Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களை அழித்தொழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: கோத்தபாய.

Featured Replies

விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களை அழித்தொழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: கோத்தபாய.

விடுதலைப் புலிகளின் கோட்டையான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அவர் களின் இராணுவ உடைமைகள் ஆயுத தள பாடங்கள் அழித்து ஒழிக்கப்படும். அவற்றை விட்டுவைத்தால் போர் இன்னும் பல வருடங்களுக்கு நீண்டு செல்லும்.

இவ்வாறு கடும் தொனியில் கூறியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ.

விடுதலைப் புலிகளின் இராணுவ உடைமைகள் அவை எங்கிருந்தாலும் வடக்கில் என்ன, கிழக்கில் என்ன தெற்கில் என்ன நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவற்றை நாம் அழித்தே தீருவோம் கடற் புலிகளின் தளங்கள் இருக்கும் வரை, அவர்களிடம் ஆட்லறி தளங்கள் இருக்கும் வரை, விடுதலைப் புலிகள் எங்கு அழிவுகளை உண்டாக்க விரும்புகிறார்களோ, அங்கு அதனைச் செய்வதற்கு அவர் கள் நினைப்பார்கள் என்று ரொய்ட்டர் செய்தியாளருக்கு தொலைபேசி மூலம் பேசு கையில் கோத்தபாய தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் இராணுவ உடைமைகளை அழித்தொழிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ள போதிலும், அரசாங்கம் அமைதியை நிலைநாட்டுவதில் அக் கறை கொண்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியுள்ளார்.

அரசாங்கம் இராணுவத் தீர்வை நாடவில்லை. அரசியல் தீர்வு ஒன்றைக் காண் பதிலேயே அரசு நேர்மையாகச் செயற்படுகிறது. ஆனால், பிரச்சினை என்ன வெனில், ஒரு பக்கத்தினால் மட்டும் அமைதியைக் கொண்டுவந்துவிட இயலாது.

அழுத்தம் கொடுக்கிறோம் விடுதலைப் புலிகள் தாக்குதல்களை ஆரம்பித்த பின்னரே நாங்கள் பதிலுக்குச் செயற்பட வேண்டியதாயிற்று. அதனால் அவர்கள் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றோம். ஆகையால் அவர்கள் பேச்சுவார்த் தைக்கு வருவார்களாயின் அது மிகவும் நல்லது நான் சமாதானத்துக்குத் தயார் என்று பிரபாகரன் வெளிப்படையாகச் சொல்வதாக இல்லை. தமக்கு தனியான ஈழமே வேண்டும் என்றே அவர் சொல்கிறார். அது பெரும் பகிடியாகும். அவர்களும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று மேலும் கூறியிருக்கிறார் கோத்தபாய.

தமது இராணுவ உடைமைகள் அழித்து ஒழிக்கப்படுவதைத் தடுப்பதற்கு விடுத லைப் புலிகள் என்ன செய்யவேண்டும் என்று செய்தியாளர் கேட்டதற்கு

பிரபாகரன் எங்களுடன் பேச முடியும் என்று நான் நம்புகின்றேன. நோர்வே அனு சாரணையாளர்கள் இருக்கிறார்கள். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் உள்ளனர். நாங்கள் நேர்மையாக, உண்மை யாகவே பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு விரும்பு கிறோம் என்று பிரபாகரன் அவர்களிடம் கூறலாம். அவர் நேர்மையான முறையில் செயற்பட வேண்டும் என்று பதிலளித் திருக்கிறார் கோத்தபாய.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பது குறித்து விடுதலைப் புலிகளின் கருத்தை உடனடியாகத் தம்மால் பெறமுடிய வில்லை என்று ரொய்ட்டர் செய்தியாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

-Uthayan-

போர்தளபாடங்களை கொடுத்ததே நீங்கள் அதுவும் கனரக போர்தளபாடம் இல்லாத 80 களில் படைநடத்தியவர் கோத்தபாய அப்பவே ஒண்டும் புடுங்கல இப்ப வெளிக்கிட்டுட்டார் பின்னங்கால் பிடரில அடிபட ஆணையிறவை விட்டுட்டு ஓடியதும் மூக்கில வெட்டு விழுந்த மாதிரி கட்டுநாயக்காவில விழுந்த இடியையும் மறந்திட்டார் வெகு விரைவில் கோத்தபாயவுக்கும் மகிந்தவுக்கும் பிடித்தமான பாடல்" ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" என்ற பாடலாக இருக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.