Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா எதிர் நியூசீலாந்து ஒருநாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

4-வது ஒருநாள் போட்டி: இந்தியா பந்து வீசுகிறது

  dhoni_13221.jpg

இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்றுள்ள நியூஸி., பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியை வென்றால் இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றுகிறது. இந்திய தரப்பில் பும்ராவுக்கு பதிலாக தவான் களமிறங்குகிறார். நியூஸி தரப்பிலும் மாற்றங்கள் உள்ளன.

http://www.vikatan.com/news/sports/70579-4th-odi-new-zealand-won-the-toss-and-elected-to-bat-first.art

  • தொடங்கியவர்

4வது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 261 ரன்கள் வெற்றி இலக்கு

ராஞ்சி:  நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 261 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.  இந்தியா-நியூசிலாந்து இடையே 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க மைதானத்தில்  நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து  அணியில் அதிகபட்சமாக குப்தில் 72,  வில்லியம்சன் 41 ரன்கள் எடுத்தனர். அபாரமாக பந்து வீசிய இந்திய அணியில் அமித் மிஸ்ரா 2, உமேஷ் யாதவ், குல்கர்னி, பாண்டியா, படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=254743

  • கருத்துக்கள உறவுகள்

Kohli 45(51)

  • கருத்துக்கள உறவுகள்

Dhoni 11(31)

  • தொடங்கியவர்

நியூஸிலாந்துடன் போராடி தோற்றது இந்தியா

22316_21115.jpg

இந்தியா-நியூஸிலாந்து நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸி., அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 260 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். ரஹானே 57, கோலி 45, அக்‌ஷர் 38 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இறுதியில்  இந்தியா 48.4 ஓவர்களுக்கு 241 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 19 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி., வெற்றி பெற்றது. அந்த அணியின் டிம் சவுதி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் பெற்று சமநிலையில் உள்ளன. 5-வது மற்றும் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

http://www.vikatan.com/news/sports/70645-newzealand-wins-india-in-4th-odi.art

  • தொடங்கியவர்

டோனியின் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது நியூசிலாந்து.

254063-696x466.jpg

டோனியின் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தது நியூசிலாந்து.

இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான 4 வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நிறைவுக்கு வந்திருக்கிறது.

இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் டோனியின் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்த நியூசிலாந்து அணி,தொடரின் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் தொடரை 2-2 என்று சமன் செய்துள்ளது.

டோனியின் சொந்த ஊரில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.

டெஸ்ட் போட்டிகள் அடங்கலாக இதுவரையான ஒருநாள் போட்டிகள்வரை, நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

போட்டியில் ஆரம்பம் வழமைபோன்று அமோகமாக இருந்தாலும் மத்திய வரிசை சரியான பங்களிப்பை கொடுக்க தவறிய நிலையில் நியூசிலாந்து அணி இறுதியில் 7 விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்கள் பெற்றுக் கொண்டது.

முதலாவது விக்கெட்டுக்காக 96 ஓட்டங்கள் பகிரப்பட்டது, மார்டின் கப்டில் 72 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்திய அணிக்கு, இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு 261 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆயினும் இந்தியாவின் பொறுப்பற்ற துடுப்பாட்டம் காரணமாக இந்தியா 48.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 241 ஓட்டங்களை பெற்று 19 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருது மார்ட்டின் கப்டிலுக்கு கிடைத்தது.

தொடரை தீர்மானிக்கும் 5 வதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் இடம்பெறவுள்ளது.

254062

254061

India's Mahendra Singh Dhoni, center, and Amit Mishra, center right, celebrate the wicket of New Zealand's Kane Williamson with their team members during the forth one-day international cricket match against New Zealand in Ranchi, India, Wednesday, Oct. 26, 2016. (AP Photo/Rajanish Kakade)

New Zealand's Martin Guptill, right, as Indian wicketkeeper and captain Mahendra Singh Dhoni watches during the forth one-day international cricket match between them in Ranchi, India, Wednesday, Oct. 26, 2016. (AP Photo/Rajanish Kakade)

received_10210831733658942

received_10210831733978950

http://www.reeshinternational.com/vilaiyattu/கிரிக்கெட்-செய்திகள்/டோனியின்-சொந்த-மண்ணில்-இ/

  • கருத்துக்கள உறவுகள்

இடதுகை துடுப்பாளர் இந்தியாவிற்கு மிக அவசியமானதும் அவசரமானதும். 

  • தொடங்கியவர்

இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம் நாளை நடைபெறுமா? - மழை எச்சரிக்கையால் ரசிகர்கள் கவலை

 

 
பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி வீரர்கள் | கோப்பு படம்: பிடிஐ
பயிற்சியில் ஈடுபடும் இந்திய அணி வீரர்கள் | கோப்பு படம்: பிடிஐ

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘கியாந்த்’ புயலால் இந்தியா - நியூஸிலாந்து அணிகளிடையே யான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மழை எச்சரிக்கை காரணமாக கிரிக்கெட் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளிடையே 5 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற் றுள்ளன. கடைசி ஒருநாள் போட்டி 29-ம் தேதி (நாளை) விசாகப் பட்டினத்தில் நடக்கவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் போட்டிக்கான டிக்கெட் கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

இந்நிலையில் மத்திய கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண் டுள்ள ‘கியாந்த்’ புயல் நேற்று வலு விழந்ததால், நெல்லூர் - சென்னை இடையே 30-ம் தேதி கரையைக் கடக்கும் என விசாகப்பட்டினம் வானிலை ஆராய்ச்சி மையம் தெரி வித்துள்ளது. இதன் காரணமாக இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட் களுக்கு கடலோர ஆந்திரா, மற்றும் சென்னையின் கடலோர பகுதி களில் மழை பெய்யும் என்று கூறப் படுகிறது. இந்த மழை காரணமாக இந்தியா - நியூஸிலாந்து அணிக ளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/இந்தியா-நியூஸிலாந்து-ஆட்டம்-நாளை-நடைபெறுமா-மழை-எச்சரிக்கையால்-ரசிகர்கள்-கவலை/article9279604.ece?homepage=true

  • தொடங்கியவர்

தோனிக்கு இன்னுமொரு அக்னிப்பரீட்சை... தொடரை வெல்லுமா இந்தியா?

Indian%20cricket_14289.jpg


விசாகப்பட்டினத்தில் நாளை நடக்கவுள்ள கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தி, தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில், வழக்கமாக தீபாவளி சமயத்தில் உருவெடுக்கும் புயல், தற்போது விசாகப்பட்டினத்தில் மையம் கொண்டிருப்பதால், போட்டி நடக்குமா என்பதும் சந்தேகமாக உள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள நியூஸிலாந்து அணி, விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியிடம் 3-0 டெஸ்ட் தொடரை முழுமையாக கோட்டை விட்டது.  ஆனால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு டஃப் ஃபைட் கொடுத்து வருகிறது. தொடர் 2-2 என சமநிலையில் இருப்பதால், நாளை நடக்கும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கடந்த 1988 க்குப் பின் இந்தியாவில் நடந்த, இரு அணிகளுக்கு இடையிலான நான்கு தொடர்களிலும் நியூஸிலாந்து தோல்வியே அடைந்துள்ளது. போதாக்குறைக்கு தற்போது டெஸ்ட் தொடரிலும் 'ஒயிட்வாஷ்' அடைந்ததால், விசாகப்பட்டினத்தில் முத்திரை பதித்து, எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்க கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணி முயற்சிக்கும்.  அவருக்கு  இருக்கும் அதே நெருக்கடி தோனிக்கும் இருக்கிறது.

கடந்த 18 மாதங்களில் தோனி கேப்டன்ஷியில் இந்திய அணி, ஜிம்பாப்வே தொடரை மட்டுமே கைப்பற்றியுள்ளது. வங்கதேசத்தில் நடந்த அந்த  அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், உலக கோப்பைக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடர், இந்தியாவில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடர் என மூன்று சீரிஸ்களில், தோனி தலைமையிலான இந்திய அணி சொதப்பியது. ஒருவேளை நாளை  இந்தியா தோல்வியடைந்தால், தோனியின் கேப்டன்ஷிக்கு உடனடியாக நெருக்கடி ஏற்படாது என்றாலும்,  அதிக விமர்சனங்களை சந்திப்பார் கூல் கேப்டன். 

வழக்கம்போல, பேட்டிங்கில் விராட் கோஹ்லியை பெரிதும் நம்பி இருக்கிறது இந்திய அணி. தர்மசாலாவில் 85, மொகாலியில் 154 என இரண்டு முறையும் சேஸிங்கின்போது ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்து ‛சேஸிங் மாஸ்டர்’  என்பதை நிரூபித்தார்  கோஹ்லி. ராஞ்சியில் நடந்த கடந்த போட்டியில் 45 ரன்களில் அவர் அவுட்டானதால், அடுத்து என்ன நடந்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 

254059_14557.jpg


‛ஒன்னு தூங்குற, இல்லை தூர் வார்ற’ என்பதுதான் சோசியல் மீடியாவில் ரோகித் ஷர்மா குறித்த விம்ரசனம். இந்த தொடரில் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே நிதர்சனம். கடைசியாக அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடி, ஒன்பது மாதம் ஆகிறது. அது டெஸ்ட்  ஆனாலும் சரி, ஒன்டே ஆனாலும் சரி. இந்த ஒன்டே சீரிஸில் அவர் அடித்த ரன்கள் முறையே 14,15,13,11.  ஆனாலும், வெற்றி, தோல்வியை கருத்தில் கொள்ளாது பிளேயிங் லெவனில் ரோகித்தை சேர்த்து, மன்தீப் சிங்கை தொடர்ந்து பெஞ்சிலேயே உட்கார வைத்திருக்கும் தோனியின் சூட்சமம்தான் புரியவே இல்லை. 

விசாகப்பட்டினம், ரோகித்தின் தாய் பிறந்த ஊர். அங்கே ரோகித், திடீரென விஸ்வரூபம் எடுத்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என எதிர்பார்க்கின்றனர் அவரது ரசிகர்கள். அதேபோல, தோனிக்கும் இது ஸ்பெஷல் கிரவுண்ட். இங்கு நடந்த முதல் போட்டியிலேயே அழுத்தம் திருத்தமாக முத்திரை பதித்திருந்தார் தோனி. பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 123 பந்துகளில் 148 ரன்கள் விளாசி, இந்தியாவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததை அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா என்ன? 

நீண்ட இடைவெளிக்குப் பின் மொகாலியில் 80 ரன்கள் விளாசிய தோனி, சொந்த மண்ணான ராஞ்சியில் ஏமாற்றினார். மீண்டும் விசாகப்பட்டினத்தில் விளாச வேண்டும் என்பது தோனி ரசிகர்கள் எதிர்பார்ப்பு. பவுலிங்கைப் பொருத்தவரை அமித் மிஸ்ரா, அக்ஸர் படேல், கேடார் ஜாதவ் ஆகிய மூவரும் ரெகுலர் ஸ்பின்னர்களான அஷ்வின், ரவீந்திர ஜடஜோ இல்லாத குறையைப் போக்கிவிட்டனர். ஜஸ்ப்ரிட் பும்ரா உடல்தகுதியுடன் இருப்பதால் கடைசிப் போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.

நியூஸிலாந்து அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்டில், ராஞ்சியில் ஃபார்முக்குத் திரும்பினார்.  அவருடன் தொடர்ச்சியாக அரை சதங்கள் அடித்து நொறுக்கும் டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன் பக்கபலமாக இருக்கின்றனர். பவுலிங்கும் பிரச்னை இல்லை. 

இவை எல்லாவற்றையும் விட விசாகப்பட்டினத்தில் தற்போது புயல் சின்னம் உருவெடுத்திருப்பதால், போட்டி பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

http://www.vikatan.com/news/sports/70807-india-vs-new-zealand-fifth-odi-preview.art

  • தொடங்கியவர்

புதுமுக வீரர் ஜெயந்துக்கு வாய்ப்பு: இந்தியா பேட்டிங் 

indian%20playar%20jayanth_13141.jpgஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடந்து வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். புதுமுக வீரர் ஜெயந்த் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணியே தொடரை வெல்ல முடியும். இதனால் இரு அணி வீரர்களும் வெற்றி பெற கடுமையாக போராட உள்ளதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

http://www.vikatan.com/news/sports/70861-india-won-the-toss-and-elected-to-bat.art

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா துடுப்பாடுது.16/0 

  • தொடங்கியவர்

அன்னைக்கு மரியாதை செய்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் (வீடியோ)

crickeet_14561.jpg

 

இந்தியா- நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. 2-2 என்ற நிலையில் தொடர் சமநிலையில் இருப்பதால், இன்றைய போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 14 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்து இருக்கிறது. ரோஹித் ஷர்மா 35 ரன்களுடனும், கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருக்கிறார்கள்.

இன்றைய போட்டியில், இந்திய வீரர்கள் அனைவரும் ஜெர்சியில், அவர்களது பெயருக்கு பதிலாக அவர்களது தாயாரின் பெயரை பதித்து இருக்கிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த தோனி, " எல்லாவற்றிலும், தந்தையின் பெயருக்கு தான் அதிக முக்கியத்துவம் தருகிறோம்.தாயார்கள் நமக்கு செய்ததற்கும், நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியர்கள் அனைவரும் இதை மனதில் வைத்து, அவர்களை தினமும் பாராட்ட வேண்டும்" என்றார்

http://www.vikatan.com/news/sports/70864-indian-cricketers-play-today-with-their-mothers-name-in-jersey.art

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

4 போட்டியில் 14, 15, 13, 11 ரன்..! 5வது போட்டியில் ரோகித் அரைசதம்

Rohit%20oneday%20match_15575.jpg

விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அரை சதம் அடித்தார். இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ரஹானே- ரோகித் சர்மா களம் இறங்கினர். இந்த ஜோடி 40 ரன்னில் பிரிந்தது. 20 ரன் எடுத்திருந்த ரஹானே, நீசம் பந்தில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் கோலி களம் இறங்கினார். இவர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தனது 29வது அரை சதத்தை நிறைவு செய்தார். தற்போது இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 108 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 61 ரன்னிலும், கோலி 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

நடந்து முடிந்த 4 ஒருநாள் போட்டியில் ரோகித், 14, 15, 13, 11 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/70867-rohit-hits-50-in-5th-odi.art

  • தொடங்கியவர்

நியூஸிலாந்திற்கு 270 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா!

kohli_17266.jpg

இந்தியா - நியூஸிலாந்து ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா, 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய தரப்பில் அதிக பட்சமாக ரோகித் சர்மா 70 ரன்களும், விராட் கோலி 65 ரன்களும் குவித்தனர். கோப்பையை குறி வைத்து களமிறங்குகிறது நியூஸிலாந்து.

  • தொடங்கியவர்
India 269/6 (50.0 ov)
New Zealand 68/5 (17.0 ov)

74/7

74/8

  • தொடங்கியவர்

New Zealand 76/9....:grin:

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
  • தொடங்கியவர்

மிஸ்ரா சுழலில் சுருண்டது நியூஸி: கோப்பை இந்தியா வசமானது

mishra_19036.jpg

ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியான இன்று 270 ரன்களை இலக்காக நியூஸிலாந்துக்கு நிர்ணயித்தது இந்தியா. எதிர்த்து ஆடவந்த அந்த அணிக்கு தொடக்கம் முதலே சரிவுதான். இடையில் அமித் மிஸ்ரா எய்த சுழல் அஸ்திரத்தில் தனது 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது நியூஸி. இறுதியில் 79 ரன்களுக்கு ஆல்அவுட் செய்து கோப்பையை வசமாக்கியது இந்தியா.

நியூஸிலாந்துடனான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றி; 5 போட்டியில் 79 ஓட்டங்களுடன் சுருண்டது நியூஸிலாந்து
2016-10-29 19:35:27

நியூஸிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் இந்திய அணி 190  ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம் இத்தொடரின் வெற்றியையும் 3:2 விகிதத்தில் இந்திய அணி கைப்பற்றியது.



20276india-champion-600.jpg

 

இத்தொடரின் முதல் 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பெற்றிருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 5 ஆவது போட்டி விசாகபட்டணம் நகரில் இன்று நடைபெறந்றது.


இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்களைக் குவித்தது.


ரோஹித் சர்மா 65 பந்துகளில 70 ஓட்டங்களைப் பெற்றார். விராத் கோஹ்லி 76 பந்துகளில் 65 ஓட்டங்களையும் அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 59 பந்துகிளல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

 

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களில் டிரென்ட் பௌட் 52 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோதி 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 23.1 ஓவர்களில் 79  ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. கேன் வில்லியம்ஸன் 29 ஓட்டங்களைப் பெற்றார். டொம் லதாம், ரொஸ் டெய்லர் ஆகியோர் தலா 19 ஓட்டங்களைப் பெற்றனர்.


இந்திய பந்துவீச்சாளர்களில் அமித் மிஸ்ரா 18  ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார். அக்ஸார் பட்டேல் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

 
viewmore.png

http://www.metronews.lk/article.php?category=sports&news=20276

  • தொடங்கியவர்

தீபாவளி பரிசாக ஒரு நாள் தொடரை வென்றது இந்தியா

 

விசாகப்பட்டினத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி

 

ஒரு நாள் தொடரை வென்ற இந்திய அணி

இந்தியா வந்துள்ள நியூஸிலாந்து அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில், இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்று 2-2 என்று சமநிலையில் இருந்தன.

இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணித்தலைவர் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 70 ரன்கள் எடுத்து அணிக்கு நாள் துவக்கத்தை தந்தார். பின்னர், களமிறங்கிய கேப்டன் தோனி 41 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவூட்டினார்.

எதிர்முனையில் சிறப்பாக விளையாடி வந்த கோலி 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின்னர் களமிறங்கிய ஆட்டக்காரர்களில் ஜாதவ் மட்டும் 39 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி 

நிர்ணயிக்கப்பட்ட50 ஓவர்களில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்தது.

270 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

இன்றைய போட்டியில் மூன்று நியூஸிலாந்து வீரர்களை தவிர வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இறுதியில், 23.1 ஓவர்களில் 79 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி ஆட்டமிழந்தது. அமித் மிஸ்ரா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அமித் மிஸ்ரா அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, ஒரு நாள் தொடரை 3-2 என்று கைப்பற்றியது.

http://www.bbc.com/tamil/sport-37812373

  • தொடங்கியவர்

முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளித்து தொடரை வென்றதில் மகிழ்ச்சி: தோனி

 

 
கோலி, தோனி ஆலோசனை. | 5-வது ஒருநாள் போட்டி, வைசாக். | படம்: ஏ.பி.
கோலி, தோனி ஆலோசனை. | 5-வது ஒருநாள் போட்டி, வைசாக். | படம்: ஏ.பி.

நியூஸிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 3-2 என்று இந்திய அணி வென்றதையடுத்து வீர்ர்களின் ஆட்டத்தை கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.

நேற்று ஆட்டம் முடிந்த பிறகு தோனி கூறியதாவது:

மிஸ்ரா பந்துவீச்சின் அழகு என்னவெனில் அவர் மெதுவாக வீசுகிறார். அதனால்தான் விக்கெட் கீப்பரான என்னால் ஸ்டம்பிங் செய்ய முடிகிறது. அக்சர் படேல் ஒரு முனையில் விரைவாகவும் பிளாட்டாகவும் வீச மிஸ்ரா, படேல் இணை அருமையாக வீசினர். விராட் கோலி பேட்டிங்கில் அருமையாக ஆடினார். ஓரளவுக்கு நல்ல தொடக்கம் கண்டோம்.

ரோஹித் காயமடைந்த போது அவருக்கு தெரிவிக்கப்பட்டது என்னவெனில் நிற்க முடியவில்லையா பெரிய ஷாட்களை ஆடு என்றோம். அவர் ஆட்டமிழந்தாலும் எங்களுக்கு ஒரு உத்வேகத்தை அளித்துவிட்டுச் சென்றார். ரன்களை ஒன்று இரண்டு எடுப்பதற்கான பிட்ச் அல்ல இது என்பதை உணர்ந்தோம்.

அதனால்தான் பெரிய ஷாட்களை ஆடினோம். 270 என்பது சவாலான ஸ்கோர். பனிப்பொழிவு இருப்பதால் இந்த ஸ்கோர் சரியான ஸ்கோரே. முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது மகிழ்ச்சியே, ஆனாலும் அணி வீரர்களின் ஆட்டம் மகிழ்ச்சியளிக்கிறது, தொடரை வெல்ல இவர்களது பங்களிப்பு மிக முக்கியம். குறிப்பாக பின்னால் இறங்கும் கேதர் ஜாதவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே ஆகியோர் நிறைய அனுபவம் பெற்றனர்.

நிறைய ஆட ஆடத்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இவர்கள் ஒரு குறிப்பிடத்தகுந்த வீர்ர்களாக உருவெடுக்க முடியும், எனவே வாய்ப்புகள் வழங்குவது அவசியம். ஆட்டத்திற்கு சில அணுகுமுறைகள் உள்ளன. ஐபிஎல் வழி அது அடித்துக் கொண்டே இருப்பது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் நாம் தோல்வியடையும் போது நாம் நிதானித்து ஆட எத்தனிக்கிறோம். 40 ஒவர்களில் வெற்றி பெற வேண்டும் என்றில்லை, 50 ஒவர்களிலும் வெல்லலாம்.

இவ்வாறு கூறினார் தோனி.

http://tamil.thehindu.com/sports/முக்கிய-வீரர்களுக்கு-ஓய்வு-அளித்து-தொடரை-வென்றதில்-மகிழ்ச்சி-தோனி/article9285322.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஒருநாள் தொடர் கோப்பையை வென்ற இந்திய அணிக்கும் கலக்கிய மிஸ்ராவுக்கும் பறந்த மீம்ஸ்கள். தொகுப்பு:தே.அசோக்குமார்

 
 
176038.jpg 176039.jpg 176040.jpg 176041.jpg 176042.jpg 176043.jpg 176044.jpg 176045.jpg 176046.jpg 176047.jpg 176048.jpg 176049.jpg 176050.jpg 176051.jpg 176052.jpg 176053.jpg 176054.jpg 176055.jpg 176056.jpg 176057.jpg 176058.jpg 176059.jpg 176060.jpg 176061.jpg 176062.jpg 176063.jpg 176064.jpg 176065.jpg 176066.jpg 176067.jpg 176068.jpg 176069.jpg 176070.jpg 176071.jpg 176072.jpg 176073.jpg 176074.jpg 176075.jpg 176076.jpg 176077.jpg 176078.jpg 176079.jpg 176080.jpg 176081.jpg 176082.jpg 176083.jpg 176084.jpg 176085.jpg 176086.jpg 176087.jpg 176088.jpg 176089.jpg 176090.jpg 176091.jpg 176092.jpg 176093.jpg 176094.jpg 176095.jpg 176096.jpg 176097.jpg 176098.jpg 176099.jpg 176100.jpg

http://www.vikatan.com/news/album.php?&a_id=6023

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.