Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம்

Featured Replies

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம்

 

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனுக்கு தங்கம்

32 ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார்.

இன்றைய தினத்தில் இரண்டு போட்டி சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.

கடந்த வியாழக்கிழமை கண்டி போகம்பரை மைதானத்தில் ஆரம்பமான விளையாட்டு விழாவின்
04 வது நாளான இன்று போட்டிகள் உரிய நேரத்திற்கு முன் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன் போட்டிக் கால அட்டவணையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன .

யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் ஏ.புவிதரன் 17 வயதிற்குட்பட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தங்கம் வென்றார்.

அவர் 3.80 மீற்றர் தூரம் பாய்ந்து முதலாமிடத்தை தட்டிக் கொண்டார்

முதற் தடவையாக கோலூன்றிப் பாய்தலில் கலந்து கொண்ட அவர் தங்கம் வென்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான நீளம் பாய்தல் போட்டியில் 1998 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த சாதனையை இன்று அம்பலாங்கொடை தர்மாஷோக மத்திய கல்லூரியைச் சேர்ந்த ரித்மா நிஷாதினி முறியடித்தார்.

அவர் 5.58 மீற்றர் தூரத்திற்கு பாய்ந்து இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

இதேவேளை 19 வயதிற்குட்பட்ட கனிஷ்ட பிரிவின் முப்பாய்ச்சல் போட்டியில் மீரிகம டி.எஸ் சேனாநாயக்க கல்லூரியின் சமல் குமாரசிறி தான் முன்பு நிகழ்த்தியிருந்த சாதனையை இன்று புதுப்பித்துக் கொண்டார்.

அவர் 15.52 மீற்றர்கள் தூரத்திற்கு பாய்ந்து தங்கம் வென்றார்.

http://newsfirst.lk/tamil/2016/10/அகில-இலங்கை-பாடசாலைகள்-வ-2/

  • தொடங்கியவர்

14718718_1184004298302148_40119245745598

கண்டி போகம்வர விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 32வது பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மெய்வல்லுனர் போட்டியில் யாழ் மத்திய கல்லூரியின் ம.சஞ்சீவன் 21வயதின் கீழ் ஈட்டி எறிதலில் 55.63M தூரம் எறிந்து வர்ண விருதினை பெற்றுக்கொண்டார்

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கோலூன்றிப் பாய்தலில் வடக்கு மாணவர்கள் ஆதிக்கம்; 2ஆம், 3ஆம் தினங்களில் ஐந்து புதிய சாதனைகள்
2016-10-17 10:33:33

(கண்­டி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி)

கண்டி போகம்­பறை விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வரும் 32 ஆவது அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் இரண்டாம், மூன்றாம் தினங்­களில் நடை­பெற்ற கோலூன்றிப் பாய்­தலில் வடக்கு மாகாணப் பாட­சா­லைகள் ஆதிக்கம் செலுத்­தி­யதை அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

 

20006Under-21-Pole-Vault-J-Anitha-%282%2

 

 

பெண்­க­ளுக்­கான 21 வய­துக்­குட்­பட்ட கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்­பழை மகா­ஜன கல்­லூரி மாணவி ஜெக­தீஸ்­வரன் அனித்தா புதிய சாதனையை நிலை­நாட்­டினார்.

 

இவர் 3.30 உயரம் தாவி புதிய சாத­னையை நிலை­நாட்டி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார்.

 

அரு­ணோ­தயா கல்­லூ­ரியின் ஏ. பவித்­ரா­வினால் 2014 இல் நிலை­நாட்­டப்­பட்ட 2.70 மீற்றர் என்ற சாத­னையை அனித்தா முறி­ய­டித்தார்.

 

இப் போட்­டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கிளி­நொச்சி பளை மத்­திய கல்­லூ­ரியின் மாணவி ஜே. சுகிர்தா 3.20 மீறறர் உயரம் தாவி­ய­துடன் மூன்றாம் இடத்தைப் பெற்ற வலல்ல ஏ. ரத்­நா­யக்க மத்­திய கல்­லூ­ரியின் ஹர்­ஷனி தர்­ம­ரத்ன 3.10 மீற்றர் உய­ரத்­தையே தாவினார்.

 

20006poornima-jayamali-u-19-hj-record.jp

 

போட்­டியின் இரண்டாம் நாளன்று நடை­பெற்ற 17 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் தெல்­லிப்ழை மகா­ஜன மாணவி சந்­தி­ர­குமார் ஹெரினா (தங்கப் பதக்கம்) 2.70 மீற்றர் உயரம் தாவி முதலாம் இடத்தைப் பெற்றார். 

 

20006d-ranasinghe-javeline-nwr-141016.jpகிளி­நொச்சி பளை மத்­திய கல்­லூரி மாணவி ரீ. திவ்­வியா  (2.60 மீ.), சாவ­கச்­சேரி இந்து கல்லூரி மாணவி எஸ். ஷன்­கவி (2.60 மீ.) ஆகிய இரு­வரும் 2.60 மீற்றர் உய­ரத்தைத் தாவி வெள்ளிப் பதக்­கத்தைப் பகிர்ந்­து­கொண்­டனர்.

 

21 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் அள­வெட்டி அரு­ணோ­தயா கல்லூரியின் பி. நிதுர்சன் (3.70 மீ.) வெள்ளிப் பதக்­கத்தை வென்றார்.

 

புதிய சாத­னைகள்
வெள்­ளி­யன்று ஆரம்­ப­மான இப் போட்­டி­களில் முதலாம் நாளன்று சாதனை எதுவும் நிலை­நாட்­டப்­ப­டாத நிலையில் இரண்டாம் நாளி­லி­ருந்து சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்ட வண்ணம் உள்­ளன.

 

இரண்டாம் நாளன்று 17 வய­தின்கீழ் ஆண்கள் ஈட்டி எறி­தலில் கம்­பஹா பண்­டா­ர­நா­யக்க கல்­லூ­ரியின் டி. ரண­சிங்க (66.98 மீற்றர்), 19 வயதின் கீழ் பெண்கள் உயரம் பாய்­தலில் பாணந்­துறை லீட்ஸ் சர்­வ­தேச பாட­சா­லையின் பூர்ணிமா ஜய­மாலி குண­ரத்ன (1.74 மீற்றர்) ஆகிய இரு­வரும் புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

 

மூன்றாம் நாளன்று ஜே. அனித்­தாவின் சாத­னையை விட மேலும் இரண்டு சாத­னைகள் நிலை­நாட்­டப்­பட்­டன.

 

20006rishanan-center.jpg15 வயதின் கீழ் ஆண்கள் சட்­ட­வேலி ஓட்­டத்தில் கண்டி பெறிவொட்ஸ் கல்­லூ­ரியின் அநு­ருத்த ஸ்ரீமால் (13.6 செக்.), 17 வயதின் கீழ் ஆண்கள் 100 மீற்றர் ஓட்­டத்தில் கேகாலை புனித மரியாள் கல்­லூ­ரியின் எம். யோத­சிங்க (11.00 செக்) ஆகியோர் புதிய சாத­னை­களை நிலை­நாட்­டினர்.

 

இவர்கள் இரு­வ­ரதும் சாத­னைகள் கையால் இயக்­கப்­பட்ட நேரக் கரு­விக்­கான நேர்  கணிப்­பு­க­ளாகும்.

 

களு­தா­வளை மாண­வ­னுக்கு தங்கம்
15 வயதின் கீழ் குண்டு எறிதல் போட்­டியில் பட்­டி­ருப்பு களு­தா­வளை மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தின் ஜே. ரிஷானன் (13.70 மீற்றர்) தங்கப் பதக்­கத்தை வென்­றெ­டுத்தார்.

 

கிழக்கு மாகா­ணத்தின் திரு­கோ­ண­மலை மூதூர் அல் மினா வித்­தி­யா­ல­யத்தின் ஆர். எம். மிவ்ராஸ் 21 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 1500 மீ;ற்றர் ஓட்டப் போட்­டியில் (4 நி. 06.9 செக்) வெண்­கலப் பதக்கம் வென்றார்.

 

20006Norwood--1500-dilukshan.jpgநோர்வூட் மாண­வ­னுக்கு வெண்­கலம்
ஹட்டன் கல்வி வல­யத்­துக்­குட்பட்ட நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தைச் சேர்ந்த டி. டிலுக்ஷன் (4 நி. 20.0 செக்.) வெண்கலப்பதக்கத்தை வென்றார்.

 

நோர்வூட் நகரிலிருந்து அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா வரலாற்றில் பதக்கம் வென்ற முதலாவது மாணவன் டிலுக் ஷன் ஆவார்.

 
viewmore.png

http://www.metronews.lk/article.php?category=sports&news=20006

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பற்றியவர்களுக்கும் பதக்கம் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ....! tw_blush:

  • தொடங்கியவர்

அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டு விழாவில் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரிக்கு இதுவரை 6 பதக்கங்கள்.

Aniththa-Jegatheeswaran.jpg

அகில இலங்கைப் பாடசாலை விளையாட்டு விழாவில் தெல்லிப்பளை மஹாஜனக் கல்லூரிக்கு இதுவரை 6 பதக்கங்கள்.

கண்டி போகம்பர விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மெய்வல்லுனர் போட்டியில் மகாஜனாவின் தங்கமங்கை அனித்தா 21 வயது பெண்களுக்கான ஈட்டியெறிதல் போட்டியிலும் வெண்கலப்பதக்கத்தை பெற்றுக்கொள்ள மகாஜனாவின் பதக்கங்களின் எண்ணிக்கை ஆறாக(6) உயர்ந்ததுள்ளது.

அனித்தா ஏற்கனவே கோலூன்றிப்பாய்தலில் தங்கமும், 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் வெண்கலமும் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில் இன்று இடம்பெற்ற 21 வயதுப் பிரிவு பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் பங்குபற்றிய அனித்தா 31 மீற்றர் தூரம் எறிந்து மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2 தங்கம்,1 வெள்ளி, 3 வெண்கலம் என 6 பதக்கங்களை பெற்று மகாஜன அன்னைக்கு புகழ்பரப்பி, வடபுல விளையாட்டுத்துறைக்கு வலுச்சேர்த்த மகாஜன வீர்ர்களையும் பயிற்றுநர்களையும் பொறுப்பாசிரியர்களையும் அதிபர் அவர்களையும் மகாஜனன்கள் பாராட்டியும் வாழ்த்தியும் நிற்கின்றார்கள்.

http://www.reeshinternational.com/vilaiyattu/உள்ளூர்-விளையாட்டு/அகில-இலங்கைப்-பாடசாலை-வி/

  • தொடங்கியவர்
கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதய மாணவன் சாதனை
கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதய மாணவன் சாதனை
போகம்பரை மைதானத்தில் நடந்த  பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில், 17 வயதுப் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில் யாழ். மாவட்ட மாணவர்கள் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் அள்ளிக் கொண்டனர்.
 
நேற்று நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு கோல் ஊன்றிப் பாய்தல் போட்டியில், அளவெட்டி அருணோதய கல்லூரி மாணவன் என்.நப்தலி ஜொய்சன் (17 வயது) 4.61 உயரம் தாண்டி புதிய தேசிய சாதனையைப் படைத்தார்.
 
அதேவேளை, 17 வயதின் கீழ்ப்பட்ட பெண்கள் பிரிவு கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ். மாவட்ட மாணவிகளே பெற்றனர்.
 
யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி மாணவி சீ.ஹெரீனா 2.7 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், 2.6 மீற்றர் உயரம் பாய்ந்து பளை மத்திய கல்லூரி மாணவி டி.திவ்யா வெள்ளிப் பதக்கத்தையும், சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி எஸ்.சங்கரி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
 
முன்னதாக, 21 வயதுக்குட்பட்ட 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் கோல் ஊன்றிப் பாய்தலில், தெல்லிப்பழை மகாஜன கல்லுரி மாணவி அனித்தா ஜெகதீஸ்வரன் 3.30 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தையும்,பளை மத்திய கல்லூரி மாணவி ஜே.சுகிர்தா 3.20 மீற்றர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றிருந்தனர்.
 
அத்துடன்,17 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், போட்டியில் சாவகச்சேரி இந்துக் கல்லுரி மாணவன் ஏ.புவி தரன் 3.80 மீற்றர் பாய்ந்து, தங்கப்பதக்கம் பெற்றிருந்தார்.
 
இந்தப் பிரிவில், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவர்களான ஆர்.ஜதுசன் 3.60 மீற்றர் தாண்டி இரண்டாம் இடத்தையும், யு. சலக்சன் 3.55 மீற்றர் தாண்டி மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
 
கோல் ஊன்றிப் பாய்தலில் 17 வயது ஆண்கள், பெண்கள் பிரிவுகளில் ஒட்டுமொத்தப் பதக்கங்களையும் யாழ். மாவட்ட மாணவர்க ளே அள்ளியுள்ளனர்.

http://onlineuthayan.com/news/19100

  • தொடங்கியவர்
தேசியத்தில் ஜொலித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு
தேசியத்தில் ஜொலித்த மாணவர்களுக்கு கௌரவிப்பு
கடந்த வாரம்  கண்டி போகம்பற மைதானத்தில் இடம்பெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டி களில் வெற்றியீட்டிய சாவகச்சேரி இந்துக்கல்லூரி வீர  வீராங்கனைகளுக்கு  பாடசாலை   சமூகத்தினால்  கெரவிக்கும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது .
 
குறித்த  நிகழ்வானது இன்றுகாலை 9 மணிக்கு  அதிபர்   சர்வேஸ்வரன்  தலைமையில் பாடசாலை  வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது   ,17 வயதிற்கு உட்பட்ட கோலூன்றி பாய்தலில்  வெற்றிபெற்று  தங்கப்பதக்கத்தினை  பெற்ற செல்வன் புவிதரன்17 வயதிற்கு உட்பட்ட கோலூன்றிப்பாய்தலில் பெண்கள்  பிரிவில் 2ஆம் இடம் பெற்ற செல்வி சங்கவி,  மற்றும்  செல்வி கிரிஜா ஆகிய மாணவர்களுக்கு அணிவகுப்பு  மரியாதையுடன்  இன்று கௌரவிப்பு  நிகழ்வு  நடைபெற்றது .
14627754_1166199753493548_633835013_n.jpg
மேலும்  இவர்களின்  வெற்றிக்கு   வழிவகுத்த பயிற்றுவிப்பாளர் கணாதீபன் மற்றும் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் மதன ரூபன் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்,குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள்   கலந்து கொண்டனர்.
14793731_1166199720160218_110969121_n.jpg

http://onlineuthayan.com/news/19118

  • தொடங்கியவர்

19 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு வர்ணச்சான்றிதள்கள் கிடைத்துள்ளன.

received_1770747466286175.jpeg

 

19 வயதிற்குட்பட்ட தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு வர்ணச்சான்றிதள்

19 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் இருவருக்கு வர்ணச்சான்றிதள்கள் கிடைத்துள்ளன.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான  தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று முன்தினம் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைச் சேர்ந்த பி.ஜெனார்த்தனன் 41.77 மீற்றர் தூரம் எறிந்து 4ஆம் இடத்தைப் பெற்றதோடு வர்ணச்சான்றிதழையும் , பிரகாஷ்ராஜ் 40.10 மீற்றர் தூரம் எறிந்து 7ஆவது இடத்தை பிடித்ததோடு   வர்ணச் சான்றிதழையும் பெற்றனர்.

http://www.reeshinternational.com/vilaiyattu/உள்ளூர்-விளையாட்டு/19-வயதிற்குட்பட்ட-ஆண்களிற/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.