Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஜனாதிபதியானது நாட்டை துண்டாடுவதற்கல்ல : ஜனாதிபதி

Featured Replies

நான் ஜனாதிபதியானது நாட்டை துண்டாடுவதற்கல்ல : ஜனாதிபதி

 

 

my3.jpg

சிலர் குற்றம்சாட்டுவது போன்று தான் ஜனாதிபதி பதவிக்கு வந்தது நாட்டை துண்டாடுவதற்கோ பிரிப்பதற்கோ, பாதுகாப்புத் தரப்பினரை பலவீனப்படுத்தவோ அல்லது பௌத்த மதத்துக்குரிய இடத்தை அரசியலமைப்பிலிருந்து அகற்றுவதற்கோ அல்ல. 

மாறாக நாட்டின் சுதந்திரம் இறையாண்மை மற்றும் வரலாற்று மரபுரிமைகளை உயர்ந்த பட்சம் பாதுகாத்து சுதந்திர ஜனநாயக நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காகவேயென ஜனாதிபதி தெரிவித்தார். 

வரலாற்றினால் தமக்கு அளிக்கப்பட்ட பல பொறுப்புகள் இருப்பதுடன் காலத்தின் தேவையாக அந்தப் பொறுப்புக்களை மனசாட்சிக்கு அமைய மக்களுக்காக நிறைவேற்றுவதாகவும் குறிப்பிட்டார். 

நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்வின் 25ஆவது ஆண்டு நிறைவையொட்டிய இடம்பெற்ற 'அமரவிரு பியமக” (அமரவீரவின் வழித்தடம்), நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மக்களுக்கு தன்னால் நிறைவேற்றவேண்டி கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுதல், அரசியல்வாதிகளின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி மக்கள் பணிக்காக மஹிந்த அமரவீரவின் அர்ப்பணிப்பை பாராட்டியதோடு அவரது எதிர்காலப் பயணத்திற்கு தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும் சிறந்த நோக்குத் தொடர்பில் பேசுவதற்கு முன்னர் தனது காலடியிலுள்ள பிரச்சனைகளை இனம்கண்டு நடவடிக்கைகளை எடுப்பது அரசியல்வாதியின் பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்கள் மத்தியில் சென்று அவர்களது அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளை ஆராய்ந்துபார்த்து அவற்றுக்கு தீர்வு வழங்குதல் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். 

இன்று நிலவும் வறட்சியான காலநிலையினால் இலட்சக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பட்ட ஜனாதிபதி, அரசியல்வாதிகள் தமது பிரதேச கிராமங்களுக்குச் சென்று அந்த மக்களின் தேவைகளை ஆராய்ந்து பார்க்கவேண்டுமெனவும் இதன்போது தெரிவித்தார். 

றுகுணு இராச்சியத்தில் உருவான அரசியல் தலைவரான மஹிந்த அமரவீர, தனது அரசியல் பயணத்தை தங்காலை, அங்குணுகொலபலஸ பிரதேச சபைத் தேர்தலில் 1991ஆம் ஆண்டு போட்டியிட்டு அதன் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதன் மூலம் ஆரம்பித்தார். 

1993ஆம் ஆண்டு நடைபெற்ற தென்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று தென்மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு அன்றிலிருந்து இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினராக, பிரதியமைச்சராக, அமைச்சரவை அமைச்சராக தொடர்ச்சியாக தனது மக்களுக்கு பணியாற்றி வருகின்றார். 

பாரளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/12309

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.10.2016 at 11:46 AM, நவீனன் said:

நான் ஜனாதிபதியானது நாட்டை துண்டாடுவதற்கல்ல : ஜனாதிபதி

ஒங்கல ஒசத்தி காட்ட...ஒங்க வாயில வேற வார்தையே வராதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.