Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் யாழில்

Featured Replies

இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் யாழில்
 
 
இலங்கை பொலிஸ் சேவையின் 150 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் யாழில்
இலங்கைப் பொலிஸின் 150 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இன்று யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் ஆண்டு நிறைவு நிகழ்வு கள்  இடம்பெற்றன.
 
1866 ஆம் ஆண்டு ஆரம்பித்த இலங்கை பொலிஸ் சேவை 2016 ஆம் ஆண்டு 150 ஆவது ஆண்டுகளைக் கடந்து சேவையாற்றி வருகின்றது. .  இதனை முன்னிட்டு   ஆண்டு நிறைவு நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை பின் வீதி யில்  இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் சரத்குமார, யாழ்ப்பாண உதவி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ன, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ; சேனனாயக்க, கிளிநொச்சி மாவட்ட கட்டளைத் தளபதி, மன்னார் மாவட்ட விமானப்படைத் தளபதி, வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி, இந்திய துணைதூதுவர் ர.நடராசா ஆகி யோர் கலந்து கொண்டனர். 
14694839_779363628869388_2825139_n.jpg
காலை 9.30 மணியளவில் தேசிய கொடி ஏற்றத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து  இந்து, முஸ்லிம், பௌத்த மத தலை வர்கள் ஆசியுரை வழங்கினர். இதனைத் தொடர்ந்து  வடமாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் வரவேற்புரையை நிகழ்த்தி னார். பின்னர் பொலிஸார், விஷேட அதிரடிப் படையினர், மாணவ படையணியினர் இணைந்து விஷேட அணிவகுப்பு ஒன்றினை நிகழ்த்தினர்.பொலிஸின் அணிவகுப்பானது 110 வருட ஆண்டைப் பூர்த்தி செய்வதும் குறிப்பிடத்தக்கது. 
14686390_779363602202724_2067637191_n.jpg
அதன்பின்னர் வடமாகாணத்தில் இடம்பெற்ற போட்டிகளில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்க ப்பட்டன.அத்துடன் தரம்5 புலமைப் பரிசில் பரீட்சையில் தேசியரீதியில் மூன்றாம் இடத்தையும் வடமாகாணத்தில் இரண்டாம் இட த்தையும் மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்ற ஜயனி என்ற யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவிக்கு விஷேட பரிசி ல்களும் வழங்கப்பட்டன. 
14642749_779363572202727_2072330878_n.jpg
நிகழ்வில் இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர விஷேட உரையையும் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து வட மாகாண சிரேஸ்ட உதவி பொலிஸ்மா அதிபர் சரத்குமார, யாழ்ப்பாண உதவி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்னவால் நினைவு சின்னமொன்று இலங்கை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டது. இறுதியாக யாழ்ப்பாண உதவி பொலிஸ்மா அதிபர்   சஞ்சீவ தர்மரட்னவின் நன்றியுரையுடன் நிகழ்வுகள்  நிறைவடைந்தன.
14686585_779363452202739_1007916609_n.jpg

http://onlineuthayan.com/news/18925

தமிழர்களின் சொத்துக்களை அழிப்பதிலும், கொள்ளையடிப்பதிலும், தமிழினப் படுகொலைகளில் பெரும் பங்கு வகித்தது சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதக் கும்பல் தமிழ் மண்ணிலிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டியவர்கள்.

தமிழர்களிடம் கப்பம் பெறுவதிலும், தமிழர் பூமியில் ஆக்கிரமிப்புச் சிலைகளை நிறுவுவதிலும், தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதிலும் பெரும் பங்கு வகித்தது சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதக் கும்பல் தமிழ் மண்ணிலிருந்து முற்றாக அகற்றப்பட வேண்டியவர்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.