Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரவு விடுதி மோதலில் ஜனாதிபதியின் மகனுக்கு தொடர்பு ? மூடிமறைக்க அரசு பகீரத முயற்சி

Featured Replies

இரவு விடுதி மோதலில் ஜனாதிபதியின் மகனுக்கு தொடர்பு ? மூடிமறைக்க அரசு பகீரத முயற்சி
 
 
இரவு விடுதி மோதலில் ஜனாதிபதியின் மகனுக்கு தொடர்பு ? மூடிமறைக்க அரசு பகீரத முயற்சி
கொழும்பில் வார இறுதியில் இடம்பெற்ற இரவுவிடுதி மோதலில் ஜனாதிபதியின் மகன் தொடர்புபட்டிருப்பதை மறைப்பதற்காக இரகசிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டு ள்ளது.
 
இதன் தொடர்ச்சியாக யூனியன்பிளேசில் உள்ள குறிப்பிட்ட இரவுவிடுதியின் நிர்வாகம் தனது பணியாளர்களிற்கு இறுக்கமான உத்தரவுகளை வழங்கி வாய்ப்பூட்டு போட்டுள்ளது. பொலிஸாரை தவிர வேறு எவருடனும் பேசக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
மேலும் அன்றிரவு இடம்பெற்ற சம்பவங்களை மூடிமறைப்பதற்கு ஏற்கனவே அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது,இதன் காரணமாக ஜனாதிபதியின் மகனுடன் வந்த கும்பலால் தாக்கப்பட்ட ஓருவர் தன்னால் எவரையும் அடையாள காணமுடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை குறிப்பிட்ட ஹோட்டலின் நிர்வாகம் தனது முகாமையாளர் ஓருவரை பயன்படுத்தி குறிப்பிட்ட சம்பவத்தில் ஜனாதி பதியின் மகன் ஈடுபடவில்லை என அறிக்கையை வெளியிட்டுள்ளது. வீடியோ அறிக்கையொன்றில் முகாமையாளர் கிறிஸ்டொபர் கேர்ன்” அன்றிரவு சம்பவம் இடம்பெற்றது உண்மை,ஊடகங்கள் மிகமுக்கியமான பிரமுகரின் மகன் இதில் ஈடுபட்டதாக ஊடக ங்கள் தெரிவித்துள்ளன,ஆனால் அவ்வேளையில் பணியில் இருந்த என்னால் அதனை மறுக்க முடியும்” என குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் நள்ளிரவு விடுதி குறிப்பிட்ட கட்டிடத்தின் ஆறாவது மாடியில் உள்ளது அவ்வேளை குறிப்பிட்ட முகாமையாளர் விடுதியின் வாயில் இருந்திருக்க வாய்ப்பேயில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர், வழமையாக விடுதியின் வாயிலில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம் காணப்படுவர்,முகாமையாளர்கள் காணப்படுவதில்லை,குறிப்பிட்ட சம்பவம் ஹோட்டலின் நுழைவாயிலில் இடம்பெற்றது அங்கு முகாமையாளர்கள் காணப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
 
மேலும் தாக்குதல் மேற்கொள்பவர்களை அடையாளம் காணகூடிய சூழ்நிலை நிலவுவதை சிசிடிவி கமராக்கள் காண்பித்துள்ளன, இந்தநிலையில் தாக்கப்பட்டவர் ஓருவர் தான் யாரையும் டையாளம் காணும் சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிப்பதை ஏற்க முடியாது எனவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

http://onlineuthayan.com/news/18811

  • தொடங்கியவர்
களியாட்ட விடுதி தாக்குதல்: விசாரிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
 
 

article_1476264002-gbh120.jpgகொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள இரவு களியாட்ட விடுதியில், கடந்த சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில், தனியான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸார் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக, வெகுசன ஊடகத்துறை அமைச்சின் பதில் அமைச்சர் கருணாரத்ன பரணவிதான தெரிவித்தார்.

யூனியன் பிளேஸிலுள்ள இரவு களியாட்ட விடுதியில், இடம்பெற்ற சம்பவத்துடன், உயர்நிலை அரசியல்வாதியொருவரின் மகன் மற்றும் அவரது பாதுகாப்புப் பிரிவினர் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/183799/கள-ய-ட-ட-வ-ட-த-த-க-க-தல-வ-ச-ர-க-க-ம-ற-ஜன-த-பத-உத-தரவ-

  • தொடங்கியவர்

இரவு நேர கேளிக்கை விடுதி சம்பவம் தொடர்பிலான குற்றத்தை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் ஏற்க உள்ளனர்?

 

இரவு நேர கேளிக்கை விடுதி சம்பவம் தொடர்பிலான குற்றத்தை ஜனாதிபதி பாதுகாப்பப் பிரிவினர் ஏற்றுக்கொள்ள உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன உள்ளிட்ட தரப்பினர் அண்மையில் கொழும்பில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த தாக்குதல் சம்பவம் குறித்த சீ.சீ.ரீ.வி கமராக காட்சிகளும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பிலான பொறுப்பினை விரைவில் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் சில உத்தியோகத்தர்கள் ஏற்றக்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் விரைவில் காவல் நிலையத்தில் சரணடைய உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கேளிக்கை விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் நடவடிக்கை காரணமாக ஆத்திரமடைந்து தாக்கியதாக குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தஹாம் சிறிசேனவிற்கு தொடர்பு கிடையாது என அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. தஹாம் சிறிசேனவிற்கு பாதுகாப்பு வழங்கி வந்த ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் இந்த சம்பவத்துடன் ஜனாதிபதியின் புதல்வருக்கு தொடர்பு கிடையாது என கேளிக்கை விடுதியின் முகாமையாளர் கூறிய போதிலும், முகாமையாளர் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அந்த இடத்தில் பிரசன்னமாகியிருக்கவில்லை என குறித்த ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/2786

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களத்திலை யார்  ஆட்சிக்கு வந்தாலும்.......அது ரவுடி கூட்டமாய்த்தான் உருவெடுக்கும்.....
இனி அடுத்தவன் எவன் ஆட்சிக்கு வாறானோ.....அவன் மைத்திரி குடும்பத்தை வறுத்தெடுப்பான்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.