண் பார்வையினால் என்பதை மறந்துவிடக்கூடாது. இதற்கு முன் அமைச்சுப்பதவிகள் என்ற எலும்புத்துண்டுகளுக்காக தலைமைத்துவத்தின் மீது பழி சுமத்திவிட்டு கட்சியை விட்டுப்பிரிந்து சென்றவர்களை கடும் வார்த்தைகளால் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் அடிக்கடி மிகவும் கேவலமாக விமர்சித்துத் திரிந்த அதே நாக்குகள் இன்று கட்சி சேராவிட்டாலும் நாங்கள் அரசாங்கத்தோடு சேர்ந்துவிடுவோமென்று அவசரப்பட்டு அறிக்கை விட்டு மிரட்டிக் கொண்டிருப்பது இவர்களின் போலித்தனத்தை நன்கு வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள நிபந்தனைகள் அரசாங்கத்தால் நிறைவேற்றப்படுமா? அல்லது அவை நிறைவேற்றப்படு முன்னரே கட்சி மேலுமொருகூறாக பிளவுபட்டுவிடுமா என்ற நியாயமான அச்சமும் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறான போதும் கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்ற அரசாங்கம் தயக்கமோ, தாமதமோ காட்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதென கட்சியின் உயர்பீடம் மேற்கொண்ட முடிவை எத்தகைய சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டபோதும் கண்டிப்பாக மீள்பரிசீலனை செய்தாக வேண்டும்.

எந்தத் தனிப்பட்டவர்களின் சுயநலன்களுக்காகவும் கட்சியின் கௌரவத்தை அடகுவைத்துவிட்டு அடிபணிந்து விடக்கூடாது.

http://www.thinakkural.com/news/2007/1/25/...s_page19981.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.